(இன்று 19.04.2015 மலேசியா தினக்குரல் ஞாயிறு மலரில் வெளியான கேள்வி பதில்கள்)
பாலமுருகன் முனுசாமி, பாயான் லெப்பாஸ், பினாங்கு
பாலமுருகன் முனுசாமி, பாயான் லெப்பாஸ், பினாங்கு
கே: வீடியோ எனும் காணொளியை யூடியூப்பில் இருந்து பதிவிறக்கம் செய்தால், அதில் வாட்டர்மார்க் (watermark) எனும் நீரோட்டக் குறி இருக்கிறது. மிகவும் தொல்லையாக இருக்கிறது. படம் பார்க்கும் போது, அவர்களுடைய சின்னத்தைப் போட்டு உயிரை எடுத்து விடுகிறார்கள். அதை எப்படி அகற்றுவது?
ப: இணையத்தில் இருந்து வீடியோ கோப்புகளைப் பதிவிறக்கம் செய்யும் போது, அதில் சின்னம் (Logo) அல்லது இணையதள முகவரிகள் நீரோட்டக் குறிகளாக சேர்ந்து வரும். நீங்கள் சொல்வது உண்மைதான். சமயங்களில் அது நமக்கு ஒரு வகையான இடைஞ்சலைத் தரலாம். சமயங்களில் தொல்லையாகவும் இருக்கும்.
ப: இணையத்தில் இருந்து வீடியோ கோப்புகளைப் பதிவிறக்கம் செய்யும் போது, அதில் சின்னம் (Logo) அல்லது இணையதள முகவரிகள் நீரோட்டக் குறிகளாக சேர்ந்து வரும். நீங்கள் சொல்வது உண்மைதான். சமயங்களில் அது நமக்கு ஒரு வகையான இடைஞ்சலைத் தரலாம். சமயங்களில் தொல்லையாகவும் இருக்கும்.
இதனைத் தவிர்க்க முடியும். கஷ்டமான வேலை இல்லை. அதற்கு ஒரு சின்ன நிரலி பயன்படுகின்றது. அதன் பெயர் VideoLogoRemover. இலவசமாகக் கிடைக்கிறது.
அதன் கோப்பு அளவு (File size) 7.05 MB. இந்த நிரலியை http://www.mediafire.com/download/1bkldzohdyzl7ql/VideoLogoRemover.exe எனும் முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது http://en.softonic.com/s/video-logo-remover எனும் முகவரியிலும் பதிவிறக்கம் செய்யலாம். அல்லது யூடியூப்பில் https://www.youtube.com/watch?v=bGGpgnedJpg எனும் முகவரியில் விளக்கம் இருக்கிறது.
அதையும் பாருங்கள். அந்த நிரலியைப் பதிவிறக்கம் செய்ததும், கீழ்கண்ட மாதிரி ஓர் அறிவிப்பு படம் வரும்.
அதையும் பாருங்கள். அந்த நிரலியைப் பதிவிறக்கம் செய்ததும், கீழ்கண்ட மாதிரி ஓர் அறிவிப்பு படம் வரும்.
அதில் லோட் வீடியோ (Load Video) எனும் பட்டையில் உங்களுக்கான வீடியோ படத்தைத் தேர்வு செய்யுங்கள்.
நீங்கள் எந்த வீடியோ படத்தைத் தேர்வு செய்தீர்களோ, அந்தப் படத்தை அங்கே பார்க்கலாம். அடுத்து நீரோட்டக்குறி எங்கோ இருக்கிறதோ, அதைத் தேர்வு செய்யுங்கள். (Use Your Mouse to Select the Logo Area).
உங்களுடைய விரலியைக் கொண்டு அந்தச் சின்னத்தின் மீது ஒரு நீள்சதுக்க அளவில், இடத்தைத் தேர்வு செய்யுங்கள்.
அடுத்த, நீரோட்டக்குறியை அகற்ற (Remove Logo) எனும் தடையைச் சொடுக்கவும்.
உங்களுக்கு எந்த அமைப்பில் (Format) வீடியோ வேண்டுமோ அந்த அமைப்பைத் தேர்வு செய்யவும்.
வீடியோவில் உள்ள சின்னத்தை பதிப்பு செய்த நிரலி நீக்கிவிடும்.
நீரோட்டக்குறி அல்லது சின்னம் நீக்கப்பட்டு எல்லா வேலைகளும் முடிந்ததும், Process is finished எனும் ஓர் அறிவிப்பு வரும். அவ்வளவுதான். வேலை முடிந்தது. எங்கே அந்தக் கோப்பைச் சேமித்து வைத்தீர்களோ, அந்த இடத்திற்குப் போய்ப் பார்த்தால், நீரோட்டக்குறி இல்லாத வீடியோவைப் பார்க்கலாம்.
இனிமேல் நீரோட்டக் குறியின் தொல்லைகளும் இல்லை. தொந்தரவுகளும் இல்லை. இந்த நிரலியைப் பதிப்பு செய்யும் போது, பிரச்சினைகள் வரலாம். கவலை வேண்டாம். யாம் இருக்க பயமேன். +6012-9767462 எனும் கைப்பேசி எண்களுக்கு அழையுங்கள். உதவி செய்யத் தயாராக இருக்கிறோம். இன்னும் ஒரு விஷயம்.
இரண்டு மூன்று வாரங்களாக நிறைய வேலைகள். அதனால், இந்தக் கணினியும் நீங்களும் பகுதியைப் பராமரிக்காமல் போய் விட்டேன். மன்னிக்கவும்.
இந்தக் கேள்வி பதிலின் படங்கள் வேலன் வலைப்பதில் இருந்து எடுக்கப் பட்டது. அவருக்கு நன்றிங்க வேலன்.