இந்தோனேசியாவில் இந்தியப் பேரரசுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்தோனேசியாவில் இந்தியப் பேரரசுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

17 மார்ச் 2017

இந்தோனேசியாவில் இந்தியப் பேரரசுகள்

இந்தோனேசியாவை ஆட்சி செய்த இந்தியர்களின் வரலாறு ஒரு நீண்ட வரலாறு. அந்த வரலாற்றில் பற்பல அதிசயமான நிகழ்வுகள். அந்த நிகழ்வுகளுக்குச் சான்றுகளாய் அமையும் இந்தியர் பேரரசுகளின் பட்டியல் வருகிறது. கவனியுங்கள்.

அந்தப் பேரரசுகளை யார் யார் தோற்றுவித்தார்கள்; எந்த ஆண்டில் தோற்றுவித்தார்கள்; எங்கே  தோற்றுவித்தார்கள் எனும் சுருக்கமான விவரங்களும் வழங்கப்பட்டு உள்ளன.

1. ஜலநகரப் பேரரசு - மேற்கு ஜாவா (Salakanagara Kingdom) கி.பி. 130 – 362

2. கூத்தாய் பேரரசு - களிமந்தான் போர்னியோ (Kutai Kingdom) கி.பி. 350 – 1605

3. தர்மநகரப் பேரரசு - ஜகார்த்தா (Tarumanagara Kingdom) கி.பி. 358 - 669

4. கலிங்கப் பேரரசு - மத்திய ஜாவா (Kalingga Kingdom) கி.பி. 500 – 600

5. மெலாயு பேரரசு - ஜாம்பி சுமத்திரா (Melayu Kingdom) கி.பி. 600

6. ஸ்ரீ விஜய பேரரசு - சுமத்திரா (Srivijaya Kingdom) கி.பி. 650 - 1377

7. சைலேந்திரப் பேரரசு - மத்திய ஜாவா (Shailendra Kingdom) கி.பி. 650 - 1025

8. காலோ பேரரசு - மேற்கு ஜாவா (Galuh Kingdom) கி.பி. 669–1482

9. சுந்தா பேரரசு - மத்திய ஜாவா (Sunda Kingdom) கி.பி. 669–1579

10. மத்தாரம் பேரரசு - கிழக்கு ஜாவா (Medang Kingdom) கி.பி. 752–1006

11. பாலி பேரரசு - பாலி (Bali Kingdom) கி.பி. 914–1908

12. கௌரிபான் பேரரசு - கிழக்கு ஜாவா (Kahuripan Kingdom) கி.பி. 1006–1045

13. கெடிரி பேரரசு - கிழக்கு ஜாவா (Kediri Kingdom) கி.பி. 1045–1221

14. தர்மாசிரியா பேரரசு - மேற்கு சுமத்திரா (Dharmasraya) கி.பி. 1183–1347

15. சிங்காசாரி பேரரசு - கிழக்கு ஜாவா (Singhasari Kingdom) கி.பி. 1222–

16. மஜபாகித் பேரரசு - ஜாவா - (Majapahit Kingdom) கி.பி. 1293–1500

அந்தப் பேரரசுகளில் மிகவும் வலிமை வாய்ந்ததாகக் கருதப் படுவது மஜபாகித் (Majapahit) பேரரசு. ஒரு கட்டத்தில் மட்டும் அதாவது கி.பி.1350-ஆம் ஆண்டில் இருந்து 1389-ஆம் ஆண்டு வரையில்... மஜபாகித் பேரரசின் கீழ் 9 பேரரசுகள் 8 சிற்றரசுகள் இயங்கி வந்து உள்ளன.

நன்றாகக் கவனியுங்கள். மஜபாகித் பேரரசின் கீழ் ஒன்பது பேரரசுகள் இருந்து இருக்கின்றன.

சுமத்திரா, நியூகினி, சிங்கப்பூர், மலாயா, புருணை, தென் தாய்லாந்து, சூலு தீவுக் கூட்டங்கள், பிலிப்பைன்ஸ், கிழக்கு தீமோர் நாடுகள் என ஒட்டு மொத்த தென்கிழக்காசியாவே மஜபாகித் பேரரசின் கீழ் தாழ் பணிந்து தலை வணங்கி நின்றன. மஜபாகித் பேரரசிற்கு அடுத்து வருவது ஸ்ரீ விஜய பேரரசு (Sri Vijaya).

(3.Majapahit Overseas Empire)

மேலே சொன்ன அந்தப் பேரரசுகளைத் தவிர மேலும் பற்பல சிற்றரசுகளும் இந்தோனேசியாவை ஆட்சி செய்து உள்ளன. 

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
17.03.2017