குலசேகரன் மலேசிய மனிதவள அமைச்சர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குலசேகரன் மலேசிய மனிதவள அமைச்சர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

20 மே 2018

குலசேகரன் மலேசிய மனிதவள அமைச்சர்

மலேசியத் தமிழர்களின் வரலாற்றில் சுடர்மணியாய் ஜொலிப்பவர். மலேசியத் தமிழர்களின் சமூக நலன்களில் சுடர்விளக்காய்த் திகழ்பவர். மலேசியத் தமிழர்களின் மதமாற்றச் சர்ச்சையில் சுடரொளியாய் மிளிர்கின்றவர்.   
 

மலேசிய வரலாற்றுச் சுவடுகளில் மகிமை பேசுகின்ற மண்ணின் மைந்தர். அவர்தான் மாண்புமிகு எம். குலசேகரன். ஒரே வார்த்தையில் சொன்னால் மலேசிய இந்தியர்கள் கண்டெடுத்த மதிப்புமிகு மந்திரப் புன்னகை.

இப்போது ஓர் அமைச்சர். மலேசிய மனித வளத்தை வழிநடத்திச் செல்லப் போகும் தெளிந்த மனிதர். மாற்றம் ஒன்றே மாறாதது என்று மாறி வந்த மலேசிய இந்தியர்களின் கனவுகளுக்கு நனவுச் சீமானாகக் காலடி பதிக்கின்றார். வாழ்த்துகின்றோம்.

மதமாற்ற உரசல்களிலும் சரி; நீதிமன்ற நெரிசல்களிலும் சரி; சமர் மேடை விவாதங்களிலும் சரி; தனி மனிதப் பிடிமானங்களிலும் சரி; தனித்து நிற்பவர் விழித்தும் நிற்பவர் குலசேகரன். 
 

மலேசிய இந்தியர்களின் சமயப் பிரச்சினைகளை உலகப் பொதுப் பார்வைக்குக் கொண்டு போய்ச் சேர்த்தவரும் இதே இந்த மனிதர் தான். அதை யாராலும் மறுக்க முடியாது. அதுவரையிலும் அவர் நல்ல ஓர் அழகிய மகனாகவே நமக்குத் தெரிகின்றார்.

மலேசியப் பிரதமரிடம் தன் கருத்துகளை அழுத்தமாய் ஆழமாய் ஆணித்தரமாய் வெளிப்படுத்திய வைர நெஞ்சம் படைத்த ஒரு பெருமகன். விவேகமானத் துணிவுடன் செயல் படுபகின்றார்.

(http://ipohbaratvoice.blogspot.my/2016/02/kula-let-refugees-already-in-msia-do.html)

ஒரே வார்த்தையில் சொல்லலாம். இன்றையக் காலக் கட்டத்தில் மலேசிய இந்தியர்களின் உரிமைப் போராட்டத் தலைவர்களில் தனித்துப் பிரகாசிக்கின்றார். இது ஓர் ஆலாபனை இல்லை. ஓர் ஆராதனை. 
 

இவரைப் போல இன்னும் பலர் இருந்தனர். இருக்கின்றனர். இல்லை என்று சொல்லவில்லை.

எஸ்.ஏ. கணபதி, வீரசேனன், காட்டுப் பெருமாள், சிபில் கார்த்திகேசு, ஜானகி ஆதி நாகப்பன், ஜான் திவி, ராசம்மா பூபாலன், டி.ஆர்.சீனிவாசகம், அம்பிகா சீனிவாசன், சிசில் ராஜேந்திரா, சார்ல்ஸ் ஹெக்டர், கெங்காதரன் நாயர், கர்ப்பால் சிங், பி. பட்டு, வி. டேவிட், தேவன் நாயர், ஐரீன் பெர்னாண்டஸ், பி. உதயக்குமார் போன்ற மனித உரிமைப் போராட்டவாதிகளின் பட்டியல் நீள்கிறது.

அந்த வகையில் குலசேகரன் அவர்கள் மீது பலருக்கும் தனி ஒரு மரியாதை. எனக்கும் தனி ஒரு மதிப்பு.

ஆக மலேசியத் தமிழர்கள் மட்டும் அல்ல. உலகத் தமிழர்களும் இவரைப் பற்றி தெரிந்து வைத்து இருக்க வேண்டும். 
 

ஓர் இடைச் செருகல். சில சமயங்களில் குலசேகரனுடன் வெளியே போவது உண்டு. தேநீர் அருந்துவதற்கு ஒரு கடையில் நுழைந்தால் அங்கு உள்ளவர்கள் சிலர் எழுந்து வந்து குலசேகரனுடன் கைக் குலுக்குவார்கள். என்னையும் அறிமுகம் செய்து வைப்பார். இனிமையான நினைவுகள்.

சில சமயங்களில் முக்கிய விசயமாக இருந்தால் அவரை அழைப்பேன். நாடாளுமன்றத்தில் இருக்கிறேன். இன்றைக்கு இப்போதைக்கு இந்த விவாதம் நடக்கிறது. வருவதாக இருந்தால் சொல்லுங்கள். அனுமதி பெற்றுத் தருகிறேன் என்று அவசரம் இல்லாமல் நிதானமாகப் பேசுவார். பழக மிக இனிமையான மனிதர்.

எம். குலசேகரன் (Kulasegaran Murugeson) மலேசிய அரசியல்வாதி. மலேசிய இந்திய, சீன, பூர்வீகப் பழங்குடியினரின் உரிமைகள் போராட்டவாதி. ரப்பர் தோட்டத் தொழிலாளரின் மகனாகப் பிறந்தவர். அயராத உழைப்பு தளராத நம்பிக்கை. அந்த இரண்டும் தான் அவரை அரசியலின் சிகரத்திற்கு ஈர்த்துச் சென்று உள்ளன. 
 

2004-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பேராக் மாநிலத்தின் ஈப்போ பாராட் நாடாளுமன்றத் தொகுதியில் மலேசிய சீனர் சங்கத்தைச் சேர்ந்த டத்தோ ஹோ சியோங் சிங்  (DATUK IR HO CHEONG SING) என்பவரை எதிர்த்துப் போட்டியிட்டார். 68,394 வாக்காளர்கள். அதில் குலாவிற்கு 22,935 வாக்குகள். டத்தோ ஹோவிற்கு 22,337 வாக்குகள். 598 வாக்குகள் அறுதிப் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.

2008-ஆம் ஆண்டு தேர்தலில் அதே ஈப்போ பாராட் தொகுதியில் ம.சீ.ச.வைச் சேர்ந்த இக் பூய் ஹோங் (YIK PHOOI HONG) என்பவரை எதிர்த்துப் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் குலாவிற்கு 32,576 வாக்குகள். இக் பூய் ஹோங்கிற்கு 17,042 வாக்குகள். 15,534 வாக்குப் பெரும்பான்மையில் குலா வெற்றி பெற்றார்.

2013-ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் அதே ஈப்போ பாராட் தொகுதியில் ம,சீ.ச.வைச் சேர்ந்த செங் வேய் ஈ என்பவரை (CHENG WEI YEE) என்பவரை எதிர்த்துப் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் குலாவிற்கு 45,420 வாக்குகள். செங் வேய் ஈ அவர்களுக்கு 16,382 வாக்குகள். 29,038 வாக்குப் பெரும்பான்மையில் குலா வெற்றி பெற்றார்.
 
Image result for kulasegaran m

அண்மையில் நடந்து முடிந்த 2018 பொதுத் தேர்தலில் மீண்டும் அதே  ஈப்போ பாராட் நாடாளுமன்றத் தொகுதி. குலசேகரனுக்கும் ம.சீ.ச.வைச் சேர்ந்த செங் வேய் ஈ என்பவருக்கும் நேரடி மோதல். அதில் குலசேகரனுக்கு 55,613 வாக்குகள். எதிர்த்துப் போட்டியிட்ட ம.சீ.ச. செங்கிற்கு 9,889 வாக்குகள். பெரும்பான்மை 45,324 வாக்குகளில் குலசேகரன் வெற்றி பெற்றார். ஒரு மிகையான பெரும்பான்மை என்று சொல்லலாம். இந்த முறை மலாய்க்காரர்களின் வாக்குகளும் கணிசமாக வந்து சேர்ந்தன. அதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஈப்போ பாராட் நாடாளுமன்றத் தொகுதியில் 84,874 வாக்காளர்கள் உள்ளனர். சீனர்கள் பெரும்பான்மையாக வாழும் ஈப்போ மாநகரில் ஒரு தமிழர் வெற்றி பெற்றது மலேசிய அரசியலில் ஒரு சாதனை என்றே சொல்ல வேண்டும். அதுவும் மிகையான பெரும்பான்மையில் வெற்றிப் பெற்றது மாபெரும் சாதனை என்பது வெள்ளிடைமலை.

இந்தத் தொகுதியில் மலாய்க்காரர்கள் 12%; சீனர்கள் 63%; இந்தியர்கள் 24%; மற்றவர்கள் 1%.

எம். குலசேகரன் மலேசியாவில் பிரபலமான ஒரு வழக்குரைஞர். 1980-ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் உள்ள ’-லிங்கன்ஸ் இன்’- (lincoln's Inn) எனும் சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார்.
Image result for kulasegaran m

1983 ஆகஸ்டு மாதம் 29-ஆம் தேதி மலேசிய வழக்குரைஞர் மன்றத்தில் பதிவு செய்யப் பட்டார். ஈப்போவில் சட்ட நிறுவனத்தையும் நடத்தி வருகின்றார்.

(http://www.kulaassociates.com/2015/08/malaysian-lawyer-mkulasegaranmalaysias.html - Malaysian lawyer M.Kulasegaran,Malaysia's International Criminal Court (ICC) stance a losing gambit)

மலேசிய இந்தியர்கள் தாங்கள் பிறந்த இந்த மண்ணில் மூன்றாம் தர மக்களாக நடத்தப் படுவதைக் கண்டு மனம் கலங்கியவர் எம். குலசேகரன். அந்த மக்களுக்கு எப்படியாவது உதவிகள் செய்ய வேண்டும் என்பது அவரின் தூரநோக்குப் பார்வை.

மலேசியாவின் எதிர்க்கட்சிகளில் ஒன்றான ஜனநாயக செயல் கட்சியுடன் தன்னை ஐக்கியப் படுத்திக் கொண்டார். 1995-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பேராக் மாநில சட்டமன்றத்திற்கு ஈப்போ, தாமான் கேனிங் தொகுதியில் முதன்முதலாகப் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் தோல்வி. இருந்தாலும் நம்பிக்கையைக் கைவிடவில்லை.

1997 மே மாதம் 17-ஆம் தேதி தெலுக் இந்தான் தொகுதியின் நாடாளுமன்ற இடைத் தேர்தல். பாரிசான் நேசனல் வேட்பாளர் சீ சி சோக் (Chee See Choke) என்பவருடன் போட்டி. 
Image result for kulasegaran m

அந்தத் தேர்தலில் குலசேகரனுக்கு 15,007 வாக்குகள். பாரிசான் நேசனல் சீ சி சோக்கிற்கு 12,091 வாக்குகள். ஆக 2,916 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார். முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். அந்தத் தொகுதியின் மக்களுக்கு பல அரிய சேவைகளையும் செய்தார்.

தமிழ்ப் பள்ளிக்கூடங்களுக்கு நிறைய உதவிகளை வழங்கினார். தெலுக் இந்தான் பகுதியில் வாழ்ந்த இந்தியர்கள் பெரும்பாலானவர்கள் படிப்பறிவு குறைந்தவர்களாக இருந்தார்கள்.

அதனால் பலர் அடையாள அட்டைகள், குடியுரிமைகள் இல்லாமல் இருந்தனர். தன்னுடைய அரசியல் பலத்தைப் பயன்படுத்தி நூற்றுக் கணக்கான இந்தியர்களுக்கு அடையாள அட்டைகள், குடியுரிமைகள் பெற்றுத் தந்தார்.

1999-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல். ஈப்போ பாராட் தொகுதியில் மலேசிய சீனர் சங்கத்தின் ஹொ சியோங் சிங் (Ho Cheong Sing)  என்பவருடன் போட்டி. அந்தத் தேர்தலில் குலசேகரனுக்கு 21,477 வாக்குகள். பாரிசான் நேசனல் வேட்பாளருக்கு 25,155 வாக்குகள். அந்தத் தேர்தலில் குலசேகரனுக்குத் தோல்வி.  
 
Related image

2008ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நடந்து முடிந்த பிறகு ஒருமுறை அவருடைய அலுவலகம் உடைக்கப்பட்டு சில முக்கியமான சட்டப் பத்திரங்களும் பணமும் களவாடப் பட்டன. அரசியலுக்கும் தன்னுடைய அலுவலகம் உடைக்கப் பட்டதற்கும் தொடர்பு இல்லை என்று எம்.குலசேகரன் உறுதிப் படுத்தினார்.

இந்த 2018-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் குலசேகரன் அரசியல் வாழ்க்கையில் அவருக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று சொல்வதைக் காட்டிலும் மாற்றத்தை விரும்பிய மலேசிய மக்களுக்குக் கிடைத்த வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும்.

(https://www.revolvy.com/main/index.php?s=M.%20Kulasegaran - 2013  M. Kulasegaran (DAP) - 45,420 - 73% - Cheng Wei Yee (MCA) - 16,382 - 26%)

இந்திராகாந்தி என்பவர் ஒரு பள்ளி ஆசிரியை. இவருடைய கணவர் இந்து சமயத்தில் இருந்து இஸ்லாமிய சமயத்திற்கு மதம் மாறினார். தன் பெயரை முகமட் ரிசுவான் அப்துல்லா என்று மாற்றிக் கொண்டார். பின்னர் இந்திரா காந்தி வீட்டில் இல்லாத நேரத்தில் அவருடைய வீட்டிற்கு வந்து தன் இரு பிள்ளைகளை மதமாற்றம் செய்து பெயர்களையும் மாற்றினார்.
Image result for kulasegaran m

கடைசியாக தன் மூன்றாவது மகளையும் கடத்திச் சென்று மதமாற்றம் செய்ய முயற்சி செய்தார். அதனால் ஷரியா சட்டப்படி பிள்ளைகள் அனைவரும் தகப்பனாரின் பராமரிப்பின் கீழ் வருவார்கள் என்று தீர்ப்பு வழங்கப் பட்டது. அநதத் தீர்ப்பை எதிர்த்து இந்திராகாந்தி ஈப்போ உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

(http://hakam.org.my/wp/index.php/tag/m-indira-gandhi/ - Indira Gandhi’s marriage started falling apart around the time she gave birth to her third child, Prasana, in 2008)

தன்னுடைய குழந்தைகளை தன் அனுமதி இல்லாமல் மதமாற்றம் செய்வதற்கு எவருக்கும் உரிமை இல்லை என்று வழக்கு தொடரப் பட்டது. இந்திராகாந்தியின் சார்பில் வழக்குரைஞர் எம். குலசேகரன் வாதாடினார்.

இந்த வழக்கு மலேசிய மக்களின் கவனத்தையும், அரசியல், நீதித்துறைகளைச் சார்ந்தவர்களின் கவனத்தையும் பெரிதும் ஈர்த்தது. இறுதியில் குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு தாயாரைச் சேரும் என்று ஈப்போ நீதிமன்றம் முடிவு செய்தது.
 
Image result for kulasegaran m

மலேசியாவில் இந்துக் கோயில்கள் உடைக்கப் படுவதை எதிர்த்து பல போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. அவற்றில் குலசேகரன் கலந்து கொண்டு தன்னுடைய ஆதரவுகளை வழங்கி வந்துள்ளார்.

(http://www.csmonitor.com/World/Asia-Pacific/2008/0207/p04s01-woap.html - Temple demolitions anger Malaysia Indians)

2007-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கோலாலம்பூரில் மாபெரும் அமைதிப் பேரணி நடைபெற்றது. மலேசிய இந்தியர்களுக்கு பொருளாதார வகைகளில் சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும். சமய, மொழி, கலாசார உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பது தலையாய கோரிக்கை.

அந்தப் பேரணியில் எம்.குலசேகரன் கலந்து கொண்டு ஆதரவு வழங்கினார். அதைப்பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனுமதி கேட்ட போது அவருடைய மனு முற்றாக மறுக்கப் பட்டது. இலங்கையில் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகவும் அவர் நாடாளுமன்றத்தில் அடிக்கடி குரல் எழுப்பி வருகிறார்.

மலேசிய மக்களவையில் இந்தியர்களின் பிரச்னைகளைப் பற்றி பேசும் போது பல முறை ஆளும் கட்சியினரால் இவர் கேலி செய்யப்பட்டு உள்ளார். கீழ்த்தரமான சொற்களினால் வேதனைப்படுத்தப் பட்டுள்ளார்.
Image result for kulasegaran m

ஒருமுறை அவர் நாடாளுமன்றத்தில் ‘வேசைக்குப் பிறந்தவனே’ என்றும் திட்டப்பட்டும் இருக்கிறார். ’ஏசுபவர்கள் ஏசிவிட்டுப் போகட்டும். நான் என் கடமையைச் செய்து கொண்டே இருப்பேன்’ என்று சொன்னார் குலசேகரன்.

("Tajuddin uses 'b*****d' on Kulasegaran". Asia One. 6 November 2008)

2007 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் துணை சபாநாயகரின் கட்டளையை மீறி சபாநாயகர், துணை சபாநாயகர்களின் சம்பள உயர்வைப் பற்றி தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்ததார்.

அதனால் குலசேகரன் நாடாளுமன்றத்தில் இருந்தே வெளியேற்றம் செய்யப் பட்டார். நான்கு நாட்கள் அவர் நாடாளுமன்றத்தின் முகப்பு அறையிலேயே உட்கார்ந்து தன் பணிகளைச் செய்தார். இதுவும் ஒரு வரலாற்றுச் சுவடு.

ஜனநாயகக் கட்சி ஒரு மாதாந்திர இதழை வெளியிட்டு வருகிறது. அதன் பெயர் ராக்கெட். இந்த இதழின் தமிழ்ப் பகுதி ஆசிரியராகச் சில மாதங்கள் பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அப்போது தான் குலசேகரன் என் நெருங்கிய நண்பர் ஆனார். 

 Image result for kulasegaran m

நடந்து முடிந்த 2018 தேர்தலுக்கு நான்கு நாட்களுக்கு முன்னர் குலசேகரனைச் சந்தித்துப் பேசினேன். புந்தோங் பகுதியில் தன் குழுவினரோடு பிரசாரத்திற்கு வந்து இருந்தார். மற்றவர்களைப் பிரசாரத்திற்கு அனுப்பிவிட்டு என் வீட்டிற்கு வந்து விட்டார். பிரசார அலுப்பு. ஓய்வு எடுக்க வந்தார்.

நீண்ட நேரம் பேசிக் கொண்டு இருந்தோம். அதன் பின்னர் சந்திக்க முடியவில்லை. தேர்தலில் வெற்றி பெற்றதும் வாழ்த்துச் சொல்ல அழைத்தேன். புத்ராஜெயாவில் இருப்பதாகச் சொன்னார்.

அதன் பின்னர் தொடர்பு கொள்ள முடியவில்லை. இப்போது ஓர் அமைச்சர். அழைத்தேன். கிடைக்கவில்லை. நிச்சயம் ரொம்பவும் பிசியாக இருப்பார். மலேசியாவின் புதிய மனிதவள அமைச்சர் அல்லவா.

இன்னும் ஒரு விசயம். எதிர்க்கட்சிகளை விமர்சித்துப் பல கட்டுரைகள் எழுதி இருக்கிறேன். அதன் தாக்கத்தில் சென்ற 2017-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தாக்கப் பட்டேன். தெரிந்த விசயம். அப்போது எனக்கு ஆதரவாக குலசேகரன் களம் இறங்கினார். நண்பர் என்ற முறையில் உதவிகள் செய்தார். மறக்க முடியாது. 
Image result for kulasegaran m


இப்போது அவர் ஓர் அமைச்சர். மலேசியா வாழ் தமிழர்களுக்கு ஒரு தமிழர்ப் பிரதிநிதியாக வந்து இருக்கிறார். தமிழர்களுக்குப் பெருமை.

பரந்து விரிந்து கிடக்கும் வரலாற்றுச் சுவடுகளில் வையகம் போற்றும் மனுக்குல மைந்தர்கள் வாழ்கின்றார்கள். மங்காப் புகழுடன் உயிர்ப்பு பெற்ற ஆன்ம ஜீவ நாடிகளாக வாழ்ந்து கொண்டும் இருக்கின்றார்கள்.

அவர்களில் சிலர் வரலாற்றுச் சப்த சுவரங்களின் சொர்ண சகாப்தங்களாக மாறுகின்றார்கள். அந்தச் சகாப்த வேதங்களையும் தாண்டி நம்முடன் வாழ்ந்து கொண்டும் இருக்கின்றார்கள். அன்றும் இன்றும் மனித மனச் சங்கமங்களில் மந்திரப் புன்னகைகளை அள்ளித் தெளித்து ஆலாபனையும் செய்கின்றார்கள். 

மாண்புமிகு எம். குலசேகரன் உண்மையிலேயே மலேசிய மண்ணின் மைந்தன். மலேசிய வரலாற்றில் ஓர் அவதாரப் புருஷன். மலேசியச் சுவடிகளில் இருந்து மறைக்க முடியாத மனிதக் களஞ்சியமாக வலம் வருகின்றார். அமைச்சர் குலசேகரன் அவர்களை வாழ்த்துகிறோம்.

ஞானசேகரன் மாணிக்கம் இவரின் மக்களின் நலனுக்காக துணிவாக போராடும் குணத்திறகு வழங்கப்படும் பதவி இது. இறைவன் அருளால் நீண்டகால ஆயுளுடன் சேவையாற்றுவாராக.

Ta Peru குலாவின் போராட்டம் தொடரவேண்டும்.
என்இனமானவர்களுக்கு அவரது சமூகச்சேவை அயராமல் அவர்களை சென்றடையவேண்டுகிறேன். அமைச்சராக தேர்வு பெற்றமைக்கு வாழ்த்துகள்
 


Selbong Ratnasamy Thevar Congrats YAB Gunasegaran. We are indeed happy to see you representing the Indians in the cabinet however time and circumstances has to prove your mettle.

Maru Krishnan அரசியலில் பல ரகம் உண்டு அவைகளில் பெரும்பாலும் சுயநலம் நிறைய இருக்கும் அதுவும் மலேசியாவில் சொல்லவேண்டாம் இந்தியரில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராகிவிட்டாலே தலையில் கொம்பு முளைத்து விடும் ஆனால் நமது குலா செல்லமாக அழைப்பது 4 தடவை ஒரே இடத்தில் அதுவும் சீனர்கள் 70% உள்ள இடத்தில் வெற்றிப்பெற்று தமிழர்களின் உயர்வுக்காக போராடும் போராட்டவாதியான நம் குலா மறைந்த பட்டு,டேவிட்டுக்கு பிறகு ஒரு உண்மையான தொண்டனைப் பார்க்கிறேன். பாராட்டுக்கள் உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள்.

Ganabaskaran Nadason அருமையான கருத்து பரிமாற்றம் ஒரு அற்புதமான மனிதரைப்பற்றிமல்லாது, உயர்ந்த சிந்தனையும் சமுதயாய பற்றும் கொண்ட ஒரு இனிய நண்பர், மனிதர்

Image may contain: 1 person, standing 

Image may contain: 5 people, people smiling 

Pushpalata Ramasamy வளமான உழைக்கும் கரங்களை உருவாக்குங்கள் ஐயா மாண்புமிகு அவர்களே