மலேசிய இந்தியர்கள் - சோஸ்மா கைது அமைதி மறியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மலேசிய இந்தியர்கள் - சோஸ்மா கைது அமைதி மறியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

26 அக்டோபர் 2019

மலேசிய இந்தியர்கள் - சோஸ்மா கைது அமைதி மறியல்

மலேசியக் காவல் துறையின் தலைமையகம். அந்தத் தலைமையகத்தின் தலைவாசலில் மழையில் நனைந்து... வெயிலில் காய்ந்து... பனியில் உலர்ந்து... ஊன் மறந்து… உறக்கம் மறந்து… உறைவிடம் மறந்து… உறவினம் மறந்து என அனைத்தையும் மறந்த நிலையில்...


இந்தப் பெண்கள் தங்களின் கணவன்மார்களுக்காக அமைதி மறியல் செய்து வருகிறார்கள்.

மலாக்கா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு சாமிநாதன்; மதிப்புமிகு சந்துரு; மதிப்புமிகு சுரேஷ் ஆகியோருடன் மேலும் 9 பேர் சோஸ்மா தடுப்புக் காவலில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர்.

நேற்று இரவு முதல் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்திற்கு முன் இவர்கள் அமைதிப் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

சோஸ்மா தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட பன்னிருவரும் விடுவிக்கப்பட வேண்டும். அல்லது குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றப்பதிவு செய்யப்பட வேண்டும்.


குற்றம் நிரூபீக்கப்படும் வரையில் அந்த 12 பேரும் நிரபராதிகள் என்பது உறுதிபடுத்தப்பட்ட வேண்டும். இதுவே அவர்களின் எதிர்பார்ப்புகள். அவர்களுக்கு நம்முடைய ஆதரவுகள்.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்
22.10.2019

பேஸ்புக் பதிவுகள்


Periasamy Ramasamy: பட்டா இல்லாத கோவிலுக்காக சேர்ந்த கூட்டம் கூட இல்லையே என்பதுதான் என் வருத்தம். நம்மவர்களை இந்த நிலைக்கு இட்டுச் சென்றுள்ள "அரசியல் தாதாக்கள்" ஒரு நாள் இதே போன்றதொரு முடிவை எதிர்கொள்ள வேண்டும் என்பது நமது பிரார்த்தனை.

Muthukrishnan Ipoh; இப்படி ஒரு வேதனையான செய்தி... இதற்கே 34 பேர் லைக் போட்டு இருக்கிறார்கள்... மன்னிக்கவும்... ஒரு பெண் புதுசா ஒரு சேலையைக் கட்டி ’என்னையும் பார் என் அழகையும் பார்’ என்று ஒரு படத்தைப் போட்டால் 1008 பேர் லைக் போடுகிற காலத்தில் வாழந்து கொண்டு இருக்கிறோம்...


Manickam Nadeson >>> Muthukrishnan Ipoh: இது தான் இன்றைய தமிழர்களின் நிலை. இப்படி மானங்கெட்டு வாழ வேண்டிய அவசியம் ஏன், எதற்கு.


Ramala Pillai: அமைதி போராட்டத்திற்கும் போலீஸ் அனுமதி இருந்தால் இவர்களின் பாதுகாப்பிற்கு மிரட்டல் இல்லை! அல்லது போனால் இவர்களையும் சட்ட விரோத கூட்டம் என்று சொல்லி கைது செய்து விடப்போகிறார்கள்!


Muthukrishnan Ipoh: உண்மைதான் ஐயா... சட்ட விரோதக் கூட்டம் என்று சொல்லலாம்...


Manickam Nadeson >>> Muthukrishnan Ipoh: நம்பி வாக்களித்தவர்கள் இன்று நடுத் தெருவில். இனியாவது விழித்துக் கொள்ளுவோம்.


Sugunesan Nesan: போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும் # நிமிர்ந்து நிற்போம் தொடந்து செல்வோம் #


Muthukrishnan Ipoh வெற்றி பெற வாழ்த்துவோம் ஐயா...


Neela Vanam இந்நாட்டில் நாம் சிறுபாண்மையினர்


Varusai Omar >>> Neela Vanam: ஆமாய்யா... இப்படி சாக்குப் போக்கு சொல்லியே காலத்தை ஓட்டுங்க... நேத்து வந்த வங்காளதேசி... வீதிக்கு 6 கடை திறந்து தொழில் செய்கிறான். நீங்கள் இன்னும் பஞ்சப் பாட்டு பாடுறீங்க!
வெட்கமா இல்லையா?

தமிழனின் சாபக்கேடு... தமிழினமே மட்டுமே! இனியாவது விழித்துக் கொள் என் தமிழினமே!


Muthukrishnan Ipoh அதற்கு தகுந்த மாதிரி நாமும் விவேகத்துடன் நடந்து கொள்ள வேண்டும்...


மாரியப்பன் முத்துசாமி:
வாய்மையே வெல்லும்


Muthukrishnan Ipoh விவேகம் கலந்த வாய்மையாக இருந்தால் நன்மை பயக்கும்...


Hamba Mu Umar Umar >>> மாரியப்பன் முத்துசாமி: panam than vellum.. kaliyukam (பணம் தான் வெல்லும்... கலியுகம்)


KR Batumalai Robert: Neethi Vellatum. Atharavu. (நீதி வெல்லட்டும்... ஆதரவு)


Muthukrishnan Ipoh நீதி வெல்லும்...


Santhakumari Krishnan மிதிப்படும் சாலைகளாய்... கொட்டும் மழையும்
வெட்டும் மின்னலையும்... தாங்கும் சுமைதாங்கிகளாய் எம்மினம்!!! வேதனை அண்ணா.


Ravi Purushothaman சொந்தக் கட்சிக்காரங்கக் கூட பக்கத் துணை இல்லையே!!!


B.k. Kumar விதைப்பது விளையும் அறுவடை செய்யும் காலம் வரும்.


Varusai Omar மேலே 4 பேரது பதிவுகளைக் கண்டபோது... இவர்களைக் கண்ட போது இவர்களுக்காக பரிதாபம் கூட வரவில்லை!


Muthukrishnan Ipoh மனிதம் மரித்துக் கொண்டு வருகிறது ஐயா...


Varusai Omar >>> Muthukrishnan Ipoh: இல்லை ஐயா! மனிதம் இந்த பாழாய்ப் போன மனிதர்களால் "கொலை" செய்யப்பட்டுக் கொண்டு இருக்கிறது... இதுதான் நிஜம்.

நாம் தான் "இருட்டு அறையில் கருப்புப் பூனையை" துளாவிக் கொண்டு இருக்கிறோம். பலர் நிழல்களைத் தேடிக் கொண்டு இருக்கின்றனர். ஏன்? நாம் கூட அப்படித் தானோ... முத்து?


Varusai Omar >>> Muthukrishnan Ipoh நாம் என்னதான் செய்யவது நண்பா?
கடுமையாக கடிந்து கொள்ளவும் முடியவில்லை. அப்படியே நல்ல முறையில் எடுத்துச் சொன்னாலும் நம்மவர்கள் ஏற்றுக் கொள்வார்களா?… இல்லை, ஏதோ ஒரு மாட்டு முதுகில் வருண பகவான் வர்ஷித்த கதையாகி விடுமோ?

M R Tanasegaran Rengasamy இந்நிலை தொடர்ந்தால் தீபாவளிக்கு DAP இந்தியத் தலைவர்கள் எவரும் திறந்த இல்ல உபசரிப்பைத் தவிர்க்க வேண்டும். இது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு செய்ய வேண்டிய கடமையாகும்.


Chandran S Rengasamy: Nenju porukutillaya inta sagothirikalai partal (நெஞ்சு பொறுக்குதில்லையே... இந்தச் சகோதரிகளைப் பார்த்தால்...)



Ramala Pillai: அமைதி போராட்டத்திற்கும் போலீஸ் அனுமதி இருந்தால் இவர்களின் பாதுகாப்பிற்கு மிரட்டல் இல்லை! அல்லது போனால் இவர்களையும் சட்ட விரோத கூட்டம் என்று சொல்லி கைது செய்து விடப்போகிறார்கள்!

Muthukrishnan Ipoh: உண்மைதான் ஐயா... சட்ட விரோதக் கூட்டம் என்று சொல்லலாம்....

Manickam Nadeson >>> Muthukrishnan Ipoh:
நம்பி வாக்களித்தவர்கள் இன்று நடுத் தெருவில். இனியாவது விழித்துக் கொள்ளுவோம்.