மலேசியாவில் 5G தொழில்நுட்பம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மலேசியாவில் 5G தொழில்நுட்பம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

14 ஜூலை 2019

மலேசியாவில் 5G தொழில்நுட்பம்

மலேசியா 5G தொழில்நுட்பத்திற்கு வந்துவிட்டாலும் இன்னும் முறையாக அமலுக்கு வரவில்லை. இன்னும் சில காலம் பிடிக்கலாம். 2017-ஆம் ஆண்டில் தொடக்கச் சோதனைகள் எல்லாம் முடிந்து விட்டன.


மலேசியாவில் பெரும்பாலும் இப்போது 4G தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறோம்.

நீங்கள் பயன்படுத்தும் Android திறன்பேசிகள் 5G தொழில்நுட்பத்தை ஏற்றுக் கொள்ளும் ஆற்றல் கொண்டவை. பெரும்பாலானவை.

ஏன் என்றால் வாட்ஸப், பேஸ்புக், யூடியூப் போன்ற சமூக ஊடகங்களை உங்கள் திறன்பேசி ஏற்றுக் கொண்டால் 5G தொழில்நுட்பத்தையும் உங்கள் திறன்பேசி ஏற்றுக் கொள்ளும் ஆற்றல் கொண்டது. கவலை வேண்டாம்.

சமயங்களில் சில வகை திறன்பேசிகள் 5G தொழில்நுட்பத்தை ஏற்றுக் கொள்ளா. ரொம்பவும் பழைய மாடலாக இருந்தால் அந்தப் பிரச்சினை வரலாம். தூக்கிப் போட்டுவிட்டுப் புதுசா ஒன்றை வாங்கிக் கொள்ளுங்கள். பழைய மாட்டுக் காடியை ஏன் கஷ்டப்பட்டுத் தள்ளிக் கொண்டு போக வேண்டும்?


நாம் நாட்டில் அலைபேசி சேவை வழங்கும் நிறுவனங்கள் Maxis, Celcom, DiGi, U Mobile, Tune Talk, Red Tone Mobile போன்றவை. இவை தான் 5G தொழில்நுட்பத்தை நடைமுறைக்கு கொண்டு வருகின்றன.

5G தொழில்நுட்பம் வந்ததும் உங்களுடைய திறன்பேசி ‘ஆட்டோமெட்டிக்’காக அந்த G-யை ஏற்றுக் கொள்ளும்.

அப்புறம் என்ன. நாலைந்து விநாடிகளில் ஒரு திரைப்படத்தை உங்கள் திறன்பேசிக்குள் பதிவிறக்கம் செய்து விடலாம். பார்க்கத் தான் உங்களுக்கு நேரம் இருக்காது.

இன்னும் ஒரு விசயம். Mobile Data பயன்படுத்துபவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். Wifi பயன்படுத்தினால் கவலையே இல்லை. அதற்காக வேலைகளைத் தூக்கிக் கடாசிவிட்டு பார்க்கச் சொல்லவில்லை. புதிய தொழில்நுட்பம் வந்து கொண்டு இருக்கிறது. அதற்காகச் சொல்ல வருகிறேன்.


ஐந்தாம் தலைமுறைக்கான அலைபேசியை அடிப்படையாகக் கொண்ட இணையத் தளத் தொழில்நுட்பமே 5G என்று அழைக்கப் படுகிறது.

இதற்கு முன்பு 4G எனும் நான்காம் தலைமுறை தொழில்நுட்பம் இருந்தது. அதை விட 5G பல நூறு மடங்கு வேகமாகப் பதிவிறக்கம்; பதிவேற்றம் செய்யும் ஆற்றலைக் கொண்டது. G என்றால் ஜெனரேசன் (GENERATION).

5G திறன்பேசியின் ஆற்றலை ஒரே வார்த்தையில் சொல்கிறேன். யூடியூப்பில் திரைப் படங்கள் மில்லியன் கணக்கில் உள்ளன. இந்தத் திரைப்படங்களை உங்களுடைய திறன்பேசியின் மூலமாகப் பதிவிறக்கம் செய்ய முடியும்.

அந்த வகையில் ஒரு திரைப் படத்தை 4 விநாடிகளில் பதிவிறக்கம் செய்து விடலாம். அவ்வளவு வேகம்.


அதாவது 50 காணொலிகளை ஒரே விநாடியில் பதிவிறக்கம் செய்யும் வேகம். நினைத்துப் பார்க்க முடியவில்லை. 5G மலேசியாவிற்கு வந்து விட்டது. விரைவில் பரவலாகப் பயன்படுத்தப் படலாம்.

உலகில் புகழ்பெற்ற திறன்பேசி தயாரிப்பு நிறுவனமான சாம்சங் கடந்த 2019 மார்ச் மாதம் தன் 5G திறன்பேசியான சாம்சங் கேலக்சி எஸ்10ஐ வெளியிட்டது.

அதேபோன்று, ஹுவாவேய், ஓப்போ போன்ற முன்னணி நிறுவனங்கள் ஏற்கனவே தங்களின் 5G திறன்பேசிகளை வெளியிட்டுவிட்டன.


 ......................
பேஸ்புக் அன்பர்களின் பின்னூட்டங்கள்

  • Pragash Moorthy இலங்கையில் 5G அலைவரிசை கோபுரங்கள் ஆங்காங்கே நிறுவப்பட்டுக்கொண்டிருக்கின்றது. ஆனால் அதற்கு மக்கள் எதிர்ப்பு நிலவுகின்றது. 5G அலைவரிசை கோபுரங்களில் இருந்து வெளிப்படும் கதிர்களால் கருவில் இருக்கும் ஐந்து மாத சிசுவுக்கு கூட பாதிப்புகள் ஏற்படும் என்று செய்திகள் பரவுவதனால் மக்கள் எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். அத்தகைய செய்தி உண்மையா பொய்யா என்று தெரியவில்லை.
     
    • Muthukrishnan Ipoh >>> Pragash Moorthy >>> உண்மை ஐயா. 5G அலைவரிசை கோபுரங்கள் வெளியிடும் மின்காந்த அலைவரிசைகள்; அதாவது மின்காந்த அலைக் கற்றைகள் மனித உயிர்களுக்கு மட்டும் அல்ல; விலங்குகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

      அனைத்துலக அளவில் 52 நாடுகளின் மருத்துவர்கள்; அறிவியலாளர்கள் எச்சரிக்கை செய்து உள்ளனர்.

      5G அலைவரிசை புற்றுநோய் தாக்கத்தை ஏற்படுத்தலாம். குழந்தைகள், கர்ப்பவதிகள், சிறுவர்கள் அதிகமாகப் பாதிக்கப் படலாம்.

      இப்போது நாம் பயன்படுத்தும் திறன்பேசி அலைக் கற்றைகள் புற்றுநோயை உருவாக்கும் என்று 2011 ஆம் ஆண்டே உலக சுகாதார நிறுவனம் எச்சரித்து விட்டது.

      வளர்ச்சி அடைந்த நாடுகளில் கூட 5G தொழில்நுட்பச் சேவைக்கு அனுமதி வழங்க தயங்குகிறார்கள். குறிப்பாக அமெரிக்காவில்...

      இலங்கையில் அப்படி என்றால் மலேசியாவில் ஒரு பெரிய கேள்விக்குறி.

    •  Muthukrishnan Ipoh 5ஜி என்பது பில்லியன் கணக்கில் பணம் புரளும் விசயம்...

      பல நாடுகள் அனுமதி கொடுக்க மறுக்கின்றன.

      ஏற்கனவே இப்போது நாம் பயம்படுத்தும் 4ஜி கைப்பேசிகள்... காது... மூளையில் புற்று நோயை உருவாக்குகின்றன... உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை செய்து வருகிறது.

      கைப்பேசியை அதிக நேரம் பயன்படுத்தாதீர்கள் என்று சொன்னால் யார் கேட்கிறார்கள்...
  • Neela Vanam ஐயா கைப்பேசியினால் உலகத்திலைள்ள தேவையான செய்திகளை படிக்க முடிகிறது தேடுதல் கூடுகிறது காரணம் அறிவுப்பசிதான் பாதிப்பை யாரும் கண்டுக் கொள்வதில்லை. விஞ்ஞானிகள் பாதிப்பில்லாத அலைக்கற்றை கண்டு பிடித்தால் நல்லது.