கறுப்புக் கண்ணாடி ஸ்டைல் 17 வயதினிலே லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கறுப்புக் கண்ணாடி ஸ்டைல் 17 வயதினிலே லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

18 ஏப்ரல் 2020

கறுப்புக் கண்ணாடி ஸ்டைல் 17 வயதினிலே

வெயில் கொளுத்துகிறது. கண் கூசுகிறது. கண்ணீர் வழிகிறது. கறுப்புக் கண்ணாடி அணிகிறோம். கோளாறு இருந்தாலும் அணிகிறோம்.

எனக்கு பெரிய கோளாறு இல்லை. லேசாக மார்க்கண் பார்வை. ரொம்பவும் இல்லை. ஆப்ரேஷன் பண்ணியும் இரு கண்களுக்கும் பிணக்குகள். அதோடு சின்ன வயதிலேயே கறுப்புக் கண்ணாடி போட்டுப் பழகி விட்டேன். இன்றும் பழக்க தோசம் விடவில்லை. 


சீனாவில் நடந்த கதை. 13-ஆம் நூற்றாண்டில் சீனாவில் முதன்முதலாகக் கறுப்புக் கண்ணாடி பயன்படுத்தி இருக்கிறார்கள். அந்த நாட்டின் நீதிமன்றங்களில் வயதான நீதிபதிகள் கறுப்புக் கண்ணாடி அணிந்து வழக்குகளை விசாரித்து இருக்கிறார்கள்.

நீதிபதி என்ன நினைக்கிறார் என்பதைக் கண்வழியாக மக்கள் அறிந்து விடக் கூடாது என்பதற்காக அந்தக் காலத்து சீன நாட்டு நீதிபதிகள் கறுப்புக் கண்ணாடிகளை அணிந்தார்களாம்.

வட துருவப் பகுதிகளில் வாழும் எஸ்கிமோ மக்கள் பனியின் தாக்கத்தால் பார்வையை இழக்காமல் இருக்க உலோகத் தகடுகளைக் கண்ணாடி போல அணிந்தார்கள்.

1930-ஆம் ஆண்டுகளில் அமெரிக்க விமானப் படை வீரர்கள் சூரிய ஒளியின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த கறுப்புக் கண்ணாடி அணிந்தார்கள்.

சூரியனில் இருந்து வெளி வரும் புறநீலக் கதிர்கள் கண்களை அடையாமல் தடுப்பதற்காகக் கறுப்புக் கண்ணாடிகளையே பயன்படுத்தவேண்டும் என்று கண் மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.

ஆனால் இப்போது எல்லாம் அப்படி இல்லைங்க. சும்மா ஒரு ஷோ காட்டுவதற்காகச் சிலர் அணிகிறார்கள். என்னையும் பாருங்கள் என் அழகையும் பாருங்கள் என்பதின் அடையாளமாக இருக்கலாம். என்னையும் அதிலும் சேர்க்க நினைக்கலாம்... இப்போது அப்படி இல்லைங்க... பேரன் பேத்தி எல்லாம் எடுத்தாகி விட்டது... இனிமேல் என்ன அழகு என்ன வேண்டிக் கிடக்கு...

பேஸ்புக்கில் படத்தைப் பதிவு செய்தேன். அதற்கு கிடைத்த வரவேற்பைப் பாருங்கள்.


பேஸ்புக் பதிவுகள்
December 29, 2018



Govind Bala:
அய்யா... இந்தப் படம் எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது. அன்று 1968 - 1969-ஆம் ஆண்டுகளில் நீங்கள் நாளிதழ்களில் மற்றும் வானொவியில் டுரியான் துங்கல் முத்துக்கிருஷணன் என்று வலம் வந்து கொண்டு இருந்தீர்கள்.

Zahir Hussain: நம்ம ஊரு... P. Ramlee மாறி இருக்கீங்க அண்ணா... வாழ்த்துக்கள்

Gunasegar Manickam: 🙏

சாராவதி முனிவேல்:
🙏

Ganesan Matchap: 
🙏

Malathi Nair: Saar u look like Gopi ur brother Rajakumaran's son.

Raja Mutukumar:
🙏

SP Banu:
🙏

Murugan Thevar
ஆகா ஆகா மூத்தவர் செம்மையாக உள்ளாரே.

Don Samsa: சூப்பர் தலைவரே..

மாரியப்பன் முத்துசாமி: சூப்பர் ஐயா

Sambasivam Chinniah: Super ayyah. Vaazhga Valamudan

Abdul Zabar: 17 வயதில் பன்நூறு கனவுகள்... !!

ML Manivannan: ஸ்த்தாயில் மன்னன்...

Gunasegar Manickam
வாழ்க வளமுடன்..... ஐயா...

Murthy Devi: Vallke nallamudan ✌✌✌✌✌

Maniam Eswari அந்த நாள் நினைவுகள். பசுமை. ஆகா சிறப்பு.

Sriram Guruguloo:
🙏

Rajendra Kumar: 17 vayadhinilae...!!!

Nesaraj Rajandran:
🙏