இனிய வணக்கம்... இனிய வாழ்த்துகள்... இன்று சித்திரை முதல் நாள். இந்த வேளையில் இனிய புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன் இன்று என்னுடைய பிறந்தநாளும்கூட... வாழ்த்து தெரிவிக்கும் அனைவருக்கும் நன்றிகள்.
(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
14.04.2020
பேஸ்புக் பதிவுகள்
14 April 2020
Jaya Shanmugam
Muthukrishnan Ipoh: தங்களுக்கும் இனிய வாழ்த்துகள்...
Mannar Mannan Maruthai: அன்புசால் நண்பருக்கு இனிய அகவை நன்னாள் வாழ்த்துகள். தமிழ்போல் என்றும் வளமுடனும் இளமையுடனும் நீடுவாழ்கவென அன்புடன் வாழ்த்துகின்றேன்
Ravi Purushothaman: தமிழ் இந்துக்களுக்குச் சித்திரையே வருடப் பிறப்பு.... பிரச்சனை என்னவென்றால் தி.க.வும் வேற்று மதத்தினரும் மூக்கை நுழைப்பதுவே!!!
Muthukrishnan Ipoh: உண்மைதான் ஐயா... கேப்பையில் எண்ணெய் வடிகிறது... கேட்கிறார்கள்... ஒரு சிலர் தான் அடம் பிடிக்கிறார்கள்...
Kumaravelu Shanmugasundaram >>> Muthukrishnan Ipoh: 100 ஆண்டுகளுக்கு முன்பு தமிழறிஞர்கள் எடுத்த முடிவு அன்று பிரிட்டிஷ் ஆட்சி திராவிட தமிழ் அரசியல் இல்லை அறிக.
Kumaravelu Shanmugasundaram: இத்துடன் பிரிட்டிஷ் ஆட்சியில் உள்ள பண்டிகை விவரம் அதில் பிராமணர் புது வருஷம் என்றே உள்ளது. மஞ்சள் கண்ணாடி போட்டா எல்லாம் மஞ்சலா தெரியும் அய்யா. மலேசியாவில் தவறான கற்பிதம் நடக்குது. நான் எந்த இயக்கம் கட்சியில் இல்லை. தமிழ் உணர்வாளன் அவ்வளவே. கேப்பை கதை உங்களுக்கும் ரொம்பவே பொருந்தும் நன்றி. கும. சண்முகசுந்தரம்
Kumaravelu Shanmugasundaram >>> Muthukrishnan Ipoh: பதிலை பொது மக்களுக்கு அறிவியுங்கள். உங்கள் பேராண்மையைப் போற்றுவேன். நன்றி
தயவு செய்து கடவுள் கொள்கை. தமிழர் நெறி தமிழர் அறம் பற்றிக்
குழம்ப வேண்டாம்.
Anbarasan Shanmugam >>> Kumaravelu Shanmugasundaram சிறப்பான பதிவு... உங்களைப் போன்றவர்கள் பெருக வேண்டும். இவ்வளவு வந்த பிறகு அரசியல், அது இது என்று திசை திருப்ப வேண்டும். அறிவுக்கு சரி என்பதை சொல்ல வேண்டியது தானே..
Kumaravelu Shanmugasundaram >>> Anbarasan Shanmugam அவருக்கு ஆப்பு வைங்க
Kumaravelu Shanmugasundaram: ஈப்போ முத்துகிருஷணன் அய்யாவுக்கு... கண்டனம்… தெரிவிக்கிறேன். நீங்களும் தெரிவியுங்கள்
Anbarasan Shanmugam >>> Kumaravelu Shanmugasundaram அவர் ஊடக துறையில் இருப்பதால் தயங்குகிறார் போலும்...
Kumaravelu Shanmugasundaram >>> Anbarasan Shanmugam: ஆரிய பாப்பானிடம் உள்ளதா அங்கும்
Thanabaal Varmen:
Muthukrishnan Ipoh இனிய வாழ்த்துகள்
Lohesvaran Lohes: Is it Tamil new year today???
Muthukrishnan Ipoh சித்திரைப் புத்தாண்டு...
Lohesvaran Lohes >>> Muthukrishnan Ipoh: valltukal sir. (வாழ்த்துகள் சார்)
Inbachudar Muthuchandran: உங்களின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிக்கின்றேன்... ஆனால் சித்திரை புத்தாண்டுக்கு அல்ல...
வே சங்கர்: இனிய அகவை நாள் வாழ்த்துகள் 🎊 ஐயா. தமிழருக்கு தை முதல் நாளே தமிழ் புத்தாண்டு.
Muthukrishnan Ipoh: நன்றி... இனிதான வாழ்த்துகள்...
Tasi Alagan: ஆரிய_புத்தாண்டு
பிரபவ, விபவ, சுக்ல, பிரமோதூத, பிரசோற்பத்தி, ஆங்கீரச, ஸ்ரீ முக, பவ, யுவ, தாது, ஈஸ் வர, வெகுதானிய, பிரமாதி, விக்கிரம, விஷூ, சித்திரபானு, சுபானு, தாரண, பார்த்திப, விய, சர்வசித்து, சர்வதாரி, விரோதி, விக்ருதி, கர, நந்தன, விஜய, ஜய, மன்மத, துன்முகி, ஹேவிளம்பி, விளம்பி, விகாரி, சார் வரி, பிலவ, சுபகிருது, சோபகிருது, குரோதி, விசுவாசுவ, பரபாவ, பிலவங்க, கீலக, சௌமிய, சாதாரண, விரோதி கிருது, பரிதாபி, பிரமாதீச, ஆனந்த, ராட்சச, நள, பிங்கள, காளயுக்தி, சித்தார்த்தி, ரௌத்திரி, துன்மதி, துந்துபி, ருத்ரோத்காரி, ரக்தாட்சி, குரோதன, அட்சய
இந்தப் பெயர்களில் ஒன்றாவது தமிழ்ப் பெயரா? நம் வாய்க்குள் தான் நுழைகிறதா? இந்த 60 ஆண்டுகளில் பிரபவ முதல் அட்சய வரை எல்லாம் சமஸ்கிருதப் பெயர்கள்.
தமிழ் பெயர்களிலேயே இல்லை... பின் எப்படி அது தமிழ்ப் புத்தாண்டாக முடியும்? தமிழ் பேசும் ஆரிய அடிமைகளே. படித்த மேதைகளே இப்படி என்றால்... மற்றவர்களுக்கு... சிந்திப்பீர்...
Muthukrishnan Ipoh யார் யாருக்கு எது எது பிடிக்குமோ... அது அவர்களின் விருப்பம்... அவர்களின் விருப்பத்தில் மூக்கை நுழைப்பது நல்லது அல்ல... 1920-ஆம் ஆண்டில் தான் ஆரியப் புத்தாண்டு என்று கண்டுபிடித்து இருக்கிறார்கள்...அதற்கு முன்னர் 6000 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டு இருந்தார்கள்...
Rajendran Pakirisamy: Sorry Mr.Tasi Alagan you are out dated person dont condemn any one... யார் யாருக்கு எது எது பிடிக்குமோ... அது அவர்களின் விருப்பம்... அவர்களின் விருப்பத்தில் மூக்கை நுழைப்பது நல்லது அல்ல...
Anbarasan Shanmugam >>> Tasi Alagan
Sathya Raman Tasi Alagan: ஆதி தமிழ் மொழியைச் சீர்திருத்தத் தமிழ் மொழியாக மாற்றிய போது தமிழ் மக்களும் மக்கர் பண்ணாமல் அதை ஏற்றுக் கொண்டவர்கள் தானே? நீங்கள் அடுக்கிய பெயர்கள் சமஸ்கிருதத்தில் இருப்பது இன்று தான் உங்களுக்கு தெரியுமாக்கும்.
60 ஆண்டுகளாகப் பிரபவ முதல் அட்சய வரை என்று ஆட்சேபம் பண்ணுபவர்கள் அதற்காக தமிழ் வார்த்தைகளை கண்டுப்பிடித்து இருக்கலாமே? தமிழ் நாட்டில் தொன்மை நிறைந்த அறிஞர்களும், தமிழ்சார்ந்த புரவலர்களும் இதற்காக மாற்று வழிகளை கண்டு பிடித்து இருக்கலாமே?
அல்லது இங்கே குதிக்கிற நீங்களே அந்த வேலையில் இறங்கி இருக்கலாமே? ஏன் செய்யவில்லை? சமஸ்கிருத மொழியின் ஆளுமை இன்னமும் நம் தமிழர்களின் வாழ்வில் வலம் வந்து கொண்டிருப்பதை வக்கணையாய் வாய் கிழிய குறைப்பட்டுக் கொண்டே இருக்கிறோம்.
அவற்றை சரி செய்ய நம்மவர்களுக்கு வக்கு இல்லாத போது... வருடம் தோறும் தமிழ்ப் புத்தாண்டு என்கிற சித்திரை முதல் நாள் மட்டும் உங்களைப் போன்றவர்களின் அலம்பல் தலைதூக்கி... அதன் பின் ஆரவமே இல்லாமல் சப்பென்று சப்ஜெக்ட் காணாமல் போய் விடுகிறது.
நல்லவற்றை நல்லவிதமாய் எடுத்துச் சொன்னால் நம்மவர்கள் வரவேற்பார்கள் அதை விட்டு "தமிழ் பேசும் ஆரிய அடிமைகள்" என்று ஏகத்துக்கு எகதாள வார்த்தைகள் வேண்டாம். 60 ஆண்டுகள் சமஸ்கிருதத்தில் உள்ளவற்றை தமிழ் படுத்த வழிகளை ஆராயுங்கள். அதை விட்டு அவமதித்து அறிக்கைவிட வேண்டாம்.
Muthukrishnan Ipoh: நீங்கள் சொல்வதில் நியாயம் உள்ளது... உங்கள் கருத்துகளுக்கு என்னுடைய ஆதரவு... நன்றி...
சித்திரை பிறக்கிறதோ இல்லையோ சித்திரைப் புத்தாண்டுச் சர்ச்சை மட்டும் களைகட்டி விடுகிறது. இன்றைக்கு நேற்றைக்கு அல்ல. 1960-ஆம் ஆண்டுகளில் இருந்து இந்தப் பிரச்சினை தொடர்கிறது.
தோட்டத்தில் வாழும் காலத்தில், பத்து வயதின் நினைவுகள். இரண்டு கோஷ்டிகள். சித்திரை பிறந்ததும் சர்ச்சைகள். அப்படியே அடிபிடி சண்டைகள். வார்த்தை ஜாலங்கள். மறக்க முடியாத சிலாக்கியங்கள்.
எப்போது சித்திரை பிறக்கும்... சித்திரக் குப்தனை எழுப்பலாம் என்று காத்து இருப்பவர்கள் சிலர் இருக்கலாம். மன்னிக்கவும். தமிழர்களின் பிரச்சினைகள் எவ்வளவோ இருக்கின்றன.
நம் மலேசிய நாட்டில் தமிழ்ப் பள்ளிகள் பிரசினைகள்; தமிழ் மாணவர்களின் பிரசினைகள்; ஆலயப் பிரச்சினைகள்; முதியோர் பிரச்சினைகள்; தனித்து வாழும் தாய்மார் பிரச்சினைகள்; அரசாங்கத்தின் ஒருதலைப் பட்சங்கள்; வேலையில்லாமை; குண்டர் கும்பல் பிரச்சினைகள்; இப்படி எத்தனையோ பிரச்சினைகள் தலைக்கு மேல் இருக்கின்றன.
வெளியே வருவோம். வெளிச்சத்தைப் பார்ப்போம். வேலை இல்லாத வெள்ளை வேட்டிகள் போல வெட்டிப் பேச்சுகள் பேசுவதைத் தவிர்ப்போம்.
சித்திரை மாதம் முதல் தேதி தான் தமிழர்களின் புத்தாண்டு என்று உலகத் தமிழர்கள் பெரும்பாலோர் ஏற்றுக் கொண்டு விட்டார்கள்.
சித்திரைப் புத்தாண்டை மாற்ற நினைப்பவர்கள் ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். மக்களின் பாவனையில் உள்ள எதுவுமே மக்களால் எளிதாக ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும்.
வற்புறுத்தல் கூடாது. அழுத்தம் கூடாது. புழக்கத்தில் இருப்பதை மாற்றக் கூடாது. வலுக்கட்டாயமாகத் திணிக்கப் படுவது எதுவுமே மக்கள் மத்தியில் நீண்ட நாட்களுக்கு நிலைக்காது. தற்சமயம் சித்திரைப் புத்தாண்டுக்கும் அதுதான் நிகழ்ந்து வருகிறது.
நன்மை பயக்காத சர்ச்சைகளில் ஆர்வம் காட்டுவதைக் காட்டிலும் குடும்பத்தைக் காப்பாறும் புதிய இலக்கை நோக்கி நகர்வோம். குடும்பத்திற்கு பயன் தரும் காரியங்களில் முனைப்பு காட்டுவோம். அதுவே சிறப்பு.
Muthukrishnan Ipoh >>> Sathya Raman: நியாயமான காலத்திற்கு ஏற்ற அழுத்தமான பார்வை... மகிழ்ச்சி...
Tasi Alagan >>> Rajendran Pakirisamy: உங்களுக்கு எது பிடிக்குமோ என்று எனக்கு தேவை இல்லாத விசயம் தான்
Anbarasan Shanmugam >>> Tasi Alagan: எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு அவ்வது உறைவது அறிவு.
அறிஞர்கள் கூறிய ஒழுக்கநெறி, கருத்தை ஒருவன் ஒத்து நடப்பதே அறிவுடைமையாகும் எனபது வள்ளுவன் வாக்கு..
இங்கு மக்கள் எல்லாம் அதை செய்கிறார்கள் நானும் அப்படியே செய்வேன் என்பது அறிவுடைமையாகாது.. ஐயா கல்வி வேறு அறிவுடைமை வேறு...
Sathya Raman >>> Muthukrishnan Ipoh: மலேசியத் தமிழர்களிடம் இன்னமும் தமிழ்நாட்டு ஆதிக்கமே மலிந்து கிடைக்கிறது. ஆண்டு தோறும் சித்திரை மாதம் பிறந்தாலே பலர் பிரளயத்தை உண்டு பண்ணுவதையே வாடிக்கையாக வைத்து இருக்கிறார்கள். காலம் காலமாய் மரபுகளை... அதுவும் கலாசாரம் பண்பாட்டுக் கூறுகளை நமது தமிழர்களிடத்தில் மாற்றச் சொல்வது அவ்வளவு சுலபமல்ல.
பழைமையில் ஊறியவர்களை புதிது புதிதாய் குழப்பங்களை ஏற்படுத்துவதால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை. தமிழ் நாட்டு முதலமைச்சர்களாக இருந்த கலைஞரும், செல்வியும் மாறி மாறி மக்களை குழப்பி குளிர் காய்ந்து விட்டு போய் விட்டார்கள்.
எனவே யாருக்கு எது வருமோ, எது வசதியோ அதைக் கடைபிடித்து காலத்தோடு கைகோர்க்க வேண்டியதாய் இருக்கிறது. நம் நாட்டிலும் இதுவே நடைமுறையில் வழக்கமாகி விட்டது சார்.
எது எப்படியோ நமது மரபுகளை மறக்காமல் கொண்டாடுவதை நாம் வரவேற்போமே. அது தையாக இருந்தால் என்ன... சித்திரையாக இருந்தால் என்ன? இதன் தொடர்பாக உங்களது சிறப்பான விமர்சன பார்வைக்கும் மிக்க நன்றி சார் 🙏
Tasi Alagan என்ன செய்வது யானைக்குத் தான் மதம் பிடிக்கும் என்று நினைத்தேன். ஆனால் மனிதனுக்கும் பிடித்து விட்டதே....
Anbarasan Shanmugam >>> Tasi Alagan: அரசியல் கட்சி என்பது திசை திருப்பு வேல. 1921-ஆம் ஆண்டு மறைமலையடிகள் தலைமையில் கூடிய அறிஞர்கள் எடுத்த முடிவுகள். இதை தெரிந்தே படித்தவர்கள் மறைக்கும் வேலை. தத்தம் குறைகளை மக்களிடம் அரசியல் மேலும் காட்டும் நடுநிலையானவர்கள்..
Rajendran Pakirisamy >>> Tasi Alagan: நான் ஒரு தமிழ் இனம். இந்து சமயத்தில் சேர்ந்தது தான் என் தாய்மொழி தமிழ். கீழே குறிப்பிட்டுள்ள இந்தப் பெயர்கள் தமிழ் வார்த்தைகள் தான் போதுமா. இந்த 60 ஆண்டுகளில் பிரபவ முதல் அட்சய வரை எல்லாம் சமஸ்கிருத பெயர்கள். தமிழ் வார்த்தைகள் தான் அறிந்து கொள்ளுங்கள்...
பிரபவ, விபவ, சுக்ல, பிரமோதூத, பிரசோற்பத்தி, ஆங்கீரச, ஸ்ரீ முக, பவ, யுவ, தாது, ஈஸ் வர, வெகுதானிய, பிரமாதி, விக்கிரம, விஷூ, சித்திரபானு, சுபானு, தாரண, பார்த்திப, விய, சர்வசித்து, சர்வதாரி, விரோதி, விக்ருதி, கர, நந்தன, விஜய, ஜய, மன்மத, துன்முகி, ஹேவிளம்பி, விளம்பி, விகாரி, சார் வரி, பிலவ, சுபகிருது, சோபகிருது, குரோதி, விசுவாசுவ, பரபாவ, பிலவங்க, கீலக, சௌமிய, சாதார ண, விரோதி கிருது, பரிதாபி, பிரமாதீச, ஆனந்த, ராட்சச, நள, பிங்கள, காளயுக்தி, சித்தார்த்தி, ரௌத்திரி, துன்மதி, துந்துபி, ருத்ரோத்காரி, ரக்தாட்சி, குரோதன, அட்சய
Muthukrishnan Ipoh: சித்திரை பிறந்தாலே ஏன் இப்படி மல்லுக் கட்டிக் கொண்டு நிற்கிறார்களோ தெரியவில்லை... மற்ற நாட்களில் மட்டும் அமைதியாக இருக்கிறார்கள்...
யாருக்கு எது பிடிக்குமோ அது அவர்கள் விருப்பம்... அவர்களின் விருப்பங்களில் மாற்று விருப்பங்களை... வலுக்கட்டாயங்களைத் திணிப்பதில் நியாயம் இல்லை...
இரண்டு மூன்று தீவிரவாதிகளால் தான் உலகத்திலேயே பற்பல எகதாளங்கள் என்று கேள்வி... அது சித்திரைக் கோலத்திலும் இப்படியா எரிச்சல் கோலம் போக வேண்டும்... வருசா வருசம் இதே பல்லவி...
உங்களுக்கு எது பிடிக்கிறதோ அதைப் பின்பற்றுங்கள்... ஆனால் உங்கள் விருப்பத்தை மற்றவர்கள் மீது திணிப்பது சரி அல்ல...
தயவு செய்து இனிமேல் இதைப் பற்றிய விவாதங்கள் இங்கே வேண்டாம்... ஒரு முடிவுக்கு கொண்டு வருவோம்...
Anbarasan Shanmugam >>> Muthukrishnan Ipoh: ஏன் இப்படியும் சொல்லலாமே ஒரு சில மருத்துவர்களால் ஆயிரம் நோயாளிகளை குணபடுத்துகிறார் என்று..
Muthukrishnan Ipoh: நிறைய வேலைகள்... பின்னர் பார்ப்போம்...
Muthukrishnan Ipoh >>> Anbarasan Shanmugam: விடுங்கள் ஐயா... வேறு காரியங்களில் நம் கவனத்தைச் செலுத்துவோம்...
Anbarasan Shanmugam >>> Muthukrishnan Ipoh: நல்லது ஐயா மீண்டும் சிந்திப்போம்..
Muthukrishnan Ipoh >>> Anbarasan Shanmugam: அறிவு உள்ளவர்கள் அறிவோடு தானே பேசுவார்கள்... உங்கள் கணக்கை நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள்... இனிமேல் இதைப் பற்றிய தர்க்கங்கள் வேண்டாமே...
Lohesvaran Lohes >>> Tasi Alagan: my best wishes to you. I really regret to read some if the replies. Pity our tamils. Even at this stage we can't Decide a single month for our new year.
Even than.. Person like you have explained the sense of the event properly.. Yet they refused to except. What else can be done. Time will give a lesson. Be patient. Thank you mr. asi.
Anbarasan Shanmugam >>> Sathya Raman: இவ்வளவு அறிவோடு பேசுபவர்கள்... தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு 2051... சித்திரை புத்தாண்டு....? கணக்கு காட்ட வேண்டியது தானே...
Anne Mania Anne Mania: Iniya Tamil Chittirai Puthandu Nal Valtukal & Happy Birthday Sir
Muthukrishnan Ipoh: நன்றி... இனிதான வாழ்த்துகள்
Kumarasiva Thevar: இனிய சித்திரை திருநாள் வாழ்த்துகள் முத்துகிருஷ்ணன் அய்யா... 🙏 தமிழுக்கும் இன்று தான் பிறந்த நாளோ ☺️☺️☺️
Muthukrishnan Ipoh: மனம் கனிந்து போகிறேன்... தங்களுக்கும் இனிய வாழ்த்துகள்...
Kumarasiva Thevar >>> Muthukrishnan Ipoh: உங்கள் ஆசீர்வாதம் 🙏
Mgrkalaimagal Poonkodi: இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்... என்றும் நலமுடன் பல்லாண்டு காலம் வாழ்க என்று வாழ்த்துகின்றோம்.
Muthukrishnan Ipoh: நன்றியுடன் இனிய வாழ்த்துகள்... வாழ்க வாழ்கவே...
K.V. Rajoo Kaliapa:
Muthukrishnan Ipoh: இனிய வாழ்த்துகள்
Reetha Rani: Happy Birthday n Happy Tamil New Year Sir
Muthukrishnan Ipoh: மகிழ்ச்சி... தங்களுக்கும் இனிய வாழ்த்துகள்...
Reetha Rani: Sir still remember me?
Muthukrishnan Ipoh >>> Reetha Rani: நன்றி கலந்த வாழ்த்துகள்...
Sathya Raman: மகிழ்வான பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார் 🎂👏🌷. நாட்டின் தலைசிறந்த எழுத்தாளர் தாங்கள். நீண்ட ஆயுள் நிறைந்த ஆரோக்கியம் பெற்று எமது சமூக வாசகர்களை மென்மேலும் உங்களின் அரிய பெரிய தகவல்களால் ஆக்கிரமித்து அதன் வழி பற்பல தகவல் அறிந்த சமூகமாக எங்களை வழிநடத்த வேண்டுகிறேன் சார் 🙏
மேலும் தங்களுக்கும் தங்களின் தகவல்களால் ஈர்க்கப்பட்டு தொடரும் அன்பர்கள் அனைவருக்கும் எனது சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள். வாழ்க தமிழ்... வாழ்க வையகம் 🙏
Muthukrishnan Ipoh: வாழ்த்துகளுக்கு நன்றிங்க சகோதரி... ஆண்டு ஒன்று போனால் வயது ஒன்று கூடும்... அதுவே இறைவன் நமக்கு வழங்கிய உபரி ஊதியம்... இயன்ற வரை என்னால் இயன்றதைத் தமிழ் உலகிற்கு வழங்குவேன்... வாழ்த்துகள்... வாழ்த்துகள்...
Arojunan Veloo: பல்லாண்டு இனிதாய் வாழவாழ்த்துகிறேன்....ஐயா!
Muthukrishnan Ipoh: நன்றி... இனிதான சித்திரை வாழ்த்துகள்...
நாக பஞ்சு: அய்யா... தங்களுக்கு எங்களது
Muthukrishnan Ipoh: நன்றி... தங்களுக்கும் இனிய வாழ்த்துகள்...
Mu Ta Neelavaanan Muthuvelu: உங்கள் பதிவைப் படிக்கும் ஒவ்வொரு நாளும்
எனக்கு மகிழ்வான நாட்களே! வாழ்த்துக்கள்.
நாக பஞ்சு >>> Mu Ta Neelavaanan Muthuvelu: அப்படியாங்க தோழர்... மகிழ்ச்சி...
Muthukrishnan Ipoh >>> Mu Ta Neelavaanan Muthuvelu: மகிழ்ச்சியாக உள்ளது... நன்றி... நன்றி... நல்வாழ்த்துகள்...