மலேசிய உச்ச நீதிமன்ற நீதிபதி நளினி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மலேசிய உச்ச நீதிமன்ற நீதிபதி நளினி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

07 நவம்பர் 2019

மலேசிய உச்ச நீதிமன்ற நீதிபதி நளினி

மலேசியாவில் உச்ச நீதிமன்றம் கூட்டரசு நீதிமன்றம் (Federal Court). நாட்டின் மிக உயர்ந்த நீதிமன்றம். அந்த நீதிமன்றத்தில் அமர்ந்த முதல் மலேசிய இந்திய பெண் டத்தோ நளினி ஆவார். (Justice Datuk P. Nallini is the first Malaysian Indian woman to sit on the nation's highest Federal Court).


2018 நவம்பர் 26-ஆம் தேதி மலேசிய நீதி மாளிகையில் நீதிபதிகளின் பதவியேற்பு விழா நடைபெற்றது. அதில் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் (Court of Appeal) இருந்து பெடரல் நீதிமன்றத்திற்கு உயர்த்தப்பட்ட நான்கு புதிய நீதிபதிகளில் டத்தோ நளினி அவர்களும் ஒருவர் ஆவார்.

1959 ஆகஸ்ட் 23-ஆம் தேதி பினாங்கில் பிறந்த நீதிபதி நளினி (Nallini Patmanathan) லண்டன் பல்கலைக்கழகத்தில் அறிவியலில் இளங்கலை பட்டம். பின்னர் வெஸ்ட்மின்ஸ்டர் பல்கலைக்கழகத்தில் சட்ட டிப்ளோமா பெற்றார்.


1984-ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் வழக்குரைஞர் பட்டியலில் இணைக்கப் பட்டார். அப்போது இருந்து அவரின் சட்ட வாழ்க்கை தொடங்கியது. இவருக்கு வயது 60.

இவர் 2014 செப்டம்பர் 12-ஆம் தேதி மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதி ஆனார். மலேசியாவின் உச்ச கூட்டரசு நீதிமன்றத்தில் 12 நீதிபதிகள் உள்ளனர்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
06.11.2019

சான்று: http://www.jac.gov.my/spk/ms/ - Official Website of the Judicial Appointment Commission of Malaysia.