தாமரைக் கோயில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தாமரைக் கோயில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

09 ஜூலை 2020

தாமரைக் கோயில்

இந்தியா, டில்லியில், பாஹாபூர் (Bahapur) என்ற கிராமத்தில் உள்ள பஹாய் வழிபாட்டுத் தலம். அதன் தாமரை மலர் போன்ற வடிவத்தின் காரணமாக தாமரைக் கோயில் (Lotus Temple) என அறியப் படுகிறது. 


The Lotus Temple has won numerous architectural awards and has been featured in many newspaper and magazine articles

இந்த பஹாய் வழிபாட்டுத் தலம் தில்லியின் வசீகரமான இடமாக உள்ளது. 26 ஏக்கர் பரப்பளவு. இது வரை 150 மில்லியனுக்கும் அதிகமானோர் வருகை தந்து உள்ளனர். A 2001 CNN report referred to it as the most visited building in the world.

இந்த நிலத்தை வாங்குவதற்கு ஹைதராபாத்தின் ஆர்டிஷிர் ருஸ்டாம்பூர் (Ardishír Rustampúr) என்பவர் பெரும்பகுதி நிதியைக் கொடையாக அளித்தார். 



1986-ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இந்தியத் துணைக் கண்டத்தின் தாய்க் கோயிலாகக் கருதப் படுகிறது. எண்ணற்ற கட்டிடக்கலை விருதுகளை வென்று உள்ளது.

இதனைக் கட்டியவர் கட்டடக்கலை நிபுணர் பாரிபோர்ஸ் சாபா (Fariborz Sahba). ஓர் ஈரானியர்.

தாமரைக் கோயிலின் மைய மண்டபத்திற்குச் செல்வதற்கு ஒன்பது கதவுகள் இருக்கின்றன. அந்த மண்டபத்தில் 2,500 பேர் வரை பிரார்த்தனைகள் செய்யலாம்.



தாமரை மலரின் வடிவம். ஒன்பது பக்கங்களில் மூன்று கொத்துக்களில் 27 பளிங்கு இதழ்கள்.

கோயிலின் உட்புறத்தில் எந்த இசைக் கருவிகளும் இசைக்கப்படக் கூடாது. இங்கு எந்த சமய போதனைகளும் வழங்கப்படுவது இல்லை. சடங்கு ரீதியான நடைமுறைகள் எதுவும் செயல் படுத்தப்படுவதும் இல்லை.

இந்துப் பண்டிகையான துர்கா பூஜையின் போது தாமரைக் கோயிலில் பந்தல் அமைக்கப்பட்டு அதன் பல்வேறு உருவப் படிமங்கள் அமைக்கப் படுகின்றன.