மலேசியத் தமிழர்களின் தேர்வுக் கலாசாரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மலேசியத் தமிழர்களின் தேர்வுக் கலாசாரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

22 நவம்பர் 2019

மலேசியத் தமிழர்களின் தேர்வுக் கலாசாரம்

UPSR தேர்விலும் சரி; SRP தேர்விலும் சரி; SPM தேர்விலும் சரி; STPM தேர்விலும் சரி; A வாங்கிய மாணவர்களை மட்டும் தூக்கி வைத்து ஆலாபனை செய்யும் கலாசாரத்தில் ஒரு மாற்றுப் பார்வை தேவை. ஒரு சில புள்ளிகளில் A கிடைக்காமல் B கிடைத்து இருக்கலாம். C கிடைத்து இருக்கலாம். D அல்லது E கிடைத்து இருக்கலாம்.


ஒரு சில புள்ளிகளில் A கிடைக்காமல் போன மாணவர்களின் மனசு என்ன பாடுபடும். அதை நாம் சற்றே யோசித்துப் பார்க்க வேண்டும். A வாங்கிய மாணவர்களை மட்டும் தூக்கி வைத்து ஆராதனை செய்யும் போது, மற்ற B, C, D, E வாங்கிய மாணவர்களின் மனநிலை எப்படி இருக்கும். அதையும் நாம் உணர்ந்து பார்க்க வேண்டும்.

குறைவான புள்ளிகள் எடுத்த மாணவர்களின் மனநிலை, அவர்களை ஒரு தாழ்வு மனப்பான்மைக்கு இட்டுச் செல்லலாம். எதிர்காலத்தில் கல்வியின் மீது ஒரு வெறுப்பையும் விரக்தியையும் ஏற்படுத்தி விடலாம்.

இருப்பினும் A வாங்கிய மாணவர்களுக்குக் கிடைத்த புகழாரத்தினால் B C D வாங்கிய மாணவர்களுக்கு ஓர் உந்துதல் கிடைக்கலாம் என்று சிலர் சமாதானம் சொல்லலாம்.

உண்மையிலேயே சின்னஞ் சிறிய மனங்கள் ரொம்பவுமே வேதனைப்படும் என்பது பலருக்கும் தெரிவது இல்லை. உணர்வதும் இல்லை. பற்றாக்குறைக்குப் பெற்றோர்களின் வசை பாடல்கள். உற்றார் உறவினரின் கேலிக் கிண்டல்கள்.

ஆகவே A கிடைத்த மாணவர்களை ஆலாபனை செய்வோம். அதே வேளையில் மற்ற மற்ற மாணவர்களையும் தட்டிக் கொடுத்து ஊக்கம் கொடுப்போம்.

A கிடைக்கவில்லை என்றால் பரவாயில்லை. ’அடுத்த முறை கூடுதலாக முயற்சி செய் வெற்றி பெறுவாய்’ என்று ஆறுதல் சொல்ல வேண்டும். அரவணைக்க வேண்டும். அன்பாக ஈர்த்துக் கொள்ள வேண்டும். அதுதான் A கிடைக்காத மாணவர்களுக்கு நாம் வழங்கும் அபூர்வ லேகியம்.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்
21.11.2019



பேஸ்புக் அன்பர்களின் பின்னூட்டங்கள்

Saravana Gugen: சமுதாயத்தில் பேச மறந்த விசயம் ஐயா... எல்லா மாணவர்களும் கல்வியால் உயர்வது இல்லை. சிலர் தனித் திறனில் சிறந்து விளங்குவர். அத்தகைய மாணவர்களுக்குப் பள்ளிக்கூடமும் ஒரு அனுபவசாலையே தவிர, பாடசாலை அல்ல.


Muthukrishnan Ipoh: நீங்கள் சொல்வதும் சரி...


Manickam Nadeson >>> Muthukrishnan Ipoh: வாழ்க்கையில் அதிகமானோரின் உயர்வுக்கு கல்வி தான் அடிப்படையாக இருக்கிறது... உடன் பட்டறிவும் இணைகிறது.


Periasamy Ramasamy: சிறந்த அடைவு நிலை பெற்ற மாணவர்களையும், அதற்காக உழைத்த ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோரை பாராட்டுகிறேன், சிறந்த அடைவு நிலை விகிதாச்சாரத்தில் நமது பள்ளிகள் அதிகப் புள்ளிகள் பெற்றது பற்றியும் மகிழ்ச்சியே.

ஆயினும், இன்றைய யு.பி.எஸ்.ஆர். தேர்வு எழுதிய தமிழ்ப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை மற்ற மொழிப் பள்ளிகளைக் காட்டிலும் மிக மிகக் குறைவு. ஆகவே இந்த விகிதாச்சார புள்ளியைப் பற்றி நாம் அதிகம் அலட்டிக் கொள்ள வேண்டாம் என்பது எனது தாழ்மையான கருத்து..

அடுத்தடுத்த சவால்களாக எதிர்கொள்ள வேண்டிய இடைநிலை, உயர்நிலை பள்ளித தேர்வுகளில் நமது மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து விடுகிறதே என்பதுதான் பெரும் உறுத்தல்.


Saravana Gugen >>> Periasamy Ramasamy: இதில் நம் மாணவர்கள் பெற்றோர்களின் மெத்தன போக்கு ஒருபுறம் இருக்க, இனவாத கல்விமுறையும் மறுக்க முடியாத நிதர்சனம்.


Muthukrishnan Ipoh: உண்மை... தேர்வு எழுதிய நம் மாணவர்களின் எண்ணிக்கை குறைவு... அதனால் விகிதாசாரம் உயர்ந்து இருக்கிறது...


Muthukrishnan Ipoh: பெற்றோர்களின் மெத்தன போக்கு இருக்கவே செய்கிறது....


Periasamy Ramasamy >>> Saravana Gugen: 60 ஆண்டுகளாக இருந்த ஆட்சி முறையில், கல்விக் கொள்கையில், வணிபத் துறையில், அரசு பணி வாய்ப்புகளில் இப்படி எல்லாத் துறைகளிலும் இனவாதம் என்றோ துளிர் விட தொடங்கி விட்டது. தற்போது விஸ்வரூபம் பெற்று வருகிறது.


Saravana Gugen >>> Periasamy Ramasamy: ஆளுங்கட்சியே இந்த இனவாதத்தை நீரூற்றி வளர்க்கிறது. நாமும் வெளிப்படையாகவே இனவாதிகளுக்குச் சவால் விடலாம்.


Periasamy Ramasamy: உண்மைதான் ஐயா. தமிழ் மாணவர்களின் UPSR அடைவுநிலை கண்டு மகிழ்ச்சி. இந்தத் தேர்வில் பின்தங்கிய மாணவர்கள் தொடர்ந்து தங்கள் கல்வியைத் தொடர வேண்டும். இடைநிலை, உயர்நிலை பள்ளித் தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற இன்னும் முனைப்பாக செயல்பட வேண்டும். இன்று UPSR தேர்வு எழுதிய அத்தனை மாணவர்களும் பின் நாளில் உயர்க்கல்வி பயிலும் வாய்ப்பைத் தரும் மதிப்பெண்கள் பெற வேண்டும் என்பதே என் அவா.


Muthukrishnan Ipoh: /// இடைநிலை, உயர்நிலை பள்ளி தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற இன்னும் முனைப்பாக செயல்பட வேண்டும் /// இதைத்தான் நாம் எதிர்பார்க்கிறோம்.


Sathya Raman: தமிழ்ப் பள்ளிகளுக்கு இந்த நாட்டில் உள்ள அனைத்து தமிழர்களும் தங்கள் பிள்ளைகளைச் சோ்ப்பதன் மூலமே நாம் முழுமையாக வெற்றிப் பெற்ற மகிழ்ச்சியை ஏற்க முடியும்.


Muthukrishnan Ipoh: மலேசியத் தமிழர்கள் தங்கள் பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளியில் சேர்ப்பதை ஓர் இனக் கடமையாகக் கருத வேண்டும்.


Sathya Raman >>> Muthukrishnan Ipoh: வணக்கம் சார். அதுதான் பலரின் எதிர்பார்ப்பும்கூட. நம் பக்கம் பலமாக,உறுதியான நிலைகள் இருக்குமானால் நாக்கு மேல் பல்லைப் போட்டு நம் தமிழ் மொழியையும், தமிழ்பள்ளிகளையும் இழித்துப் பேசி இடர்களை ஏற்படுத்தும் எத்தர்களுக்கும் நாம் சரியான பாடம் புகட்ட முடியும். அதற்கு நம் தமிழ் பள்ளிகளை நம்மவர்கள் முழுமையாக ஆதரித்து, அரவணைக்க முன் வரவேண்டும்.


Muthukrishnan Ipoh >>> Sathya Raman: உண்மைதான் சகோதரி.... நல்லவேளை... ஆங்கிலேயர்கள் நாட்டை விட்டுப் போகும் போது ஒரு கல்விச் சட்டத்தை விட்டுச் சென்றார்கள். 152-ஆவது சட்டம். தாய்மொழிப் பள்ளிகளைத் தொல்லை செய்ய வேண்டாம் என்று சொல்லாமல் சொல்லிவிட்டுச் சென்று இருக்கிறார்கள்... அந்தச் சட்டம் தான் நமக்கு ஒரு தற்காப்பு அரணாக இருக்கிறது...


Sathya Raman >>> Muthukrishnan Ipoh: அந்த சட்டத்தையும் எப்படி எல்லாம் தகர்க்கலாம் என்று சட்டத்தில் உள்ள ஓட்டைகளை ஆராய்வார்கள் சார் . இன்றைய சூழலில் எதுவும் சாத்தியமே. எதுவாயினும் அன்று ஆங்கிலேயர்கள் ஏற்படுத்திய கல்விச் சட்டமே இன்று வரை தாய்மொழிப் பள்ளிகளைப் பாதுகாத்து, பத்திரமாக நம் வசம் வைத்திருக்க, வாய்ப்பாக அமைந்ததற்கு அவர்களுக்கு நாம் நன்றிகடன் பட்டிருக்கிறோம் சார். அந்தச் சட்டம் மட்டும் இல்லை என்றால்????


Muthukrishnan Ipoh >>> Sathya Raman: சட்டத்தில் சில சறுக்கலகள் இருக்கின்றன.... ரசாக் திட்டத்தில்... பரிந்துரை எனும் பேரில் ஒரு ’செக் பாயிண்ட்’ இருக்கிறது. பலருக்குத் தெரியும். ஆனால் அமைதியாக இருக்கிறார்கள். தாய்மொழிப் பள்ளிகளைத் தேசிய பள்ளிகளாக மாற்ற கல்வி அமைச்சருக்கு அதிகாரம் உள்ளது. ஆனால் நாடாளுமன்றம்... சட்டத்தைக் கொண்டு வர வேண்டும்... போகிற போக்கைப் பார்த்தால்... செய்தாலும் செய்வார்கள் போல அச்சமாக இருக்கிறது....


Sathya Raman >>> Muthukrishnan Ipoh: வெறுமனே வாய்சவடாலில் தாய்மொழி பள்ளிகளை மூடவும், ஒழிக்கவும் பேசியவர்கள் சட்டத்தின் உதவியை நாடி தோற்றுப் போன ஆத்திரம் ஆக்ரோஷமாக மாறக்கூடும். அவர்களும் ஓயாமல் அடுத்தடுத்து காய்களை நகர்த்தவும் சாத்தியமே அதிகம் சார்.. சீனர் சகோதரர்கள் போல் நம்மிடம் ஒற்றுமையும் குறைவே சார்????


Muthukrishnan Ipoh >>> Sathya Raman: தங்களைப் போன்று இன மொழிப் பற்று உள்ளவர்கள் இருக்கும் வரையில் இந்த நாட்டில் தமிழ் மொழி நிலைத்து வீர வசனம் பேசும்... நன்றிங்க...


M R Tanasegaran Rengasamy:
சிறந்த தேர்ச்சி பெற்ற பிள்ளைகளைப் போற்றும் வேளையில், சற்று மிதமான தேர்வைப் பெற்ற மாணவர்களை அலட்சியப் படுத்திவிடலாகாது. அவர்கள் பால் அதிக அக்கறை காட்டுவது அவசியம். அத்தகைய மாணவர்களும் பிரகாசிப்பார்கள். பின் தங்கியவர்களாக அவர்களைப் புறக்கணித்து விடலாகாது. தூண்டாமணி விளக்கிற்கும் தூண்டுகோள் தேவை.


Muthukrishnan Ipoh: வெற்றி பெற்ற மாணவர்களைச் சிகரத்தில் ஏற்றி வைத்துக் கொண்டாடடுவதும்... பி, சி, டி, தகுதிகள் பெற்ற மாணவர்களைக் கண்டும் காணாமல் போகும் போக்கைத் தவிர்க்க வேண்டும். உங்களுடைய கருத்தில் தூண்டாமணி விளக்கு நல்ல ஓர் எடுத்துக்காட்டு... நன்றிங்க தனா...


Sathya Raman: வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை. புத்தி பெற்ற மனிதரெல்லாம் வெற்றி காணபதில்லை என்ற சந்திரபாபு அப்போதே தத்துவமாக சாத்வீகமாக பாடி இருக்கிறார். நம் தமிழர்களுக்கு இந்த "ஏ" வில் அப்படி என்ன மோகமோ, பாசமோ தெரியவில்லை. இவ்வேளையில் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவத்தை இங்கே நினைவு கூற விரும்பகிறேன்.

ஒரு அரசாங்க மருத்துவ மனைக்கு உடல் நலக் குறைவு காரணமாக சென்று மருத்துவர் அறைக்கு முன்பு அமர்ந்திருந்தேன். அந்தச் சமயம் மருத்துவர் படிப்பை முடித்து முறையாக அரசாங்க மருத்துவமனையில் "ஹவுஸ்மன்"எனப்படும் 2 வருட பயிற்சியை மேற்கொண்டு இருந்த மருத்துவ மாணவர்கள் பலர் இரண்டு இரண்டு பேராக அங்கே பணியில் அமர்ந்திருக்கும் மருத்துவர் அறைக்குள் உள்ளே சென்று விட்ட நிலையில் ஓரே ஓர் இந்திய மருத்துவ மாணவி மட்டும் பயந்து கொண்டே கையை பிசைந்து கொண்டும், தயங்கிக் கொண்டும் மருத்துவர் அறைக்குள் செல்லாமல் வெளியே நின்றிருந்தார்.

அவர் கண்களில் தெரிந்த கலக்கம், கால்களில் தெரிந்த உதறல் ஏற்கனவே ஐந்தாண்டுகள் மருத்துவப் படிப்பை முடித்திருந்தாலும் அந்தப்பெண் ஏதோ ஒரு மன உளைச்சலில் இருப்பதாகவே தோன்றியது. நானும் மருத்துவரை கண்டுவிட்டு வந்த பிறகும் அவர் ஓரே இடத்தில் எந்நேரத்திலும் அழுதுவிடும் நிலையில் இருந்தார்.

நம்முடைய சமுதாயத்தில் மருத்துவப் படிப்பை மட்டுமே உயர்வாகவும் மேன்மையாகவும் நினைத்து தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை பெற்றோர்களே முடிவு செய்வதால் விருப்பமில்லாத துறையில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள முடியாமல் தவிக்கும் பிள்ளைகள் உண்மையிலேயே பரிதாபத்துக்கு உரியவர்கள். அதே போல்தான் இந்த "ஏ"க்கள் மட்டுமே ஒரு மாணவரை மாளிகை வாசலுக்கு வழி காட்டுவதில்லை .இதற்கு நம் முன்னோர்கள் பலர் சாட்சி.


Muthukrishnan Ipoh: அனுபவம் சார்ந்த ஓர் அருமையான பதிவு... நல்ல கருத்துகளுடன் நல்ல ஓர் அனுபவப் பதிவு... நன்றிங்க....


Sathya Raman >>> Muthukrishnan Ipoh: நன்றிங்க சார்


Ramala Pillai: ஆரம்ப நிலைகளில் சிறந்த புள்ளிகள் பெற்ற பிள்ளைகள் பிற்காலங்களில் பின் தங்கி விடுவதும், சிறந்த அடைவு நிலைகளைப் பெறாத பிள்ளைகள் பிற்காலங்களில் சிறந்த மாணவர்களாக வருவதும் பெற்றோரின் முனைப்பில் உள்ளது. ஒரு வகுப்பில் 40 பிள்ளைகளுக்கு தொண்டை தண்ணீர் வற்றும் அளவுக்கு பாடங்களை நடத்தும் ஆசிரியர்களின் பங்களிப்பை விட தான் பெற்ற பிள்ளைகளுக்கு பக்குவமான முறையில் எடுத்துச் சொல்லி ஊக்குவிப்பது பெற்றோரின் கடமை என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.


Muthukrishnan Ipoh: அருமையான சிந்தனை... அழகிய பதிவு.... //// தொண்டை தண்ணீர் வற்றும் அளவுக்கு பாடங்களை நடத்தும் ஆசிரியர்களின் பங்களிப்பை விட தான் பெற்ற பிள்ளைகளுக்கு பக்குவமான முறையில் எடுத்துச்சொல்லி ஊக்குவிப்பது பெற்றோரின் கடமை /// சிறப்பு....


Alex Mark II: அருமையான meaningful பதிவு... good job.


Augustine Chinnappan Muthriar: Arumai arumaiyana paathu paaardah kuudathu


Viwegananthan Krishnasamy: Well said aiyya


Letchumanan Nadason: சரியான நேரத்தில் சரியானப் பதிவு.


Ammini Ayavoo: சரிதான் ஐயா


Mani Roy: எல்லா கண் மணிகளுக்கும் என் மனதார வாழ்த்துக்கள். வாழ்க வளமுடனும் நலமுடனும் .


Doraisamy Lakshamanan: தமிழ்ப்பள்ளி மட்டுமல்ல. மலாய் மற்றும் சீனப் பள்ளியில் படித்தவரே யானாலும் மலேசிய இந்தியராக இருந்தால் அவர்களை அதிக ஊதியம் பெறுபவர்களாக உருவாக்கும் முயற்சியில் ஐயா திரு சி. பசுபதி அவர்களுக்குப் பக்கபலமாக ஒட்டுமொத்த இந்திய சமுதாயமும் திரளுவோம். தோல்வியுற்ற ஒரு மாணவர்கூட வீணாகி விடாமல் தொழில்துறைக்கல்வி கற்பிக்க அடிப்படைக் கல்வியான கணிதம் விஞ்ஞானப் பாடங்களை இப்போதே கற்பிக்க அனைத்துத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர்களும் மித்ராவோடு கலந்து பேசி... வேண்டிய உதவிகளை கல்லூரிக்கும் மாணவர் மாணவியர்களுக்கும் மனிதவளத்துறை அமைச்சர் ஏற்பாடு செய்யக் கேட்டுக் கொள்வோம்!


Doraisamy Lakshamanan: நாம் எத்தனை பேர் இந்த UPSR தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்காகச் சிந்தித்தாலும் மைஸ்கிள் கல்லூரியை நிறுவிய ஐயா திரு சி. பசுபதி அவர்களுக்குத் தான் அதிக ஆர்வமும் அனுபவமும் அக்கறையும் உள்ளவராகையால் நம் அரசும் நம் மக்களும் அவரிடம் இப்பொறுப்பினை ஒப்படைப்போம்!

மலேசியச் சிறைச்சாலைகளில் இந்தியர்களின் எண்ணிக்கை குறைய வேண்டுமானால் தேர்வில் தோல்வி அடைந்த இந்திய மாணவர்-மாணவியர்களை மைஸ்கிள் வழி சரியான வழித்தடத்தில் சேர்த்துவிட மைஸ்கிள் கல்லூரிக்கு உதவுவோம்!


Doraisamy Lakshamanan:
மலேசிய இந்திய சமுதாயமே ஒன்றுதிரண்டு யுபிஎஸ்ஆரில் தோல்வியுற்ற மாணவர்மாணவியர்களை மைஸ்கில் தொழில் கல்லூரியில் கல்வியைத் தொடர இப்போதே அடித்தளமிடுவோம்!


Kannan Kannan: நான் ஆனந்தமாய் இருக்கிறேன்... வாழ்த்துக்கள் சிறந்த ஆசிரியர்கள்... என் வாழ்த்துக்கள்


Vanjithevan Somasanma: 100% ஒப்புக் கொள்கிறேன்!


ஓம் நம சிவாய: உண்மை
 

Teventiran: Teven Unmai


Sangapillai Sangapillai: Unmai sagothara... ellraiim kondadovom


Krishnan ATawar: good job