எச்சரிக்கை: வன்முறைப் படங்கள் உள்ளன.
மலேசியப் பெண்களின் உரிமைகளுக்காகப் போராடும்
பாலினச் சமநிலைச் செயல் கழகம் (ஜாக்)
Joint Action Group for Gender Equality (JAG)
இந்தக் கழகத்தை, மலேசியாவின் ஒன்பது மகளிர் அமைப்புகள் கூட்டாக இணைந்து செயல்படுத்துகின்றன. மலேசியப் பெண்களின் உரிமைகளுக்காக அரசாங்கத்திடம் நெருக்குதல் கொடுக்கும் ஆற்றல் கொண்ட கூட்டு அமைப்பு. இந்தக் கூட்டுக் கழகத்திற்கு, என்னால் இயன்ற சேவைகளைச் செய்வதில் பெருமை அடைகிறேன். அவர்களின் அண்மைய ஊடகச் செய்தி அறிக்கையை ஆங்கிலத்தில் இருந்து தமிழ்ப் படுத்தினேன். அதனை உங்களுக்கும் வழங்குகிறேன். மனித இனத்தில் நாம் ஒவ்வொருவரும் ஒரு துளி. தெரிந்து கொள்ள வேண்டியது நம்முடைய ஒவ்வொருவரின் கடப்பாடு ஆகும். அனைத்துலக மலேசிய ஊடகங்களிலும் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
மலேசிய ஆங்கில நாளிதழான ‘தி ஸ்டார்’:
http://thestar.com.my/news/story.asp?file=/2013/1/16/focus/12579846&sec=focus
பாலினச் சமநிலைச் செயல் கழகத்தில் உள்ள தேசிய மகளிர் அமைப்புகள்:
1. அனைத்து மகளிர் செயல் கழகம் (அவாம்)
All Women's Action Society (AWAM)
2. பேராக் மகளிருக்கான மகளிர்க் கழகம்
Perak Women for Women Society (PWW)
3. சிலாங்கூர் சமூக விழிப்புணர்வு கழகம் (எம்பவர்)
Persatuan Kesedaran Komuniti Selangor (EMPOWER)
4. சிலாங்கூர் மகளிர் நட்புக் கழகம்
Persatuan Sahabat Wanita Selangor (PSWS)
5. சபா மகளிர் செயல்வளக் குழு
Sabah Women Action Resource Group (SAWO)
6. இஸ்லாமியச் சகோதரிகள்
Sisters in Islam (SIS)
7. தெனாகாநித்தா
Tenaganita
8. மகளிர் உதவி அமைப்பு
Women’s Aid Organisation (WAO)
9. மகளிர் மாற்று மையம்
Women’s Centre for Change (WCC)
வல்லுறவுக் கொடுமைகள்
வல்லுறவுக் கொடுமைகளில் இருந்து நாம் வேறுபட்டுப் போக முடியாது. அதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.
’அச்சமின்மை’ எனும் ஒரு நிர்பயத்தை நாம் இன்று நினைத்துப் பார்க்கிறோம். புதுடில்லியில் 2012 டிசம்பர் 16ஆம் தேதி நடைபெற்ற ஒரு மிருகத்தனமான கற்பழிப்புக் கொடூரம். அதனால் ஏற்பட்ட வன்மையான காயங்கள். அந்தக் காயங்களினால் இரண்டு வாரங்களுக்கு உயிருக்குப் போராடிய ஒரு தைரியமான இளம் பெண். அவரை இப்போது நினைத்துப் பார்க்கிறோம்.
சினிமாவுக்குப் போய்விட்டு தன்னுடைய தோழருடன் வீட்டிற்குச் சீக்கிரமாகச் செல்ல ஒரு பேருந்தில் ஏறினார். வீட்டிற்குப் போவதற்குப் பதிலாக இருவரும் அந்தப் பேருந்திலேயே மிகக் கொடுமையாகத் தாக்கப்பட்டு துன்புறுத்தப்படுகின்றனர். பேருந்தில் இருந்து வெளியே தூக்கி வீசி எறியப்பட்டனர். அங்கிருந்த ஆடவர்களினால், அந்த இளம்பெண் மிக மிக மோசமான வல்லுறவுகளுக்கு பலிக்கடா ஆகிறாள். அவளுடைய ஆண் தோழர் அங்கேயே அடித்து நொறுக்கப்பட்டார்.
நிர்பயாவும் அவளுடைய தோழரும் ஒரு தெரு ஓரத்தில் அனாதையாகத் தூக்கி வீசப்படுகின்றனர். யாருமே அவர்களுக்கு உதவி செய்ய முன்வரவில்லை. ஒரு மணி நேரம் கழித்து போலீஸ் வந்து எட்டிப் பார்க்கிறது.
Rape and murder incident at Ampang's Waterfront KL. May Her Soul Rest In Eternal Peace |
24 வயது கணினிப் பொறியியலாளர் நூர் சூசாலி மொக்தார். அவர் நம் நினைவுகளை விட்டு இன்னும் அகலவில்லை. ஒரு பேருந்து ஓட்டுநரினால் கழித்து நெரிக்கப்பட்டு வல்லுறவின் போர்வையில் பிணமாகிப் போனவர்.
On Oct 7, 2000, computer engineer Noor Suzaily Mukhtar, 24, boarded a Metro bus from Kuala Lumpur to her workplace in Klang. It was like any other day during her two-week attachment at a medical centre in Port Klang.
After the bus driver, Hanafi Mat Hassan, 38, dropped off the last remaining passenger at the Klang bus stand, he changed routes towards Banting and pulled over at the Bukit Tinggi project site. Noor Suzaily tried to escape but the doors were locked. The windows were heavily tinted so she could not draw attention. Hanafi raped her and used her headscarf to strangle her before tossing her naked body out of the bus. His wife had just given birth three days ago. Noor Suzaily was dressed in a long skirt and tudung. Yet police said the murderer claimed he tak tahan (unable to control his lust).
Ref: http://thestar.com.my/lifestyle/story.asp?file=/2008/8/3/lifefocus/1710462&sec=lifefocus
அடுத்து 28 வயது கென்னி ஓங் எனும் ஒரு கணினி நிபுணர். வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் இருந்து கடத்தப்பட்டு, கற்பழிக்கப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார்.
Canny Ong |
Charred remains of Canny Ong |
Ref: http://thestar.com.my/news/story.asp?file=/2003/7/4/courts/04canny&sec=courts
16 வயது நூருல் ஹானிஸ் காமில். பள்ளியில் இருந்து வீடு திரும்பும் போது மிருகத்தனமாகக் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
Nurul Hanis Kamil's Killer |
Nurul Huda Ghani |
Mohd Abbas Danus Baksan the Rapist |
Ref: http://thestar.com.my/news/story.asp?file=/2004/1/18/nation/7136066&sec=nation
எட்டு வயது நூரின் ஜாஸ்லின் ஜாஸ்மீன். ஒருபால் புணர்ச்சிக்கு பலியாகிக் கொலை செய்யப்பட்டாள்.
Nurin Jazlin Jazimin |
The perished little girl |
2001ஆம் ஆண்டில் இருந்து 2011ஆம் ஆண்டு வரையிலான இடைப்பட்ட காலத்தில், மலேசியவில் பாலியல் வல்லுறவுகள் 1217லிருந்து 3301ஆக எண்ணிக்கையில் உயர்ந்துள்ளன என்று காவல் துறையினர் வெளியிட்ட புள்ளி விவரங்கள் சொல்கின்றன.
அதனால்தான், பாலியல் வல்லுறவுகளினால் பாதிக்கப்பட்டவர்கள் வெளியே சொல்லத் தயங்குகிறார்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
இன்றைய நாளில், நாம் நிர்பயாவின் நினைவுகளுக்கு மதிப்புக் கொடுத்து மரியாதை செய்கிறோம். அதே சமயத்தில், 2003ஆம் ஆண்டு பாலியல் வல்லுறவு தொடர்பான ஒரு நினைவுப் பத்திரத்தை நாம் மலேசிய அரசாங்கத்திடம் தாக்கல் செய்ததை நினைவு படுத்த வேண்டும்.
நம்முடைய தாக்கல் பாத்திரத்தை அமல்படுத்துமாறு அரசாங்கத்தை மறுபடியும் கேட்டுக் கொள்கிறோம். அதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தாலும், இப்போதைக்கு மேலும் பல உடனடித் தீர்வுகள் அவசியமாகத் தேவைப் படுகின்றன. வல்லுறவின் போது ஏதாவது ஒரு பொருளைப் பயன்படுத்துவதில் உள்ள குற்றவியல் நடைமுறை சட்ட வரையறைகளை கண்டிப்பாக விரிவுபடுத்தியாக வேண்டும்.
பெண்களுக்கு எதிரான அனைத்துப் பாகுபாடுகளின் புறக்கணிப்பு மாநாட்டில் மலேசியா உறுப்பியம் பெற்றுள்ளது. இந்த மாநாட்டை Convention on the Elimination of All Forms of Discrimination Against Women என்று அழைக்கிறார்கள்.
ஆகவே, அந்த மாநாட்டின் சட்டங்களையும் அதன் கொள்கைகளையும் பின்பற்றிச் செல்வதில் மலேசியாவுக்கும் கடமை உணர்வு உள்ளது என்பதை நாம் இங்கே மறந்துவிடக் கூடாது.
பாலியல் வல்லுறவு (violence against women) என்று சொல்லப்படுவதும் பெண்களுக்கு எதிராக அமையும் ஒரு வகையான வேறுபாடு காட்டும் பாரபட்சத் தன்மைதான். ஆகவே, பெண்களுக்கு எதிரான அனைத்துப் பாகுபாடுகளின் புறக்கணிப்பு மாநாட்டின் சட்டக் கூறுகளில் 5வது விதியின்படி (Under article 5 of CEDAW), ஆண் பெண் இரு பாலருக்கும் இடையே தீங்குகளை விளைவிக்கும் பாரபட்சங்களைக் கலைவதில் அரசாங்கத்திற்கு ஒரு நடுநிலையான கடப்பாடு இருக்கிறது என்பதை நாம் இங்கே நினைவு கூருகிறோம்.
நிர்பயாவுக்கு ஏற்பட்ட வல்லுறவுக் கொடுமை என்பது, பெண் வெறுப்பினால் ஏற்படக்கூடிய தீய விளைவுகளுக்கு நம் கவனங்களை ஈர்த்துச் செல்கிறது. உறவு முறை இல்லாத ஓர் ஆண் தோழருடன், நிர்பயா தைரியமாக பொது இடத்தில் சுற்றித் திரிந்தது அந்தக் கொடுமையான நிகழ்வுக்கு ஒரு காரணம் என்று குற்றம் புரிந்தவர்களில் ஒருவர் சொல்லி இருக்கிறார்.
திறமையற்ற விசாரணைகளும் வலு குறைந்த வழக்குகளும் உடனடியாக கவனிக்கப்பட வேண்டிய நிலையில் இருக்கிறது. தவிர, பாலியல் வன்முறைகளைப் பற்றிய கொடூரங்களுக்குக் குறைவான புகார்கள் கிடைப்பது பெரும் கவலையைத் தரும் விசயமாகும்.
கற்பழிப்புச் சம்பவங்களைத் தவிர்க்கும் முறைகளைப் பற்றி பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் சொல்லித் தருவதை நிறுத்த வேண்டிய ஒரு காலக்கட்டம் வந்துவிட்டது. அதற்குப் பதிலாக யாரையும் யாரையும் கற்பழிக்கக்கூடாது; கற்பழிக்க முடியாது என்று ஆண்களுக்கும் சிறுவர்களுக்கும் சொல்லித் தர வேண்டிய காலக் கட்டத்திற்கு வந்துவிட்டோம்.
நம் குழந்தைகளுக்கு நியாயங்களைச் சொல்லித் தருவதில் இருந்து நாம் என்றைக்குமே தோல்வி அடைந்துவிடக் கூடாது. பாலியல் வன்முறை என்பது சகித்துக் கொள்ள முடியாதது என்பதை நாம் ஒரு தீர்க்கமான முடிவாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.