மலாயா - சிங்கப்பூர்; இந்த இரு இடங்களில் சிங்கப்பூரில் தான் முதன் முதலில் ரப்பர் தோட்டங்கள் உருவாகின. 1890-ஆம் ஆண்டுகளில் புக்கிட் தீமா; ஊட்லண்ட்ஸ்; செலேத்தார்; செம்பாவாங் போன்ற பகுதிகளில் 12 ரப்பர் தோட்டங்கள் இருந்து உள்ளன. ஆகப் பெரிய தோட்டம் ஊட்லண்ட்ஸில் இருந்து உள்ளது.
முதன்முதலில் சிங்கப்பூர் 1877-ஆம் ஆண்டில் தாவரவியல் பூங்காவில் (Singapore Botanic Gardens) நட்டு சோதனை செய்து பார்த்தார்கள். மிகச் சரியாகச் சொன்னால் பயிரிட்ட தேதி 11 ஜுன் 1877.
ரப்பர் மரத்தின் தொடக்கக் காலப் பெயர் ரப்பர் அல்ல. பாரா ரப்பர் (Para rubber tree). பிரேசில் நாட்டில் ஒரு மாநிலம் பாரா. அமேசான் காட்டில் உள்ள மாநிலம். அங்கேதான் முதன்முதலில் ரப்பர் வளர்வதைக் கண்டுபிடித்தார்கள். அதனால் தான் அதற்கு பாரா ரப்பர் என்று பெயர் வைத்து அழைத்தார்கள்.
1880-களில் சிங்கப்பூரின் வடக்குப் பகுதி அடர்ந்த காட்டுப் பகுதியாக இருந்தது. அங்கே தான் ஊட்லண்ட்ஸ் ரப்பர் தோட்டமும் உருவானது. ஊட்லண்ட்ஸ் காட்டுப் பகுதியாக இருந்ததால் அதற்கு ஊட்லண்ட்ஸ் என்று பெயர் வைத்தார்கள்.
டச்சு முறை ஒற்றைக் கோடு - தமிழ்ப் பெண்மணி - 1930
ஊட்லண்ட்ஸ் என்றால் காடுகள் நிறைந்த இடம். 1970-ஆம் ஆண்டுகள் வரை ஊட்லண்ட்ஸில் ரப்பர் பயிரீடுகள் நடைபெற்றன. இப்போது சிங்கப்பூரில் புக்கிட் ஊபின் தீவில் இன்றும் ரப்பர் உற்பத்தி செய்யப் படுகிறது.
சிங்கப்பூரில் முதல் ரப்பர் தோட்டம் 1886-ஆம் ஆண்டு புக்கிட் தீமாவில் உருவாக்கப் பட்டது. மூலகாரணமாக இருந்தவர் ரப்பரின் தந்தை என்று புகழப்படும் எச்.என். ரிட்லி (Henry Nicholas Ridley).
சிங்கப்பூரில் ரப்பர் தோட்டங்கள் உருவான 1886-ஆம் ஆண்டு காலக் கட்டத்தில், மலாயாவிலும் ரப்பர்த் தோட்டங்கள் மெது மெதுவாகத் துளிர்விடத் தொடங்கின. பிறை செங்காட் தோட்டம்; மலாக்கா புக்கிட் அசகான் தோட்டம்; நெகிரி செம்பிலான் லிங்கி தோட்டம்; இவை தான் மலாயாவில் தோன்றிய முதல் ரப்பர் தோட்டங்கள். 1890-களில் உருவானத் தோட்டங்கள்.
படங்களில் நீங்கள் பார்ப்பது சிங்கப்பூர் புக்கிட் தீமா ரப்பர் தோட்டத்தில் 1930-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட படம். இந்தியர்கள் பால்மரம் சீவுகிறார்கள்.

டச்சு முறை ஒற்றைக் கோடு - தமிழர் - 1930
படங்களில் நீங்கள் பார்ப்பது சிங்கப்பூர் புக்கிட் தீமா ரப்பர் தோட்டத்தில் 1930-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட படம். இந்தியர்கள் பால்மரம் சீவுகிறார்கள்.
பால் மரம் சீவும் முறைகள் பல உள்ளன. ஏறக்குறைய 100 முறைகள். சிங்கப்பூரில் அந்தக் காலக் கட்டத்தில் டச்சு பால் மரம் சீவும் முறை (Dutch Method) பிரபலம்.
1. இரட்டைக் கோடுகள் போட்டுச் சீவுவது டச்சு முறை.
2. ஒற்றைக் கோடு போட்டுச் சீவுவது பிரிட்டிஷ் முறை.

ரப்பர் உற்பத்தியில் மலாயாவும் சிங்கப்பூரும் உலக வரலாற்றில் இடம் பிடிக்கும் போது வணிக விளம்பரங்களும் மெல்லச் சிணுங்கி விட்டன. இந்தியப் பெண்மணி பயன்படுத்தும் இடுப்புப் பையில் ஓனோ (ONO) எனும் எழுத்துகள் பொறிக்கப்பட்டு இருப்பதைக் கவனியுங்கள்.
1900-ஆம் ஆண்டுகளில் பிரெஞ்சு வடிவமைப்பாளர் (French designer) மெடிலின் வியொனெட் (Madeleine Vionnet) என்பவர் ஓனோ எனும் பெயரில் ஆடை ஆபரணங்கள் தயாரித்து தென்திசை நாடுகளில் விளம்பரம் செய்து வந்தார். அப்போது பலமரம் சீவும் தமிழர்களையும் அந்த விளம்பரம் விட்டு வைக்கவில்லை.
இங்கே ஒன்றைக் கவனியுங்கள். மரங்களை நட்டவர்கள் ஆங்கிலேயர்கள். பால் மரக் கோடுகளைப் போட்டவர்கள் டச்சுக்காரர்கள். இடுப்புப்பை விளம்பரம் செய்தவர்கள் பிரெஞ்சுக்காரர்கள். இடுப்பு உடைய வேலை செய்தவர்கள் இந்தியர்கள். என்னே ஒரு கம்பினேஷன்.
படங்களின் விவரங்கள்:
விளக்கம்: Rubber tapping c. 1930 showing Dutch method.
காப்பகம்: Lim Kheng Chye Collection, National Archives of Singapore
படத்தின் அடையாள எண்: Media - Image No: 19980005880 - 0083
படத்தின் நெகட்டிவ் அடையாள எண்: Negative No: LKC08/09
சிங்கப்பூர் காப்பக எண்: Photo Accession No: 31782
(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
18.05.2020
Copyright of KSMuthukrishnan
posted at https://ksmuthukrishnan.blogspot.com/
பல்முறை ரப்பர் மரக் கோடுகள் - 1900