25 May 2016

மகாதீர் இந்திய உண்மைகள்


மலேசியாவின் முன்னாள் பிரதமர் துன் மகாதீரின் உண்மையான பெயர் மகாதீர் த/பெ இஸ்கந்தர் குட்டி (Mahathir s/o Iskandar Kutty). அவர் 1925 ஜுலை மாதம் 10ஆம் தேதி, அலோர் ஸ்டாரில் இருக்கும் செபாராங் பேராக் எனும் கிராமப் பகுதியில் பிறந்தார். 

மகாதீர் முகமது பிறந்தது 1925 டிசம்பர் மாதம் 20 ஆம் தேதி என்று பலர் நினைக்கிறார்கள். அது தவறு. 1925 ஜுலை மாதம் 10ஆம் தேதிதான் அவருடைய சரியான பிறப்புத் தேதியாகும். 

மகாதீர் முகமதுவின் தந்தையாரின் பெயர் முகமது இஸ்காந்தர் குட்டி. கேரளாவின், கோட்டையம் பகுதியில் பிறந்தவர். கேரளாவில் ஆசிரியராகப் பணிபுரிந்தவர். 


1962ஆம் ஆண்டு அவர் இறக்கும் வரையில் அவருடைய பெயர் இஸ்கந்தர் குட்டி தான். பெயர் மாற்றம் செய்யப்படவில்லை. (சான்று: http://poobalan.com/blog/borninmalaysia/2008/06/21/malaysia-had-an-indian-prime-minister/ )

அவருடைய இஸ்கந்தர் குட்டி எனும் பெயரை மகாதீர் தான் 1962-ஆம் ஆண்டில் முகமது பின் இஸ்கந்தர் என்று மாற்றினார். அதே சமயத்தில் தன்னுடைய பெயரையும் மகாதீர் முகமது என்று மாற்றியும் கொண்டார்.

அந்த வகையில் மகாதீரின் பழைய பெயரில் இருந்த குட்டி எனும் பாரம்பரிய பெயர் தவிர்க்கப் பட்டது. அதனால் அவர் (மகாதீர்) தன்னை ஒரு மலாய்க்காரராக அடையாளப் படுத்திக் கொள்ள முடிந்தது.(It was only change after his death by Mahathir, who changed his own name to Mahathir bin Mohammed and named his father Mohamad Bin Iskandar, dropping the Kutty so he will be recognised as a Malay.)

மகாதீரின் தந்தையார் 1880 ஆம் ஆண்டு கெடாவில் பிறந்ததாகவும் மாற்றங்கள் செய்யப்பட்டன. கெடாவில் சுல்தான் அப்துல் அமீட் கல்லூரிக்கு அருகில் ஒரு தேசியப் பள்ளி உள்ளது. அந்தப் பள்ளியின் பெயர் இஸ்கந்தர் தேசியத் தொடக்கப் பள்ளி (Sekolah Rendah Kebangsaan Iskandar). மகாதீரின் தந்தையாரின் நினைவாகப் பெயர் மாற்றமும் செய்யப் பட்டது.

(The place of birth of Mohamad Bin Iskandar was reclassfied to Kedah in 1880. Thats why the Primary School next to Sultan Abdul Hamid College was named Sekolah Rendah Kebangsaan Iskandar (Instead of Mohamad) after his father.)
முகமது இஸ்காந்தர் குட்டியின் முதல் மனைவி மூன்று குழந்தைகளுக்குத் தாயான பிறகு, பினாங்கில் திடீரென்று இறந்து போனார். பின்னர், முகமது இஸ்காந்தர் குட்டி தன்னைவிட 14 வயது குறைவான Wan Tempawan Wan Hanafi எனும் பெண்ணை இரண்டாம் தாரமாக மணந்து கொண்டார்.
 
வான் தெம்பாவான் ஏற்கனவே திருமணம் ஆனவர். அவர்களுக்கு ஆக மொத்தம் பத்து குழந்தைகள். கடைசியாகப் பிறந்த குழந்தை சில நாட்களில் இறந்து போனது. ஒன்பதாவது குழந்தைதான் துன் மகாதீர் முகமது


அவர் சின்ன பையனாக இருந்த போது, அவர் வாழ்ந்த கிராமத்தில், அவருக்கு ஒரு நெருங்கிய நண்பர் இருந்தார். இருவரும் செபாராங் பேராக் தொடக்கப் பள்ளியில் ஒன்றாகப் படித்தனர். அந்த நண்பர்தான் பின் நாட்களில், மலேசியாவின் நீண்டகால நிதியமைச்சர் பதவியை வகித்த டாயிம் ஜைனுடின். 
 


மகாதீர் முகமது பிறப்பதற்கு முன்னாலேயே அவருடைய தாத்தா இஸ்காந்தர் இறந்து போனார். கடைசிவரை தன் தாத்தாவை மகாதீர் முகமது பார்க்கவே இல்லை. ஆனால், பாட்டியைப் பார்த்துப் பழகி இருக்கிறார். பாட்டியின் பெயர் Siti Hawa.

மகாதீர் முகமது 1946 ஆண்டு சீனியர் கேம்பிரிட்ஜ் தேர்வில், தான் படித்த ஏழு பாடங்களில் மூன்றில் ‘ஏ’ தகுதியும் நான்கில் ‘பி’ தகுதியும் பெற்றார். பின்னர், சிங்கப்பூரில் இருந்த King Edward VII மருத்துவக் கல்லூரியில் பயில இடம் கிடைத்தது. 


அரசாங்கம் நிதியுதவி வழங்கியது. ஆனால், முழு உபகாரச் சம்பளம் கிடைக்கவில்லை. அவர் கல்லூரியில் படிக்கும் போது பணம் ஒரு பெரும் பிரச்னையாக இருந்தது. அதனால், அவருடைய சகோதரர்கள் யாரும் பல்கலைக்கழகங்களில் படிக்க முடியாமல் போய்விட்டது. ஒரே ஒரு சகோதரர் மட்டும் விவசாயக் கல்லூரியில் படித்து இருக்கிறார்.மகாதீர் முகமதுவின் தந்தையார் முகமது இஸ்காந்தர் ஆசிரியராகப் பணிபுரிந்த போது அவருடைய மாதச் சம்பளம் 230 டாலர்கள். அவர் தன்னுடைய 53வது வயதில் கட்டாயத்தின் பேரில் ஓய்வு பெற்றார். பின்னர், அவருக்கு 90 டாலர்கள் மட்டுமே ஓய்வூதியம் கொடுக்கப்பட்டது. குடும்பச் செலவுகளுக்குப் பணம் பற்றவில்லை. அதனால், முகமது இஸ்காந்தர் பெட்டிஷன் எழுதும் எழுத்தராகவும் வேலை செய்தார். அதில் கிடைத்த வருமானத்தில் சிக்கனம் பிடித்து பத்து டாலர்களை மட்டும் சிங்கப்பூரில் படித்து வந்த மகாதீரின் செலவுகளுக்கு ரகசியமாக அனுப்பி வந்தார். அதை அறிந்த பிரிட்டிஷார், மகாதீருக்கு வழங்கி வந்த உதவித் தொகையில் இருந்து உடனடியாகப் பத்து டாலர்களைக் குறைத்துக் கொண்டனர்.சிங்கை மருத்துவக் கல்லூரியில் மகாதீர் தன்னை ஓர் இந்தியர் என்றே பதிந்து கொண்டு அடையாளப் படுத்தினார். கல்லூரி இறுதித் தேர்வில் நான்கே நான்கு மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். அவர்களில் ஒருவர்தான் மகாதீர் முகமது. அவருடன் ஒரே ஒரு மலாய் மாணவியும் மருத்துவம் படித்தார். 

அவர் சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்தவர். அந்த மாணவிக்கு இயற்பியல், வேதியல் பாடங்களில் தொய்வுநிலை. இருந்தாலும் அந்த மாணவிக்கு தனியான அக்கறை காட்டி, மகாதீர் பாடம் சொல்லிக் கொடுத்தார். அந்த மாணவியே மகாதீரின் காதலியானார். இருவரும் மருத்துவர்கள் ஆயினர். 1956ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அந்தக் காதலிதான் அவருடைய ஒரே மனைவி சித்தி ஹஸ்மா முகமட் அலி.1957ஆம் ஆண்டு அலோர் ஸ்டாரில் MAHA கிளினிக்கைத் தொடங்கினார். MAHA எனும் எழுத்துகளில் Mahathir Hasmah, எனும் எழுத்துகள் இருப்பதைக் கவனியுங்கள். இப்படி எல்லாம் துன் மகாதீரின் காலச் சுவடுகள் தடம் பதிக்கின்றன. அவர் உடலில் இன்னும் இந்திய இரத்தம் ஓடுகிறது. அதை அவரால் மறக்க முடியாது. மனுக்குலத்தாலும் மறுக்க முடியாது.இன்னும் ஒரு விஷயம். இவர் ஓர் இந்தியர் என்று சொல்லித் தான் சிங்கப்பூரில் படித்தார். படிக்க டிக்கெட்டும் வாங்கினார். (Mahathir’s race was registered as Indian at the Singapore Univerisity where Mahathir studied (King Edward VII College of Medicine in Singapore). கடைசியில் தமிழ் இனத்தையே ஒரு வழி பண்ணி மோசம் செய்து விட்டார். அவர் நினைத்து இருந்தால் மலேசிய இந்திய இனத்தைக் காப்பாற்றி இருக்க முடியும்.No comments:

Post a Comment