கண்ணாடி ஒரு தடவை உடைந்து போனால் அதை எப்படித்தான் ஒட்ட வைத்தாலும் ஒட்ட வைக்க இயலாது. விரிசல் கோடுகள் நெரிசலாய்த் தெரியவே செய்யும். அது போலவே மனதில் கீறிய தழும்புகள் என்றைக்குமே காய்ந்து போவது இல்லை. கரிசல் காட்டு வடுக்களாய்க் கரைந்து போவதும் இல்லை.
மறப்போம் மன்னிப்போம் என்று சொல்வது எல்லாம் சாமானிய மனிதர்கள் மனதோடு உறவாடிக் கொள்ளும் சாமானிய ராகங்கள். மனதை தொட்டுக் கேட்டுப் பாருங்கள். உடைந்த கண்ணாடியை ஒட்ட வைக்க முடியுமா. முடியவே முடியாது என்று அந்த மனமே நக்கலாய்ச் சிரித்துவிட்டுப் போகும்.
ஏன் என்றால் மனம் என்றைக்குமே ஒரு தொட்டால் சிணுங்கி தானே... எனக்கும் அப்படித்தான். மனம் சரி இல்லாத போது இந்தப் பாடல் ஒரு வலிநிவாரணியாக அமைகின்றது. அமைதியானச் சூழலில் கேட்கும் போது ஓர் இதமான ஆறுதல் ஏற்படுகின்றது. கவலைகளை மறந்து போகின்றேன். நீங்களும் கேளுங்கள்.
ஏன் என்றால் மனம் என்றைக்குமே ஒரு தொட்டால் சிணுங்கி தானே... எனக்கும் அப்படித்தான். மனம் சரி இல்லாத போது இந்தப் பாடல் ஒரு வலிநிவாரணியாக அமைகின்றது. அமைதியானச் சூழலில் கேட்கும் போது ஓர் இதமான ஆறுதல் ஏற்படுகின்றது. கவலைகளை மறந்து போகின்றேன். நீங்களும் கேளுங்கள்.
மனமே தொட்டால் சிணுங்கி தானே
அதுவே தன்னால் மலரும் மானே
உறவோ என்னாலும் தீராது
பகையோ என்னாலும் வாராது
மனமே தொட்டால் சிணுங்கி தானே?
தாய்ப் பாலே விஷமாய் மாறுமா?
தமிழ்த் தாயே நீ அதை கூறம்மா
பெற்றத் தந்தை மீதே கோபமா?
பிள்ளைக் கோபம் இங்கே நியாயமா?
தினந்தோறும் காலம் மாறுமே
தினந்தோறும் காலம் மாறுமே
இது பாவமோ இல்லை சாபமோ?
சில காலம் தோன்றும் சோகமோ?
(மனமே...)
நிழலே உன் பின்னால் நிலை இல்லை
நிலவே இங்கு யாருக்கும் உறவு இல்லை
காற்றே தன் வழியது அறிந்ததில்லை
கடலே தன் அலைகளை புரிந்ததில்லை
இதுதானே உலகின் நியதியடி
இதுதானே உலகின் நியதியடி
இது போலவே உந்த வாழ்விலே
வந்த சோகம் நாலை மாறுமே
(மனமே...)
திரைப்படம்: தொட்டால் சிணுங்கி (1995)
பாடியவர்: ஹரிஹரன்
இசை: பிலிப் ஜெரி
அதுவே தன்னால் மலரும் மானே
உறவோ என்னாலும் தீராது
பகையோ என்னாலும் வாராது
மனமே தொட்டால் சிணுங்கி தானே?
தாய்ப் பாலே விஷமாய் மாறுமா?
தமிழ்த் தாயே நீ அதை கூறம்மா
பெற்றத் தந்தை மீதே கோபமா?
பிள்ளைக் கோபம் இங்கே நியாயமா?
தினந்தோறும் காலம் மாறுமே
தினந்தோறும் காலம் மாறுமே
இது பாவமோ இல்லை சாபமோ?
சில காலம் தோன்றும் சோகமோ?
(மனமே...)
நிழலே உன் பின்னால் நிலை இல்லை
நிலவே இங்கு யாருக்கும் உறவு இல்லை
காற்றே தன் வழியது அறிந்ததில்லை
கடலே தன் அலைகளை புரிந்ததில்லை
இதுதானே உலகின் நியதியடி
இதுதானே உலகின் நியதியடி
இது போலவே உந்த வாழ்விலே
வந்த சோகம் நாலை மாறுமே
(மனமே...)
திரைப்படம்: தொட்டால் சிணுங்கி (1995)
பாடியவர்: ஹரிஹரன்
இசை: பிலிப் ஜெரி