ஓம்ஸ் தியாகராஜன் சீற்றம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஓம்ஸ் தியாகராஜன் சீற்றம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

27 ஆகஸ்ட் 2019

ஓம்ஸ் தியாகராஜன் சீற்றம்


இந்த நாட்டில் இருக்கின்ற இந்தியர்களைக் கிள்ளுக் கீரையாகக் கருதி ஜாதி அடிப்படையிலான மோசமான வார்த்தையைப் பேசிய பிரதமர் துன் டாக்டர் மகாதீருக்கு தாம் கண்டனம் தெரிவிப்பதாகச் செந்தமிழ்ச் செல்வர் ஓம்ஸ் தியாகராஜன் தெரிவித்தார்.



இந்த நாட்டின் வளப்பத்திற்கும் வளர்ச்சிக்கும் இந்தியச் சமூகத்தினரின் பங்களிப்பு என்ன என்பதை மற்ற தலைவர்களைக் காட்டிலும் இரண்டாவது முறையாக பிரதமராக வீற்று இருக்கும் துன் மகாதீருக்கு தெரிந்து இருக்கும்.

இருந்த போதிலும் எந்த விவகாரமாக இருந்தாலும் அதில் சகட்டு மேனிக்கு ’கெலிங், பறையா போன்ற வார்த்தைகளை உபயோகிப்பது இந்திய சமூகத்தின் உணர்வுகளை அவர் இழிவு படுத்துவதற்கு சமமாகும்.

இந்த விவகாரம் இப்போது பூதாகரமாகிவிட்ட நிலையில் இன்னும் சில தினங்களில் அவர் ’சோரி (SORRY) என்று அறிக்கை விடுவார். இந்தியர்களை எப்படி வேண்டுமானாலும் வெளுத்து வாங்கலாம், அவர்களின் உணர்வுகளைத் தூண்டிவிடும் வகையில் எந்த வார்த்தையை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

ஆனால் முடிவில் மன்னிப்பு என்ற ஒருவார்த்தையை மட்டும் சொல்லி தப்பித்துக் கொள்ளலாம். எல்லாம் மறக்கப்பட்டு விடும் என்று மகாதீர் போன்றவர்கள் நினைத்து வருகின்றனர்.

இங்குள்ள தலைவர்கள் மட்டுமின்றி வெளிநாட்டிலிருந்து சத்தம் இல்லாமல் நம் நாட்டுக்குள் புகுந்து இங்கு உள்ளவர்களின் கண்களில் விரல் விட்டு ஆட்டி குழப்பத்தை உண்டாக்கி முடிவில் ’மன்னிப்பு என்ற ஒரு வார்த்தையில் தப்பித்துக் கொள்கின்றனர்.




இப்படி இன்னும் எத்தனை ’சோரிகளை நம் இந்திய சமுதாயம் ஏற்கும்.? எல்லாவற்றையும் மன்னிப்போம் மறப்போம் என்பது நாம் வாங்கி வந்த வரமா? இந்தியர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும்.

எது அவர்களைக் காயப்படுத்துமோ அதை முற்றாக ஒடுக்க என்பதை பிரதமர் முதலில் உணர வேண்டும். எதைப் பேசினாலும் ஒன்றுக்கு பலமுறை சிந்தித்துப் பேச வேண்டும். 



அதை விடுத்து பேசி விட்டு ஒப்புக்காக ’சோரி என்ற ஒற்றை வார்த்தையில் முடித்துக் கொண்டால் இனியும் இந்திய சமூகம் பொறுத்துக் கொண்டிருக்காது என்று ஓம்ஸ் தியாகராஜன் நினைவுறுத்தினார்.


  பேஸ்புக் ஊடகத்தில் அன்பர்களின் பதிவுகள்


M R Tanasegaran Rengasamy கிருஸ்துவ, பௌத்த, சீக்கிய மற்றும் இந்து சமயங்களின் கூட்டமைப்பு இப்பிரச்னைக்கு தீர்வு காண முயல வேண்டும். நாம் வாளா இருப்பதும் நமக்கு நாமே முட்டிக் கொள்வதும் நம் எதிர்காலத்துக்கு நல்லதன்று. ஆவன நடவடிக்கைகளில் இறங்குங்கள். இப்படியே விட்டால் நம்மை வருகின்ற போகின்றவர்களெல்லாம் சீண்டிப் பார்ப்பார்கள்.


Mbs Maniyam ஐயா நீங்களெல்லாம் சேர்ந்துதானே அவனை உட்காரவட்ச்சீங்க, இப்ப என்ன குத்துது குடையுதென்று!


Nedumaran Vengu Kayalvili Manian தங்கள் மீது நான் வைத்திருந்த மதிப்பும் மரியாதையும் பன்மடங்கு அதிகரித்துள்ளது


Arojunan Veloo மானம் காக்கும் தலைவரே....!
கேளுங்கள்...கேளுங்கள்....!
நீதி கேளுங்கள்.....!
உரக்கக் கேளுங்கள்....!
தமிழர்களின் உரிமையை
நிலைநாட்டுங்கள்....!
நாம் இந்நாட்டுக்கு
அன்னியர் இல்லை....!
நாம் இந்நாட்டின்
மண்ணின் மைந்தர்கள்.....!



Sri Sai Morgan துன் அவர்கள் பதவி விளக்குவதே மிக சிறப்பு .


Doraisamy Lakshamanan தங்களைப் போன்ற தகுதி வாய்ந்தவர்கள் ஒன்றிணைந்து தெரிவித்தால்தான் அரசியல் மற்றும் சமுதாயத் தலைவர்களின் ஆழ்மனத்தில் சென்று பயன்தரும்!

Muthukrishnan Ipoh ஒரு சொல் எப்படிப்பட்ட பின்விளைவுகளை உண்டாக்கும் என்பதை அவர் முன்கூட்டியே உணர்ந்து இருக்க வேண்டும்... 

அரசியலில் வாரிசை ஒரு பெரிய இடத்தில் வைத்தால் சரி... மூத்த தலைவரின் தூர நோக்கு...

அமேசான் காடுகளில் நெருப்புகள்... காடுகளை அழித்து மாடுகளை வளர்த்து விடுங்கள்... புதிய நாட்டை உருவாக்குங்கள் என்பது அந்த நாட்டின் புதிய வலதுசாரி அதிபரின் கொள்கை... இங்கேயும் ஒரு மகா தீ. மலேசிய இந்தியர்களை இழிவு படுத்தும் தீச்சுடர்... இரு நாடுகளில் இரு வேறுபாட்டு அரசியல் நகர்வுகள்.... பார்ப்போமே...

 
Manickam Nadeson மூளை இல்லாதவர்கள் இப்படித் தான் கருத்து சொல்லுவார்கள்.