தாய்லாந்து வனவிலங்குகள் பாதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தாய்லாந்து வனவிலங்குகள் பாதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

29 செப்டம்பர் 2019

தாய்லாந்து வனவிலங்குகள் பாதை

தாய்லாந்தில் அண்மையில் ஒரு நெடுஞ்சாலை கட்டினார்கள். அதன் பெயர் பிரச்சின்புரி (Prachin Buri) நெடுஞ்சாலை. இந்த நெடுஞ்சாலை இரு வனப் பூங்காக்களைக் குறுக்காக வெட்டிச் செல்கிறது. அந்த இரு வனப் பூங்காக்கள்:

1. தாப் லான் வனப் பூங்கா (Thap Lan National Park).

2. காவோ யாய் வனப் பூங்கா (Khao Yai National Park).
 

அதனால் வனவிலங்குகள் வாகன விபத்துகளுக்கு உள்ளாகின்றன. நிறையவே விபத்துகள். இந்த விபத்துகளைத் தவிர்ப்பதற்காக வனவிலங்குகள் கடக்கும் பாதையை உருவாக்கி இருக்கிறார்கள்.

அந்த வகையில் இரு வனப் பூங்காக்களும் ஒன்றாய் இணைக்கப் பட்டன. இது ஒரு பெரிய சாதனை. உலகச் சாதனை என்றுகூட சொல்லலாம்.

இதுதான் மனிதன் உருவாக்கிய உலகின் முதல் வனவிலங்குகள் கடக்கும் பாதை ஆகும். பாதை என்றால் ஒற்றையடிப் பாதை என்று நினைத்துவிட வேண்டாம். அந்தப் பாதையின் அகலம் நான்கு கிலோ மீட்டார்கள். அவ்வளவு அகலம்.
 

அந்த நான்கு கி.மீ. பாதைக்கு அடியில் நெடுஞ்சாலைச் சுரங்கம் அமைக்கப் பட்டு உள்ளது. அந்தச் சுரங்கப் பாதைகள் வழியாகத் தான் வாகனங்கள் செல்கின்றன. மேலே வனவிலங்குகள் இடம் பெயர்கின்றன.

வனவிலங்குகள் கடக்கும் பாதையில் புற்களை மட்டும் நட்டு வைத்து இருக்கிறார்கள். மரங்களைத் தவிர்த்து விட்டார்கள்.

பாதையின் இருபுறமும் வேலிகள் அமைத்து இருக்கிறார்கள். வன விலங்குகள் தடம் மாறி நெடுஞ்சாலைக்குள் வந்து விடாமல் இருப்பதற்காக அந்த வேலிகள்.

இந்தப் பாதை நான்கு கி.மீ. அகலமாக இருப்பதால் விலங்குகள் கடந்து செல்வதை வாகனமோட்டிகள் பார்க்க இயலாது.
 

வாயில்லா ஜீவன்களைப் பாதுகாக்க வேண்டியது மனிதர்களின் பொறுப்பு. அதுவே மனிதர்களின் விலங்கு நேயக் கடமை.

ஒரு செருகல். நம் மலேசிய நாட்டில் சில இடங்களில் காடுகளை அழித்து வருகிறார்கள். என்ன சொன்னாலும் கேட்பதாக இல்லை. ஈப்போ கிளேடாங் மலை அடிவாரம் அழிக்கப்பட்ட சம்பவத்தைச் சொல்லலாம்.

மலையின் அடிவாரத்தில் என் இல்லம் உள்ளது. அழகிய பச்சை மலை. நீல வானம். சூரியன் மறையும் போது இன்னும் பத்து வருசம் கூடுதலாக வாழ வேண்டும் என்கிற ஆசை வரும் அளவிற்கு இயற்கைச் சூழல். அப்பேர்ப்பட்ட இடம். 

அங்கே இருந்து பார்த்தால், அந்தக் காட்டு அழிப்பு தெரியவே தெரியாது. அவ்வளவு பக்காவாக செய்து இருக்கிறார்கள்.

விசயம் தெரிந்து ஆளாளுக்குக் கண்டனம் தெரிவிக்க... நிறுத்தி விட்டார்கள். விடுவோமா நாங்கள்.

காட்டில் பேய் இருப்பதாகச் சொல்வார்கள். அது எல்லாம் கிடையாதுங்க. அக்கம் பக்கத்தில் தான் மனிதப் பேய்களும் மனிதப் பிசாசுகளும் இருக்கின்றன. அதனால் தான் சிலரைப் பார்த்ததும் நாய்கள் ஊளையிடுகின்றன. ஆராய்ச்சி பண்ணிப் பார்க்க வேண்டும். சரி.

மலேசியாவில் காடுகள் ஆங்காங்கே அழிக்கப் படுகின்றன. அதற்கு மூலக் காரணம் யார் தெரியுங்களா. சில அரசியல்வாதிகள் தான். எல்லோரும் அல்ல.
 

முன்பு அரசியல்வாதிகள் மக்களுக்காக வாழ்ந்தார்கள்; தெய்வத்திற்கு நிகராய்ப் போற்றப் பட்டார்கள். இப்போது மிகவும் குறைவு. இருக்கிறார்களா என்றுகூட தெரியவில்லை. எதற்கும் அனைத்துலக 007 ஜெம்ஸ் பாண்டுகளைக் கூப்பிட்டு தேடச் சொல்ல வேண்டி உள்ளது.

இப்போதைய அரசியல்வாதிகளில் சிலர் பாவம்... அரசியல் வியாதிகளால் ரொம்பவுமே அவதிப் படுகிறார்கள். அப்படிப் பட்டவர்களுக்கு அரசியல் வியாதி அம்புலன்ஸ்கள் தேவை படுகின்றன. ஆர்டர் கொடுக்க வேண்டும்.

அதே சமயத்தில் அந்த ஆர்டரை அடுத்த பொருளாதாரத் திட்டத்தில் சேர்க்காமல் இருந்தால் சரி. ஏன் என்றால் அதிலும் ஆட்டை போடும் வாய்ப்புகள் நிறையவே உள்ளன.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
29.09.2019

பேஸ்புக் அன்பர்களின் பின்னூட்டங்கள்
Perumal Thangavelu சிங்கையிலும் இது போன்ற, மிருகங்கள் கடக்க வழித்தடம் அமைத்து உள்ளார்களே.
 
Muthukrishnan Ipoh மண்டாய் வனக் காப்பகத்தில் அமைத்து இருக்கிறார்கள். வேலைகள் இன்னும் முடிவு அடையவில்லை... இந்த ஆண்டு இறுதி வாக்கில் பூர்த்தி பெறும்... 50 மீட்டர் அகலம்...
 
Image may contain: grass and outdoor 
 
Vejaya Kumaran singapore rilum ithu pondru amaika pattullathe (சிங்கப்பூரிலும் இது போன்று அமைக்கப்பட்டு உள்ளதே)
 
Muthukrishnan Ipoh ஆமாம் ஐயா... மண்டாய் வனக் காப்பகத்தில் அமைத்து இருக்கிறார்கள். வேலைகள் இன்னும் முடிவு அடையவில்லை... இந்த ஆண்டு இறுதி வாக்கில் பூர்த்தி பெறும்... 50 மீட்டர் அகலம்... தகவலுக்கு நன்றி...

Image may contain: sky, bridge, tree, plant, outdoor, nature and water
 
Image may contain: 1 person, text 
 
Muthukrishnan Ipoh விலங்கினமும் நம்மைப் போல உயிரினங்கள் தான்... அவற்றைப் பாதுகாக்க வேண்டியது மனித நேயத்தின் கடமைகளில் ஒன்றாகும்...
 
Perumal Thangavelu அமேசான் காட்டுத்  தீ, உலக மக்களை ஈர்த்த போது விலங்குகளும் மனித சுபாவம் கொண்டவை என்பதை உணர்த்தியது. மனித நேயம் நெகிழ்ந்தது... ஈர விழிகளை நனைத்தது...
 
Sathya Raman சிறப்பான ஆய்வு கட்டுரை சார். காடுகளைப் பற்றியும் அதன் மகத்துவத்துவத்தைப் பற்றியும் கொஞ்மேனும் கவலைப் படாமல் அவற்றை அழித்து வரும் இந்த உலக மகா அரசியல்வாதிகளையும் அவர்களுக்குள் இருக்கும் பேராசையையும் நீங்களோ, நானோ தடுத்து விட முடியாது சார்.

ரொம்ப வேண்டாம். இன்று கேமரன் மலைக்குச் சென்று வருபவர்கள் முன்பு போல் அங்கே குளிர்ச்சி இல்லை என்கிற குற்றசாட்டுகளையே முன் வைக்கிறார்கள் என்றால் அங்கே அழிந்து வரும் காடுகளால் தான். நான் அங்கே வளர்ந்து படித்தவள்.

என் பள்ளி நாட்களில் ஒரு தடவைகூட  குளிர்ச் சட்டையை அணியாமல் சென்றது இல்லை... இருந்ததும் இல்லை. வருட இறுதியில் உதிரத்தை உறைய வைக்கும் குளிராக இருந்த அந்த மலைப் பிரதேசத்தில் இன்று மழைக் காலங்களில் கூட உடல் சூடாவதை உணர்கிறோம்.

நமக்கு கிடைத்த அரிய, பெரிய பொக்கிஷங்களை இன்று பணத்திற்காகத் தனி மனிதப் பெரு வாழ்வுக்காக இழந்து வரும் அவலம். காடுகளை அழிப்பதால் காட்டு மிருகங்கள் மனிதர்களின் குடியிருப்புகளைத் தேடி வராமல் என்ன செய்யும்?

வீட்டைக் குளிர்விக்க, குளிர்ச்சாதனப் பெட்டி வாங்குகிறோம். ஆனால் பூமியைக் குளிர்விக்க மரக் கன்றுகளை நடுவதில்லை. மாறாக அழித்து வருகிறார்கள். கோபமும், புயலும் ஓரே மாதிரி தான். அடங்கிய பின் தெரியும். எவ்வளவு இழப்புக்களை ஏற்படுத்தியது என்று.

அதேப் போல் தான் இந்த அரசியவாதிகளின் செய்கைகளால் நம் நாடும் பல இயற்கையின் எழில்களை இழப்புகளாய் எதிர்நோக்கி கொண்டு இருக்கிறது என்பதே நிதர்சனமான உண்மை.

 
Muthukrishnan Ipoh தங்களின் நீண்ட விளக்கத்தைக் கண்டு வியந்து போனேன்... என்னுடைய வலைத் தளத்தில் தங்களின் பின்னூட்டங்கள் நிரந்தரமாகப் பதிவு செய்யப்படும்... தங்களின் நல்ல நல்ல கருத்துகள் இணையத்தில் எப்போதும் நிலைத்து இருக்க வேண்டும்... நன்றிங்க...
Malathi Nair Realy thanks to Sathya Raman for your braveness.Yes support you. This is the only way we can voice out.everywhere politician playing game on people.