[மலேசியா புதிய பார்வை 01.06.2014 ஞாயிறு மலரில் பிரசுரிக்கப் பட்டது.]
இரா.
மணிமாறன், தாமான் பெர்மாய், சுங்கை பூலோ, சிலாங்கூர்
கே:
Collage Maker என்றால் என்ன? அதை எப்படி
பயன்படுத்துவது? பேஸ் புக் சமூகத் தளத்தில் அந்தப் படங்களை எப்படி பதிவேற்றம் செய்வது?
ப: ’கோலாஜ்’ என்பது பல படங்களை
ஒன்றாகச் சேர்த்து ஒட்டிக் காட்டும் வரைபட முறையாகும். தமிழில் ’ஒட்டு வடிவம்’ என்று
அழைக்கலாம். ‘கோலாஜ் மேக்கர்’ எனும் பெயரில் ஒரு நிரலியும் இருக்கிறது.
உங்களிடம் நிறைய படங்கள் இருக்கின்றன என்று வைத்துக் கொள்வோம். எல்லாப் படங்களையும் ஒரே படமாக உங்கள் பேஸ்புக்கில் காட்ட விரும்புகிறீர்கள். அதற்கு உதவும் நிரலியின் பெயர்தான் ‘கோலாஜ் மேக்கர்’. இணையத்தில் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அதற்கு முன் உங்களிடம் இணைய
வசதி இருக்க வேண்டும். இல்லை என்றால் பரவாயில்லை. cyber cafe எனும் இணையச் சேவை மையங்களைப் பயன்படுத்திக்
கொள்ளலாம். ஒரு மணி நேரத்திற்கு இரண்டு ரிங்கிட் கேட்பார்கள். ‘கோலாஜ் மேக்கர்’ எனும்
இந்த நிரலி இப்போது மிகவும் பிரபலம் அடைந்து வருகிறது.
உங்களுக்கு ஒரு பயிற்சி.
முதலில், PicMonkey எனும் இணையத் தளத்திற்குப் போக வேண்டும்.
அதன் முகவரி: http://www.picmonkey.com/collage. அதில் Create a Collage
என்பதைச் சொடுக்கி விடுங்கள். அடுத்து இடது புறம் பார்த்தீர்கள் என்றால், மூன்று வசதிப்
பகுதிகளைக் கொடுத்து இருப்பார்கள். முதலாவது வசதிப் பட்டையில் உங்கள் படத்தைப் பதிவேற்றம்
செய்யுங்கள். இரண்டாவதாக, உங்களுடைய படம் எப்படி இருக்க வேண்டும் என்கிற Layout எனும் தளவமைப்பு இருக்கும்.
அதில் ஒரே படத்தில், மேலும்
எத்தனை படங்களை இணைக்கலாம் என்பதை முடிவு செய்யுங்கள். மூன்றாவதாக, படத்தின் பின்னணியை
மாற்ற உதவும் வசதிகள் இருக்கும். ஒரு முறைக்கு
இரண்டு மூன்று முறைகள் முயற்சி செய்து பாருங்கள். பழகிக் கொள்ளலாம்.
அது ஒன்றும் பெரிய கம்ப சித்திரம் அல்ல. தயாரித்த படத்தைப் பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யுங்கள். இந்த மாதிரி இன்னும் இலவசமாக வசதிகளைச் செய்து தரும் சில இலவசத் தளங்கள் உள்ளன. அவற்றையும் போய்ப் பாருங்கள்.
அது ஒன்றும் பெரிய கம்ப சித்திரம் அல்ல. தயாரித்த படத்தைப் பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யுங்கள். இந்த மாதிரி இன்னும் இலவசமாக வசதிகளைச் செய்து தரும் சில இலவசத் தளங்கள் உள்ளன. அவற்றையும் போய்ப் பாருங்கள்.
இன்னும் ஒரு முக்கியமான விஷயம்.
இந்த இணைய முகவரிகளை எழுதி வைத்துக் கொண்டு, அப்புறம் கணினியில் தட்டச்சு செய்வதற்கு
நீங்கள் சிரமப் படலாம். அதற்கும் ஒரு சுலபமான வழி இருக்கிறது. ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும், ’புதிய பார்வை’ கணினியும் நீங்களும் கேள்வி பதில் அங்கம், http://ksmuthukrishnan.blogspot.com/
எனும் வலைப்பதிவில், பதிவேற்றம் செய்யப் படுகிறது. அங்கே மேலே சொன்ன இணைய முகவரிகளுக்கு
நேரடியான இணைப்புகள் கொடுக்கப் பட்டுள்ளன. அதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். சிரமம்
குறையும்.