31 December 2013

கணினியும் நீங்களும் - 09.09.2012

– தினக்குரல் ஞாயிறு மலர் –

கோமகள் சின்னசாமி lomakai_ko21@yahoo.com

கே: சார், நான் ஒரு மருத்துவத்துறை மாணவி. அண்மையில் என்னுடைய கணினியை Format எனும் வடிவமைத்தல் செய்தேன். அதனால் கணினியின் ஆவணங்கள் எல்லாம் அழிந்துவிட்டன. அவற்றில் என் மருத்துவ ஆய்வுக் கட்டுரைகளும் பல இருந்தன. அழிந்து போன தகவல்களை மீட்டுக் கொள்ள சில கணினிக் கடைகளில் விசாரித்தேன். அவர்கள் RM750லிருந்து RM1500 வரை கேட்கிறார்கள். நான் ஒரு மாணவி. அவ்வளவு பணம் கொடுக்க முடியவில்லை. விலை மலிவாக ஏதாவது நிரலி அல்லது மென்பொருள் கிடைக்குமா. ரொம்ப அவசரம் சார். ஒரு மகளைப் போல உங்களிடம் கேட்கிறேன்.ப: உங்கள் அவசரம் எனக்குப் புரிகிறது. எப்போதுமே கணினியைச் மறுவடிவமைப்பு செய்வதற்கு முன்னால் அதிலுள்ள படங்கள், தகவல்கள், ஆவணங்கள் எல்லாவற்றையும் நகல் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். வடிவமைப்பு அல்லது Format என்றால் என்ன அர்த்தம். இருப்பதை எல்லாம் அழிப்பது அல்லது சுத்தம் செய்வது.

எல்லாவற்றையும் அழித்த பிறகு, அழித்தவற்றை எல்லாம் மறுபடியும் மீட்டுக் கொள்வது என்பது நடக்கக் கூடிய காரியமா. இருந்தாலும் கணினியைப் பொருத்த வரையில் அழித்ததை மறுபடியும் மீட்டுக் கொள்ள முடியும். வழி இருக்கிறது. கடைக்காரர்கள் அவ்வளவு பணம் கேட்கிறார்கள் என்றால் அதற்கு நிச்சயம் காரணம் இருக்கிறது. உங்களுக்கு நான் அதை இலவசமாகத் தருகிறேன்.

http://letitbit.net/download/73344.709666af4391f14fbc3a876be5dc/Wondershare.Data.Recovery.4.1.1.1.rar.html
எனும் முகவரிக்குப் போய் அழித்ததை மீட்கும் நிரலியைப் பெற்றுக் கொள்ளுங்கள். கட்டணம் இல்லை. Download on slow speed என்பதைச் சொடுக்கிப் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.


சாம் ஜோசுவா sam.jo511@gmail.com

கே: என்னிடம் கணினி இல்லை. நான் ஒரு பள்ளி மாணவன். எனக்கு வேண்டிய தகவல்களைக் கணினி மையங்களுக்குப் போய் திரட்டிக் கொள்வேன். கணினி வாங்க வசதி இல்லை. USB எனும் குறுந்தட்டகத்தைப் பயன் படுத்துகிறேன். இப்போது எனக்கு பிரச்னை. குறுந்தட்டகத்தைக் கணினியில் செருகியதும் RECYCLER\S-5-3-42-2819952290 என்று எச்சரிக்கை வருகிறது. தட்டகமும் ஒழுங்காக வேலை செய்யவில்லை. என்னென்னவோ செய்து பார்த்துவிட்டேன். ஒன்றும் நடக்கவில்லை. Anti Virus எனும் தடுப்பு அழிவிகளையும் பயன் படுத்திவிட்டேன். ஐயா, நீங்கள்தான் உதவி செய்ய வேண்டும்.


ப: இதற்கு காரணம் Trojan எனும் அழிவியாகும். இந்த அழிவியின் பெயர் WORM_DOWNAD. நீங்கள் என்ன செய்தாலும் அதை அழிக்க முடியாது. USB குறுந்தட்டகங்கள் மூலமாகப் பரவுகிறது. ஒன்றை அழித்தால் இன்னொன்று பிறக்கும். அதை அழித்தால் இன்னும் ஒன்று வரும். கடைசி வரை அழிக்கவே முடியாது. வேரோடு அழித்தால்தான் முடியும். வழி இருக்கிறது.

அதற்கு http://filepost.com/files/33m71299/gtk2130-setup.rar/ எனும் முகவரிக்குப் போய் நிரலியைப் பெற்றுக் கொள்ளுங்கள். கட்டணம் தர வேண்டியது இல்லை. Low Speed Download என்பதைச் சொடுக்கிப் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். உங்கள் பிரச்னை தீரும்.


நவீனாஷ் <its.shuren@gmail.com>

கே: நான் என் கணினியைத் திறந்ததும் updates are ready, install these updates எனும் செய்தி வந்து கொண்டே இருக்கிறது. என்ன செய்வது?


ப: நல்ல செய்திதானே. உங்கள் கணினிக்குத் தேவையான updates எனும் மேம்பாடுகளை உங்கள் கணினி பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளும். அவற்றைத் தாராளமாகப் பதித்துக் கொள்ளலாம். ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய அடிப்படைச் செயலி அதாவது Windows செயலி அசலானதாக இருந்தால் பாதகம் இல்லை.

அந்த செயலியைக் காசு கொடுத்து வாங்கி இருந்தால் பயம் இல்லாமல் புதிய மேம்பாடுகளைப் பதித்துக் கொள்ளலாம். அப்படி இல்லாமல் Pirated Copy எனும் திருட்டு செயலியைக் கணினியில் பதித்து இருந்தால் ஆபத்து காத்து இருக்கிறது. அந்த மேம்பாடுகளைப் பதித்தால் பாதிப்பு வரும்.


கா. தர்ஷனன், தாமான் செராஸ், கோலாலம்பூர்

கே: கணினித் துறையில் சிறந்து விளங்குபவர்கள் பெண்கள்தான் என்று என் நண்பர் சொல்கிறார். இல்லை ஆண்கள்தான் என்று நான் சொல்கிறேன். நீங்கள் ஆண்கள் பக்கம் தானே?


ப: குடும்பங்களில் குழப்படிகள் செய்வதற்கு என்றே ஒரு கும்பல் இருக்கிறதாம். இன்னும் ஈப்போவிற்கு வரவில்லை. தம்பி தர்ஷனா, உங்கள் பக்கம் சாயலாம் என்றுகூட நினைக்கிறேன். வேண்டாம் சாமி! மூன்றாம் உலகப் போருக்கு இப்போதைக்கு என்னிடம் போதுமான படைபலம் இல்லை.இருந்தாலும், உங்களுக்கு மட்டும் ரகசியமாகச் சொல்கிறேன்.


நீலன், neelan_t@yahoo.com.my

கே: என்னுடைய Desktop மேலே உள்ள அடையாளச் சின்னங்கள் திடீரென்று பெரிது பெரிதாக மாறிவிட்டன. என்ன செய்தும் சின்னதாக வரவில்லை. எப்படி பழைய நிலைக்கு கொண்டு வருவது? நான் விண்டோஸ் எக்ஸ்.பி. பயன்படுத்துகிறேன்.


ப: Desktop என்பதைத் தமிழில் மொழிபெயர்த்தால், மேசைத் தளம் என்று வருகிறது. ஆனால், இந்தச் சொல் கணினித் துறைக்குச் சரியாக வருமா. அது ஒரு நேரடியான மொழிபெயர்ப்பு. ஆங்கிலத்தில் கணினியின் திரையை ‘டெஸ்க்தோப்’ என்று அழைக்கிறார்கள். வெள்ளைக்காரர்கள் பெயர் வைக்கும் போது அப்படி வைத்து விட்டார்கள். இப்போதைய காலக்கட்டத்தில் அந்தக் கணினிச் சொற்களைத் தமிழ்ப்படுத்தும் போது நமக்கு தயக்கமும் மயக்கமும் வருகிறது.

தமிழில் கணினி முகப்புத் திரை என்று சொல்லலாம். ஆனால், அதையும் சுருக்கி கணினித் திரை என்று அழைக்கலாமே. கணினியைத் திறந்ததும் முதன்முதலில் ஒரு திரை வருகிறதே அதுதான் இந்த முகப்புத் திரை, அதாவது கணினித் திரை.

நம் கணினியின் உள்ளே என்னென்ன நிரலிகள், செயலிகள், ஆவணங்கள், படங்கள் இருக்கின்றனவோ அவற்றின் அடையாளமாக, சின்னச் சின்ன சின்னங்கள் இந்தக் கணினித் திரையில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். ஆக, இந்தச் சின்னங்கள் பெரிதாக மாறிவிட்டன என்று சொல்கிறீர்கள். திடீரென்று மாறுவதற்கு ’சான்ஸே’ இல்லை.

நீங்கள் ஊரில் இல்லாத போது, ஊர் பேர் தெரியாத கணினி வித்துவான்கள் யாராவது உங்கள் கணினியை ஆராய்ச்சி செய்து பார்த்து இருக்கலாம். ஒழுங்காக வேலை செய்கிறதா இல்லையா என்கிற ஆராய்ச்சியாக இருக்கலாம். உங்கள் வீட்டில் சின்ன சின்ன வாண்டுகள் இருந்தால் அவர்கள் மீது சந்தேகம் வரலாம். இருந்தாலும், பெரிய மனசு பண்ணி பிரச்னையைப் பெரிசு படுத்த வேண்டாம்.

சரி. எப்படி பிரச்னையைத் தீர்ப்பது. முகப்புத் திரையில் காலியாக உள்ள இடத்தில் சுழலியினால் வலது சொடுக்கு செய்யுங்கள். Properties என்று இருக்கும். அதைச் சொடுக்கி Appearance என்று வரும் பட்டையை முடுக்கி விடுங்கள். அப்புறம் Effects என்பதைத் தேர்வு செய்தால் அடுத்து Advanced Appearance எனும் திரை வரும். அதில் Icon என்பதைத் தட்டுங்கள். Icon என்பது முகப்புத் திரையில் தெரியும் அடையாளச் சின்னம். சரியா.

இந்த இடத்தில் சின்னத்தின் அளவை எவ்வளவு சின்னதாக மாற்ற வேண்டுமோ, அப்படியே மாற்றிக் கொள்ளுங்கள். அப்புறம் OK பொத்தானைத் தட்டிவிட்டு வெளியே வாருங்கள். அதன் பின்னர் Display Properties என்பது திரையில் தெரியும். அதில் Apply என்பதைத் தட்டுங்கள்.

சில விநாடிகளில் உங்கள் கணினித் திரை சாம்பல் நிறத்திற்கு மாறும். கவலைப் பட வேண்டாம். வருவது எல்லாம் நன்மைக்கே என்று கண்களை மூடிக் கொள்ளுங்கள். இன்னும் ஓர் அறிவிப்பு வரும். அதையும் OK செய்யுங்கள். அப்புறம் அடையாளச் சின்னங்கள் எல்லாம் சின்னதாக மாறி இருக்கும். இப்போது சந்தோஷம்தானே! இவை எல்லாம் விண்டோஸ் எக்ஸ்.பி பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே.

விண்டோஸ் விஸ்தா அல்லது விண்டோஸ் 7ஐ பயன்படுத்தினால் அதற்கு வேறு ஒரு வழி இருக்கிறது. முகப்புத் திரையில் காலியாக இருக்கும் ஏதாவது ஓர் இடத்தில் வலது சொடுக்கு செய்யுங்கள். ஓர் அறிவிப்பு பட்டியல் வரும். அதில் ஆகக் கீழே பாருங்கள். Personalize என்று இருக்கும்.

அதைச் சொடுக்கி Window Colour and Appearance > Advanced எனும் இடத்திற்குப் போய் மாற்றம் செய்து கொள்ளுங்கள். அடுத்த வாரம் வேறு ஒரு புதுமையான தகவல் வருகிறது. உங்களுக்குத் தெரியாமல் உங்கள் கணினியை யாராவது திருட்டுத் தனமாகத் திறக்கும் போது, உங்கள் கைப்பேசியில் எச்சரிக்கை வரும். எப்படி? அதற்கு ஒரு நிரலி இருக்கிறது.

2 comments:

  1. i want to have the software for unlocking the huawei e303s datacrd the new alcorithem is not available or unable to find it with the old one i lost 8 times out of 10 and i get it done on paymant,

    ReplyDelete