நீல உத்தமன் - 3 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நீல உத்தமன் - 3 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

06 அக்டோபர் 2019

நீல உத்தமன் - 3

நீல உத்தமன் சிங்கப்பூரின் ஆட்சியாளராகப் பதவி ஏற்றதும் அவருடைய பெயரை ஸ்ரீ திரி புவனா என்று மாற்றம் செய்து கொண்டார். புவனம் என்றால் உலகம். ஸ்ரீ திரி புவனா என்றால் மூன்று உலகங்களின் அதிபதி.

முன்பு காலத்தில் இந்துக்கள், அண்டப் பிரபஞ்சத்தை மூன்று உலகங்களாகப் பிரித்து இருந்தார்கள். தெய்வங்களின் உலகம்; மனிதர்களின் உலகம்; கெட்ட ஆவிகளின் உலகம் என மூன்று உலகங்கள். அந்த வகையில் நீல உத்தமனுக்கு ஒரு சிறப்பான பெயர்.




நீல உத்தமனைப் பற்றிய வரலாற்றில் மேற்கத்திய வரலாற்று ஆசிரியர்கள் எவ்வித மாறுபாட்டுக் கருத்துகளைக் கொண்டு இருக்கவில்லை. நீல உத்தமன் இந்தோனேசியாவில் இருந்து வந்த ஓர் இந்தியர். பல்லவ இனத்தைச் சேர்ந்தவர் எனும் கருத்தில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள்.

ஆனால் மலாய் வரலாற்றுக் காலக் குறிப்புகள் (Malay Annals), நீல உத்தமனை வேறு விதமாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன். அதைப் பற்றி கல்வியாளர்கள் இன்றும் விமர்சித்து வருகிறார்கள்.

லோ டி ஜோங் (Loe de Jong) என்பவர் டச்சு வரலாற்று ஆசிரியர். இந்தோனேசியாவில் நீண்ட காலம் வாழ்ந்தவர். அவர் சொல்கிறார். மலாய் வரலாற்றுக் காலக் குறிப்புகளில் நீல உத்தமனைப் பற்றிய வரலாற்று புள்ளிவிவரங்களும்; நிகழ்வுகளும் ஒன்றுடன் ஒன்று யதார்த்தமாகக் கலக்கப்பட்டு உள்ளன என்று சொல்கிறார். 




(The Character of Malay Annals, the stories of the Malay Annals could have been realistically mixed with the historical figures and events.)

இருப்பினும் 1299-ஆம் ஆண்டு சிங்கப்பூரை நீல உத்தமன் என்பவர் தான் தோற்றுவித்தார் என்பதில் மாற்றுக் கருத்துகள் வைக்கப்படவில்லை. அதை மலாய் வரலாற்றுக் காலக் குறிப்புகள் ஏற்றுக் கொள்கின்றன.

சிங்கப்பூரை நீல உத்தமன் ஆட்சி செய்யத் தொடங்கிய பின்னர் 1320-ஆம் ஆண்டு சீனாவில் இருந்து ஒரு சீனத் தூதர் சிங்கப்பூருக்கு வந்தார். அவருடைய பெயர் வாங் டாயூவான் (Wang Dayuan).

அவர் சீன அரசரின் பிரதிநிதியாகும். அவர் நீல உத்தமனைச் சிங்கப்பூரின் அதிகாரப் பூர்வமான ஆட்சியாளராக ஏற்றுக் கொண்டார். அது சயாம் நாட்டிற்கு எதிரான ஒரு செயலாகும். வெந்த புண்ணில் வெங்காயத்தைத் தடவுவது போன்றது.

(The Travels of Marco Polo - Harmondsworth, Middlesex; New York: Penguin Books, Penguin Classics, 1958). 




நீல உத்தமனைச் சிங்கப்பூரின் அதிகாரப் பூர்வமான ஆட்சியாளராக ஏற்றுக் கொண்டது மட்டும் அல்ல; அவருக்கு ஸ்ரீ மகாராஜா சாங் உத்தாமா பரமேஸ்வரா பத்தாரா ஸ்ரீ திரி புவனா (Sri Maharaja Sang Utama Parameswara Batara Sri Tri Buana) எனும் சிறப்புப் பெயரையும் அந்தச் சீனத் தூதர் வழங்கிச் சென்றார்.

(Singapore: Ministry of Culture. p. 9. ISSN 0217-7773)

நீல உத்தமனின் சிங்கப்பூர் புதிய நிர்வாகத்திற்குச் சீனாவின் பக்கபலம் இருந்தது. அதே சமயத்தில் பாதுகாப்பும் இருந்தது. இதைப் பார்த்த சயாம் தயக்கம் அடைந்தது மட்டும் அல்ல.  சிங்கப்பூரின் மீது தாக்குதல் நடத்தவும் சயாம் பின் வாங்கியது.

சிங்கப்பூரை நீல உத்தமன் ஆட்சி செய்த காலத்தில் சுமத்திராவில் இருந்த மஜபாகித் அரசு திடீரென்று சிங்கப்பூரின் மீது தாக்குதல் நடத்தியது.

புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட நீல உத்தமனின் சிங்கப்பூர் அரசு ஏற்கனவே மஜாபாகித்தின் மீது சில தாக்குதல்களையும் நடத்தி இருக்கிறது. அதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். 




அந்தத் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தான் மஜாபாகித்தின் திடீர் தாக்குதல்கள் அமைந்தன.

எல்லாமே சண்டைகள் சச்சரவுகள். அவன் அடித்தால் இவன் திருப்பி அடிப்பது. இவன் அடித்தால் அவன் திருப்பி அடிப்பது. அப்புறம் கத்திக் குத்து, சமுராய் சண்டை. அந்த அழகுச் சண்டைகள் இன்னும் தொடர்கின்றன.

இப்போது நம் மலேசிய நாட்டில் நடக்கும் குண்டர் கும்பல் சண்டைகளைத் தான் சொல்கிறேன்.

நீல உத்தமன் 1347-ஆம் ஆண்டு காலமானார். அவருடைய உடல் சிங்கப்பூரின் புக்கிட் லாராங் (Fort Canning Hill) எனும் புக்கிட் லாராஙான் (Bukit Larangan) குன்றின் அடிவாரத்தில் புதைக்கப் பட்டது. 




அவருடைய மனைவியும் அங்கே தான் அமைதி கொள்கிறார். வரலாற்று ஆவணங்கள் சொல்கின்றன. இருந்தாலும் அவர்களுடைய சமாதிகளை இன்று வரை எவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. வேதனையான செய்தி.

(Tsang, Susan; Perera, Audrey - 2011)

நீல உத்தமனுக்குப் பிறகு அவருடைய மகன் ஸ்ரீ விக்கிரம வீர ராஜா (Sri Wikrama Wira) என்பவர் சிங்கப்பூரின் ராஜாவாகப் பதவி ஏற்றார். இவர் 1372-ஆம் ஆண்டில் இருந்து 1386-ஆம் ஆண்டு வரை சிங்கப்பூரை ஆட்சி செய்தார். 

ஸ்ரீ விக்ரம வீராவின் தாயார் பெயர் ஸ்ரீ பினி (Sri Bini). அதாவது நீல உத்தமனின் மனைவியின் பெயர் ஸ்ரீ பினி. இந்தப் பினி எனும் சொல்லில் இருந்து தான் பினி (மனைவி) எனும் மலாய்ச் சொல்லும் உருவாகி இருக்கலாம்.

ஸ்ரீ விக்ரம வீரா 1362-ஆம் ஆண்டு வரை சிங்கப்பூரை ஆட்சி செய்தார். ஸ்ரீ விக்ரம வீராவின் மனைவியின் பெயர் நீலா பாஞ்சாலை. இவருடைய காலத்தில் தான் சயாமிய அரசின் ஒரு பெரிய தாக்குதலும் நடந்தது. 




வடக்கே சயாம் நாட்டில் இருந்து 70 கப்பல்களில் சயாமியர்கள் வந்தனர். பயங்கரமான தாக்குதல் நடத்தினர். இருந்தாலும் சிங்கப்பூரை அசைக்க முடியவில்லை. மூன்று மாதம் வரை தாக்குப் பிடித்தது.

அதற்குள் சீனாவில் இருந்து சீனக் கடற்படை களம் இறங்கி விட்டது. கடைசியில் சயாமியர்களின் முற்றுகை தோல்வியில் முடிந்தது.

இந்தக் காலக் கட்டத்தில் மஜாபாகித் அரசு ஜாவாவில் மிகவும் பலம் வாய்ந்த அரசாக விளங்கியது. சிங்கப்பூரின் துரிதமான வளர்ச்சியைக் கண்டு அதன் மீது மஜாபாகித் அரசிற்குப் பேராசை ஏற்பட்டது.

குறுகிய காலத்தில் ஒரு குட்டி அரசு இப்படி அபரிதமான செல்வாக்கைப் பெற்று விட்டதே எனும் ஆதங்கம் வேறு.

மஜாபாகித் அரசின் இராணுவத் தளபதியாக காஜா மாடா (Gajah Mada) என்பவர் இருந்தார். இவரின் உண்மையான பெயர் கஜ மதன். இந்த கஜ மதன் எனும் பெயர் தான் பின்னாட்களில் காஜா மாடா என்று மாறியது. 




நுசாந்தாரா (Nusantara) என்று அழைக்கப்பட்ட இந்தோனேசியத் தீவுக் கூட்டங்களில் இருந்த எல்லா அரசுகளையும் கைப்பற்றி அவற்றை மஜாபாகித் அரசின் கீழ் கொண்டு வருவதே காஜா மாடாவின் இலட்சியமாக இருந்தது. இவர் பேராவல் கொண்ட ஓர் இராணுவ தலைவர்.

சுமத்திராவில் இருந்த ஸ்ரீ விஜய பேரரசையும் கைப்பற்ற திட்டம் வகுத்தார். அப்போது ஸ்ரீ விஜய பேரரசின் ஆளுமை மங்கி வந்த காலம். அந்த அரசையும் மஜாபாகித் அரசின் கீழ் கொண்டு வருவதற்குப் பயங்கரமான திட்டம் வகுத்தார்.

1350-ஆம் ஆண்டில் மஜாபாகித் அரசின் பேரரசராக ஹாயாம் ஊருக் (Hayam Wuruk) என்பவர் பதவி ஏற்றார். இவரின் அசல் பெயர் ராஜ ஜனகரன் (Rajasanagara). இவர் இராஜசா (Rajasa Dynasty) பரம்பரையைச் சேர்ந்தவர்.

இவர் சிங்கப்பூர் அரசிற்கு ஒரு தூதுச் செய்தியை அனுப்பினார். அதாவது சிங்கப்பூர் அரசு மஜாபாகித் அரசிற்கு அடிபணிந்து அதன் கீழ் ஆட்சி செய்ய வேண்டும் எனும் தூதுச் செய்தி.

அந்தச் செய்திக்கு ஸ்ரீ விக்கிரம வீர ராஜா அடிபணியாமல் மறுத்து விட்டார். அதோடு விட்டு இருந்தால் பரவாயில்லை. அப்படியே ராஜ ஜனகரன் சிங்கப்பூருக்கு வந்தால் அவருடைய தலையைக் கொய்யப்படும் என்றும் செய்தி அனுப்பினார். 




ராஜ ஜனகரன் சினம் அடைந்தார். உடனே சிங்கப்பூரைத் தாக்கத் திட்டம் வகுத்தார். 180 போர்க் கப்பல்களையும் எண்ணற்ற உதவிக் கப்பல்களையும் அனுப்பினார்.

பிந்தான் தீவு வழியாக ராஜ ஜனகரனின் கப்பல் அணிவகுத்து வரும் செய்தி சிங்கப்பூருக்கு எட்டியது. உடனே சிங்கப்பூரைத் தற்காக்க 400 போர்க் கப்பல்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன. சிங்கப்பூர் கடற்கரைப் பகுதியில் போர் மூண்டது. அந்தப் போர் மூன்று நாட்கள் நீடித்தன. 

கடற்போரில் ராஜ ஜனகரனின் கப்பல் படை அவ்வளவாக அனுபவம் இல்லாதது. அதனால் இலகுவாகத் தோற்கடிக்கப் பட்டது. இந்தப் போரில் ராஜ ஜனகரன் தோல்வி அடைந்தார்.

 (2. A. Samad, Ahmad (1979), Sulalatus Salatin - Sejarah Melayu)

அதன் பின்னர் ஸ்ரீ விக்ரம வீரா 1362-ஆம் ஆண்டு வரை சிங்கப்பூரின் ராஜாவாக இருந்தார்.

ஸ்ரீ விக்ரம வீராவிற்குப் பின்னர் ஸ்ரீ ராணா விக்கிரமா (Sri Rana Wikrama) என்பவர் ஆட்சிக்கு வந்தார். இவர் சிங்கப்பூரின் மூன்றாவது ராஜா. 1375-ஆம் ஆண்டு வரை 13 ஆண்டுகள் சிங்கப்பூரை ஆட்சி செய்தார்.

(3. Dr. John Leyden - 1821)

இந்தச் சமயத்தில் சிங்கப்பூரின் ஆட்சியில் சில திருப்பங்களும் குழப்பங்களும் ஏற்பட்டன. குடும்பச் சச்சரவுகள் தான் மூல காரணம். அதனால் நீல உத்தமனின் பேரனாகிய ஸ்ரீ ராணா வீரா கர்மா (Sri Rana Wira Karma) என்பவர் சிங்கப்பூரின் ஆட்சிப் பொறுப்பை ஏற்க வேண்டிய ஒரு கட்டாய நிலை ஏற்பட்டது.




ஸ்ரீ ராணா வீரா கர்மா சிங்கப்பூரை 13 ஆண்டுகள் ஆட்சி செய்தார். அதன் பின்னர் சிங்கப்பூரின் அரசராக ஸ்ரீ மகாராஜா பரமேஸ்வரா (Sri Maharaja Parameswara) என்பவர் பதவிக்கு வந்தார்.

இவர் நீல உத்தமனின் கொள்ளுப் பேரன் ஆகும். இந்த ஸ்ரீ மகாராஜா பரமேஸ்வரா என்பவர் தான் மலாக்காவைத் தோற்றுவித்த பரமேஸ்வரா.

ஸ்ரீ விக்ரம வீராவிற்குப் பின்னர் ஸ்ரீ ராணா விக்கிரமா (Sri Rana Wikrama) என்பவர் ஆட்சிக்கு வந்தார். இவர் சிங்கப்பூரின் மூன்றாவது ராஜா. 1375-ஆம் ஆண்டு வரை 13 ஆண்டுகள் சிங்கப்பூரை ஆட்சி செய்தார்.

(3. Dr. John Leyden - 1821)

இந்தச் சமயத்தில் சிங்கப்பூரின் ஆட்சியில் சில திருப்பங்களும் குழப்பங்களும் ஏற்பட்டன. குடும்பச் சச்சரவுகள் தான் மூல காரணம். அதனால் நீல உத்தமனின் பேரனாகிய ஸ்ரீ ராணா வீரா கர்மா (Sri Rana Wira Karma) என்பவர் சிங்கப்பூரின் ஆட்சிப் பொறுப்பை ஏற்க வேண்டிய ஒரு கட்டாய நிலை ஏற்பட்டது.




ஸ்ரீ ராணா வீரா கர்மா சிங்கப்பூரை 13 ஆண்டுகள் ஆட்சி செய்தார். அதன் பின்னர் சிங்கப்பூரின் அரசராக ஸ்ரீ மகாராஜா பரமேஸ்வரா (Sri Maharaja Parameswara) என்பவர் பதவிக்கு வந்தார்.

இவர் நீல உத்தமனின் கொள்ளுப் பேரன் ஆகும். இந்த ஸ்ரீ மகாராஜா பரமேஸ்வரா என்பவர் தான் மலாக்காவைத் தோற்றுவித்த பரமேஸ்வரா.

ஸ்ரீ ராணா வீரா கர்மாவிற்குப் பின்னர் வந்தவர் தான் ஸ்ரீ மகாராஜா பரமேஸ்வரா (Sri Maharaja, Raja of Singapura). அதாவது மலாக்காவின் கதாநாயகன் பரமேஸ்வரா. (F2) 

இவர் நீல உத்தமனின் கொள்ளுப் பேரன். 1389-ஆம் ஆண்டில் இருந்து 1398-ஆம் ஆண்டு வரை சிங்கப்பூரின் ராஜாவாக இருந்தார். 1375-ஆம் ஆண்டில் இருந்து 1389 வரை என்ன நடந்தது எனும் விவரங்கள் நமக்கு சரியாகக் கிடைக்கவில்லை. இதைப் பற்றியும் ஆய்வுகள் செய்து கொண்டு வருகிறார்கள்.

*செஜாரா மலாயு* எனும் மலாய் வரலாற்றுக் காலக் குறிப்புகள் சிங்கப்பூரை உருவாக்கிய நீல உத்தமனைப் பற்றி வேறு கோணத்தில் சித்தரிக்கின்றது. அதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று வரலாற்று அறிஞர்கள் கருத்து கூறுகின்றனர். 




ஸ்ரீ மகாராஜா பரமேஸ்வரா என்பவர் நீல உத்தமனின் கொள்ளுப் பேரன் ஆகும். சொல்லி இருக்கிறேன். இவர் மஜாபாகித்தின் தொடர் தாக்குதலில் இருந்து தப்பிக்க நினைத்தார்.

அதனால் சிங்கப்பூரில் இருந்து வெளியேறினார். உள்ளூர் வரலாற்று நூல்களில் சயாம் நாடுதான் சிங்கப்பூரைத் தாக்கியதாகச் சொல்லப் படுகிறது. உண்மை அதுவல்ல.

உண்மையில் மஜாபாகித் அரசின் பெயரை மறைத்து விட்டார்கள். தெரியாமல் செய்தார்களா... தெரிந்தே செய்தார்களா. தெரியவில்லை. அது ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம்.

அது மட்டும் இல்லை. முன்பு துமாசிக்கை ஆட்சி செய்த தெமாகியைப் பரமேஸ்வரா கொலை செய்துவிட்டு ஆட்சியைக் கைப்பற்றியதாகச் சிலர் சொல்வார்கள். சில வரலாற்று நூல்களும் அப்படித் தான் சொல்கின்றன. அது ரொம்பவும் தப்பு. 




தெமாகியைக் கொன்றது நீல உத்தமன். பரமேஸ்வரா அல்ல. இந்த உண்மையை இப்போதாவது தெரிந்து கொள்ளுங்கள். பாவம் ஒரு பக்கம். பழி ஒரு பக்கம்.

சிங்கப்பூரின் முதல் ராஜா நீல உத்தமன். இவர் 1299-ஆம் ஆண்டில் இருந்து 1347-ஆம் ஆண்டு வரை சிங்கப்பூரை ஆட்சி செய்தார்.

இரண்டாவதாக வந்தவர் ஸ்ரீ விக்கிரம வீரா. இவர் 1347-ஆம் ஆண்டில் இருந்து 1362-ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தார்.

மூன்றாவதாக வந்தவர் ஸ்ரீ ராணா விக்கிரமா. இவர் 1362-ஆம் ஆண்டில் இருந்து 1375-ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தார்.

நான்காவதாக வந்தவர் ஸ்ரீ மகாராஜா. இவர் 1375-ஆம் ஆண்டில் இருந்து 1389-ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தார்.

ஐந்தாவதாக வந்தவர் பரமேஸ்வரா. இவர் 1389-ஆம் ஆண்டில் இருந்து 1398-ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தார். பரமேஸ்வரா தான் சிங்கப்பூரை ஆட்சி செய்த ஐந்தாவது ராஜா. கடைசி ராஜா. இவர் ஸ்ரீ மகாராஜா பரமேஸ்வரா என்று அழைக்கப் பட்டார்.   

பரமேஸ்வரா சிங்கப்பூரின் ராஜாவாக இருந்த போது சுமத்திராவின் மஜாபாகித் அரசு சிங்கப்பூர் மீது அடுத்தடுத்து தாக்குதல்களை நடத்தியது. அந்தத் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியாமல் சிங்கப்பூரில் இருந்து பரமேஸ்வரா வெளியேறினார்.

ஒரு செருகல். செஜாரா மலாயு (Sejarah Melayu) எனும் மலாய் வரலாற்றுக் குறிப்புகள் பரமேஸ்வரா எனும் சொல்லைப் பயன்படுத்தவில்லை. மாறாக ஸ்ரீ மகாராஜா எனும் பெயரையே பயன்படுத்தி இருக்கிறது.

(இந்தக் கட்டுரைத் தொடர் தயாரிப்பு நிலையில் உள்ளது. பின்னர் தொடரும்)