பினாங்கு சாலைகளில் பினாங்கு தமிழர்கள் 1896 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பினாங்கு சாலைகளில் பினாங்கு தமிழர்கள் 1896 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

21 மே 2020

பினாங்கு சாலைகளில் பினாங்கு தமிழர்கள் 1896

மலாயா காடுகளை மாற்றி அமைத்த அதே தென்னிந்தியர்கள் தான் மலாயா செம்மண் சாலைகளையும் தார் சாலைகளாக மாற்றி அமைத்தார்கள். 1880-ஆம் ஆண்டுகள் தொடக்கம் மலாயாவில் தார் சாலைகள் போடப்பட்டன.

அப்படிப் போடப்பட்ட சாலைகளில் ஒவ்வொரு மைல் தூரத்திற்கும் குறைந்த பட்சம் பத்து தமிழர்களாவது இறந்து போய் இருக்கலாம்.
ஆங்கிலேயர்கள் திரும்பிப் போகும் போது உண்மையான புள்ளி விவரங்களை மறந்து விட்டார்கள் என்று சொல்ல இயலாது. மூடி மறைத்து விட்டார்கள் என்று சொன்னால் தான் சரியாக அமையும். அதுதான் சரி என்று என் எட்டாம் அறிவும் சொல்கிறது.

1800-ஆம் ஆண்டுகளில் கரிபியன் தீவுகளுக்கும் தென் ஆப்பிரிக்கா நாடுகளுக்கும் ஒப்பந்த முறையில் இந்தியர்கள் கொண்டு செல்லப் பட்டார்கள். அப்படிக் கொண்டு செல்லப் பட்டவர்களின் பதிவுப் பத்திரங்கள், அவர்களுக்குத் தெரியாமல் முற்றாக அழிக்கப்பட்டு விட்டன.


போனவர்கள் திரும்பி வரக்கூடாது என்பதற்காக, வேண்டும் என்றே அழிக்கப் பட்டன. இதில் பாதிக்கப் பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தமிழர்கள்.

அதனால் இப்போது அங்கு அந்த நாடுகளில் வாழும் வாரிசுகள் அவர்களின் இந்தியப் பின் புலம் புரியாமல்; அவர்களின் இந்திய வம்சாவழி அடையாளம் தெரியாமல் தத்தளித்துத் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

அதே போலத் தான் 1860-ஆம் ஆண்டுகள் தொடக்கம் மலாயாவுக்குக் கொண்டு வரப்பட்ட இந்தியர்களின் பெருவாரியான புள்ளிவிவரங்கள் காணாமல் போய்விட்டன. கிடைத்த புள்ளிவிவரங்கள் பலவற்றையும் ரகசியமாக அழித்து விட்டார்கள்.

(Source: Table 3.2. Indian Labour Immigration to Malaysia (1844 - 1941); Sandhu, K.S (2010), Indians in Malaya: Some Aspects of Their Immigration and Settlement (1786 - 1957). Mexico City: Cambridge University Press.)

ஆக அதற்கு பக்கவாத்தியம் வாசிப்பது போல அக்கரை நாடுகளில் இருந்து இக்கரைக்கு நேற்று கப்பலேறி வந்து... இன்று சொகுசாய் வாழ்ந்து கொண்டு இருக்கும் சில அரசியல் மேதாவிகள்... 1930-ஆம் ஆண்டில் தான் இந்தியர்கள் மலாயாவுக்கு வந்தார்கள் என்று தெனாலி ராமனுக்குக் கதைகள் சொல்கிறார்கள். அதற்கும் சில ஜால்ராக்கள் நன்றாகவே ஜிங்கு ஜிக்கான் டான்ஸ் ஆடுகிறார்கள். என்ன செய்வது. தமிழர்கள் வாங்கி வந்த வரம்.

இந்தப் படம் 1883-ஆம் ஆண்டு பினாங்கில் எடுக்கப்பட்டது. இதன் பின்னர் 1884-ஆம் ஆண்டில் தான் பினாங்கில் கார்கள் ஓடி இருக்கின்றன. இந்தப் படத்தின் விவரங்கள் 1889-ஆம் ஆண்டில் தான் வெளியுலகத்திற்குத் தெரிய வந்தது. வேட்டியைக் கோவணமாக மடித்துக் கட்டிக் கொண்டு தமிழர்கள் தார் சாலை போடும் போது எடுத்த படம்.

1930-ஆம் ஆண்டில் தான் இந்தியர்கள் மலாயாவுக்கு வந்தார்கள் என்று வாய்கூசாமல் பேச மாட்டார்கள் என்று இனிமேலாவது எதிர்பார்ப்போம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
21.05.2020