பினாங்கு தமிழ் அழகி - 1910 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பினாங்கு தமிழ் அழகி - 1910 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

22 மே 2020

பினாங்கு தமிழ் அழகி - 1910

1900-ஆம் ஆண்டுகளிலேயே மலாயாவில் தமிழ்ப் பெண்களின் அழகுப் போட்டிகள் வாழ்ந்து இருக்கிறார்கள். ஆர்ப்பாட்டம் இல்லாத அலங்காரம். இப்போது மாதிரி முகம் சுழிக்கும் அளவிற்கு அலங்காரம் எதுவும் இல்லை.

இந்தப் பெண்ணின் தோற்ற அமைப்பு அப்போதைய தமிழ் கலாசாரம், பாரம்பரியப் பண்புக் கூறுகளுக்கு மேலும் அழகு சேர்க்கின்றது. அத்துடன் நம்முடைய தமிழ்ச் சமூகத்தின் அழகையும் பழமைவாதக் கலாச்சாரத்தையும் நன்றாகவே படம் பிடித்துக் காட்டுகிறது. 

 
பினாங்கு தமிழ் அழகி - 1910

இந்தப் படம் 1910-ஆம் ஆண்டு பினாங்கில் எடுக்கப்பட்டது. அதுவே ஓர் அஞ்சல் அட்டையாகவும் அச்சிடப் பட்டது (A postcard from 1910 depicting a Tamil lady from Penang). இந்த அஞ்சல் அட்டையை ஜெர்மனியில் அச்சிட்டு இருக்கிறார்கள். புகைப்படம் விவரங்கள்:

புகைப்படக்காரர்: Ernst August Kaulfuss, a German photographer and postcard publisher in the early 1900s in Penang.

அஞ்சல் அட்டை தயாரிப்பாளர்: Union Postale Universelle; Straits Settlements

புகைப்படத்தின் காப்பகம்: Malaysia Design Archive, The Zhongshan Building, 2nd Floor, Lot. No 84B, Jalan Rotan, Kampung Attap, 50460 Kuala Lumpur.

ஆக இப்போது உள்ள பெண்களுக்குத் தான் அலங்காரம் செய்யத் தெரியும் என்று நினைக்க வேண்டாம். 110 ஆண்டுகளுக்கு முன்னாலேயே நம் பெண்கள் மூக்குத்தி மேல் மூக்குத்தி போட்டு அசத்தி இருக்கிறார்கள்.

வருடத்தைக் கவனியுங்கள். 1910. சில அரசியல் கோமாளிகள், 1930-ஆம் ஆண்டில் தான் இந்தியர்கள் மலாயாவுக்கு வந்தார்கள் என்று வாய்கூசாமல் பேச மாட்டார்கள் என்று நம்புவோம். இனிமேலாவது வாய்ப் பதனம்; சொல் பதனமாக இருக்கட்டும்.

ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளுக்குச் சமமானது என்று சொல்வார்கள். அந்த வாசகம் இந்தப் படத்தைப் பொருத்த வரையில் மிகச் சரியே. இந்தப் படத்திற்கு தமிழ் அழகி (Tamil Beauty) என்று பெயர் சூட்டி இருக்கிறார்கள். மலேசியத் தமிழர்களுக்குக் கிடைத்த ஒரு தமிழ் புதையல் என்று போற்றுவோம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
22.05.2020