21 மார்ச் 2020

கொரோனா கோவிட் 19 - மலேசியா 6

மலேசியாவில் ஆறாவது இறப்பு

மலேசியாவில் கொரோனா கோவிட் 19 நோயினால் இதுவரை எட்டு பேர் பலியாகி உள்ளனர். சரவாக் மாநிலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் இன்று அதிகாலையில் காலமானார்கள். 79 வயது தாயார். 40 வயது மகள்.

மலாக்கா மாநிலத்தைச் சேர்ந்த மற்றும் ஒருவர் (நோயாளி 238:
Suhaimi Ab Aziz), கொரோனா கோவிட் 19 நோயினால் இன்று (21.03.2020) விடியல் காலை 1.30-க்கு காலமானார். அவருக்கு வயது 51.
 
Tanah Perkuburan Islam Kampung Chohong

அண்மையில் நடைபெற்ற ஒரு சமய நிகழ்ச்சியுடன் இவருக்குத் தொடர்பு இருப்பதாக நம்பப் படுகிறது. கடந்த மார்ச் மாதம் 12-ஆம் தேதி இவருக்கு கடுமையான சுவாச நோய்த் தொற்று அறிகுறிகள்.

அதன் காரணமாக மலாக்கா பொது மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். அன்றைய தினமே அவர் தீவிரச் சிகிச்சைப் பிரிவிலும் சேர்க்கப் பட்டார். இருப்பினும் குணம் அடையவில்லை. இன்று அதிகாலை 1.30-க்கு காலமானார். இவர் இராணுவச் சேவையில் இருந்து ஓய்வு பெற்றவர்.

இன்று மதியம் 2.00 மணிக்கு ஜாசின் கம்போங் சோகோங் (Tanah Perkuburan Islam Kampung Chohong) எனும் இடத்தில் அடக்கம் செய்யப் பட்டார். சவ அடக்க மயானத்திற்குள் பொது மக்கள் அனுமதிக்கப்படவில்லை. 




மலேசியாவில் 1,183 பேருக்கு கொரோனா கோவிட் 19 பாதிப்பு. புதிதாக 153 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

புதிதாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ள 153 பேரில் 90 பேர் கோலாலம்பூர் சமய நிகழ்ச்சியில் தொடர்பு உடையவர்கள் என்று சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டத்தோ ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா செய்தியாளர்களிடம் கூறி இருக்கிறார்.

எட்டாவது நபர் கோலாலம்பூர் சமய நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர். அவருக்கு வயது 69.

Source:

https://www.sinarharian.com.my/article/74883/KHAS/Koronavirus/Bangga-abang-banyak-berdakwah-sepanjang-hayat




கொரோனா கோவிட் 19 - மலேசியா 5

சபாவில் மூன்றாவது நபரின் உடல் அடக்கம்

கொரோனா கோவிட் -19 தாக்குதலினால் மலேசியாவில் இறந்த மூன்றாவது நபரின் உடல் இன்று இரவு 10.20 மணி அளவில் இங்குள்ள ஒரு முஸ்லிம் கல்லறையில் பாதுகாப்பாக அடக்கம் செய்யப் பட்டது.

58 வயதான நபரின் சடலம், தாவாவ் மருத்துவமனையில் இருந்து ஐந்து மருத்துவமனை ஊழியர்களுடன் முழுமையான பாதுகாப்புக் கவச சாதனங்களுடன் முஸ்லிம் கல்லறைக்கு வந்து சேர்ந்தது.



அடக்கம் முடியும் வரையில் யாரும் அந்த இடத்திற்கு அருகில் அனுமதிக்கப் படவில்லை.

மலேசியாவில் கொரோனா கோவிட் -19 நோயினால் மரணம் அடைந்த மூன்றாவது நபர். 2020 மார்ச் 9-ஆம் தேதி கடுமையான சுவாச நோய்த் தொற்று அறிகுறிகள் காரணமாக தாவாவ் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்

தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டும் இன்று மாலை காலமானார். இவர் கோலாலம்பூர் ஸ்ரீ பெட்டாலிங் எனும் இடத்தில் ஒரு சமய ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்.










கொரோனா கோவிட் 19 - மலேசியா 4

சபா அரசாங்கம் தடை

2020 மார்ச் 18-19-ஆம் தேதிகளில் இந்தோனேசியா, சுலாவாசி தீவில் ஒரு சமய ஒன்றுகூடல் நிகழ்ச்சி (tabligh congregation) நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட சபா மாநிலத்தின் உறுப்பினர்கள் மீண்டும் சபா மாநிலத்திற்குள் நுழைவதற்கு சபா அரசாங்கம் தடை விதித்து உள்ளது. இதை சபா மாநிலத் தலைமைச் செயலாளர் டத்தோ சபார் உந்தோங் இன்று அறிவித்தார்.

Sabah state secretary Datuk Safar Untong

இன்று முதல் 14 நாட்களுக்கு அந்தத் தடை அமலுக்கு வருகிறது. கொரோனா கோவிட் 19 வைரஸின் உலகளாவியத் தொற்றுதலைத் தடுப்பதற்கு இந்தத் தடை விதிக்கப் படுகிறது.


Ijtima Jemaah Tabligh Dunia di Gowa


அத்துடன் சபா மாநிலத்தின் அனைத்து பேருந்து நிலையங்கள் மூடப் படுகின்றன. பேருந்து சேவைகள் இருப்பதால் மக்கள் நடமாட்டமும் உள்ளது. மலேசிய அரசாங்கம் பொது நடமாட்டக் கட்டுப்பாடு (Movement Control Order) உத்தரவைப் பிறப்பித்து உள்ளது. இருந்தாம் பலர் அந்த உத்தரவைப் பொருட்படுத்துவது இல்லை.

https://www.malaymail.com/news/malaysia/2020/03/20/covid-19-sabah-govt-stops-tabligh-congregation-in-sulawesi-from-re-entering/1848573





20 மார்ச் 2020

கொரோனா கோவிட் 19 - மலேசியா: 3

மலேசியாவில் மூன்றாவது இறப்பு

மலேசியா சபா மாநிலத்தில் தாவாவ் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கொரோனா கோவிட் 19 நோயினால் இன்று மாலை 6.27-க்கு காலமானார். அவருக்கு வயது 58.


அண்மையில் நடைபெற்ற ஒரு சமய நிகழ்ச்சியுடன் தொடர்பு இருப்பதாக நம்பப் படுகிறது.

https://www.thestar.com.my/news/nation/2020/03/20/health-ministry-third-covid-19-related-death-in-malaysia

கடுமையான சுவாச நோய்த் தொற்று அறிகுறிகள் காரணமாகக் கடந்த மார்ச் 9-ஆம் தேதி தாவாவ் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். அன்றைய தினமே தீவிரச் சிகிச்சைப் பிரிவிலும் சேர்க்கப் பட்டார். இருப்பினும் குணம் அடையவில்லை. இன்று மாலை காலமானார்.

கொரோனா கோவிட் 19 - மலேசியா: 2

15 மருத்துவ ஊழியர்கள் பாதிப்பு

கொரோனா கோவிட் 19 நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து வந்த மருத்துவ ஊழியர்கள் 15 பேர் அந்த நோயினால் பாதிக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இவர்களில் 12 பேர் சுகாதார அமைச்சின் மருத்துவ ஊழியர்கள். இதர மூன்று பேர் தனியார் மருத்துவ ஊழியர்கள்.

Health director-general Datuk Seri Noor Hisham Abdullah

பாதிக்கப்பட்ட சுகாதார அமைச்சின் மருத்துவ ஊழியர்கள் 12 பேரில் ஒருவர் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்குச் சுவாச உதவி (ventilatory support) வழங்கப் படுகிறது.

கொரோனா கோவிட் 19 கிருமிகளுக்கு இனம், மதம், செல்வாக்கு எதுவும் தெரியாது. நோயாளிகளுக்கு அவசர உதவிகள் செய்யும் மருத்துவ ஊழியர்களையும் அடையாளம் தெரியாது.

கொரோனா கோவிட் -19 தொற்றைக் கட்டுப்படுத்த பொது நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை நிறைவேற்ற வேண்டும். பொதுமக்கள் வீட்டில் இருக்குமாறு சுகாதார தலைமை இயக்குநர் நூர் ஹிஷாம் அப்துல்லா வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

“உங்களுக்கு உதவ எங்களுக்கு உதவுங்கள். வீட்டிலேயே இருங்கள்’ என்று சுகாதார தலைமை இயக்குநர் நூர் ஹிஷாம் அப்துல்லா வேண்டுகோள் விடுத்து உள்ளார். "Our simple message to the public today – please help us to help you. Stay at home".