துன் மகாதீர் மீண்டும் பல்டி 28.09.2019 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
துன் மகாதீர் மீண்டும் பல்டி 28.09.2019 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

19 அக்டோபர் 2019

துன் மகாதீர் மீண்டும் பல்டி

(தமிழ் மலர் - 28.09.2019)

தம்முடைய பதவி விலகல் குறித்து முன்னுக்குப் பின் முரணாகத் தொடர்ந்து பேசி வரும் பிரதமர் துன் மகாதீர் மீண்டும் பல்டி அடித்து உள்ளார்.



அதிகப் பட்சம் 3 ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பேன். அடுத்த தேர்தலுக்கு முன்னர் பதவி விலகுவேன் என்று மீண்டும் அவர் ஆச்சரியங்களை ஏற்படுத்தி இருக்கிறார்.

அடுத்த தேர்தலுக்கு முன்னர் பதவி விலகி மற்றொரு வேட்பாளரிடம் என் பதவியை ஒப்படைப்பேன். அதிகப் பட்சம் இன்னும் 3 ஆண்டுகள் நான் பதவியில் இருக்க வாய்ப்பு உள்ளது என்று அவர் கூறினார்.

நியூயார்க் நகரில் வெளியுறவு மன்றத்தின் கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்ட போது பேசிய அவர், இந்த 3 ஆண்டுகளில் சில விஷயங்களை நான் முடிக்க வேண்டி இருக்கிறது என்றார்.

ஐநாவின் 74-ஆவது மாநாட்டில் கலந்து கொள்ள வந்த துன் மகாதீர், தாம் நாள் ஒன்றுக்கு தற்போது 18 மணிநேரம் வேலை செய்வதாகக் கூறினார். இந்தப் பணி மிகவும் கடுமையாக இருக்கிறது. எனக்கு அதிகமான காலங்கள் கிடையாது. அதனால் என் பணிகளை விரைந்து முடிக்க வேண்டி இருக்கிறது என்றார் அவர்.

அடுத்த பிரதமராகக் காத்திருக்கும் அன்வார், அண்மையில் பேசும் போது அடுத்தாண்டு தாம் பிரதமராகலாம். அநேகமாக அடுத்தாண்டு மே மாதத்தில் அது நடக்கலாம் என்று கூறியிருந்தார்.

இதற்குப் பதில் அளித்த துன் மகாதீர், அன்வார் பிரதமர் ஆவதற்கான நாள் குறிக்கப்படும். சொன்னபடி நான் விலகுவேன் என்று கூறி இருந்தார்.

இரண்டு ஆண்டுகளுக்குள் பதவி விலகுவேன் என்று அவர் ஆரம்பத்தில் இருந்து சொல்லி வந்தார். இந்த நிலையில் இங்கு தொடர்ந்து பேசிய அவர், தமக்குப் பிறகு வருகின்ற ஒருவர் சிறப்பாகச் செயல் படுவார் என்று தம்மால் சொல்ல முடியாது என்றார்.

கடந்த 2003-ஆம் ஆண்டு முதலில் தாம் விலகிய போது எனக்குப் பிறகு வந்தவர்கள் ஏமாற்றம் அளித்தார்கள். எனவே அடுத்த தலைவர் நன்றாகச் செயல் படுவார் அல்லது சரியாகச் செயல்பட மாட்டார் என்று என்னால் சொல்ல முடியாது. அந்த உத்தரவாதத்தை நான் தர முடியாது.

எனினும் சரியான வழிமுறையை நாம் ஏற்படுத்தி வைத்தால், அந்த கட்டுக்குள் வேலை செய்தால், இந்த நாடு வளர்ச்சி அடைந்த நாடாகும் என்று அவர் கூறினார்.


பேஸ்புக் அன்பர்களின் பதிவுகள்





M R Tanasegaran Rengasamy:
பெருசு வயசு... தெரியாது பல்டி அடிக்கிறாப் போல... அம்னோவிலிருந்து சில எம்.பி. களைத் தத்தெடுத்து, டிஏபி- கெடிலான் கட்சிகளை ஓரங்கட்டி விட்டு, பெர்சத்துவை ஆட்சியில் அமர்த்த ஐயா பிரயாசைப் படுகிறார் போலும். இது நடந்தால் அருமை மகனார் முக்ரீஸ் முன்னணி வரிசைக்கு கொண்டு வரப் படலாம். இதனால் இலவு காத்த கிளியாக அன்வார் ஆக்கப் படலாம். பொறுத்திருந்து பார்ப்போம்.


Muthukrishnan Ipoh: அரசியலில் என்ன வேண்டும் என்றாலும் நடக்கலாம் சார்...


M R Tanasegaran Rengasamy >>> Muthukrishnan Ipoh:
நஜிப் அரசை அகற்ற அவருக்கு அன்வார் பிரபலம், டிஏபி ஆதரவு தேவைப் பட்டது. இன்று கெடிலானில் அஸ்மின் அணி அவருக்கு பக்க பலமாக இருக்கிறது. அம்னோவிலும் இவருக்கு கொஞ்சம் ஆதரவு இருக்கிறது.  இதனை வைத்து காயைக் கனக் கச்சிதமாக நகர்த்தவே பெருசு இன்னும் மூன்றாண்டு கால அவகாசம் கோருகிறது. அன்வார் சற்று நெருக்குதல் அளித்தாலும் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வந்து தம் சாணக்கிய விளையாட்டை ஆட தயங்க மாட்டார்.


Perumal Thangavelu: ஆசை யாரை விட்டது. அடுத்த பொதுத் தேர்தலை நடத்தி விட்டு, மற்றவர் கையில் ஒப்படைப்பார் போலும். வாழ்க நம் பிரதமர்.


Muthukrishnan Ipoh:
நன்றாக இருக்கட்டும்


Varusai Omar >>> Perumal Thangavelu: ஆமாம். நாட்டைக் குட்டிச் சுவராக்கி விட்டு திருவோடு கொடுத்து விட்டுத்தான் அவரும் பிற கொள்ளையர்களும் போவார்கள்.


Varusai Omar:  முத்து, சென்னையில் இப்போ பானீ பூரியும் பேலு பூரியும் தாரராளமா கெடக்கிதாம்! இட்லி தோசை சிங்கப்பூரு மலேசியாவுக்கு டூர் போயிருக்காம்லெ!!?


Sathya Raman >>> Perumal Thangavelu: மற்றவர் என்றால் யார் சாரே?


Khavi Khavi:  வினை விதைத்தவன் வினையறுப்பான். ஓரத்தில் நின்று அமைதியாக பார்த்திருப்பதே எமது தர்மம்.


Muthukrishnan Ipoh:  பல்டி அடிப்பார்கள் அரசியல்வாதிகள்


Khavi Khavi: ஆசிரியரே, அவர்கள் எந்த "ட்டீ" வேண்டுமானாலும் அடித்துக் கொள்ளட்டும். தர்மமே வெல்லும், ஒருகாலும் எதிர்மறை முன்னேறியதில்லை என்பதே சத்தியம். பொறுமை பூமி ஆள்வோரின் மொழியாகட்டும்.... !


Narayanan Krishnan:  சிந்துபாத்தும் கிழவனும் கதை தெரியுமா சார்? அந்த கிழவன்தான் இந்தக் கிழவன். இறைவனின் சித்தம் என்னவோ.


Muthukrishnan Ipoh:  ரொம்பவும் குறை சொல்ல வேண்டாமே...


தமிழ்ப் பித்தன்:
சதி நடக்கிறது... நடக்கவும் போகிறது... நடந்துகொண்டும் இருக்கிறது.


Muthukrishnan Ipoh:  நம் விதியை நினைத்து நாம் புலம்பிக் கொள்வோம்...


Mageswary Muthiah:  இது எல்லாம் அள்ளி உட்டான் கதை.


Muthukrishnan Ipoh:  அரசியல் உலகத்தில் என்னவெல்லாம் நடக்கும்


Mbs Maniyam:  ஏமாளிகள், இவனை நம்பி ஓட்டு போட்டவர்களே. இன்னும் வரும் எதிர்பாருங்கள்!


Muthukrishnan Ipoh: வயதில் மூத்தவர்... மரியாதை வழங்க வேண்டும்


Mbs Maniyam: தங்களின் அறிவுரைக்கு நன்றி ஐயா! இந்த பிரதமரின் தவறான செய்கைக்கு பல ஆயிரம் பேர்கள் பலி.இவருக்கு உறுதுணையாக ஓட்டளித்து சிம்மாசனத்தில் ஏற்றியவர்களுக்கும் இதில் சம பங்குண்டு.


Muthukrishnan Ipoh:
இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லையே...


Varusai Omar: ஆஹாஹா! வர வர நம்ம ஆளுகள்ளாம் ரொம்பவே முன்னேறீட்டாங்க!  எனது ஒரு உண்மையான பதிவுக்கு பல புத்திசாலி நண்பர்களின் பதிவுகளை பார்க்கும்பொது மனதுக்கு மகிழ்ச்சி! ஞாயிறு காலை, திங்களின் ஒளி மழையாய் மென்சாரலுடன் மனதை வருடுகிறதே!!!


Muthukrishnan Ipoh: உங்களுக்கு சப்போர்ட் பண்ண நிறைய பேர் இருக்காங்க சார்... என்னைத் தவிர... ஏன் என்றால் நான் ஆழமாக கமெண்ட் பண்ண முடியாது... ரொம்பவுமே கவனித்துக் கொண்டு வருகிறார்கள்... புரியும் என்று நினைக்கிறேன்...


Sathya Raman: இந்த அரசியல் வாதிகளின் பேச்சும், அல்லூறு தண்ணியும் ஒன்று என்பதை நாம் அறியாததா? முன்னாள் அரசாங்கத்தின் செயல் பாடுகளைச் குறைச் சொல்லியே புதிய கட்சியை ஆரம்பித்தார் பிரதமர் மகாதீர்.

அப்போது பாரிசான் அரசாங்கத்தை எந்த அளவுக்கு மட்டம் தட்ட முடியுமோ அந்த அளவுக்கு மட்டம் தட்டி தன் மகனின் அரசியல் லாபத்திற்காகப் பக்காத்தான் கட்சியினரிடம் கூட்டுச் சேர்ந்து வெற்றி பெற்ற போது ஒரு பேச்சு பேசினார்.

மீண்டும் பிரதமர் பதவி ஏற்ற போது மலேசிய மக்களும் அவரைக் கடவுளாகக் கருதி அவர் சொன்னதை எல்லாம் நம்பினர். பிரதமராக மறுபிரவேசம் எடுத்த போது ஏற்கனவே 22 ஆண்டுக் காலப் பதவியில் இருந்ததைக் காட்டிலும் மலேசிய மக்கள் அவரைத் தாங்கு தாங்கென்று தாங்கினர். தூக்கி வைத்துக் கொண்டாடினர்.

அவரின் சின்ன, சின்ன செயல்பாடுகளை ஆராதனை செய்தனர். இதற்கிடையில் பினாங்கிலும், சிலாங்கூரிலும் நல்லபடியே ஆட்சி நடத்தி வந்த முதல்வர்களான லிம் குவாங் எங், அஸ்மின் அலி இருவரையும் தன் கட்டுப்பாட்டில் மத்திய அமைச்சர்களாக நியமித்த மகாதீரின் தந்திர மூளையை அரசியலில் ஆதிக்கம் கொண்டவர்களால் அன்றே அறிந்து கொள்ள முடிந்தது.

நஜிப் அரசாங்கத்தால் புறக்கணிக்கப்பட்ட முக்ரிஸ் மகாதீரை மத்திய அமைச்சராக நியமிக்காமல் தொடந்து கெடா முதலமைச்சர் பதவி கொடுத்த நோக்கம் என்ன?

பிரதமர் பதவியில் இருந்து கொண்டு கூட்டணிக் கட்சிகளின் கருத்துகளையும், ஆலோசனைகளையும் காதில் வாங்கிக் கொள்ளாமல், தான்றோன்றித் தனமாய் தன் இஷ்டத்திற்கு முடிவுகளை எடுத்ததால் தான் அன்வாரின் மகள் நூருல் இஷா வெறுப்படைந்து தான் ஏற்றிருந்த பதவிகளைத் துறந்தார்.

மேலும் பக்காத்தானில் நடந்து கொண்டிருக்கும் கட்சி உட்பூசல்களில்னால் ஆதாயம் என்னவோ மகாதீருக்குத் தான். முன்னாள் அம்னோகாரர்களை அரவணைத்து தனது பெர்சத்து கட்சியில் இணைத்து கட்சிக்கு பலவழிகளில் பலம் சேர்த்து வருவது எல்லாம் எதற்காம்?

எல்லாம் தன் மகனைப் பிரதமர் பதவியில் அமர்த்தத் தான் என்பது எல்லாம் உள்ளங்கை நெல்லிகனி போன்றது. டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடைசி வரை இலவு காத்த கிளி போல் தான். பாவம்! எத்தனை காலம் கடந்தாலும் சிலரது ஆசைகளுக்கு நரை விழுவதில்லை.

"பூனைகளைவிட சிங்கங்கள் அதிக வலிமையானவை என்பதை எலிகள் ஒரு போதும் ஏற்றுக் கொள்வதில்லை. "தன்னைவிட மலேசியாவை வழி நடத்த தகுதியானவர் எவருமில்லை என்ற எகதாளம் எண்ணம் கொண்ட டாக்டர் மகாதீர் எல்லா நிலைகளிலும் சூழ்ச்சிக் காய்களை நகர்த்தும் நாரதர் வேலைகளை எப்போதோ ஆரம்பித்து விட்டார் என்பதே உண்மை.

யானை பசிக்கு சோளப் பொரி. எனவே பிரதமர் அவ்வப்போது அடிக்கும் அந்தர் பல்டிகளை பற்றி கவலைப்பட ஒன்றுமில்லை. ஏன்னா அரசியல்வாதிகளின் பேச்சும் அல்லூறு தண்ணியும் ?????


Muthukrishnan Ipoh: ரொம்ப ரொம்ப முன்னேறிட்டீங்க சகோதரி... நான் எதிர்பார்க்கவில்லை... உங்களிடம் இவ்வளவு அரசியல் தகவல்கள் இருக்கும் என்று... இனிமேல் அரசியல் தொடர்பான சந்தேகங்களுக்கு உங்களைத் தான் தேடி வர வேண்டி இருக்கும்...

>>> பூனைகளைவிட சிங்கங்கள் அதிக வலிமையானவை என்பதை எலிகள் ஒரு போதும் ஏற்றுக் கொள்வதில்லை >>>

அருமையான கருத்துகள்... என் வலைத் தளத்தில் உங்கள் அனைவரின் பின்னூட்டங்களும் இடம் பெற்று வருகின்றன... நேரம் கிடைக்கும் போது எல்லாம் பதிவேற்றம் செய்து வருகிறேன்... கருத்துகளுக்கு மிக்க நன்றி... தொடர்ந்து எழுதுங்கள்...


Sathya Raman >>> Muthukrishnan Ipoh: நன்றிங்க சார். சும்மா தமாஷ் பண்ணாதீர்கள் சார். உங்களைப்போன்ற பத்திரிக்கை தொடர்புடைவர்களின் பதிவுகளைப் படிப்பதால் ஒரளவு இந்த அரசியல் அலம்பல்களை அறிய முடிகிறது சார்.

மற்றபடி நீங்கள் கூறும் அளவுக்கு அனைத்தும் தெரிந்தவள் நான் இல்லை சார் . இருந்தாலும் சார் அடிக்கடி வசிஷ்டர் வாயால் பிரமரிஷி பட்டம் போன்று உங்கள் எழுத்துக்களும், வாழ்த்துக்களும் எனக்கு நிறைய ஊக்கத்தையும் மென்மேலும் தகவல் அறிய உதவுகிறது


Muthukrishnan Ipoh: உண்மையிலேயே நிறைய விசயங்களைத் தெரிந்து வைத்து இருக்கிறீர்கள்... உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய தகவல்கள்... இதில் ஒளிவு மறைவு எதுவும் இல்லை... நன்றாக எழுதுகிறாய்... எழுத்து நடை நன்றாக இருக்கிறது... சரம் சரமாய் வரும் கருத்துகள்...


Sathya Raman >>> Muthukrishnan Ipoh:
நன்றிங்க சார். எங்களுக்கு எல்லாம் முன்னோடிகளாக உங்களைப் போன்றவர்களின் படைப்புகளே எங்களைப் போன்றவர்களுக்கு என்றென்றும் ஏறும் படிகள்.


Murugan Murugan Govindasamy >>> Sathya Raman: சிறப்பு தோழர், இதைவிட விரிவான விளக்கத்தை யாரும் சொல்லி விட முடியாது.


Murugan Murugan Govindasamy >>> Sathya Raman: 'பூனைகளை விட சிங்கங்கள் மிக வலிமையானவை என்பதை என்பதை எலிகள் ஒருபோதும் ஏற்றுக் கொள்வதில்லை'. அருமையான வரிகள் சகோ... இதை நான் சுட்டுக் கொள்ளலாமா?


Sathya Raman >>> Murugan Murugan Govindasamy: என் தேடுதல்களில் சிக்கிய வாசகங்கள்தாம் இவை. பழமொழிகளையும், பொன் மொழிகளையும் நான் மட்டுமே சொந்தம் கொண்டாடுவது சரியல்லவே நண்பரே. தாராளமாக நீங்கள் சுட்டுக் கொள்ளலாம்.


Murugan Murugan Govindasamy >>> Sathya Raman: நன்றி தோழரே


Mageswary Muthiah >>> Sathya Raman: மிகவும் நன்றாகத் தெரிந்து வைத்து இருக்கிறீர்கள். இதுவே உண்மையான காரணமாக இருக்கலாம்.


Varusai Omar: அந்த "பெரிசுக்கு" பல்ட்டி அடிப்பது கைவந்த கலை. ஒன்றைக் கவனித்தீர்களா முத்து? வர வர அவரது பேச்சும் செயல்பாடுகளும் ஒருவித முரட்டுத் தனமான... ஏன்? வெறித் தனமான ஆளுமையுடன் அகங்காரமும் தெறிக்கிறதே? தானே தான் மட்டுமே எல்லாத் திறமையும் கொண்டவன். தன் சொல்ல வேத வாக்கு. தன் முடிவே அறுதியும் இறுதியுமானது என்று மிதப்புடன் செயல் படுவதாகத் தெரியவில்லையா?


Muthukrishnan Ipoh: துல்லியமாக அரசியல் பல்டி ... தெளிவாக இருக்கிறார்


Varusai Omar: என்னா! எப்படியும் தன் தனயனுக்கு அரியாசனத்தில் அமர்த்தி "பட்டம்" சூட்டுவதே பெரிசின் தலையாய கடமை... நோக்கம் உறுதியான முடிபு!


Varusai Omar: ம்ஹும்? புரிகிறது நண்பா! இந்த "பெரிசு" விவகாரம் கொஞ்ச நாளா "காரமாக" மட்டுமல்ல, அந்தகாரத்தை நோக்கிச் செல்வது துல்லிதமாகத் தெரிகிறது நண்பா! அதுவும் உங்களைப் போன்ற ஆழ உழுபவர்களின் ஆய்வுகளும் உடன்வரும் கருத்துக் கருவூலங்களும் நிச்சயம் பிறருக்கு பயனானவை தானே நண்பா?


Muthukrishnan Ipoh: நன்றி... நன்றி... நன்றிங்க தலைவரே....


Manickam Nadeson: முன்பு சர்க்கஸ் இருந்து இருப்பாரோ, சதா பல்டியா இருக்கே.


Muthukrishnan Ipoh: அருமை... அருமை... அருமை...


Selva Mani: ஏ
ழரை பிடிச்சா லேசுல விடாது! அன்வார் இலவு காத்த கிளிதான்!


Muthukrishnan Ipoh: இன்னும் கொஞ்சம் பொறுத்துப் பார்ப்போம்... உடனடியாக எந்த முடிவையும் எடுக்கக் கூடாது...


Neela Vanam >>> Muthukrishnan Ipoh: நீங்கள் சொல்வதும் சரிதான் ஐயா இன்னும் மூன்று வருடம் இருக்கிறது ஏதாவது ஒரு மாற்றம் வரும் ஓட்டு மக்களிடம் உள்ளது


Malathi Nair: Yes sir we understand ur situation.


Moon Noom: பலம் அறிந்து போரிடு பதவிதான் பலம் நாட்டின் நலனுக்காக நேரம் பார்க்காமல் மக்களை சந்தித்தார் அந்த ஒருவரின் செயலுக்காக ஆனால் மற்ற குள்ளநரி கூட்டங்கள் இன்னும் வேரூன்றி உள்ளதே இதை யாரால் சரிகட்ட முடியும்.


Dorairaj Karupiah: சொன்ன சொல் தவறாதவர்... மகா தீர் ஹரிசந்திரன் பக்கத்து வீடு


Muthukrishnan Ipoh; நம்முடைய ஆதரவு அன்வார் அவர்களுக்கே...


Sathya Raman >>> Muthukrishnan Ipoh: இப்போது எல்லாம் நடுநிலையாய்கூட எதையும் முன் கூட்டியே அனுமானிக்க முடியவில்லை சார். இதில் என் நிலைப் பாடே வேறு சார்.

"இராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லை ரகம் தான். நீங்கள் டத்தோ ஸ்ரீ அன்வாரை ஆதரிப்பதாகச் சொல்கிறீர்கள். இருபது ஆண்டுகள் காலத்திற்கும் மேலாக அரசியலில் துறவறம் ஆக்கப் பட்டவர், அதிக அளவில் அலைகழிக்கப்பட்ட அரசியல் பிரமுகர். நிறைய காயங்களை அனுபவித்தவர்.

இவை எல்லாம் அவரைப் பக்குவப்பட்ட மனிதராய் மாற்றி இருக்கும் என்றே நம்புவோம். ஆனால் அதற்கு அச்சாரமாய் அவரது நாற்காலிக்கு எந்தவித இடர்பாடோ, இடையூறோ வராமல் இருந்தால் நன்றாகத் தான் இருக்கும்.😁


Kannan Kannan: சதி நடக்கிறது... நடக்கவும் போகிறது. ஏன் என்றால் அவருக்கு பதவியை அவர் மகன்னுக்கு தருவதாக ஆசை.  நம் நாட்டுச் சில தலைவர்கள் பொய் பேசுவதில் சிறந்த தலைவர்கள். இப்போது ஒன்று அப்போது ஒன்று


Muthukrishnan Ipoh:
பெரியவரின் பேச்சு சமயங்களில் குழப்பத்தை உண்டு பண்ணி விடுகிறது...


Kannan Kannan >>> Muthukrishnan Ipoh:
இன்னும் எத்தனை காலம் ஏமாத்துவார் இந்த மலேசியாவில்?