சோனியா காந்திக்கு என்ன ஆச்சு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சோனியா காந்திக்கு என்ன ஆச்சு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

21 மே 2017

சோனியா காந்திக்கு என்ன ஆச்சு

2017 மே 7-ஆம் தேதி இரவு டெல்லியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சோனியா அனுமதிக்கப் பட்டார். அவருக்கு ‘நச்சுணவு’ (Food Poisoning) என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.


ஒரு வாரத்துக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை. இது முதல்முறை அல்ல... கடந்த 8 மாதத்தில் இது நான்காவது முறை.

சில ஆண்டுகளுக்கு முன்பு சோனியா காந்தி அமெரிக்கா சென்று இருந்தார். அங்கு அவருக்கு அமெரிக்க இந்திய மருத்துவர் தத்தாத் ரேயடு நோரி தலைமையிலான மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

தத்தாத்ரேயடு என்பவர் புற்றுநோய் சிகிச்சைக்கான மருத்துவர். சோனியாவுக்கு என்ன நேர்ந்தது என்ன சிகிச்சை அளிக்கப் பட்டது என்பது எல்லாம் ரகசியமாகவே இருந்தன.

ஆனாலும் சோனியாவுக்குக் கர்ப்பப்பைவாய் புற்றுநோய் இருந்ததாகவும் இதற்குச் சிகிச்சை பெறவே அமெரிக்கா சென்றதாகவும் தகவல்கள் வெளியாகின.

அமெரிக்காவில் சோனியாவுக்கு கர்ப்பப்பை அகற்றும் சிகிச்சையும் Chemo, Radiation சிகிச்சை அளிக்கப் பட்டதாகவும் சொல்லப் பட்டது.

தொடர் மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருகிறார். இதைத் தவிர சோனியா காந்திக்கு ஆஸ்துமா, எலும்பு தொடர்பான பிரச்னைகளும் உள்ளன.

இதனால் அரசியல் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதைத் தவிர்த்து வருகிறார்.

சோனியா காந்தி மீண்டும் அரசியல் களத்துக்கு வருவாரா. இதற்கான பதிலைச் சோனியாவால்கூட இப்போதைக்குச் சொல்ல முடியாது என்பதே உண்மை!

பல்லாயிரம் ஈழத் தமிழர்களின் இறப்பிற்குக் காரணமாக இருந்தவர் இந்தப் பதிவிரதா. பாவம் சும்மா விடுமா.