01 மார்ச் 2017

⁠⁠⁠திறன்பேசி மின்கலப் பராமரிப்பு

1. புதிய திறன்பேசி வாங்கியதும் அல்லது புதிய மின்கலம் வாங்கியதும் முதலில் 8 மணி நேரம் மின்னூட்டம் செய்வது மிக மிக அவசியம். ஒரு மணி அல்லது 2 மணி நேரத்தில் ’Battery Full’ என காட்டினாலும் மின்னேற்றம் (Charge) செய்வதை நிறுத்தாதீர்கள். 8 மணி நேரம் முடிந்த பின்பே மின்னேற்றம் செய்வதை நிறுத்துங்கள்.

2. எப்போது திறன்பேசி "Battery Low" என காட்டுகிறதோ அப்போதுதான் மின்னூட்டம் செய்ய வேண்டும். சற்றுக் குறைந்ததும் உடனே மின்னூட்டம் செய்யக் கூடாது.


3. திறன்பேசியின் மின்கலம் mAh (Milliamp Hours) 1000 க்கும் அதிகமான திறன் உடைய மின்கலமா என சோதித்துப் பார்த்து வாங்குங்கள். ஏனெனில் ஆடியோ, வீடியோ, இணைய வசதி உள்ள திறன்பேசிகளுக்கு mAh 1000 க்கும் அதிகமான திறன் உடைய மின்கலம் தேவை.
                       
4. இரவு நேரங்களில் திறன்பேசியை மின்னேற்றத்தில் இணைத்துவிட்டு காலையில் கழற்றும் வழக்கத்தை முற்றிலும் தவிர்த்து விடுங்கள். ஏனெனில் நீங்கள் இப்படி மின்னூட்டம் செய்வதால் உங்களுடைய மின்கலம் விரைவில் பருத்துப் பெருத்து... பின்னர் பயன்படாமலேயே போகும்.



5. புளூடூத் (Bluetooth) வசதி, வை-பை (wifi) வசதி மற்றும் இணைய வசதிகள் தேவைப்படும் போது மட்டும் பயன்படுத்துங்கள். மற்ற நேரங்களில் அடைத்து வைப்பதே சிறந்தது. எப்போதும் திறந்தே வைத்து இருந்தால் மின்கலத்தின் தயாரிப்பு நிலையில் இருந்த ஆற்றல் குறைந்து கொண்டே போகும்.                       

6. அழைப்பு ஒலிக்கு (Ringtone) ஒரு முழு பாட்டையும் வைக்காமல் Cut Songs அல்லது Split Songs எனும் குறுகிய பாடல்களையே அழைப்பு ஒலியாக வைத்தால்... மின்கலத்தின் திறன் அதிகமாகச் செலவழிக்கப் படுவதைத் தவிர்க்கலாம்.


7. திறன்பேசியில் எப்போதும் பாடல்களைப் பாட விடாதீர்கள்.

8. திறன்பேசியின் திரை வெளிச்சத்தைக் குறைத்து வையுங்கள். அனைத்து திறன்பேசிகளிலும் (Power Saver Mode) இருக்கும். அதை முடுக்கி (Activate) விடுங்கள் இதனால் உங்களுடைய மின்கலம் நீண்ட காலத்திற்குத் தாக்குப் பிடிக்கும்.

9. திறன்பேசியின் முகப்பில் அதிக பிக்ஸ்ல்கள் (Pixels) கொண்ட படங்கள் வேண்டாமே. இதனால் மின்கலத்தின் ஆற்றல் மிக விரைவில் தீர்ந்து விடும்.


28 பிப்ரவரி 2017

எந்த வயதில் எது வெற்றி



4 வயதில் தனியாக நடக்க முடிந்தால் அது வெற்றி !

8 வயதில் தனியாக வெளியே சென்று வழி தவறாமல் வீடு திரும்பினால் அது வெற்றி !

12 வயதில் நல்ல நண்பர்கள் கிடைத்தால் அது வெற்றி !

18 வயதில் வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றால் அது வெற்றி !

22 வயதில் பட்டதாரியாகப் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறினால் அது வெற்றி !

25 வயதில் நல்ல வேலை கிடைத்தால் அது வெற்றி !

30 வயதில் தனக்கென ஒரு குடும்பத்தை அமைத்துக் கொள்ள முடியுமானால் அது வெற்றி !

35 வயதில் போதுமான அளவு சம்பாதிக்க முடியுமானால் அது வெற்றி !

45 வயதில் இளைஞரைப் போன்ற உருவத்தை தக்க வைக்க முடியுமானால் அது வெற்றி !

50 வயதில் தன் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை அளிக்க முடியுமானால் அது வெற்றி !

55 வயதில் தன் கடமைகளைத் தொடர்ந்து சரியாகச் செய்ய முடியுமானால் அது வெற்றி !

60 வயதில் ஓய்வு பெற வேண்டியவர் என நிராகரிக்கப் படாமல் செயலாற்ற முடியுமானால் அது வெற்றி !

65 வயதில் நோய் இல்லாமல் வாழ முடியுமானால் அது வெற்றி !

70 வயதில் மற்றவர்களுக்குப் பாரமில்லாமல் வாழ முடியுமானால் அது வெற்றி !

75 வயதில் பழைய நண்பர்களுடன் உறவாடி மகிழ முடியுமானால் அது வெற்றி !

80 வயதிற்கு மேல் மற்றவர் துணை இல்லாமல் வெளியே சென்று வழி தவறாமல் வீடு திரும்ப முடியுமானால் அது வெற்றி !





    

26 பிப்ரவரி 2017

பதாகை

படாகை என்றும் அழைக்கப்படும் பதாகை ஓர் அரசனின் அடையாளமாகக் கருதப்படும் கொடியைக் குறிக்கும் சொல்லாகும். அதனால் அரசனைப் பதாகையான் என்றும் அழைப்பார்கள்.

அதே சமயத்தில் பரதநாட்டியத்தில்... உள்ளங்கையையும் விரல்களையும் சேர்த்து உருவாக்கும் ஒரு நிலையைக் குறிக்கவும் அந்தச் சொல் பயன்படுத்தப் படுகிறது. 

பெருவிரலையும் அணிவிரலையும் மட்டும் ஒன்று சேர்த்துப் பிற விரல்களை நிமிர்ந்த நிலையில் வைக்கும் ஒரு நிலையைத் திரிபதாகை என்றும் அழைப்பார்கள்.


பரதநாட்டியத்தில் பதாகை
 
அபிநயம் - Gesture with one hand in which the thumb is bent while the other fingers are held close and upright

ஆங்கிலம் - ensign, ensign, banner
தமிழ் - பதாகை, அடையாளக் கொடி, சின்னம், விளம்பரக் கொடி

பயன்பாடு
பாடல்: பார்த்த முதல் நாளே... என் பதாகை தாங்கிய உன் முகம்
திரைப்படம்: வேட்டையாடு விளையாடு (2006)

ஜக்கி வாசுதேவ் ரகசியங்கள்




ஈஷா யோகா உலப் புகழ்பெற்ெயர்.ந்தப் பெயரில் பிரச்சாரம் செய்ர் கிட்டு. ாவகிட்டு என்கிற கிருஷ்ண மூர்த்தி. அில் ஜாவா வாசுதேவன் என்கிற ஜக்கி வாசுதேவ். அப்பிப் பெயர் ிரிந்த சத்குரு ஜக்கி வாசுதேவ் 1957 செப்டம்பர் 3 ஆம் தேதி கர்நாடகம் மைசூரில் பிறந்தவர். 

சின்ன வயதில் சத்குரு தேவ்
ஆன்மீகப் பாதைக்குத் துறவற வாழ்க்கைதான் சிறந்தது என்று உலக மக்களுக்குப் போதனை செய்த ஜக்கி வாசுதேவ் மைசூரில் ரிஷி பிரபாகர் என்ற யோகா குருவிடம் யோகா ஆசிரியராகப் பணியாற்றி வந்தார்

அங்கு அவர் விஜி எனும் விஜயகுமாரியைச் சந்தித்தார். இந்தப் பெண் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். அவருடன் நெருங்கிப் பழகியதில் காதல். அப்புறம் அவரையே திருமணம் செய்து கொண்டார். ராதே எனும் மகள் பிறந்தாள்.


வாலிப வயதில்
சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு கோவையில் சுதர்சன் வரதராஜ் என்பவரின் நட்பு கிடைத்தது. சுதர்சன் தன் மனைவி பாரதியை (முன்னாள் ஆந்திர எம்.பி ஒருவரின் மகள்) ஜக்கி வாசுதேவின் யோகா வகுப்பிற்கு அனுப்பி வைத்தார்.

அங்கு ஜக்கி வாசுதேவுடன் பாரதி நெருங்கிப் பழகினார். இருவருக்கும் பழக்கம் அதிகமானது. அதனால் மனைவி ஜக்கி வாசுதேவுக்கும் விஜிக்கும்...  பிரச்சினைகள்.



மோட்டார் சைக்கிள் பிரியர்
அதன் பிறகு விஜி தன்னுடைய அணாகத்தா சக்ரா ஆசிரமத்தில் தன் உயிரை விட்டதாக ஜக்கி வாசுதேவ் கூறுகிறார். ஆனால் தன் மகளை ஜக்கி வாசுதேவ் கொன்று விட்டதாக விஜியின் தந்தை காங்கன்னா போலீசில் புகார் கொடுத்து உள்ளார். வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் நிற்கிறது.

அதன் பின்னர் பாரதி தன்னுடைய கணவர் வரதராஜுவை விவாகரத்து செய்து விட்டு ஜக்கி வாசுதேவுடன் குடும்பம் நடத்தி அப்படியே ஆன்மீகப் பாதைக்கு வந்து விட்டார்.



மனைவி விஜயகுமாரியுடன்
சரி. அடுத்து ஜக்கி வாசுதேவ் கஞ்சா வியாபாரம். 40 ஆண்டுகளுக்கு முன்பு கோயம்புத்தூர் புரூபாண்ட் ரோடு மேம்பாலத்திற்கு கீழ் ஜக்கி வாசுதேவ் கஞ்சா வியாபாரம் செய்து வந்தார்.

கஞ்சா வியாபாரத்தில் இவருக்கு ரிச்சர்ட் என்ற பிரபல ரவுடி உதவி. அதே சமயத்தில் இவர்கள் இருவருக்கும் உதவியாக இருந்த ஒரு பெண் திடீரென்று காணாமல் போனார்.

அந்தப் பெண்ணின் நிலை என்ன ஆனது என்று இதுவரை யாருக்கும் தெரியவில்லை. சில நாட்களில் ரவுடி ரிச்சர்ட்டும் கொலை செய்யப் பட்டார். அதே போல ஜக்கியின் மனைவி விஜியையும் ஜக்கி வாசுதேவ் தான் கொலை செய்து விட்டார் என்று ஒரு வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.



விஜிக்கும் ஜக்கி வாசுதேவுக்கும் பிறந்த மகள் தான் குழந்தை தான் ராதே. முக்திக்கு வழிகாட்டி என்று பிறர் வீட்டுப் பிள்ளைகளுக்கு மொட்டை அடித்து சாமியாராக ஆக்கியவர் ஜக்கி வாசுதேவ். ஆனால் அவரின் செல்ல மகள் ராதே குடி, கொண்டாட்டம் என வளர்ந்த நவீன காலத்து மங்கை.

அத்தனைக்கும் ஆசைப்படு என இவர் சொல்வது இவரின் திருப்புதல்விக்கும் இவருக்கும் மட்டும் தான் போல் இருக்கிறது,

அடுத்து ஈஷாவில் சந்நியாசம் எடுக்கிறவர்கள் முதலில் குடும்பத் தொடர்பை முழுமையாக நிறுத்திக் கொள்ள வேண்டும். அவர்களின் கல்விச் சான்றிதழ்கள் முதற் கொண்டு அனைத்து ஆவணங்களும் ஈஷா மையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் போய்விடும். குருகுலப் பள்ளியில் சேர்வதற்கு கட்டணம் 7 லட்சம் ரூபாய்.




சம்பந்தப் பட்டவர்கள் பெயரில் இருக்கும் சொத்து, நகை, பணம் போன்றவை கூட ஈஷாவின் கட்டுப்பாட்டில் தான் இருக்கும். இவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் தான் என்ன என்று தெரியவில்லை. ஆனால் கிட்டத்தட்ட அனைவரும் கஞ்சா அடித்த மாதிரி அரை போதையில் தான் எப்போதும் இருப்பார்கள்

இவரால் 10 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கா உருவாக்கப் பட்டதே சம்ஸ்கிருதி என்ற குருகுலப் பள்ளி இதில் குழந்தைகளை சேர்த்த கட்டணம் 7 லட்சம்.



ஈஷாவில் அதிகாலை 5மணிக்கு எழுந்து... தீர்த்த குண்டம் எனும் குளத்தில் 10-12° குளிர்ந்த நீரில் குளியல். பின்பு யோகா, களரி பயிற்சி, பின் 2-3kms நடை பயிற்சி. பின் மீண்டும் குளியல். அதன்பின் சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட உணவு. பின் மீண்டும் இரவு 7 மணிக்கே அடுத்த வேளே உணவு. இடையில் ஒன்றும் கிடையாது. எப்படி உங்கள் வசதி?
 
ஆசிரம வாழ்க்கை பிடிக்காமல் அல்லது உடல் நலம் குன்றிப் போனால்... அதனால் ஆசிரமத்தை விட்டு விலகினால் வாங்கிய பணத்தில் பத்து பைசா கூட திரும்ப கொடுக்கப்பட மாட்டாது
 
சதுரங்க வேட்டை என்ற திரைப்படம் உலகளவில் நடக்கும் பல போலி வியாபார தந்திரங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. அதில் கதாநாயகன் பேசும் ஒரு வசனம் 



நாம் சொல்லுற ஒவ்வொரு பொய்யிலும் ஓர் உண்மை இருக்கணும்

இது தான் தன்னை உணர்ந்த ஞானி என்று சொல்லித் திரியும் திருட்டுச் சாமியார்களின் தாரக மந்திரம்.

ஈஷா யோகா மையத்தில் சந்நியாசியாக மாறிப் போனவர்களில் 80% பேர் படித்தவர்கள். இப்படி படித்தும் முட்டாள்களாக இருப்பது வேதனையாக இருக்கிறது.




யார் மீது தவறாக இருந்தாலும் சரி நம்மை நாமே மாற்றிக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.

இறை பக்தி வேறு, மூட நம்பிக்கை என்பது வேறு. முக்தி என்பது இருக்கிறதா இல்லையா எறு தெரியவில்லை. ஆனால் உங்களுக்காக ஒரு வாழ்க்கை இருக்கிறது, உங்களுக்கு என்று ஒரு குடும்பம் இருக்கிறது. அதைத் தொலைத்துவிட வேண்டாம்.
 
உனக்குள் நீ மலர வேண்டும். அதற்கு மற்றவர் உதவிகள் தேவை இல்லை

24 பிப்ரவரி 2017

வாட்சாப் என்பது வாட்சாப்


ஒருவருக்குக் கொடுக்கப்பட்டப் பெயர் எல்லா மொழிகளிலும் அதே பெயராகவே இருக்கிறது. அதைப் போல ஒரு செயலிக்கு கொடுக்கப்படும் பெயரும் எல்லா மொழிகளிலும் அதே பெயராகத் தான் இருக்க வேண்டும்.

வாட்சாப் Whatsapp செயலியைப் புலனம் என்கிறோம். டெலிகிராம் செயலியைத் தந்தி என்கிறோம். மற்ற மற்றச் செயலிகளின் பெயர்களை எல்லாம் தமிழில் மொழிப் படுத்துகின்றோம். ஒரு நிறுவனத்தின் பெயரைத் தமிழ்ப் படுத்துவது முறை அல்ல.

Facebook என்பது பேஸ்புக்காக இருக்க வேண்டும். Twitter என்பது டிவிட்டர் என்று இருக்க வேண்டும். அதே போல Flickr, Google, Instagram, Habbo, LinkedIn, Bebo, YouTube, Viber, Tumblr, Pinterest, Quora, Friendster, Myspace, Orkut, Xanga போன்ற செயலிகளின் பெயர்களும் அவற்றின் அசல் பெயர்களிலேயே அழைக்கப்பட வேண்டும்.

‘தமிழரசி’ என்னும் பெயர் கொண்ட ஒருவரை ஆங்கிலத்தில் ‘Tamil Queen’ என்று அழைப்பது இல்லை. அதே போல ‘கருப்பையா’ என்பவரை ‘Black Ayya' என்று அழைப்பதும் இல்லை. ராமசாமி என்பவரை Rama God என்று அழைப்பது இல்லை.

Bill Gates என்பவரை  வாயிற்கதவு மசோதா என்று அழைப்பது இல்லை. 100 Plus என்பதை நூறு கூட்டல் என்று அழைப்பது இல்லை. சரிங்களா. Coca Cola, Pepsi Cola, 7 Up, Fanta எனும் பெயர்களை மட்டும் ஏன் தமிழ்ப் படுத்துவது இல்லை. எந்தச் சொல்லைத் தமிழ்ப் படுத்த முடியுமோ அவற்றை மட்டும் தமிழ்ப் படுத்துகிறார்கள்.

அதைப் போல Kentucky Fried Chicken (KFC) என்பதை ‘கெந்தக்கி வறுத்த கோழி’ என்று சொல்கிறோமா. இல்லையே. Pizza Hut என்பதை ’பிசா குடிசை’ என்றும் சொல்வது இல்லையே. YouTube என்பதை ’உந்தன் குழாய்’ என்று சொல்ல முடியுமா. சொல்லுங்கள். ஆக Whatsapp என்பதை வாட்சாப் என்றுதான் அழைக்க வேண்டும்.

வாட்சாப் உருவாக்கியவர்களின் உழைப்பால் இலவசமாகவே அவர்களின் கண்டுபிடிப்பைப் பயன்படுத்தி வருகிறோம். அந்த வகையில் அவர்கள் வைத்த பெயர்களை அப்படியே சொல்லி அவர்களுக்கு நன்றி சொல்வது நம்முடைய கடமையாகும்.