மலாயாவில் ரப்பர் தோட்டங்கள் தோன்றுவதற்கு முன்பாகவே கரும்புத் தோட்டங்கள்... கரும்புத் தோட்டங்கள் தோன்றுவதற்கு முன்பாக காபித் தோட்டங்கள்... காபித் தோட்டங்கள் தோன்றுவதற்கு முன்பாக மிளகுத் தோட்டங்கள்... மிளகுத் தோட்டங்கள் தோன்றுவதற்கு முன்பாக மரவள்ளித் தோட்டங்கள். அத்தனையும் அடுக்குமல்லி போல அழகு அழகான பச்சை மலர்த் தோட்டங்கள்.
அந்த வகையில் அப்போது 1850-ஆம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட காபிக் கரும்புத் தோட்டங்களில் வேலை செய்வதற்காகத் தென்னிந்தியர்கள் ஆயிரக் கணக்கில் மலாயாவுக்கு வந்து உள்ளார்கள்.
தவிர 1800-ஆம் ஆண்டுகளிலேயே மிளகு, காபித் தோட்டங்களில் ஆயிரக் கணக்கான தென்னிந்தியர்கள் வேலை செய்யத் தொடங்கி விட்டார்கள். நினைவில் கொள்வோம். தென்னிந்தியர்கள் என்றால் தமிழர்கள்; தெலுங்கர்கள்; மலையாளிகள்.
பேராக், பினாங்கு, ஜொகூர், சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மாநிலங்களின் கரும்புத் தோட்டங்களில் வேலை செய்வதற்காக மலாயாவுக்கு வந்த தென்னிந்தியர்கள் விவரங்கள்:
# 1840-ஆம் ஆண்டில் இருந்து 1849-ஆம் ஆண்டு வரை ஆண்டுக்கு 1800 பேர்
# 1850-ஆம் ஆண்டில் இருந்து 1854-ஆம் ஆண்டு வரை ஆண்டுக்கு 2000 பேர்;
# 1855-ஆம் ஆண்டில் இருந்து 1858-ஆம் ஆண்டு வரை ஆண்டுக்கு 2500 பேர்;
# 1859-ஆம் ஆண்டில் 3800 பேர்;
# 1860-ஆம் ஆண்டில் இருந்து 1864-ஆம் ஆண்டு வரை ஆண்டுக்கு 4000 பேர்;
# 1865-ஆம் ஆண்டில் 6000 பேர்;
# 1867-ஆம் ஆண்டில் 6294 பேர்;
# 1868-ஆம் ஆண்டில் 6949 பேர்;
# 1869-ஆம் ஆண்டில் 9013 பேர்;
# 1870-ஆம் ஆண்டில் 5000 பேர்;
சான்றுகள்:
1. Kernial Singh Sandhu. (1969). Indian in Malaysia immigration and settlement 1784-1957. Singapore: Cambridge University Press.
2. New Mandala. Retrieved from http://asiapacific.anu. edu.au/ newmandala /2013/ 02/20/aliens-in-the-land-indian-migrant-workers-in-malaysia/
3. Aliens in the Land – Indian Migrant Workers in Malaysia.
1926-ஆம் ஆண்டு அவர்களின் வருகை உச்சம் கண்டது. அந்த ஆண்டில் மட்டும் 149,414 தென்னிந்தியர்கள் மலாயாவுக்கு வந்து இருக்கிறார்கள். தவிர 15,963 பேர் சொந்தமாகக் காசு போட்டு மலாயாவுக்கு வந்து இருக்கிறார்கள். அந்த ஆண்டில் மட்டும் மலாயாவிற்கு 1 இலட்சத்து 65 ஆயிரம் தென்னிந்தியர்கள் வந்து இருக்கிறார்கள்.
இதைப் பற்றிய மேல் விவரங்களை அடுத்த கட்டுரையில் விரிவாகக் கூறுகிறேன். இப்போது டெனிசன் தோட்டத்திற்கு வருவோம்.
டெனிசன் கரும்புத் தோட்டம் 1876-ஆம் ஆண்டில் உருவாக்கப் பட்டது. ஆனால் சில உள்ளூர் ஆவணங்களில் 1890 என்றும் 1910 என்றும் பகிர்ந்து உள்ளார்கள். விடுங்கள். கிணற்றுத் தவளைகள் கத்துவதால் மழை வரப் போவது இல்லை. மழை வருவதால் தான் அவை கூச்சல் போடுகின்றன.
1870-ஆம் ஆண்டுகளில் பேராக் மாநிலத்தின் பாரிட் புந்தார் (Parit Buntar) மாவட்டத்தில் டெனிசன் தோட்டம் (Denison Estate) இருந்தது. இப்போது இருப்பதாகத் தெரியவில்லை. கொஞ்சம் கொஞ்சம் பிடுங்கி எடுத்து மாடி வீடுகளைக் கட்டி விட்டார்கள். டெனிசன் தோட்டம் இருந்த பகுதியை இப்போது டெனிஸ்டவுன் என்று அழைக்கிறார்கள்.
டெனிசன் எஸ்டேட் கம்பெனி (Denison Estate Company Ltd) எனும் நிறுவனத்திற்குச் சொந்தமாக இருந்தது. 750 ஏக்கர் பரப்பளவில் கரும்பு பயிரிடப் பட்டது. அதன் பின்னர் 310 ஏக்கர் பரப்பளவில் மரவள்ளிக்கிழங்கு, ரப்பர் பயிரிடப் பட்டது. தவிர 175 ஏக்கர் தேங்காய் சாகுபடியும் செய்யப்பட்டது.
நிறையவே கால்வாய்களை வெட்டி இந்தத் தோட்டத்தை வடிகட்டி பக்குவப்படுத்தி இருக்கிறார்கள். வளப்பம் நிறைந்த மண். ரப்பர், தேங்காய் இரண்டுக்கும் மிகப் பொருத்தமான மண்.
டெனிசன் தோட்டத்திற்கு 1910-ஆம் ஆண்டில் தாமஸ் பாய்ட் (Thomas Boyd) என்பவர் வருகை தரும் முகவராக இருந்தார். இவரின் பார்வையில் கூலா தோட்டமும் (Gula estate) இருந்தது. இந்தத் தோட்டங்களைப் பினாங்கைச் சேர்ந்த மெசர்ஸ் கென்னடி (Messrs. Kennedy e Co., Pinang) எனும் கம்பெனியார் நிர்வாகம் செய்து வந்தனர்.
படத்தில் நம்மவர்கள் வேட்டியை இழுத்துக் கோவணமாகக் கட்டிக் கொண்டு வேலை செய்வதைப் பாருங்கள். 150 ஆண்டுகளுக்கு முன்னால் நம் தென்னிந்தியர்கள் காடு மேடுகளில் மட்டும் வேலை செய்யவில்லைங்க. கால்வாய், வாய்க்கால், கழனிகளிலும் இறங்கி வேலை செய்து இருக்கிறார்கள். அடுத்து வரும் நம் சந்ததியினர் தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்தப் படத்தை எடுத்தவர் விவரங்கள்:
# கார்ல் ஜோசப் கிலெயின்குரோத் - Carl Josef Kleingroth
# ஜெர்மன் நாட்டுக்காரர் (German photographer)
# பிறப்பு இறப்பு (1864 - 1925)
# வாழ்ந்த இடம் மேடான் சுமத்திரா (Medan, Sumatra)# படம் எடுக்கப்பட்டது 1899# படம் பாதுகாக்கப்படும் இடம் லெய்டன் பல்கலைக்கழக நூலகம், நெதர்லாந்து (Leiden University Library, KITLV institute, Netherlands)
சின்ன ஒரு வேண்டுகோள். இந்தப் பதிவை எந்த ஊடகத்திலும் பகிர்ந்து கொள்ளலாம். மகிழ்ச்சி. ஆனால் தயாரித்தவரின் பெயரையும் இணைத்துக் கொள்ளலாமே... அவருக்கும் மகிழ்ச்சியாக இருக்குமே. நன்றி.
தயாரிப்பு:
(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
13.05.2020