தெலுக் இந்தான் தென்னிந்தியர்கள் - 1910 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தெலுக் இந்தான் தென்னிந்தியர்கள் - 1910 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

17 மே 2020

தெலுக் இந்தான் தென்னிந்தியர்கள் - 1910

இத்தாலியில் பைசா கோபுரம். மலேசியாவில் தெலுக் இந்தான் கோபுரம். அழகாய்ச் சரித்திரம் பேசும் சாய்ந்த கோபுரம். இப்படி ஒரு வேறு கோபுரம் ஆசியாவில் இருப்பதாகத் தெரியவில்லை. 1885-ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.

இனி ஒரு கோபுரம் அப்படி சாய்ந்து நிற்கப் போவதும் இல்லை. சரித்திரம் பேசப் போவதும் இல்லை. 


ஆக அந்தத் தெலுக் இந்தான் சாய்ந்த கோபுரம் (Leaning Tower of Teluk Intan) காலா காலத்திற்கும் சாய்ந்து கொண்டுதான் இருக்கும். மர்மக் கதைகளைப் பேசிக் கொண்டுதான் நிற்கும். நாமும் கேட்டுக் கொண்டுதான் இருப்போம்.

அந்தக் கோபுரத்திற்கு அப்படி ஓர் அமைப்பு. அப்படி ஒரு கவர்ச்சி. பேராக் மாநிலத்திற்கு மட்டும் அல்ல. மலேசியாவிற்கே அது ஒரு கவர்ச்சித் தளம். பெருமைப் படுவோம். தெலுக் இந்தான் மக்கள் மட்டும் அல்ல. மலேசியர்கள் அனைவரும் பெருமைப்பட வேண்டும். சலாம் போட வேண்டும்.

கோபுரத்தைக் கட்டி முடித்த போது நன்றாகத்தான் நிமிர்ந்து நின்றது. கட்டிய கொஞ்ச நாளில் அதற்கு வெட்கம் வந்துவிட்டது போலும். குனிந்த தலை நிமிரவே இல்லை. அதற்கும் காரணங்கள் இருக்கின்றன. என்ன என்பதைப் பார்ப்போம்.


இந்தக் கோபுரம் 1885-ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. கட்டிய பிறகு அதிகமான பராமரிப்பு வேலைகளில் ஈடுபட்டவர்கள் தென்னியந்தர்கள். தமிழர்கள்; தெலுங்கர்கள்; மலையாளிகள்; இவர்களைத் தான் தென்னியந்தர்கள் என்று சொல்கிறோம்.

ஓய்வு எடுப்பதற்காக தெலுக் இந்தான் திடலுக்குப் பக்கத்தில் இருக்கும் மரங்களுக்கு அடியில் ஓய்வு எடுத்துக் கொள்வார்கள். மரங்களுக்கு அடியில் வெற்றிலை பாக்கு போட்டு அப்படியே சாய்ந்தும் கொள்வார்கள்.

நம்மவர்கள் மரங்களுக்கு எப்படி இளைப்பாறுகிறார்கள் என்பதைக் கவனியுங்கள். 120 ஆண்டுகளுக்கு முன்னால் நம்மவர்களின் ஓய்வுத் தலங்கள் எப்படி இல்லாம் இருந்து இருக்கின்றன. அதையும் நினைத்துப் பாருங்கள்.


ஜப்பானில்கூட ஒரு சாய்ந்த கோபுரம் இருக்கிறது. ஆனால் தெலுக் இந்தானில் இருப்பதைப் போல ஏழு பாகை சாய்ந்து நிற்கவில்லை. ஜப்பான் கோபுரம் மூன்றே மூன்று டிகிரி தான் சாய்ந்து நிற்கிறது. இருந்தாலும் பாருங்கள்… ஜப்பானிய மக்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு போய் பார்த்துப் பெருமை படுகின்றனர்.

மூன்று பாகை சாய்ந்ததற்கே அப்படி ஓர் ஆர்ப்பாட்டம் என்றால் தெலுக் இந்தான் கோபுரம் மாதிரி ஏழு பாகை சாய்ந்து நின்றால் என்னவாகி இருக்கும். சொல்லுங்கள். ஒட்டு மொத்த ஜப்பானே திரண்டு போய் நிற்கும். அப்படித்தான் எனக்கும் தோன்றுகிறது.

என்ன செய்வது. தெலுக் இந்தான் அதிசயத்தைப் பார்க்க உள்ளூர் மக்களில் பலருக்கு நேரம் இல்லையாம். வெளிநாடுகளுக்குப் பறந்து போக மட்டும் நேரம் கிடைக்குமாம். பார்த்துவிட்டு வந்து வருசக் கணக்கில் கதைகள் பேசுவார்களாம்.  அவர்களின் வசன ஜாலங்களைக் கேட்டு நாமும் கைதட்டிச் சிரிக்க வேண்டுமாம். என்னங்க இது… 


வெளிநாடுகளுக்குப் போங்கள். போக வேண்டாம் என்று சொல்லவில்லை. முதலில் உங்கள் வயிற்றுப் பிள்ளையைப் பாருங்கள். அப்புறம் வேண்டும் என்றால் ஊரான் பிள்ளைகளை ஊட்டி ஊட்டி வளருங்கள். மனசில் சின்ன ஓர் ஆதங்கம். கொட்டி விட்டேன்.

மனிதர்கள் கட்டிய எந்த ஒரு கோபுரமும் ஐந்து பாகை வரை சாய்ந்து வரலாம். ஆனால் அதற்கு மேல் சாயக் கூடாது. 1993-இல் கோலாலம்பூர் உலு கிள்ளானில் ஒரு 12 மாடி அடுக்குக் கட்டடம் சாய்ந்த நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது.

மண் அரிப்பின் காரணமாகச் சாய்ந்து போனது. 48 பேர் இறந்து போனார்கள். பலர் காணாமல் போனார்கள். அந்தக் கட்டடம் பத்து பாகைக்கும் மேல் சாய்ந்து போனது. அதுதான் முக்கியக் காரணம்.

லுக் இந்தான் சாய்ந்த கோபுரத்திற்கு வருவோம். இந்தக் கோபுரத்தைச் சுற்றி எப்போதும் ஒரு சுற்றுலாக் கூட்டம் சுற்றிச் சுற்றி வந்து கொண்டே இருக்கும். ராத்திரி பத்து மணியாக இருந்தாலும் சரி; பன்னிரண்டு மணியாக இருந்தாலும் சரி; யாராவது ஒருவர் ’பளிச் பளிச்’ என்று படம் பிடித்துக் கொண்டுதான் இருப்பார். 


அந்தக் கோபுரத்திற்கு அப்படி ஓர் அமைப்பு. அப்படி ஒரு கவர்ச்சி. பேராக் மாநிலத்திற்கு மட்டும் அல்ல. மலேசியாவிற்கே அது ஒரு கவர்ச்சித் தளமாகவும் விளங்கி வருகிறது.

கோபுரத்தைக் கட்டி முடித்த போது நன்றாகத்தான் நிமிர்ந்து நின்றது. கட்டிய கொஞ்ச நாளில் அதற்கு வெட்கம் வந்துவிட்டது போலும். குனிந்த தலை நிமிரவே இல்லை. அதற்கும் காரணங்கள் இருக்கின்றன. என்ன என்பதைப் பிறகு பார்ப்போம்.

தெலுக் இந்தான் நகரின் பழைய பெயர் தெலுக்கான்சன். இன்றும் பலர் தெலுக்கான்சன் என்றே அழைக்கிறார்கள். இந்த நகரின் பிரதான சாலைகளில் ஒன்று ஜாலான் பாசார் சாலை. அதற்குப் பக்கத்தில் ஜாலான் ஆ சோங் இருக்கிறது. அங்கேதான் இந்தச் சாய்ந்த கோபுரமும் இருக்கிறது.

இந்தக் கோபுரம் 1885-ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. அந்தச் சமயத்தில் தெலுக் இந்தான் நகரின் மக்கள் தொகை எவ்வளவு தெரியுமா. 800 பேர். ஆயிரம் பேர்கூட இல்லை. இப்போது 120 ஆயிரம் பேர் இருக்கிறார்கள்.

பேராக் மாநிலத்தின் மூன்றாவது பெரிய நகரமாக விளங்குகிறது. கோபுரம் கட்டப் படும் போது தெலுக் இந்தான் நகரில் தீயணைப்பு படை இல்லை.

ஆக நகரில் நெருப்பு எதுவும் பற்றிக் கொண்டால் அணைப்பதற்கு தண்ணீர் வேண்டுமே. அதற்காகத்தான் அந்தக் கோபுரத்தைக் கட்டி அதன் மீது தண்ணீர் தாங்கியை ஏற்றி வைத்தார்கள்.

அது மட்டும் இல்லை. மழை பெய்யாமல் வறட்சி ஏற்பட்டு நீர் பற்றாக்குறை ஏற்படலாம். அந்தச் சமயத்தில் கோபுரத்தின் உச்சியில் இருக்கும் தாங்கிகளில் இருந்தும் தண்ணீர் எடுத்துக் கொள்ளலாம். நல்ல முன் ஏற்பாடுகள்.

மலேசியாவில் எஸ். துரைசிங்கம் என்பவர் மிகவும் பிரபலமான வரலாற்று ஆசிரியர். அவர் ஒரு நூலை எழுதி இருக்கிறார். ’மலாயா சிங்கப்பூரில் நூறு வருட யாழ்ப்பாணத்தவர்கள்’ (A Hundred Years of Ceylonese in Malaya and Singapore).

அதில் தெலுக் இந்தான் கோபுரத்தைப் பற்றி எழுதி இருக்கிறார். இந்தக் கோபுரம் கட்டப் படுவதற்கு மூவர் முக்கிய பங்கு வகித்து இருக்கிறார்கள். ஒருவர் சீனர். அவருடைய பெயர் லியோங் சூன் சியோங் (Leong Choon Chong). தெலுக் இந்தானில் மிகப் பிரபலமான வணிகர். ஈயச் சுரங்க முதலாளி. நல்ல ஒரு நன்கொடையாளர். தெலுக் இந்தான் மக்களுக்கு நிறைய உதவிகளைச் செய்து இருக்கிறார்.

மற்ற இருவரும் இந்தியர்கள். அவர்களில் ஒருவர் காசி கந்தையா. நிறைய நிதியுதவிகளைச் செய்து இருக்கிறார். அவருக்குச் சில காபி, ரப்பர் தோட்டங்கள் இருந்து இருக்கின்றன. அரசாங்கத்தின் கட்டுமானக் குத்தகைகள் கிடைத்து இருக்கின்றன.

தெலுக் இந்தான் சுற்று வட்டாரங்களில் சாலை நிர்மாணிப்புப் பணிகளில் ஈடுபட்டு இருக்கிறார். ஏற்றுமதி இறக்குமதி வியாபாரத்திலும் ஈடுபாடுகள் இருந்து இருக்கின்றன.

இவர் தெலுக் இந்தான் மக்களுக்கு பலவழிகளில் உதவிகள் செய்து இருக்கிறார். காசி கந்தையா மேலும் அதிகத் தகவல்கள் கிடைக்கவில்லை. வரலாற்று ஆவணங்களை அலசிப் பார்த்து விட்டேன். காசி கந்தையா வாழ்ந்தது 1890-களில்… அதையும் நினைவு படுத்துகிறேன்.

ஆக தெலுக் இந்தான் கோபுரத்தைக் கட்டியது யார் என்று யாராவது கேட்டால் இந்தியரின் பங்கு இருப்பதை மறவாமல் நினைவு படுத்துங்கள்.

அடுத்து இன்னும் ஓர் இந்தியர் வருகிறார். இவர் பண உதவிகள் செய்யாவிட்டாலும் கோபுரத்தின் படத்தை வரைந்து கொடுத்தவர். அவருடைய பெயர் ராஜசிங்கம். மலாயா வரலாற்றுச் சுவடுகளில் இந்த ராஜசிங்கம் எனும் தமிழரின் பெயரும் மறைந்து போய் நிற்கிறது.

இன்னும் வெளிச்சத்திற்கு வரவில்லை. ஏன் என்று தெரியவில்லை. இவரைப் போல நிறைய பேர் இருக்கிறார்கள். பிரிட்டிஷாரின் காலனைத்துவ ஆட்சியில் மலாயா மக்களுக்கு பற்பல சமூக உதவிகளைச் செய்து இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் பெயர்கள் வரலாற்றுச் சுவடுகளில் இருந்து மறைந்து நிற்கின்றன.

ராஜசிங்கம் இருக்கிறாரே இவர் அப்போது தெலுக் இந்தான் மாவட்டத்தின் பொறியியலாளராக இருந்தவர். கோபுரம் கட்டுவதற்கு படங்களை வரைந்து வடிவமைப்பு செய்து கொடுத்து இருக்கிறார். ’மலாயா சிங்கப்பூரில் நூறு வருட யாழ்ப்பானத்தவர்கள்’ என்ற நூலில் 172-வது பக்கத்தில் இந்த விவரங்கள் இருக்கின்றன.

அந்தக் காலக் கட்டத்தில் தெலுக் இந்தான் பகுதியில் நீர்த் தட்டுப்பாடு நிலவி இருக்கிறது. அதைச் சரி செய்வதற்காகக் கோபுரம் கட்டப்பட்டு இருக்கலாம் என்றும் சொல்லப் படுகிறது. ஏதோ ஒரு நல்ல காரியத்திற்காகச் செய்து இருக்கிறார்கள்.

அந்தக் கட்டததில் கார்ல் கிளிங்ரூத் (Kleingrothe, Carl Josef, 1864 -1 925) எனும் டச்சுக்காரர் போய் இருக்கிறார். அப்படியே அவர்களைப் படம் எடுத்து விட்டார்.  1910-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட படம்.

தெலுக் இந்தான் நகரின் பழைய பெயர் தெலுக்கான்சன். இன்றும் பலர் தெலுக்கான்சன் என்றே அழைக்கிறார்கள். இந்த நகரின் பிரதான சாலைகளில் ஒன்று ஜாலான் பாசார் சாலை. அதற்குப் பக்கத்தில் ஜாலான் ஆ சோங் இருக்கிறது. அங்கேதான் இந்தச் சாய்ந்த கோபுரமும் இருக்கிறது.

கார்ல் கிளிங்ரூத் எடுத்த இந்தப் படம் இப்போது நெதர்லாந்து லெய்டன் பல்கலைக்கழகத்தில் (Leiden University Library Netherlands); தென்கிழக்காசியக் கழகத் துறையின் பாதுகாப்பில் பத்திரமாக உள்ளது.

நெதர்லாந்து பக்கம் போகும் வாய்ப்பு கிடைத்தால் அந்தப் பல்கலைக்கழகத்திற்குச் சென்று அந்த வரலாற்று படத்தைப் பாருங்கள். நம் இனத்தவரை நினைத்துப் பெருமைப் படுங்கள்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
17.05.2020

Copyright of KSMuthukrishnan
posted at https://ksmuthukrishnan.blogspot.com/



 பேஸ்புக் பதிவுகள்

Shuresh Latchumana : Interesting sir, history comes with rare old pictures. If permits, share some on Pondok Tanjung Taiping. One of big settlement in those days in that area. My forefathers were from there. Thanks again.

Muthukrishnan Ipoh : சரிங்க... தகவல்களைச் சேகரித்ததும் பகிர்கின்றேன்... கருத்துகளுக்கு நன்றிங்க...

Shuresh Latchumana >>> Muthukrishnan Ipoh : Thank you very much sir.

Vanaja Ponnan : அருமை ஐயா

Muthukrishnan Ipoh மகிழ்ச்சி... நன்றி...

Suhanthamalar Muniandi : வணக்கம் சார். நான் சுகந்தமலர் முனியாண்டி. ஆசிரியர் தினத்தையொட்டி நீங்கள் ஒரு புகைப்படத்தை பதிவேற்றி இருந்தீர்கள். அது ஆசிரியர் பயிற்சி கல்லூரி என நினைக்கிறேன். அதில் உங்களது இடது மற்றும் வலது பக்கத்தில் உள்ளவர்கள் யார் என்று கூற முடியுமா?

Muthukrishnan Ipoh :
இடது புறத்தில் திரு.கிருஷ்ணன்... மலாக்கா திபோங்கில் தலைமையாசிரியாக இருந்தவர்... ம.இ.கா.வில் பிரபலம்... வலது புறத்தில் முனியாண்டி ஆசிரியர்... அதற்கு அடுத்து சேனன் ஆசிரியர்...

Suhanthamalar Muniandi >>> Muthukrishnan Ipoh : சார், முனியாண்டி ஆசிரியர் எனது அப்பா. இந்த புகைப்படத்தை பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றி. எனது அப்பாவுடைய படம் வேறேதும் இருந்தால், தயவு கூர்ந்து பகிரவும்.

Muthukrishnan Ipoh >>> Suhanthamalar Muniandi : பத்து தீகா லாபுவான் பாடாங் தமிழ்ப்பள்ளியில் படித்துக் கொடுத்தவர் தானே...

Suhanthamalar Muniandi >>> Muthukrishnan Ipoh : அது எனக்கு நினைவில்லை. நாங்கள் Telok Panglima Garang-ங்கில் வசிக்கிறோம். திரு. சதாசிவம் என் அப்பாவின் தோழர். என் அப்பா 1989-ஆம் ஆண்டு காலமாகி விட்டார்.

Muthukrishnan Ipoh : அவருக்கு நெஞ்சுவலி... இருவரும் நெருங்கிய நண்பர்கள்... பத்து தீகாவில் பக்கத்துப் பக்கத்து பள்ளிக்கூடத்தில் பணிகள்... என் வீட்டிற்கு சமயங்களில் வந்து போவார்... அமைதியான மனிதர்... எவரிடமும் அதிகம் பேச்சு வைத்துக் கொள்ள மாட்டார்... பண்பானவர்... அறிவாளி...

Suhanthamalar Muniandi >>> Muthukrishnan Ipoh : சார், மிகவும் நன்றி.

Santhanam Baskaran

Image may contain: outdoor

Sara Rajah :
One of my favorite place.

Ramesh Tholasy : நான் பிறந்த ஊர் ஐயா தங்களின் படைப்புகளை கண்டு பெருமை கொள்கிறேன் ஐயா.

Image may contain: indoor

Muthukrishnan Ipoh : வாழ்த்துகள்... மிக்க மகிழ்ச்சி...

Kannan Ramasamy :
Thanks for the sharing sir .. This is my hometown and glad to see one of the oldest pic of the leaning tower of East Pisa

Muthukrishnan Ipoh : மகிழ்ச்சி ஐயா... 1910-ஆண்டில் எடுக்கப்பட்ட படம்...

Santhanam Baskaran : 2011-இல் எடுத்த புகைப்படம்.

Image may contain: 1 person, sky and outdoor

Muthukrishnan Ipoh : சிறப்பு... மகிழ்ச்சி ஐயா...

Santhanam Baskaran : 2012-இல் எடுக்கப்பட்ட புகைப்படம்.

Muthukrishnan Ipoh : பார்த்தேன் ஐயா... சூப்பர்...

Rengasamy Kumaran : வியப்பின் விளிம்பில் வியப்பு -அருமை..!

Muthukrishnan Ipoh : மகிழ்ச்சி... மகிழ்ச்சி...

Gunasegar Manickam : சிறப்பான மகிழ்ச்சியூட்டும் செய்தி ஐயா...!!!

Mohana Hana : Nandri aiyaa

Maha Lingam : நன்றி... என் மனைவி பிறந்து வளர்ந்து...வாழ்ந்த ஊர்.. இன்று நிறைய இரத்த உறவுகள் உள்ளனர்...

Muthukrishnan Ipoh வாழ்த்துகள்... மகிழ்ச்சி... மகிழ்ச்சி...

Vadivelu Vadivelu : Nandri Aiyya. 🙏🙏🙏

Arojunan Veloo : நன்றி ஐயா!

Muthukrishnan Ipoh மகிழ்ச்சி... மகிழ்ச்சி...

DJbala Bala : "அருமையான" பதிவு ஐயா...!

Melur Manoharan
"அருமையான" பதிவு ஐயா...!

Murugan Thevar : வணக்கம் ஐயா, தங்களின் அனைத்து படைப்புகளும் சிறப்பு... நல்வாழ்த்துகள். உங்களைப் போன்று பொதுநல நோக்கோடு சரித்திரங்களைத் தொடர்ந்து எழுதும் எழுத்தாளர்களை விரல் விட்டு எண்ணலாம். 90% சுயலாபத்திற்கு எழுதுபவர்களே இன்று அதிகம்.

இவை அனைத்தையும் ஆவணப் படுத்த ஒரு முன்னெடுப்பைச் செய்யுங்கள். சரித்திரமே ஓர் இனத்தின் அடையாளம். என்னால் முடிந்த உதவியை நிச்சயம் செய்வேன். நன்றி 👏👏🏆🏆

Kumar Murugiah Kumar's Murugan Thevar : we always backup of you sir

Muthukrishnan Ipoh : உங்கள் பதிவிற்குப் பதில் கொடுக்க மறந்து விட்டேன்... சற்று தாமதமாக... நமக்குத் தெரிந்த தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும் போது மற்றவர்களின் பொது அறிவை வளர்ப்பதற்கு உறுதுணையாக இருக்கிறோம்... அந்த மன நிறைவு போதுங்க... அதுவே பெரும் மகிழ்ச்சிங்க...

Kala Devi Arumugam : Ungal ovvoru pathivum appadiye kadanthu vantha vhaalkaikku ilthu selkirathu ayya.... semman puluti parakkum saalaiyil kaalil serupey ilaamal vilaadiyathum antha rapbar marangaloodu ondri vaalntha vhaalkai sorkam ayya.... kanavil kuuda tirumba kidaikaatha vhaalkai. nandri ayya.

(உங்கள் ஒவ்வொரு பதிவும் அப்படியே கடந்து வந்த வாழ்க்கைக்கு இழுத்துச் செல்கிறது ஐயா... செம்மண் புழுதி பறக்கும் சாலையில் காலில் செருப்பே இல்லாமல் விளையாடியதும்; அந்த ரப்பர் மரங்களோடு ஒன்றி வாழ்ந்த வாழ்க்கை சொர்க்கம் ஐயா... கனவில் கூட திரும்பக் கிடைக்காத வாழ்க்கை. நன்றி ஐயா.)

Mageswary Muthiah

Yogavin Yogavins

Sharma Muthusamy

Paramasivam Maruthai

Macho Bala

Gp Thilai Gp Sega Muniandy

Manigarndan Supramaniam; Jaya Barathi; Selvaraju Karti Yahini


Maha Lingam

Palar Thangamarimuthu

Manimala Tamil :
Nandri Anna

Ponnusamy Anna :
wonder place in malaisiya

Balakrishnan Sumbulinggam

Image may contain: phone
Balakrishnan Sumbulinggam : It was built as water tank

Muthukrishnan Ipoh ஆமாங்க ஐயா...

Balakrishnan Sumbulinggam

No photo description available.

Muthukrishnan Ipoh : அரிய தகவல்... மகிழ்ச்சி...

Ravichandro Ravi : Great

Kanesan Kandiah Great

Ramani Muniandy : Super

Shasa Marissa : My born place

Muthukrishnan Ipoh :
வாழ்த்துகள்

Nadarajah Nagu : Great

Raja Manikam

Prakash Muniandy :
For language sake can some please teach him to proper english please.

Muthukrishnan Ipoh : Please note that the translation is auto translation from facebook and not from the author...

Suresh Sri

Ponnusamy


R Muthusamy Rajalingam : கோபுரம் சாய்ந்தற்கான விளக்கம் பிறகு பார்க்கலாம் என்று எழுதி இருந்தீர்கள்... அந்த விளக்கம் மற்றொரு பதிவாகுமா? நல்ல பகிர்வு. வாழ்த்துகள்.

Muthukrishnan Ipoh : நாளைய தமிழ் மலர் 19.05.2020-இல் விளக்கம் கொடுத்து இருக்கிறேன் ஐயா...