பெண்கள் அதிகம் பேசுவது ஏன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெண்கள் அதிகம் பேசுவது ஏன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

10 அக்டோபர் 2015

பெண்கள் அதிகம் பேசுவது ஏன்

பெண்கள் அதிகம் பேசுவதாக, அண்மைய கால ஆய்வுகளின் வழி கண்டு அறியப்பட்டு உள்ளது. ஓர் உயிரியின் தோற்றம், செயல், பண்பு போன்றவற்றைக் கட்டுப் படுத்தும் காரணிகளாக அந்த உயிரியின் மரபணுக்கள் அமைகின்றன. இந்த மரபணுக்கள், உடலில் உற்பத்திச் செய்யப்படும் புரதத்தின் மூலம் அமைகின்றன. 


இந்த மரபணுக்கள், பெற்றோர்களிடம் இருந்து பெறப் படுகின்றன. எனவே குழந்தைகளின் செயலும் தோற்றமும் அவற்றின் பெற்றோரைப் போலவே அமைகின்றன. ஆண் பெண்களுக்கு இடையே உடல் ரீதியான அமைப்பு, நடை, குரல் போன்ற பண்புக் கூறுகளில் தெளிவான வேறுபாடுகள் காணப் படுகின்றன.

பொதுவாக பெண்கள், ஆண்களைக் காட்டிலும் அதிகமாகப் பேசுபவர்களாக உள்ளனர். அறிவியலார்கல் அதனை பால் (sex) சார்ந்த பண்பாக ஏற்றுக் கொண்டு உள்ளனர். ஆண்களைவிட பெண்கள் அதிகம் பேசுவதற்கான காரணங்களை அறிய அண்மைய காலமாக ஆய்வுகள் செய்யப் பட்டன.

அமெரிக்காவில் உள்ள மேரிலாண்ட் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த நரம்பியல் ஆராய்ச்சியாளர் மார்க்ரட் மெக்கார்த்தி; உளவியலார் ஜெ மைக்கேல் பவ்வர் ஆகிய இருவரும் எலிகளைக் கொண்டு விரிவான சோதனைகளை மேற்கொண்டனர்.

எலிகளில் பெண் எலிகள் அதிகம் பேசுமா என்று தெரியவில்லை. சொல்ல முடியாது. அவற்றின் நயன மொழியை நானும் படித்தது இல்லை. நீங்களும் கேட்டது இல்லை. தனியாக நயனமொழி கல்லூரி ஒன்றைத் தொடங்கலாம். விலங்குகளை விரிவுரையாளர்களாகப் பணிகளில் அமர்த்தலாம்.

அவர்களின் ஆய்வு முடிவின்படி பாக்ஸ்பி2 (Foxp2) என்னும் புரதமே அந்த வேறுபாட்டிற்கு காரணம் எனக் கண்டு அறிந்தனர். பாக்ஸ்பி2 புரதத்தினை “மொழிப் புரதம்” என அறிவியலார் அழைக்கிறார்கள். இந்தப் புரதத்தை உற்பத்தி செய்யும் பாக்ஸ்பி2 மரபணுவை 2001-ஆம் ஆண்டு கண்டு பிடித்தார்கள்.

பாக்ஸ்பி2 மரபணுவினால் சுரக்கப்படும் பாக்ஸ்பி2 புரதம், பெண்களின் மூளையில் அதிகம் காணப் படுகின்றன. அதனால் பெண்கள் ஆண்களைக் காட்டிலும் அதிகமாகப் பேசுகின்றனர் என்று கண்டு அறியப் பட்டது.

பெண் குழந்தைகளும் ஆண் குழந்தைகளைக் காட்டிலும் விரைவாக அதிக வார்த்தைகளைக் கற்றுக் கொள்வதற்கும் அந்தப் பாக்ஸ்பி2 மரபணுக்கள் தான் காரணம். இன்னும் ஒரு கூடுதலான தகவல்.

ஒரு பெண் ஒரு நாளைக்கு ஏறக்குறைய 13000 வார்த்தைகளை ஓர் ஆணைக் காட்டிலும்கூடுதலாகப் பேசுகின்றாராம். ஒரு புள்ளி விவரம் சொல்கின்றது.

என் சொந்தக் கருத்து... தப்பாக நினைக்க வேண்டாம். எதிர்காலத்தில் அந்தத் தொல்லை தரும் பாக்ஸ்பி2 மரபணுவை எப்படியாவது தேடி கண்டுபிடிக்க வேண்டும். அறிவியலாளர்கள் கண்டுபிடித்து விட்டார்கள். நடைமுறைக்கு வரவில்லை.

அந்த மரபணுவை அழிப்பதற்கு முயற்சிகள் செய்ய வேண்டும். அதனால், ஆண்களின் ஆயுட்காலமும் கொஞ்சம் கூடுதலாகும். இது என் கருத்து. புதிய பார்வை நாளிதழில் அடியேன் எழுதிய கட்டுரையின் சுருக்கம். -மலாக்கா.....