கண்ணை நம்பாதே... உன்னை ஏமாற்றும்...
நீ காணும் தோற்றம்... உண்மை இல்லாதது...
அறிவை நீ நம்பு... உள்ளம் தெளிவாகும்...
அடையாளம் காட்டும்... பொய்யே சொல்லாதது...
நீ காணும் தோற்றம்... உண்மை இல்லாதது...
அறிவை நீ நம்பு... உள்ளம் தெளிவாகும்...
அடையாளம் காட்டும்... பொய்யே சொல்லாதது...
- கண்ணை நம்பாதே!
உன்னை ஏமாற்றும்!
உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம்!
உண்மை இல்லாதது!
அறிவை நீ நம்பு!
உள்ளம் தெளிவாகும்
அடையாளம் காட்டும்!
பொய்யே சொல்லாதது!
கண்ணை நம்பாதே...
காவலரே வேஷமிட்டால்
கள்வர்களும் வேற்றுருவில்
கண் முன்னே தோணுவது
சாத்தியமே!
காத்திருந்து கள்வருக்கு
கைவிலங்கு பூட்டி விடும்
கண்ணுக்குத் தோணாத
சத்தியமே!
போடும் பொய்த் திரையைக்
கிழித்து விடும் காலம்!
புரியும் அப்போது மெய்யான
கோலம்!
கண்ணை நம்பாதே...
ஓம் முருகா என்று சொல்லி
உச்சரிக்கும் சாமிகளே!
ருத்ராட்சப் பூனைகளாய்
வாழுறீங்க!
சீமான்கள் போர்வையிலே
சாமான்ய மக்களையே
ஏமாற்றிக் கொண்டாட்டம்
போடுறீங்க!
பொய்மை எப்போதும்
ஓங்குவதும் இல்லை!
உண்மை எப்போதும்
தூங்குவதும் இல்லை!
கண்ணை நம்பாதே...
பொன் பொருளைக் கண்டவுடன்
வந்த வழி மறந்து விட்டு
கண்மூடிப் போகிறவர்
போகட்டுமே!
என் மனதை நானறிவேன்!
என் உறவை நான் மறவேன்!
எதுவான போதிலும் ஆகட்டுமே!
நன்றி மறவாத
நல்ல மனம் போதும்!
என்றும் அதுவே என்
மூலதனம் ஆகும்!
கண்ணை நம்பாதே... https://www.youtube.com/watch?v=7XmNcms8U0Q - Muthukrishnan Ipoh மருதகாசி இயற்றிய பாடல்... பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி மாணிக்கம் சார்... இந்த பாடலைப் பற்றி சுவையான தகவல் ஒன்று உண்டு .
பாடலை இயற்றிய மருதகாசி ‘பொன் பொருளைக் கண்டவுடன்’ என்று வரும் இடத்தில்
‘தன் வழியே போகிறவர் போகட்டுமே’ என்று முதலில் எழுதினாராம்.
மக்கள் திலகம் தன் வழி சரியாக இருந்தால் அந்த வழியில் போவதில் என்ன தவறு என்று கேட்டாராம். அதில் இருக்கும் உண்மையை உணர்ந்து ‘கண் மூடி போகிறவர் போகட்டுமே… என்று மாற்றி எழுதினாராம் கவிஞர் மருதகாசி.