இன்றைய சிந்தனை 26.06.2019 - வாழ்க்கை விடுகதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இன்றைய சிந்தனை 26.06.2019 - வாழ்க்கை விடுகதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

14 ஜூலை 2019

இன்றைய சிந்தனை 26.06.2019 - வாழ்க்கை விடுகதை

வாழ்க்கை என்பது விடை இல்லாத விடுகதை. 

 Image may contain: 1 person

 ஆரம்பமும் இல்லை. முடிவும் இல்லை.
 
நம்பிக்கை எனும் துடுப்பில் இலக்கு தெரியாமல் நகர்ந்து கொண்டு இருக்கிறோம்.  கூட்டிக் கழித்துப் பார்த்தால் வாழ்க்கை ஒரு புரியாத புதிர்.


காலையில் எழுந்ததும் நமக்குத் தெரிந்தவர்களிடம் வணக்கம் சொல்கிறோம். அதே போல நமக்கு முன்பின் தெரியாதவர்கள் இந்த ஊடகங்கள் வழியாக ஒரு வகையில் நண்பர்கள் ஆகிறார்கள்...

கால ஓட்டத்தில் உறவினர்கள் ஆகிறார்கள்.. நம்முடைய வாழ்க்கையில் ஓர் அங்கமாக மாறியும் போகிறார்கள்... அவர்களுக்கு் வணக்கம் சொல்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். உவகை பூக்கிறது.

ஆனால் காலை வணக்கம், மாலை வணக்கம் என்பதற்குப் பதிலாக வணக்கம் என்று ஒரே சொல்லில் சொன்னால் போதும். அந்த வணக்கம் காலத்தையும் கடந்து போகிறது என்பது என் தனிப்பட்ட கருத்து.



Sathya Raman வணக்கம் சார், சமீபத்தில் ஆய்வில் அறிவிக்கப் பட்டது. உலகிலேயே தமிழர்கள் தான் மிக அதிகமாக "காலை வணக்கம்" பதிவுகளை பகிர்ந்து கொள்கிறார்களாம்.🙏
 
 
Muthukrishnan Ipoh அந்த ஆய்வைச் செய்த யார் என்று சொன்னால் சற்று ஆறுதலாக இருக்கும் சார்...

நாள் ஒன்றுக்கு உலகம் முழுமைக்கும் 500 - 600 கோடி செய்திகள் கைப்பேசிகள் மூலமாகப் பகிர்ந்து கொள்ளப் படுகின்றன...


அந்தச் செய்திகளை ஒருவர் படித்து முடிக்க வேண்டும் என்றால்... ஒரு நாள் செய்திகள் மட்டும்... ஆயிரம் ஆண்டுகள் பிடிக்குமாம்... இப்படி இருக்கும் போது “காலை வணக்கம்” ஆய்வு நடந்து இருப்பது பெரிய விசயம் தான்...
 
 
Sathya Raman சில மாதங்களுக்கு முன்பு பிரபலமான தமிழக தொலைக்காட்சி தமிழ் செய்தியில்தான் இந்த தகவலை நானும் கேட்டேன் சார்.செய்தியில் கூறப்பட்ட தகவல் என்பதால் நம்ப வேண்டியதாகிறது சார்.
 
 
Muthukrishnan Ipoh இருக்கலாம். அவர்களுக்கு எப்படி தகவல் கிடைத்தது என்று நமக்குத் தெரியாது ஐயா...
 
 
Sathya Raman வணக்கம் சார், தங்களின் எழுத்துப் பதிவுகளை நீண்ட காலம் அறிந்து வந்துள்ளேன். தங்களைவிட வயதிலும் குறைந்த பெண் நான். எண்பது, தொன்னூறுகளில் பகாங் சத்தியா என்ற பெயரில் பத்திரிகைகளுக்கு எழுதி வந்துள்ளேன் சார். இடையில் நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் படைப்பிலக்கியத் துறையைப் பார்த்து படித்து வருகிறேன் சார். ஆகவே நான் ஒரு பெண்.
 
 
Muthukrishnan Ipoh Sathya Raman பகாங் சத்தியா... நீங்க தானா... நீண்ட நாட்களாக எழுத்துத் துறைப் பக்கம் காணவில்லை... ஒரு காலத்தில் நாளிதழ்களிலும் வானொலியிலும் உங்கள் படைப்புகளைப் பார்த்து படித்து இருக்கிறோம்... தொடர்ந்து எழுதுங்கள்... நன்றி.
 
 
Manickam Nadeson வாழ்க்கைக்கு விடை உண்டு ஐயா சார், ஆமாம் வாழ்க்கையை வாழ்ந்து பாருங்கள், இன்ப துன்பங்களை ரசித்து அனுபவியுங்கள். அங்கே இருக்கிறது விடை.
 
 
Santhanam Baskaran உண்மைதான். அர்த்தமற்ற பயணம். அதில் ஓர் அர்த்தத்தைத் தேடும் முயற்சிதான் வாழ்க்கையோ!
 
 
Manickam Nadeson வாழ்க்கை உண்மையிலேயே அர்த்தமுள்ளது, அதை அனுபவிப்பவர்களுக்குத் தான் தெரியும் அதன் அருமையும் பெருமையும். வாழுங்கள்.
 
 
 Image may contain: text
 
 
 
 
 
 
 
  Image may contain: indoor