தமிழ் மலர் - 23.11.2019
2019-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் கீழ் தமது தலைமையிலான மலேசிய இந்திய உருமாற்று பிரிவான மித்ராவுக்கு ஒதுக்கப்பட்ட ஒதுக்கீடு முழுமையாகப் பயன்படுத்தப்பட்டு உள்ளதாக அமைச்சர் வேதமூர்த்தி தெரிவித்தார்.
9 கோடியே 93 லட்சம் வெள்ளி சம்பந்தப்பட்ட 205 சமூக மேம்பாட்டு திட்டங்கள் அங்கீகரிக்கப் பட்டதாகப் பிரதமர் துறையின் ஒற்றுமை, சமூக நலனுக்குப் பொறுப்பு வகிக்கும் வேதமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் போது மித்ராவுக்கு ஒதுக்கப்பட்ட ஒதுக்கீட்டில் கிட்டத்தட்ட முழுமையாகப் பயன்படுத்தி உள்ளதாக அவர் தெரிவித்தார்.
இவ்வாண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட வெ.10 கோடி வெள்ளி ஒதுக்கீட்டில் 9 கோடியே 93 லட்சம் வெள்ளிக்கான நடவடிக்கை திட்டங்கள் அங்கீகரிக்கப்பட்டு பிரதமர் துறையிடம் சமர்ப்பிக்கப்பட்டு விட்டதாகவும் வேதமூர்த்தி கூறினார்.
இதர அரசாங்க நிறுவனங்களின் உறுப்பினர்களைக் கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவினரால் ஐந்து கட்ட மதிப்பீட்டு செயல் திட்டத்தின் மூலம் 205 சமூக பொருளாதார மேம்பாட்டு திட்டங்களுக்கான செலுத்தப்படும் தொகையை இது உள்ளடக்கி உள்ளது.
இதுவரை கல்வி, பயிற்சி, பொருளாதாரம், வேலை திட்டம், சமூக நலன் மற்றும் சமூக மேம்பாடு ஆகியவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு உள்ளது.
மேலும், சமூக அடையாளத்தை வலுப்படுத்தும் முயற்சியாகவும் இவை அமைந்துள்ளன. மித்ரா உருவாக்கப்பட்ட நோக்கத்திற்கு ஏற்ப அனைத்து திட்டங்களும் குறைந்த வருமானம் பெறும் பி-40 பிரிவைச் சேர்ந்த குடும்பத்தினர் மற்றும் தனிப்பட்ட நபருக்கு உதவும் இலக்கைக் கொண்டு உள்ளது.
இவ்வாண்டு மித்ராவுக்காக ஒதுக்கப்பட்ட ஒதுக்கீட்டில் கிட்டத்தட்ட முழுமையாக பயன்படுத்தப்பட்டு உள்ளதோடு அனைத்து திட்டங்களுக்கான ஆவணங்களும் தொகையைச் செலுத்துவதற்குப் பொறுப்பான தரப்பினருக்குச் சமர்ப்பிக்கப்பட்டு இருப்பதாகவும் வேதமூர்த்தி சுட்டிக் காட்டினார்.