ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் மாநிலத்தில் அடுத்தக் கல்வி ஆண்டு முதல் தமிழ் மொழியும் ஒரு பாடமாகக் கற்றுத் தரப்படும் என நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு அறிவித்து உள்ளது. இது தொடர்பான தமிழ் மொழிப் பாடம் உள்ளடக்கிய புதிய பாடத் திட்டத்தையும் அந்த மாநில அரசு வெளியிட்டு உள்ளது.
இந்தி, பஞ்சாபி, பெர்சியன் மொழிகளையும் பாடத் திட்டத்தில் சேர்க்க நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு முடிவு எடுத்து உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ் மலர் - 22.09.2019
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை இரண்டாவது மொழிப் பாடமாக தமிழ் பயிற்றுவிக்கப்பட உள்ளது. இந்தி, பஞ்சாபி, பெர்சியன் மொழிகளையும் பாடத் திட்டத்தில் சேர்க்க நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு முடிவு எடுத்து உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.