கூட்டரசு மலாயா வரலாற்றில் முதல் மாநகரத் தகுதியைப் பெற்ற ஜார்ஜ் டவுன் மாநகரத்திற்கு முதல் மேயராகத் தேர்வு செய்யப் பட்டவர் டி. எஸ். ராமநாதன் (D.S Ramanathan). 1958-ஆம் ஆண்டு மேயராகத் தேர்வு செய்யப் பட்டார். (1st Mayor of George Town)
மலேசியாவில் தற்சமயம் 14 மாநகரங்கள் உள்ளன. இவற்றுள் முதல் மாநகரம் பினாங்கில் உள்ள ஜார்ஜ் டவுன். 1956-ஆம் ஆண்டு மாநகரத் தகுதியைப் பெற்றது. மலேசியாவின் தலைநகரமான கோலாலம்பூர் 1972-ஆம் ஆண்டில் தான் மாநகரத் தகுதியைப் பெற்றது.
டி. எஸ். ராமநாதன் என்பவர் மலேசியாவில் மூத்த அரசியல்வாதி; ஒரு மாநகரத்தின் முதல்வர்; ஓர் ஆசிரியர்; ஒரு தொழிற்சங்கவாதி; ஒரு கல்வியாளர். 1908 டிசம்பர் 23-ஆம் தேதி இலங்கை யாழ்ப்பாணத்தில் பிறந்தவர்.
1952-ஆம் ஆண்டில் மலேசியத் தொழிலாளர் கட்சியின் தோற்றுநர்களில் ஒருவர். (Labour Party of Malaya). அதன் தலைவராகவும் இருந்தவர்.
1959-ஆம் ஆண்டிலேயே பினாங்கில் ஒரு பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப் படுவதற்குப் பிள்ளையார் சுழி போட்டவர் டி. எஸ். ராமநாதன்.
பினாங்கு சட்ட சபையில் முன்னெடுப்பு செய்தார். பினாங்கு பல்கலைக்கழக திட்டச் செயலவை (Penang University Project committee) உருவானது. அதற்குத் தலைமை தாங்கினார்.
அவருடைய தீவிர முயற்சிகளினால் 1969-ஆம் ஆண்டு மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப் பட்டது. இந்த விசயம் எத்தனைப் பேருக்குத் தெரியும்.
டி. எஸ். ராமநாதன் 1920-ஆம் ஆண்டு மலாயாவிற்குப் புலம் பெயர்ந்தவர். பேராக் மாநிலத்தில் ஆசிரியராகப் பணி புரிந்தவர். பின்னர் காலத்தில் ஒரு கல்வியாளராகப் பரிணமித்தார்.
1959-ஆம் ஆண்டில் இருந்து 1962-ஆம் ஆண்டு வரையில் மலேசியாவின் தேசிய ஆசிரியர் சங்கத்தின் (National Union of Teachers) தலைவராகப் பொறுப்பு வகித்தார். 1961-ஆம் ஆண்டு மலாயா தேசிய ஆசிரியர் காங்கிரஸின் (Malayan Teachers National Congress) துணைத் தலைவராகவும் பொறுப்பு வகித்தார்.
பினாங்கு மேயர் பதவிக்குப் பின்னர் பினாங்கு பைகாட் மெதடிஸ்ட் பள்ளியின் (Penang Pykett Methodist School) தலைமையாசிரியராகவும் பதவி வகித்தார். மனைவியின் பெயர் ரூத் வன்னியசிங்கம் (Ruth Vanniasingham). 1973-ஆம் ஆண்டு தன்னுடைய 65-ஆவது வயதில் கோலாலம்பூரில் காலமானார். மாரடைப்பு ஏற்பட்டது.
இவருடைய பெயரில் பினாங்கில் ஒரு சாலைக்குப் பெயர் வைக்கப்பட்டு பெருமை செய்யப்பட்டு உள்ளது (D. S. Ramanathan Road). மலாயாவின் வரலாற்றில் சாதனை படைத்தவர்களில் டி. எஸ். ராமநாதன் அவர்களும் ஒருவர். அன்னாரை வாழ்த்துவோம்.
(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
copyright © https://ksmuthukrishnan.blogspot.com/
பேஸ்புக் அன்பர்களின் பின்னூட்டங்கள்
(வாழ்த்துகள் ஐயா. உங்களைப் போன்று இந்த மண்ணில் கிடைத்தது எங்களின் பாக்கியம்... ஐயா கலைச் செல்வத்தின் கருத்துக்கு நன்றிகள்.)
டி. எஸ். ராமநாதன் என்பவர் மலேசியாவில் மூத்த அரசியல்வாதி; ஒரு மாநகரத்தின் முதல்வர்; ஓர் ஆசிரியர்; ஒரு தொழிற்சங்கவாதி; ஒரு கல்வியாளர். 1908 டிசம்பர் 23-ஆம் தேதி இலங்கை யாழ்ப்பாணத்தில் பிறந்தவர்.
1959-ஆம் ஆண்டிலேயே பினாங்கில் ஒரு பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப் படுவதற்குப் பிள்ளையார் சுழி போட்டவர் டி. எஸ். ராமநாதன்.
பினாங்கு சட்ட சபையில் முன்னெடுப்பு செய்தார். பினாங்கு பல்கலைக்கழக திட்டச் செயலவை (Penang University Project committee) உருவானது. அதற்குத் தலைமை தாங்கினார்.
அவருடைய தீவிர முயற்சிகளினால் 1969-ஆம் ஆண்டு மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப் பட்டது. இந்த விசயம் எத்தனைப் பேருக்குத் தெரியும்.
டி. எஸ். ராமநாதன் 1920-ஆம் ஆண்டு மலாயாவிற்குப் புலம் பெயர்ந்தவர். பேராக் மாநிலத்தில் ஆசிரியராகப் பணி புரிந்தவர். பின்னர் காலத்தில் ஒரு கல்வியாளராகப் பரிணமித்தார்.
பினாங்கு மேயர் பதவிக்குப் பின்னர் பினாங்கு பைகாட் மெதடிஸ்ட் பள்ளியின் (Penang Pykett Methodist School) தலைமையாசிரியராகவும் பதவி வகித்தார். மனைவியின் பெயர் ரூத் வன்னியசிங்கம் (Ruth Vanniasingham). 1973-ஆம் ஆண்டு தன்னுடைய 65-ஆவது வயதில் கோலாலம்பூரில் காலமானார். மாரடைப்பு ஏற்பட்டது.
(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
copyright © https://ksmuthukrishnan.blogspot.com/
பேஸ்புக் அன்பர்களின் பின்னூட்டங்கள்
Kalai Selvam ஐயா
தங்களிடம் எனது அன்பான பணிவான வேண்டுகோள். இந்த அரிய செய்திகளை ஒரு
புத்தகமாக நீங்களே வெளியிட்டால் சமுதாயத்திற்கு மிகவும் நன்மையாகவும்
இருக்குமே. நன்றி
Arjunan Arjunankannaya பல
தமிழர்களின் சரித்திரங்கள் உங்கள் மூலமாகத் தான் முக நூலில்
பதிவிடப் படுகிறது. இது வரை யாருக்கும் தெரியாத தகவல்கள் இவை. நன்றி ஐயா
தகவல்களுக்கு... பலருக்கும் தெரியாத தகவல்கள் இவை.
Gunasegar Manickam மிக்க மகிழ்ச்சி! தமிழனின் தலைமைத்துவம்... பாராட்டப்பட வேண்டிய சேவை.
Don Samsa அருமை தலைவரே. நன்றி
Krishnan ATawar Great Sir
Yogavin Yogavins Great sir
Arojunan Veloo மகிழ்ச்சி! அந்த நாள் இனி வருமா?
Murugan Rajoo சான்றுகளையும்,
சுவடுகளையும், தொடர்ந்து பரப்புரைகள் செய்து, சரித்திரம் படி, சரித்திரம்
படை, சரித்திரமாக மாறு என்ற மேதகு தலைவர் பிரபாகரனின் வரிகளுக்கு உயிர்
ஊட்டி வரும் தலைசிறந்த எழுத்தாளர் ஐயா அவர்களுக்கு... வாழ்த்துகளும்,பாராட்டுகளும்...
Murthy Devi Vallthukal aya ungkalaipondru enthamannil kedaithathu engkalin baakiam(n) aya kalaiselvattin karutthuku nandrikal.
(வாழ்த்துகள் ஐயா. உங்களைப் போன்று இந்த மண்ணில் கிடைத்தது எங்களின் பாக்கியம்... ஐயா கலைச் செல்வத்தின் கருத்துக்கு நன்றிகள்.)