மலாக்கா முத்துக்கிருஷ்ணன் தமிழ்ச் சுவடிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மலாக்கா முத்துக்கிருஷ்ணன் தமிழ்ச் சுவடிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

18 ஏப்ரல் 2020

மலாக்கா முத்துக்கிருஷ்ணன் தமிழ்ச் சுவடிகள்

மலாக்கா முத்துக்கிருஷ்ணனின் தமிழ்ச் சுவடிகள் என்ற இலக்கிய நிகழ்வு "வாழும் போதே வாழ்த்திடுவோம்" எனும் நோக்கத்தில் டான்ஸ்ரீ சோமா மண்டபத்தில் 2017 மே மாதம் 07-ஆம் தேதி பிற்பகல் 3.00 மணிக்கு நடந்தேறியது. 


மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் இலக்கியப் படைப்புகளை ஆய்வு செய்யும் ஒரு நிகழ்ச்சி. அந்த வகையில் மலாக்கா முத்துக்கிருஷ்ணனின் படைப்புகள் அந்த நிகழ்ச்சியில் ஆய்வுகள் செய்யப் பட்டன.

மலேசியத் தமிழ் உலகிற்கு அரும் பெரும் சேவைகளைச் செய்து வரும் பூச்சோங் தமிழ் எழுத்தாளர் இயக்கம் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தது. இந்த இயக்கம் மலேசியாவில் நாடறிந்த தமிழ் எழுத்தாளர்களை அறிமுகம் செய்கின்றது.


இந்த நிகழ்ச்சியில் மலாக்கா முத்துக்கிருஷ்ணனின் பற்பல திறமைகளை வாசகர்கள் எடுத்து உரைத்தனர். மலேசியப் போலீஸ் படையின் ஆணையர் டத்தோ தெய்வீகன் சிறப்புரை ஆற்றினார். மலேசியாவில் தமிழ் எழுத்தாளர்கள் எனும் தம் உரையில் பற்பல அரிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

ஆய்வாளர்கள்

திருமதி. கண்மணி கிருஷ்ணன்: மலாக்கா முத்துக்கிருஷ்ணனின் சிறுகதைகள், நாடகங்கள், வாழ்க்கை வரலாறு


திரு. சுதாகர் சுப்பிரமணியம்: மலாக்கா முத்துக்கிருஷ்ணனின் வரலாற்றுக் கட்டுரைகள்

திரு. பூச்சோங் நாராயணன்: என் பார்வையில் மலாக்கா முத்துக்கிருஷ்ணன்

வாழும் போதே வாழ்த்திடுவோம் எனும் நோக்கத்தில் அந்த நிகழ்ச்சி நடைபெற்றது. 


மலாக்கா முத்துக்கிருஷ்ணனின் 50 ஆண்டு கால எழுத்துலக வாழ்க்கையில் இது நான்காவது நிகழ்ச்சியாகும். சென்ற 2016-ஆம் ஆண்டு மலேசியத் திரைப்பட இயக்குநர் பிரான்சிஸ் சில்வன் தலைமையில் ஒரு பெரிய கலை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது.

டாக்டர் ஜெயபாரதி எனும் புதிய விருதை முதன் முறையாக அறிமுகம் செய்து, அந்த விருதை மலாக்கா முத்துக்கிருஷ்ணனுக்கு வழங்கிச் சிறப்புச் செய்தார்கள். 


அது அவரின் வாழ்க்கையில் ஒரு வாழ்நாள் சாதனை விருது என்று பிரான்சிஸ் சில்வன் வாழ்த்துரை வழங்கினார்.

பூச்சோங் தமிழ் எழுத்தாளர் இயக்கத் தலைவர் ஜி.குணசேகரன் அவர்களும்;  இயக்கத்தின் அன்பர்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சிக்குத் தங்களின் சிறப்பான ஆதரவுகளை வழங்கினார்கள். பூச்சோங் தமிழ் எழுத்தாளர் இயக்கத்தினரின் தமிழ்ச் சேவைகளை மலேசியத் தமிழர்கள் என்றென்றும் நினைவில் கொள்வார்கள்.

பேஸ்புக் பதிவுகள்
May 8, 2017


Thennarasu Sinniah சரித்திரச் சக்கரவர்த்தியை பற்றிய தேடுதல் என்பதே ஒரு இனிமான உணர்வாகும்... இன்றைய தலைமுறைக்கு அவரை வாழும் காலத்தில் அறிமுகப்படுத்தி சிறப்பு செய்த பூச்சோங் வாசகர் எழுத்தாளர் இயக்கத்தின் பணி மகத்தானது.

Thennarasu Sinniah
இனிமையான உணர்வாகும்...

Maana Mackeen மிகவும் அரியதொர் நிகழ்ச்சி. மலேசிய இலக்கிய ஆர்வலர்கள் அத்தனைபேரும் சிறப்பிக்க வேண்டும் என அரசு வாழ்நாள் சாதனை பெற்ற ஓர் இலங்கைக் கலைஞன் - ஆய்வெழுத்தாளன் வேண்டி நிற்கிறேன். மலேசியாவினர் இந்த 'முத்து'வைப் போற்றிப் பாதுகாக்கத் தவறக் கூடாது. (கவனிக்க: இவர் எழுத்துக்கள் மட்டுமே எனக்கு நெருக்கமானவை)

Muthukrishnan Ipoh தங்களின் கருத்துகளுக்கு மிக்க நன்றி ஐயா

C Birabakaran: Naan kanda sirantha manithar neengal... (நான் கண்ட சிறந்த மனிதர் நீங்கள்...)

Arojunan Veloo வாழ்த்துகள் முத்து!

Marukrishnan Maruthan வணக்கம் என் நீண்டகால நண்பர் மானமிகு மலாக்கா முத்துகிருஸ்ணன் அவர்களின் இலக்கிய சுவடிகள் நிகழ்வுக்கு வர முடியவில்லை என்றாலும் எனது மனமாற வாழ்த்துக்கள். ஒரு நாள் சந்திப்போம். மரு. கிருட்ணன். 01110191854

Mallika Perumal: Vaalthugal sir

Durai Senguttuvan விழா வெற்றி பெற வாழ்த்துகள்

Radha Pachoma சகோதரர் மலாக்கா முத்துக்கிருஷ்ணனின் இநத விழா வெற்றிப் பெற வேண்டும் வாழ்த்துக்கள். மேம்மேலும் இன்னும் பல கட்டுரைகளை படைக்க வேண்டும் நீங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன் அன்புடன் உங்கள் சகோதரி.

Nagaraja Akila வாழ்த்துகள் ஐயா .

Don Samsa வரும் காலங்களில் மேலும் பல பாராட்டுக்கள் விருதுகள் அவருக்கு கிடைக்க வேண்டும்..

Puan Kalai Wani Vijayan ஆம் தம்பி

Junaidi Bezita இனிமையான உணர்வாகும்...

C Birabakaran Vaalthukkal saar......

Vijay Jay Good Morning dear

Premjee Latha Congrats sir....

Letchumanan Nadason வாழ்த்துக்கள் ஐயா. பலப் பயனானத் தகவல்களை எங்களுக்கு வழங்கிய தங்களுக்கு நன்றி.

Patmarobert Patma Vaalthukkal sir

Paneerchelvan Arjunan Vazthukal sir. Your former student Paneer Arjunan

Nagalingam Patkunam யாதும் ஊரே யாவரும் கேளீர்.புலம்பெயர் தமிழர்களின் தமிழ் உணர்வு மெய்சிலிற்க வைக்கின்றது.வாழ்த்துக்கள்.

Kumarasamy G P Govindasamy பேஸ்புக் வழியாக செய்தி கண்டு நானும் கலந்து கொண்டேன். நிகழ்வு சிறப்பாக இருந்தது. சிற்பங்களைப் பற்றி உரையாற்றிய செல்வி செந்தமிழ்ச் செல்வி உரை நன்று. டத்தோ தெய்வீகன் பெற்றோர் கடமைகளை இலக்கிய உதாரணங்களை கொண்டு பேசியது நிகழ்வுக்கு முத்தாய்ப்பாக அமைந்தது. நிகழ்ச்சியின் கதாநாயகன் மலாக்கா முத்துக் கிருஷ்ணன் உரை இல்லாதது ஒரு சிறு குறை.

Muthukrishnan Ipoh பொதுவாக அடியேன் அதிகம் பேசுவது இல்லை. எழுதுவது என்றால் கைவந்த கலை. அதனால் அன்றைய தினம் அதிகம் பேசவில்லை. மன்னிக்கவும்.

Muthukrishnan Ipoh அந்த நிகழ்ச்சியில் தங்களைச் சந்தித்தேன். உரையாடினோம். நன்றிங்க ஐயா

Manikam Manikam Manikam Valthukkal, thodaruthum tanggal eluthu pani

Thanga Raju மிக அருமை... பாராட்ட சொற்கள் பல உள்ளன... நன்றி மறவேன்

Muthukrishnan Ipoh நன்றிங்க ஐயா

Muthukrishnan Ipoh வணக்கம். கடந்த 20 நாட்களாக இந்தப் பேஸ்புக் பகுதி பக்கமே வரவில்லை. வேலைப் பளு காரணம். அதனால் உடனடியாக நன்றிப் பதிவுகளைக் காட்சி செய்ய இயலவில்லை. வாழ்த்துகள் தெரிவித்த அனைத்து நெஞ்சங்களுக்கும் இரு கரம் கூப்பிய நன்றிகள்.