எஸ்.எஸ்.டி. தொடரப்பட வேண்டும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எஸ்.எஸ்.டி. தொடரப்பட வேண்டும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

05 அக்டோபர் 2019

எஸ்.எஸ்.டி. தொடரப்பட வேண்டும்

(தமிழ் மலர் - 05.10.2019)

விற்பனை சேவை வரி (எஸ்.எஸ்.டி.) தற்சமயத்திற்குத் தொடரப்பட வேண்டும் என பி.கே.ஆர். தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெளிவு படுத்தினார்.

இந்த வரி மாற்றப் படுவதற்கு முன்னர் தேவையான சீர் திருத்தங்கள் செய்யப்பட்டு தொடரப் படுவதே சரியான நடவடிக்கை என்றார் அவர். 


பொருள் சேவை வரி வெளிப்படைத் தன்மைமிக்க ஓர் ஆக்கப் பூர்வமான வழிமுறை என்ற போதிலும், அனைவரும் இந்த வரியைச் செலுத்த வேண்டி உள்ளதாக அவர் சொன்னார்.

குறைந்த வருமானம் பெறுவோரும் இந்த வரியைச் செலுத்துவது நியாயமா என போர்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் வினவினார்.

பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் ஜி.எஸ்.டி.யை மீண்டும் கொண்டு வருமா என்ற கேள்விக்கு அன்வார் இவ்வாறு கருத்துரைத்தார்.



பேஸ்புக் அன்பர்களின் பின்னூட்டங்கள்
  
Sathya Raman அடிக்கடி இந்த அரசியல் வாதிகளின் பேச்சும் அல்லூர் தண்ணியும் ஒன்று தான் என்பதை இவர்களின் சொல்லும் செயலும் இருக்கின்றன. மீண்டும் ஜி. எஸ்.டி.யைக் கொண்டு வரும் திட்டம் இருப்பதாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் பிரதமர் சொல்கிறார்.

போததற்கு எஸ்.எஸ்.டி என்று ட
த்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சொல்வது ஏற்கனவே தேர்தல் பிரச்சாரத்தில் பாரிசான் அரசாங்கத்தை இந்த வரி விசயங்களை வைத்து தானே காலை வாரினார்கள்?

இப்போது நடப்பில் இருக்கும் எஸ்.எஸ்.டி வரி கண்ணுக்கு தெரியாதா? பாக்கத்தான் ஆட்சியில் பலமடங்கு உயர்ந்து இருக்கும் விலைவாசிகளைப் பற்றி எல்லாம் விபரம் தெரியாத பாலகர்களா?

நாற்றம் எடுத்த நாக்கை வைத்துக் கொண்டு நேரத்திற்கு நிறம் மாறும் இந்த நிலை கெட்ட அரசியல்வாதிகள் இப்படி மக்களுக்கு அல்வா கொடுக்கவா 60 ஆண்டு கால ஆட்சி மாற்றத்தை மக்கள் ஏற்படுத்தினார்கள்?

என்னங்கடா இது மலேசிய மக்களுக்கு வந்த சோதனை????? "தன்னை அறிந்தவர்கள் ஆசைப் பட மாட்டார்கள். உலகை அறிந்தவர்கள் கோபப் பட மாட்டார்கள். இந்த இரண்டையும் அறிந்தவர்கள் நட்டபட மாட்டார்கள்” என்றெல்லாம் இந்த அரசியல் வாதிகளைப் பார்த்து பொன் மொழிகளில் புன்முறுவல் கூட செய்யும் காலம் வரவே வராது போலிருக்கே.?

மரங்கள்கூட தன் இலைகளை மாற்றிக் கொள்ளுமே தவிர தன் வேர்களை அல்ல. ஆனால் இந்த அதிகாரத்தில் உள்ளவர்களின் நாக்கு அடிக்கடி புரட்டிப் புரட்டி பேசும் அவலத்தை ஆண்டவனால்கூட ஒன்றும் செய்ய முடியாது போலிருக்கே?

மனிதர்களின் தீய குணங்களைப் பித்தளைத் தட்டில் வைக்கிறோம். அவர்களின் நல்ல குணங்களைத் தண்ணீரில் எழுதுகிறோம் என்றே இவ்வேளையில் எழுதத் தோன்றுகிறது

  
Muthukrishnan Ipoh முதலுக்கே மோசம் என்று சொல்வார்கள்... அது என்னவோ பக்காத்தான் அரசாங்கத்தைப் பொருத்த வரையில் மிகச் சரியாக அமைகிறது...

Manickam Nadeson பாக்காத்தான் ஒரு சரியான அள்ளி விட்டான் கூட்டமா இருக்கு...
 
Muthukrishnan Ipoh பொதுத் தேர்தலின் போது மக்களிடம் சொன்னது ஒன்று... செய்வது வேறாக இருக்கிறது. அரச மரத்தை நம்பிப் புருசனைக் கைவிட்ட கதையாக மாறி வருகிறது...
 
Perumal Thangavelu G.S.T. யை ஒழிக்க வந்தவர்கள், அதனை மறப்பது நன்றன்று. மக்கள் வெறுப்புக்கு ஆளான G.S.T-யை ஒழிப்பதை ஆளும் அரசு நிலை நிறுத்த வேண்டும்.
 
Selva Mani G.S.T.-யை வெச்சு செஞ்சிட்டாங்கயா... தேர்தலில் முக்கிய கதாபாத்திரமே இந்த G.S.T. தான்!
 
Muthukrishnan Ipoh பக்காத்தான் அரசாங்கம் இப்படி பல்டி அடிக்கக் கூடாது... அதை நம்பி வாக்களித்த பொதுமக்களை இப்படி ஏமாற்றக் கூடாது... நம்பிக்கைத் துரோகம்...