மலாயா தமிழர்கள் வந்தேறிகள் அல்ல லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மலாயா தமிழர்கள் வந்தேறிகள் அல்ல லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

31 ஆகஸ்ட் 2019

மலாயா தமிழர்கள் வந்தேறிகள் அல்ல

(சஞ்சி தமிழர்கள் நூலில் இருந்து)

ஆயிரம் ஆயிரம் வேதனைச் சோதனைகளைக் கடந்து வந்த மலாயாத் தமிழர்களின் சாதனைகளை உலக வரலாறு என்றைக்கும் மறக்காது. மறப்பதற்கு மனசும் வராது.




மலாயா தமிழர்கள் இந்த மண்ணில் சில பல நூறாண்டுகளுக்கு முன்னரே தடம் பதித்து விட்டார்கள். இது எவராலும் மறுக்க முடியாத ஒரு வரலாற்று உண்மை. உலக வரலாற்றில் தவிர்க்க முடியாத உண்மை.

என்ன தான் வரலாற்றுப் படிவங்களைச் சிதைத்துப் போட்டாலும்; எப்படித்தான் வரலாற்றுப் படிமங்களை மறைத்துப் போட்டாலும்; மலாயாத் தமிழர்களின் வரலாற்று உண்மைகள் காலாகாலத்திற்கும் உயிரோடு வாழ்ந்து கொண்டுதான் இருக்கும். 



1910-ஆம் ஆண்டில் மலாயா ரப்பர் தோட்டத்தில் 
ரப்பர் விதைகள் பயிர் செய்யப் படுகின்றன
Source: Kleingrothe, Carl Josef, 1864-1925; 
Royal Netherlands Institute of Southeast Asian and Caribbean Studies.

அந்த உண்மைகள் காலா காலத்திற்கும் நிரந்தரமாகிப் போன உண்மைகள். அவையே வரலாறு சொல்லும் சத்தியமான உண்மைகள்.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் திரைகடல் தாண்டி திரவியம் தேடி மலையகத்திற்கு வந்து இருக்கிறார்கள். வணிகர்களாக வந்தார்கள். வணிகம் பார்த்தார்கள். வாழ்ந்தும் காட்டினார்கள். தங்கள் வாழ்க்கையைச் செம்மைப் படுத்திக் கொண்டார்கள்.

வந்த இடத்தில் நியாயமான முறையில் பொன்னையும் பொருளையும் தேடிக் கொண்டார்கள். தேடியது கிடைத்ததும் வந்த வழியாகப் பலர் திரும்பிச் சென்றார்கள். வந்தவர்களில் சிலர் உள்ளூர்ப் பெண்களைத் திருமணம் செய்து கொண்டார்கள். 



மலாயா ஒப்பந்தத் தொழிலாளர்கள் 1913. 
சேகரித்த பாலை தொட்டியில் ஊற்றுகிறார்கள்
Source: Carter, Marina; Torabully, Khal (2002). 
Coolitude: An Anthology of the Indian Labour Diaspora.

அப்படியே உள்ளூர்த் தன்மையில் ஐக்கியமாகிப் போனார்கள். கால ஓட்டத்தில் அங்க அடையாளங்கள் மறைந்து கரைந்தும் போனார்கள்.

அப்படி மலாயாவுக்கு முதன்முதலில் வந்தவர்களின் முதன்மை நோக்கம் வணிகமாக இருந்து இருக்கிறது. புலம்பெயர்ந்து வாழ வேண்டும் என்கிற எண்ணம் அவர்களிடம் அப்போது இல்லை. வணிகம் செய்து கொஞ்சம் காசு பார்த்துவிட்டுப் போவோம் என்கிற எண்ணத்துடன் தான் அவர்கள் வந்து இருக்கிறார்கள். ஒன்று மட்டும் உண்மை.

அவர்கள் வந்த இடத்தில் யாரிடமும் கையேந்தவும் இல்லை. பஞ்சம் பிழைக்க தஞ்சம் கேட்கவும் இல்லை. வணிகம் செய்வதே முதல் நோக்கமாக இருந்து இருக்கிறது. வணிகம் செய்து வளமை பெறுவதே அவர்களின் தலையாய நோக்கமாகவும் இருந்து இருக்கிறது.

மலாயாவாழ் தமிழர்களும் வந்தேறிகள் அல்ல. அப்படி சொல்வது தப்பு. வரலாற்றை நன்றாகப் படித்துத் தெரிந்து புரிந்து கொள்ள வேண்டும்.

வரலாற்றை வரலாறாகப் பார்க்கும் பக்குவம் வேண்டும். வரலாற்றை வரலாறாகப் பார்க்கும் நல்ல எண்ணமும் வேண்டும். வரலாற்றை முறையாகப் படிக்காமல் அறியாமையில் சொல்வது மிகவும் தப்பு. 



மலாயா ரப்பர் தோட்டத்தில் வெளிக்காட்டு வேலை
Rubber Plantation in Malaya in 1911; 
Pathe film La Cultivation du Caoutchouc en Malaisie

பூர்வீக மக்கள் வாழ்ந்த இடத்தில் தமிழர்கள் சமூக அமைப்புகளை உருவாக்கி இருக்கிறார்கள். அந்தப் பூர்வீக மக்களுக்கு வாழ்வியலின் வளமையைச் சொல்லிக் கொடுத்து இருக்கிறார்கள். அந்தச் சமூக அமைப்புகளில் எப்படி சிறப்பாக வாழ்வியலை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுத்துவிட்டுப் போய் இருக்கிறார்கள்.

இதற்குச் சான்றுகள் தேவை இல்லை. வரலாறே ஒரு சான்றாக நிலைத்து நிற்கின்றது. மிகச் சரியான சான்றுகளுடன் இந்த மலாயா தமிழர்களின் வரலாற்று ஆவணத்தை முன்வைக்கிறேன்.

கலிங்கர்கள் வழி வந்த தமிழர்களின் முதல் புலம்பெயர்வு அசோகர் காலத்தில் தொடங்கி இருக்கிறது. இதை மீண்டும் வலியுறுத்த வேண்டி உள்ளது.


பேஸ்புக் அன்பர்களின் கருத்துகள்

Vejaya Kumaran inthe warelaatru puttagam wendum aiyaa.yenna vilai.mugavari vendum.

Muthukrishnan Ipoh நன்றிங்க...நூலை எழுதி முடித்து விட்டேன்... 286 பக்கங்கள்... அச்சகத்தில் கொண்டு போய் கொடுக்க வேண்டிய இறுதிக் கட்டம்... நூல் வெளியானதும் பேஸ்புக் வழியாக அறிவிக்கிறேன் தம்பி... தங்களின் ஆதரவிற்கு மீண்டும் நன்றி...
Ranjanaru Ranjanaru Pokkisham Anna ...Mahateerar irukkum varaikkum ...nam varalaarai moodi maraikkattaan ...muyaluvaar ..
Muthukrishnan Ipoh மலேசிய இந்தியர்களின் வரலாற்றை எவராலும் மறைக்க முடியாது தம்பி... அனைத்துலக நூலகங்களிலும் பழஞ்சுவடி காப்பகங்களிலும் மலேசிய இந்தியர்களின் வரலாற்று ஆவணங்கள் பாதுகாப்பாக உள்ளன. மீட்டு எடுப்பது அரிய முயற்சி... இருப்பினும் மீட்டு எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளோம்.


Nagappan Arumugam கூலிக்கு வேலை செய்தவர்களைத் தியாகி என்பது எந்த வகைக் கணக்கில் சேரும்? நாம் இந்த நாட்டின் குடிமக்கள். இதன் அடிப்படையில் நமது கோரிக்கைகள் இருக்க வேண்டும்.

Kumaravel Muthu Goundan Nagappan Arumugam சரியாகச் சொன்னீர்கள் அய்யா..... காட்டைத் திருத்தினோம், ரோடு போட்டோம், ரயில் பாதை அமைத்தோம் என்று இன்னும் எத்தனை தலை முறைகளுக்குத்தான் நாம் சொல்லிக் கொண்டிருக்கப் போகிறோம்.

அப்படிப் பார்த்தால் சீனர்கள் நம்மை விட இந்நாட்டின் வளர்ச்சிக்குப் அதிகம் பாடு பட்டிருக்கிறார்கள். இந்நாட்டின் குடி மக்கள் என்று நம் அடிப்படை உரிமைக்குப் போராடும் குணம் தான் இன்று நமக்குத் தேவை.

அமெரிக்க நாடு புலம் பெயர்ந்த பல நாட்டு மக்கள் வாழும் நாடு. அந்நாட்டின் குடி மக்கள் அனைவரும் ”அமெரிக்கர்” எனும் ஒரே இனம் எனும் அடையாளத்தை வைத்துக் கொண்டு பொருளாதாரத்தில் இன்று உலகையே தங்களின் கைப் பிடியில் வைத்துக் கொண்டிருக்கின்றனர்.

Sheila Mohan வணக்கம் சார்.. பொக்கிஷமான கட்டுரை... நமது முன்னோடிகளின் தியாகம் மனம் நெகிழ்கிறது...

Sathya Raman மலாயாவிற்கு ஒப்பந்த அடிப்படையில் கூலிக்கு மாராடிக்க அழைத்து வரப்பட்ட நம் முன்னோர்கள் ஒப்பற்ற உழைப்பையும், உதிரத்தையும் இந்த நாட்டிற்காக கொடுத்து இருக்கிறார்கள்.

தமிழினம் என்றுமே மறக்கவியலாத பட்டயம் கூறும் பதிவுகளை நீங்களும் சலிக்காமல், தளராமல் இந்த சமுதாயத்திற்கு செய்தி சொல்லி வருவது இந்த முகநூல் வாசகர்கள் பெற்ற பேறு சார்..🙏🙏🙏

நம் வரலாற்றை பின் நோக்கி பார்த்தால் பெரும்பாலும் மிஞ்சுவது கண்ணீரும், காயங்களும் தான். அன்றைய மலாயா இன்று மலேசியாவாக மலர்ச்சியுடன் மிளிர்ந்து நிற்பதற்கு இன்று இந் நாட்டில் எங்கும் நிரம்பி வழியும் பங்களாதேசியோ, இந்தோனிசியர்களோ, மியான்மார்காரர்களோ இல்லை. 
சாட்சாத் இன்னமும் எல்லா [நியாயமான] உரிமைகளையும் விட்டுக் கொடுத்து, கொடுத்து நிற்கும் தமிழர்களே. அந்நிய தொழிலாளர்களை விட சிறுபான்மை இனமாக மற்ற இனத்தவர் மத்தியில் இளிச்சவாயர்களாக ஏமாந்து நிற்கிறோம், வருகிறோம் என்பதே சத்தியமான உண்மை.

மற்ற நாட்டுக்காரர்களைவிட நம் கண்களுக்கு இன்னமும் சுண்ணாம்புகளே தடவப் படுகிறது என்பதையும் மறுப்பதற்கில்லை. நாடு சுதந்திரம் பெற்று 62 ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும் இந் நாட்டு இந்தியர்களுக்கு எதிராக அடிமை விலங்கு முற்றிலுமாக அகற்றப் பட்டதா?

நமக்குரிய அங்கீகாரம் கெஞ்சி, கூத்தாடாமல், போராடாமல் கிடைக்கிறதா? இந்நாட்டை வளப்படுத்திய இனத்தை வஞ்சிக்கப்பட வைக்கக் கூடாது என்ற எண்ணம்தான் எழுகிறதா? உண்மையான உழைப்புக்கு இன்னொரு பெயர் இந்தியர் என்ற நன்றி உணர்வு தான் இருக்கிறதா?

ஆபிரகாம் லிங்கனும், நெல்சன் மண்டேலாவும், சுபாஷ் சந்திர போஸ்சும் மீண்டும் பிறந்து வந்துதான் உண்மையான சுதந்திர காற்றையும், சுபிட்ச நிலையையும் உருவாக்க வேண்டுமா என்ன?

"விதைகள் கீழ் நோக்கி விதைத்தாலும், விருட்சமாக மேல் நோக்கியே வளரும்". விழுந்தால் விதை என்று நினைத்துக் கொள்வோம், வளர்ந்தால் விருட்சம் என எண்ணிக் கொள்வோம்".

புரட்சியாளன் வெற்றி பெற்றால் அவன் போராளி. அதே போல் இந்த நாட்டில் சராசரி தேவைகளையே போராடியே கேட்டு பெறும் நிர்பந்தத்தில் நிற்கும் நாமும் வழக்கம் போல் அடுத்தவருக்காக விளக்கை ஏற்றுவோம். அப்படி ஏற்றும் போது நம் பாதையும் வெளிச்சமாகும் என்று நம்புவோம்.



Mohan Ramasamy Sathya Raman நாடு சுதந்திரம் அடைந்தது 62 ஆண்டுகள் ஆயினும், உன்மையான சுதந்திரம் ஓர் இனம் சார்ந்த மக்கள் தான் அனுபவித்து வருகின்றனர். எப்போது நமக்கு சம உரிமை வழங்கப் படுதோ அன்று தான் உண்மையான சுதந்திரம்.

Muthu K Kumar 1000 ஆண்டுகளுக்கு முன் கால் பதித்தான் கடாரத்தில் இது சோழனின் வரலாறு


Muthukallianna Gounder We the willing lead by the unknown are doing impossible for tho ungreatfuls. We have been doing so much for so little beatitude. Now we are qualified to do any thing for nothing, my friends. Oh, God, please lead our path.