குங்குமப்பூவும் சிவப்புக் குழந்தையும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

24 டிசம்பர் 2012

குங்குமப்பூவும் சிவப்புக் குழந்தையும்

மலேசியா, ’மயில்’ மாத இதழில் ‘அறியாமையும் அறிவியலும்’ எனும் கட்டுரைத் தொடர் வெளிவருகிறது. இந்தக் கட்டுரை மே 2012 இதழில் பிரசுரிக்கப்பட்டது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 

மஞ்சுளா. பள்ளி ஆசிரியை. வயது 25. படித்துப் பட்டம் பெற்றவள். நிறைமாதக் கர்ப்பிணி. தலைப்பிரசவம். சிவப்பான குழந்தை வேண்டும். அதற்காக கல்கண்டு லேகியம், கானாங்கெளுத்தி லேகியம், தொட்டால் சிணுங்கி லேகியம், தொடாப் பிடாரி லேகியம் என்று பார்க்கின்ற லேகியங்களை எல்லாம் வாங்கிச் சாப்பிட்டாள்.

அவளுடைய கணவன் சற்று அடர்த்தியான நிறம். பிறக்கிற குழந்தையும் கணவனைப் போல நிறத்தில் இருக்க வேண்டாம். சிவப்பாக வேண்டும் என்கிற சின்ன பெரிய ஆசை.

அந்த நேரம் பார்த்து ஊசிமணி விற்கிற ஒருத்தி வீட்டிற்கு வந்தாள். அவளுடைய பெயரும் ஊசிமணி. மூட்டையை அவிழ்த்துக் கடை  கட்டினாள். மருந்து மாய ஜாலங்களைப் பார்த்த மஞ்சுளாவிற்கு மனசுக்குள் மெலிதான ஒரு மயக்கம். சும்மா சொல்லக்கூடாது.
 
ஊசிமணி அள்ளிப் போட்ட மருந்துகள் எல்லாம், பிறக்கிற குழந்தையைச் சிவப்பாக்கிப் பார்க்கின்ற மூலிகை வேதங்கள்.  கடைசியில் அசல் அசாம் நாட்டு குங்குமப்பூ மஞ்சுளாவிற்குப் பிடித்துப் போனது.

குங்குமப்பூவின் பெயர் அசாம் அங்கானா. கேள்விபட்டிருக்கிறீர்களா.  நானும் கேள்விபட்டதில்லை. அந்தக் குங்குமப்பூவைத் தான் பர்மாவில் கர்ப்பிணிப் பெண்கள் அதிகமாக விரும்பிச் சாப்பிடுகிறார்களாம். நூற்றில் 99 குழந்தைகள் அங்கே சிவப்பாகப் பிறக்கிறார்களாம்.

அப்புறம் அந்த அசாம் அங்கானா, அமெரிக்காவில் உள்ள பெண்களை ஐஸ்வர்யா மாதிரி வெள்ளையாக ஆக்குகிறதாம். அத்தனையும் கொலம்பஸ் காலத்து புள்ளிவிவரங்கள். நம்ப கேப்டன் ஜெயகாந்த் தோற்றார் போங்கள்.

ஒரு டப்பா குங்குமப்பூ முன்னூறு ரிங்கிட். குழந்தை சிவப்பாகப் பிறக்க வேண்டும் என்றால் சும்மாவா. காசு என்ன, இன்றைக்கு இருக்கும். நாளைக்குப் போய்விடும். காசு கைமாறியது. பற்றாக்குறைக்கு வீட்டில் இருந்த நாலைந்து சேலைகளையும் மஞ்சுளா தானம் செய்தாள்.

நல்லபடியாக ஊசிமணியை அனுப்பியும் வைத்தாள். பிறக்கப் போகும் குழந்தையின் சிவப்பு நிறத்தில் இனம் தெரியாத கற்பனை. பரவச நிலையில் ஒரு புதுமையான வாழ்க்கை.

அசாம் நாட்டு இறக்குமதியை அவள் சர்வலோக சித்தமாக நினைத்தாள். ஒரு நாளைக்கு மூன்று வேளை. சுத்த பத்தமாகச் சாப்பிட்டாள். எண்ணி வைத்து ஏழாவது நாள்.

என்ன நடந்தது தெரியுமா? சொன்னால் நம்பமாட்டீர்கள்.

மஞ்சுளா இறந்து போனாள். குழந்தையைப் பற்றி கேட்க வேண்டாம். வயிற்றுக்குள்ளேயே விலை பேசிக் கொண்டது. புருசன்காரன் கத்தினான் கதறினான்.  என்ன செய்வது. போனது போனதுதான். அரிசி மாவில் சாயத்தைக் கலந்து குங்குமப்பூ என்று விற்றால் யாருக்குத் தெரியும். சொல்லுங்கள்.

சாயத்தில் விஷம் கூடுதலாகக் கலந்து இருந்தது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. ஊசிமணியை ஊர்பூராவும் தேடிப் பார்த்தார்கள். ஆள் அகப்படவே இல்லை. ஊசிக்கப்பலில் ஊர் மாறிப்  போய்விட்டாளாம்.

குங்குமப்பூவைக் கொஞ்சமாகச் சாப்பிட்டிருந்தால் பரவாயில்லை. ஆசை... ஆசை... கழுத்திற்கும் மேலே கயிறு கட்டிய ஆசை. குழந்தை சிவப்பாக, சீக்கிரமாகப் பிறக்க வேண்டும் என்கிற அவசர ஆசை. பாவம் அவள். கடைசியில் புருசனும் இல்லை. பிள்ளையும் இல்லை. காய்ந்த நெஞ்சங்களை ஈரமாக்குகின்ற கண்ணீர்க் கதை அது.

சரி. நம்ப விஷயத்திற்கு வருவோம். விஷச் சாயம் கலந்த குங்குமப்பூவைச் சாப்பிட்டதால் ஒரு பெண் இறந்து போனாள் என்பது ஒரு புறம் இருக்கட்டும்.  ஆனால், குங்குமப்பூவைச் சாப்பிடுவதால் பிறக்கின்ற குழந்தை சிவப்பாகப் பிறக்குமா?

அதற்கு முன் ஒரு முக்கியமான விஷயம். நன்றாகப் படித்த ஒரு பெண்ணே, இப்படி அறியாமைக்கு அடிமையானால் மற்றவர்களை என்னவென்று சொல்வது. சொல்லுங்கள். சுற்றுமுற்றும் பாருங்கள். மனசாட்சியைக் கிலோ கணக்கில் கூறு போட்டு விற்கின்ற சொந்த பந்தங்கள் தான் அதிகமாகத் தெரியும். வெளிச்சம் போட்டு பார்க்கவே வேண்டிய அவசியமே இல்லை.

அந்த மாதிரியான உலகத்தில்  நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அன்னப்பறவை போல அசலையும் நகலையும் பிரித்துப் பார்க்க வேண்டிய காலக் கட்டத்தில் வாழ்கிறோம்.

குங்குமப்பூவைச் சாப்பிட்டால் பிறக்கின்ற குழந்தை சிவப்பாகப் பிறக்குமா? இல்லவே இல்லை. வானத்தில் இருந்து தேவதை கீழே இறங்கி வந்து உங்களுக்கு ஒரு கோடி ரிங்கிட் கொடுத்தாள் என்று யாராவது சொன்னால் அதைக்கூட நம்பலாம். ஆனால், குங்குமப்பூவைச் சாப்பிட்டு குழந்தை சிவப்பாக பிறந்தது என்று சொன்னால் நம்ப முடியாது.

ஒரு குழந்தையின் நிறத்தைத் தீர்மானிப்பது ஓர் அப்பா, ஓர் அம்மாவின் நிறங்கள்தான். கோடிக் கோடியாகக் கொடுத்து குங்குமப்பூவை வாங்கிச் சாப்பிட்டாலும் சரி...

இல்லை டன் கணக்கில் ஆட்டுப்பால் சோப்பு போட்டுக் குளித்தாலும் சரி... பிறக்கிற குழந்தை அப்பா அம்மா மாதிரிதான் பிறக்கும். ஆர்க்டிக் துருவத்தில் இருக்கின்ற எஸ்கிமோ மாதிரியோ இல்லை... உகாண்டாவில் இருந்த இடி அமீன் மாதிரியோ பிறக்கப் போவதில்லை.

அப்படியே தப்பித் தவறி பிறந்துவிட்டது என்று வைத்துக் கொள்வோம். அப்புறம் வேறு வினையே வேண்டாம். சொல்லாமல் கொள்ளாமல் அந்த ஆர்டிக் பக்கமாய் ஓடிவிடுவதே நல்லது.

குங்குமப்பூ என்பது பிறக்கும் குழந்தைக்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கும் என்பதை யாராலும்... இதுவரையில்... அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முடியவில்லை. ஆனால், கருவுற்ற ஐந்தாவது  மாதத்தில் இருந்து ஒன்பதாவது மாதம் வரை குங்குமப்பூவைப் பாலில் கலந்து குடித்து வந்தால் தாயின் இரத்தம் சுத்தமாகும். குழந்தைக்கு தேவையான சத்துகளும் கிடைக்கும். அதனால் ஆரோக்கியமான குழந்தையை ஈன்று எடுக்கலாம்.

ஆரோக்கியமான குழந்தைதான் அழகான குழந்தை என்பதை நம் முன்னோர்கள் அறிந்து வைத்து இருந்தனர். அதனால், குங்குமப்பூவைக் கருவுற்ற பெண்களுக்கு கொடுத்தார்கள். நல்ல நலமான குழந்தை கிடைக்க குங்குமப்பூ உதவுகிறது. அவ்வளவுதான்.

ஆரோக்கியம்தான் அழகு. அது தவறான வியாக்கியானமாகி, சிவப்புதான் அழகு என்று திரிந்து போனது. ஒரு நல்ல நடைமுறை வழக்கம், வக்கிரமான கடைச்சரக்காகிப் போன பழக்கம்தான் மகா வேதனையான விஷயம்!

அசல் சுத்தமான குங்குமப்பூ கிடைப்பது என்பது மிகச் சிரமம். அசலான குங்குமப்பூவைச் சிலர் பார்த்திருக்கலாம்; பலர் பார்த்திருக்க முடியாது. விலையோ தங்கத்தின் விலையில் வந்து நிற்கிறது.

ஒரு கிலோகிராம் குங்குமப்பூவின் விலை 68,000 ரிங்கிட். அதாவது 12 இலட்சம் ரூபாய். சில சமயங்களில் ஓர் இலட்சம் ரிங்கிட்டையும் தாண்டி இருக்கிறது. அதாவது ஒரு சின்ன புளியங்கொட்டை அளவு கொண்ட குங்குமப்பூவின் விலை 1000 ரிங்கிட், ஏறக்குறைய 17,800 ரூபாய் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். தங்கத்தின் விலையும் அவ்வளவுதானே.

அப்படியே அவ்வளவு விலை கொடுத்து வாங்கிச் சாப்பிட்டாலும் குழந்தை சிவப்பாகப் பிறக்காது. அதுதான் சத்தியமான உண்மை. தயவுசெய்து தெரிந்து கொள்ளுங்கள்.

குங்குமப்பூவைச் சாப்பிட்டால் குழந்தை நல்ல உடலநலத்துடன் பிறக்கும். சிவப்பாகப் பிறக்காது. மறுபடியும் சொல்கிறேன். குங்குமப்பூவைச் சாப்பிடுவதால் குழந்தை சிவப்பாக பிறக்கவே பிறக்காது. பிறக்கும் என்று நினைத்தால் அது உங்களை மிஞ்சிய அதீத நம்பிக்கை.

மற்றபடி, மூட நம்பிக்கை என்று நான் சொல்ல மாட்டேன். அது ஒரு தவறான நம்பிக்கை. ஓர் அறியாமை. இந்தியாவைப் பொறுத்தவரை காஷ்மீர் குங்குமப்பூ தான் புகழ்பெற்றது. ஒரு கிலோகிராம் குங்குமப்பூ தயாரிக்க 500,000 குங்குமப் பூக்கள் தேவை. 

அதாவது இரண்டு, மூன்று காற்பந்து திடல்கள் அளவிற்கு குங்குமச் செடிகள் இருக்க வேண்டும். 500 பூக்களைப் பறித்து வந்து உலர வைத்தால் ஒரே ஒரு கிராம் ஈரமான குங்குமப்பூ கிடைக்கும்.

அதையும் நன்றாக பல நாட்களுக்கு உலர வைக்க வேண்டும். அதில் ஓர் அரை கிராம்கூட தேறாது. இரண்டு மூன்று சிட்டிகை. அவ்வளவுதான். அதுதான் அசலான  குங்குமப்பூ.

சரி. அரிதிலும் அரிதாகக் கிடைக்கக் கூடிய இந்தக் குங்குமப்பூவை ஒரு டப்பா பத்து வெள்ளி, இருபது வெள்ளி என்று சந்தையில் போட்டு விற்கிறார்களே. அதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். வியாபாரிகளைக் குறை சொல்ல வேண்டாம். மொத்தமாக வாங்கிச் சில்லறையாக விற்கிறார்கள்.

அவர்களுக்கு என்ன கிடைத்ததோ அதைக் கொண்டு வந்து விற்கிறார்கள். அவர்களைக் குறை சொல்லி ஒன்றும் இல்லை. ஆனால், கழுத்தை அறுக்காமல் காசு பார்த்தால் மகிழ்ச்சி.

ஒரு பொருளுக்கு சந்தையில் மவுசு என்றால், அதில் போலியும் வந்துவிடும்.  குங்குமப்பூ விஷயத்திலும் அப்படித்தான்.

அசல் ’ஒரிஜினல்’ குங்குமப்பூ என்று சொல்லி, அரிசி மாவையும் அதிரச மாவையும் சிவப்பு சாயத்தில் கலந்து விற்று, காசு பார்க்கும் கூட்டமும் இருக்கிறது.

தெரியாத்தனமாய்க் கலப்படங்களை வாங்கிச் சாப்பிட்டவர்களுக்கு கடைசியில் நம்ப மஞ்சுளா மாதிரி முடிவு வரலாம்.

எது அசல், எது போலி  என்று தெரிந்து கொள்ள வழி இருக்கிறது. அசல் குங்குமப்பூவை ஒரு கிண்ணத் தண்ணீரில் போட்டால் அது மெதுவாகக் கரைந்து தங்க நிறத்தில் மின்னும். மறுபடியும் சொல்கிறேன். அசல் குங்குமப்பூ தண்ணீரில் தங்க நிறத்திற்கு மாறும். சரியா.

போலியான குங்குமப்பூ உடனேயே தண்ணீரில் கரைந்துவிடும். தண்ணீரும் சிவப்பு நிறமாகிவிடும். அசல் குங்குமப்பூ தண்ணீரில் கரைய வெகு நேரம் பிடிக்கும். போலியான குங்குமப்பூ உடனே கரைந்துவிடும்.

கர்ப்பிணிப் பெண்கள் அதிகமாகவும் குங்குமப்பூவைச் சாப்பிடக் கூடாது. அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு. ஆக, வயிற்றில் இருக்கும் கரு கலைந்து போக வாய்ப்பு இருக்கிறது. அதற்கு காரணம் குங்குமப்பூ அதிக வெப்பத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரு வகையான மூலிகைப் பொருள்.

குங்குமச் செடியை Saffron Crocus என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். குங்குமப்பூவிற்கு Saffron என்று பெயர். அதன் பூக்கள் மிக அழகாக ஜொலிக்கும். இந்தப் பூவின் மகரந்த சேகரத்தைத் தான் நாம் குங்குமப்பூ என்று சொல்கிறோம். குங்குமப்பூவின் தாயகம் ஈரான். இதன் சாகுபடி வரலாறு 3,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது.

பாரசீகர்கள் காஷ்மீர் மீது படையெடுத்து குடியேறிய பின்னர்தான் இந்தியாவிற்கு குங்குமப்பூ வந்தது. தமிழர்கள் 2000 ஆண்டுகளுக்கும் மேலாக குங்குமப்பூவைப் பயன்படுத்தி வருகிறார்கள். தமிழில் இது "ஞாழல்பூ" என்றும் அழைக்கப்படுகிறது. உலகம் முழுமையும் ஓர் ஆண்டில் 300 டன் குங்குமப்பூ தயாரிக்கப்படுகிறது.

சரி. உலகிலேயே அதிகமான குங்குமப்பூவை ஏற்றுமதி செய்யும் நாடு இந்தியா என்று சிலர் நினக்கலாம். அது தப்பு. பாரசீக நாடான ஈரான் தான் வாகை சூடுகிறது. அடுத்து ஸ்பெயின், இந்தியா, கிரீஸ், இத்தாலி, மொரோக்கோ, அசர்பைஜான் வருகின்றன. மூன்றாவது இட்த்தில் இந்தியா.

மாவீரன் அலெக்சாண்டர் இந்தியாவின் மீது படையெடுத்த போது போர் வீரர்களுக்கு ஏற்பட்ட காயங்கள் ஆற குங்குமப் பூக்களை அரைத்து பூசியுள்ளனர். அப்போது வடஇந்தியாவை ஆட்சி செய்த போரஸ் மன்னனின் வீரதீரத்தைப் பாராட்டி அவனுக்கே இந்தியாவைத் திருப்பிக் கொடுத்து விட்டுப் போனார் அலெக்சாண்டர்.

அதற்குப் பதிலாக போரஸ் மன்னனிடம் இருந்து யானைகள் மீது குங்குமப்பூவையும் மாம்பழங்களையும் ஏற்றிக் கொண்டு தாயகம் சென்றார்.  இதில் ஒரு வேதனையான நிகழ்ச்சியும் இருக்கிறது. இந்திய மாம்பழங்களின் மீது ஆசைப்பட்டு அதிகமாகச் சாப்பிட்டதால் அந்த மாவீரன் தாயகம் திரும்பாமலேயே ஈரானில் இறந்து போனதாக வரலாறு கூறுகிறது. அலெக்சாண்டருக்கு விஷம் கொடுத்து அவர் கொல்லப்பட்டதாகவும் இன்னும் ஒரு செய்தி இருக்கிறது.

இந்தக் குங்குமப்பூவினால் ஐரோப்பாவில் ஒரு பெரிய போரே நடந்து இருக்கிறது. அது தெரியுமா உங்களுக்கு?

பதினான்கு வாரங்களுக்கு ஜெர்மனியில் குங்குமப்பூ போர் நடந்தது. அதன் பின்னர், குங்குமப்பூவில் கலப்படம் இல்லாமல் இருக்க Safranschou  எனும் சட்டம் இயற்றப்பட்டது. அந்தச் சட்டத்தின்படி,  குங்குமப்பூக்களில் கலப்படம் செய்தவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது, தொடர்ந்து குற்றம் செய்பவர்களுக்கு மரண தண்டனையும் வழங்கப்பட்டது.

மங்கோலிய மன்ன்ன் ஜெங்கிஸ்கான் பாரசீகத்தின் மீது படை எடுத்த பிறகுதான் குங்குமப்பூ சீனாவுக்கு வந்தது. அதை விடுங்கள். இன்னும் ஒரு முக்கியமான விஷயம் வருகிறது. வரலாற்று நாயகி கிளியோபாட்ராவை உங்களுக்குத் தெரியும்தானே.

அவரைப் பற்றிய செய்தி. ஆண்பெண் உறவு என்பது ஓர் இயற்கையான நியதி. மனித உணர்வுகளுக்கு ஒரு வடிகால் என்றுகூட சொல்லலாம். தப்பில்லை. ஆனால், அந்த உறவின் புனிதத் தன்மையையும் தாண்டி,  கூடுதலான பரவசத்தை நிலையை அடைய வேண்டும் என்பதற்காக கிளியோபாட்ரா என்ன செய்தாள் தெரியுமா.

குளிக்கும் போது கழுதைப்பாலில் குங்குமப்பூவைக் கலந்து பயன்படுத்தினாளாம். நூறு கழுதைகளின் பாலில் பத்து கிலோ அளவிற்கு குங்குமப்பூவைக் கலந்து பயன்படுத்தினாளாம். அவ்வளவு குங்குமத்திற்கு எங்கே போனாள் என்று தெரியவில்லை.

இந்தக் கட்டத்தில் என்னை மன்னிக்கவும்... அந்த வசீகரக் குளியலைப் பற்றிய மேல் விவரங்களைக் கேட்டால் எனக்குத் தெரியாது. அதிகமாக அறிந்தவர்கள் இருவர் இருந்தனர். ஒருவர் ஜூலியஸ் சீசர். இன்னொருவர் மார்க் அந்தோனி.  அவர்களுக்கு கடிதம் எழுதலாம்.

பதில் வருமா என்று தெரியவில்லை. கிளியோபாட்ராவிற்கு மேலும் இரண்டு கணவன்மார்கள் இருந்தார்கள். அவர்களைப் போய்க் கேட்டுப் பாருங்கள் என்று ஜூலியஸ் சீசர் சொன்னாலும் சொல்லலாம்.  நமக்கு ஏன் அந்த வம்பு?

ஆக, உண்மையான குங்குமப்பூ கிடைப்பது என்பது ரொம்பவும் கஷ்டம். அசலான குங்குமப்பூ வேண்டும் என்பது எல்லோருடைய ஆசைதான். பிரச்னையே இல்லை.

காஷ்மீருக்குப் போக வேண்டும். அங்கே இருக்கிற குங்குமத் தோட்டத்திலேயே குடிசை போட வேண்டும். குங்குமப் பூ உலர்ந்து மெலிசாக இரண்டு மூன்று மாதங்கள் பிடிக்கும். கடும் குளிரையும் தாங்கிக் கொண்டு, பொறுமையின் சின்னமாக இருக்க வேண்டும்.

இதை எல்லாம் தாண்டி ’சிவப்புதான் எனக்கு பிடிச்ச கலரு’ என்று யாராவது அடம் பிடித்தால் ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. மனசில் பட்டதைச் சொல்கிறேன். தப்பாக நினைக்க வேண்டாம். பேசாமல் பிறந்த அந்தக் குழந்தைக்கு சிவப்பு சாயத்தை அடித்துவிட்டால் பிரச்னை தீர்ந்தது. என்ன சொல்கிறீர்கள்.

அப்புறம் என்ன. குழந்தை நன்றாக, அழகாக செக்கச் செவேல் என்று ஜொலிக்கும். கம்பெனிக்காரர்களும் விளம்பரம் தேடி வீட்டிற்கு வருவார்கள். பையில் நாலு காசு சேர்ந்த மாதிரியும் இருக்கும். ஸ்ரீதேவி மாதிரி குழந்தை சிரித்த மாதிரியும் இருக்கும். சாய்ம் அடித்தும் குழந்தை சிவப்பாக மாறவில்லையா. ம்ம்ம்... வேறு வழி இல்லை. ஆளை விடுங்கள்!
 
23 டிசம்பர் 2012

குங்குமப்பூவும் சிவப்புக் குழந்தையும்

மலேசியா, ’மயில்’ தாளிகையில் ‘அறியாமையும் அறிவியலும்’ எனும் கட்டுரைத் தொடரில், மே 2012 இதழில் பிரசுரிக்கப்பட்டது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 

மஞ்சுளா. பள்ளி ஆசிரியை. வயது 25. படித்துப் பட்டம் பெற்றவள். நிறைமாதக் கர்ப்பிணி. தலைப்பிரசவம். சிவப்பான குழந்தை வேண்டும். அதற்காக கல்கண்டு லேகியம், கானாங்கெளுத்தி லேகியம், தொட்டால் சிணுங்கி லேகியம், தொடாப் பிடாரி லேகியம் என்று பார்க்கின்ற லேகியங்களை எல்லாம் வாங்கிச் சாப்பிட்டாள்.

அவளுடைய கணவன் சற்று அடர்த்தியான நிறம். பிறக்கிற குழந்தையும் கணவனைப் போல நிறத்தில் இருக்க வேண்டாம். சிவப்பாக வேண்டும் என்கிற சின்ன பெரிய ஆசை.

அந்த நேரம் பார்த்து ஊசிமணி விற்கிற ஒருத்தி வீட்டிற்கு வந்தாள். அவளுடைய பெயரும் ஊசிமணி. மூட்டையை அவிழ்த்துக் கடை  கட்டினாள். மருந்து மாய ஜாலங்களைப் பார்த்த மஞ்சுளாவிற்கு மனசுக்குள் மெலிதான ஒரு மயக்கம். சும்மா சொல்லக்கூடாது.
 
ஊசிமணி அள்ளிப் போட்ட மருந்துகள் எல்லாம், பிறக்கிற குழந்தையைச் சிவப்பாக்கிப் பார்க்கின்ற மூலிகை வேதங்கள்.  கடைசியில் அசல் அசாம் நாட்டு குங்குமப்பூ மஞ்சுளாவிற்குப் பிடித்துப் போனது.

குங்குமப்பூவின் பெயர் அசாம் அங்கானா. கேள்விபட்டிருக்கிறீர்களா.  நானும் கேள்விபட்டதில்லை. அந்தக் குங்குமப்பூவைத் தான் பர்மாவில் கர்ப்பிணிப் பெண்கள் அதிகமாக விரும்பிச் சாப்பிடுகிறார்களாம். நூற்றில் 99 குழந்தைகள் அங்கே சிவப்பாகப் பிறக்கிறார்களாம்.

அப்புறம் அந்த அசாம் அங்கானா, அமெரிக்காவில் உள்ள பெண்களை ஐஸ்வர்யா மாதிரி வெள்ளையாக ஆக்குகிறதாம். அத்தனையும் கொலம்பஸ் காலத்து புள்ளிவிவரங்கள். நம்ப கேப்டன் ஜெயகாந்த் தோற்றார் போங்கள்.

ஒரு டப்பா குங்குமப்பூ முன்னூறு ரிங்கிட். குழந்தை சிவப்பாகப் பிறக்க வேண்டும் என்றால் சும்மாவா. காசு என்ன, இன்றைக்கு இருக்கும். நாளைக்குப் போய்விடும். காசு கைமாறியது. பற்றாக்குறைக்கு வீட்டில் இருந்த நாலைந்து சேலைகளையும் மஞ்சுளா தானம் செய்தாள்.

நல்லபடியாக ஊசிமணியை அனுப்பியும் வைத்தாள். பிறக்கப் போகும் குழந்தையின் சிவப்பு நிறத்தில் இனம் தெரியாத கற்பனை. பரவச நிலையில் ஒரு புதுமையான வாழ்க்கை.

அசாம் நாட்டு இறக்குமதியை அவள் சர்வலோக சித்தமாக நினைத்தாள். ஒரு நாளைக்கு மூன்று வேளை. சுத்த பத்தமாகச் சாப்பிட்டாள். எண்ணி வைத்து ஏழாவது நாள்.

என்ன நடந்தது தெரியுமா? சொன்னால் நம்பமாட்டீர்கள்.

மஞ்சுளா இறந்து போனாள். குழந்தையைப் பற்றி கேட்க வேண்டாம். வயிற்றுக்குள்ளேயே விலை பேசிக் கொண்டது. புருசன்காரன் கத்தினான் கதறினான்.  என்ன செய்வது. போனது போனதுதான். அரிசி மாவில் சாயத்தைக் கலந்து குங்குமப்பூ என்று விற்றால் யாருக்குத் தெரியும். சொல்லுங்கள்.

சாயத்தில் விஷம் கூடுதலாகக் கலந்து இருந்தது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. ஊசிமணியை ஊர்பூராவும் தேடிப் பார்த்தார்கள். ஆள் அகப்படவே இல்லை. ஊசிக்கப்பலில் ஊர் மாறிப்  போய்விட்டாளாம்.

குங்குமப்பூவைக் கொஞ்சமாகச் சாப்பிட்டிருந்தால் பரவாயில்லை. ஆசை... ஆசை... கழுத்திற்கும் மேலே கயிறு கட்டிய ஆசை. குழந்தை சிவப்பாக, சீக்கிரமாகப் பிறக்க வேண்டும் என்கிற அவசர ஆசை. பாவம் அவள். கடைசியில் புருசனும் இல்லை. பிள்ளையும் இல்லை. காய்ந்த நெஞ்சங்களை ஈரமாக்குகின்ற கண்ணீர்க் கதை அது.

சரி. நம்ப விஷயத்திற்கு வருவோம். விஷச் சாயம் கலந்த குங்குமப்பூவைச் சாப்பிட்டதால் ஒரு பெண் இறந்து போனாள் என்பது ஒரு புறம் இருக்கட்டும்.  ஆனால், குங்குமப்பூவைச் சாப்பிடுவதால் பிறக்கின்ற குழந்தை சிவப்பாகப் பிறக்குமா?

அதற்கு முன் ஒரு முக்கியமான விஷயம். நன்றாகப் படித்த ஒரு பெண்ணே, இப்படி அறியாமைக்கு அடிமையானால் மற்றவர்களை என்னவென்று சொல்வது. சொல்லுங்கள். சுற்றுமுற்றும் பாருங்கள். மனசாட்சியைக் கிலோ கணக்கில் கூறு போட்டு விற்கின்ற சொந்த பந்தங்கள் தான் அதிகமாகத் தெரியும். வெளிச்சம் போட்டு பார்க்கவே வேண்டிய அவசியமே இல்லை.

அந்த மாதிரியான உலகத்தில்  நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அன்னப்பறவை போல அசலையும் நகலையும் பிரித்துப் பார்க்க வேண்டிய காலக் கட்டத்தில் வாழ்கிறோம்.

குங்குமப்பூவைச் சாப்பிட்டால் பிறக்கின்ற குழந்தை சிவப்பாகப் பிறக்குமா? இல்லவே இல்லை. வானத்தில் இருந்து தேவதை கீழே இறங்கி வந்து உங்களுக்கு ஒரு கோடி ரிங்கிட் கொடுத்தாள் என்று யாராவது சொன்னால் அதைக்கூட நம்பலாம். ஆனால், குங்குமப்பூவைச் சாப்பிட்டு குழந்தை சிவப்பாக பிறந்தது என்று சொன்னால் நம்ப முடியாது.

ஒரு குழந்தையின் நிறத்தைத் தீர்மானிப்பது ஓர் அப்பா, ஓர் அம்மாவின் நிறங்கள்தான். கோடிக் கோடியாகக் கொடுத்து குங்குமப்பூவை வாங்கிச் சாப்பிட்டாலும் சரி...

இல்லை டன் கணக்கில் ஆட்டுப்பால் சோப்பு போட்டுக் குளித்தாலும் சரி... பிறக்கிற குழந்தை அப்பா அம்மா மாதிரிதான் பிறக்கும். ஆர்க்டிக் துருவத்தில் இருக்கின்ற எஸ்கிமோ மாதிரியோ இல்லை... உகாண்டாவில் இருந்த இடி அமீன் மாதிரியோ பிறக்கப் போவதில்லை.

அப்படியே தப்பித் தவறி பிறந்துவிட்டது என்று வைத்துக் கொள்வோம். அப்புறம் வேறு வினையே வேண்டாம். சொல்லாமல் கொள்ளாமல் அந்த ஆர்டிக் பக்கமாய் ஓடிவிடுவதே நல்லது.

குங்குமப்பூ என்பது பிறக்கும் குழந்தைக்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கும் என்பதை யாராலும்... இதுவரையில்... அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முடியவில்லை. ஆனால், கருவுற்ற ஐந்தாவது  மாதத்தில் இருந்து ஒன்பதாவது மாதம் வரை குங்குமப்பூவைப் பாலில் கலந்து குடித்து வந்தால் தாயின் இரத்தம் சுத்தமாகும். குழந்தைக்கு தேவையான சத்துகளும் கிடைக்கும். அதனால் ஆரோக்கியமான குழந்தையை ஈன்று எடுக்கலாம்.

ஆரோக்கியமான குழந்தைதான் அழகான குழந்தை என்பதை நம் முன்னோர்கள் அறிந்து வைத்து இருந்தனர். அதனால், குங்குமப்பூவைக் கருவுற்ற பெண்களுக்கு கொடுத்தார்கள். நல்ல நலமான குழந்தை கிடைக்க குங்குமப்பூ உதவுகிறது. அவ்வளவுதான்.

ஆரோக்கியம்தான் அழகு. அது தவறான வியாக்கியானமாகி, சிவப்புதான் அழகு என்று திரிந்து போனது. ஒரு நல்ல நடைமுறை வழக்கம், வக்கிரமான கடைச்சரக்காகிப் போன பழக்கம்தான் மகா வேதனையான விஷயம்!

அசல் சுத்தமான குங்குமப்பூ கிடைப்பது என்பது மிகச் சிரமம். அசலான குங்குமப்பூவைச் சிலர் பார்த்திருக்கலாம்; பலர் பார்த்திருக்க முடியாது. விலையோ தங்கத்தின் விலையில் வந்து நிற்கிறது.

ஒரு கிலோகிராம் குங்குமப்பூவின் விலை 68,000 ரிங்கிட். சில சமயங்களில் ஓர் இலட்சத்தையும் தாண்டி இருக்கிறது. அதாவது ஒரு சின்ன புளியங்கொட்டை அளவு கொண்ட குங்குமப்பூவின் விலை 1000 ரிங்கிட் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். தங்கத்தின் விலையும் அவ்வளவுதானே.