[மலேசியா தினக்குரல் நாளிதழில் 04.08.2013-இல் பிரசுரிக்கப்பட்டது]
ரா. ரமேஷ், பத்து கேவ்ஸ்,
சிலாங்கூர் <ra_ramesh@gmail.com>
கே: அண்மையில் ஒரு
நண்பரிடம்
இருந்து
280 ரிங்கிட்
கொடுத்து
சாம்சுங்
கெலக்சி
கைப்பேசியை
வாங்கினேன்.
அது
ஒரிஜினல்
இல்லை
என்று
இன்னொரு
நண்பர்
சொல்கிறார்.
என்
நண்பர்
என்னை
ஏமாற்றி
இருக்கலாம்
என்று
என்
மனம்
சொல்கிறது.
என்
கைப்பேசி
அசலானதா
இல்லை
போலியானதா
என்று
எப்படி
கண்டுபிடிப்பது?
ப: நல்ல கேள்வி. IMEI (International Mobile
Equipment Identification) எனும் அனைத்துலக கைத்தொலைபேசி அடையாள எண் இல்லாத கைப்பேசிகளுக்கும் அல்லது போலியான IMEI எண்களை உடைய கைப்பேசிகளுக்குமான சேவைகள் நிறுத்தப்படும் என்று மலேசிய அரசாங்கம் அறிவிக்க உள்ளது.
நினைவில் கொள்ளுங்கள். எந்த நேரத்திலும் அவர்கள் அறிவிக்கலாம். ஆக, நல்ல நேரத்தில் நல்ல கேள்வியைக் கேட்டு இருக்கிறீர்கள்.
அனைத்துலக கைத்தொலைபேசி அடையாள எண் என்றால் என்ன? உலகத்தில் பல நிறுவனங்கள் கோடிக்கணக்கான கைப்பேசிகளைத் தயாரித்து வருகின்றன. ஆனால், அவை அசலானதா அல்லது போலியானதா என்று உங்களுக்குத் தெரியாது.
போலியான கைப்பேசிகளை சீனா, பிரேசில், வெனிசூலா, நைஜீரியா, கம்போடியா, இந்தோனேசியா போன்ற நாடுகளைச் சேர்ந்த சில நிறுவனங்கள் தயாரிக்கின்றன. அடிமாட்டு விலைக்கு விற்றும் வருகின்றன. அந்தக் கைப்பேசிகளைப் பார்க்கும் போது படு கவர்ச்சியாக இருக்கும். அச்சு அசலாகவும் தோன்றும்.
அதை உண்மையாகச் சோதித்துப் பார்த்தால் கள்ளத்தனமான கைப்பேசிகளாக இருக்கும். ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். இந்த உலகத்தில் எத்தனைக் கோடி கைப்பேசிகள் தயாரிக்கப்பட்டு இருந்தாலும் சரி, உங்கள் கைப்பேசிக்கு என்று தனியாக ஓர் அடையாள எண்ணைக் கொடுத்து இருப்பார்கள்.
அந்த எண் உலகத்தில் வேறு எந்தக் கைப்பேசிக்கும் இருக்காது. அதைத்தான் அனைத்துலக கைத்தொலைபேசி அடையாள எண் என்று அழைக்கிறார்கள். புரிகிறதா.
அந்த எண்களை வைத்துக் கொண்டு உங்களுடைய கைப்பேசியின் நதிமூலம், ரிஷிமூலத்தைத் தெரிந்து கொள்ள முடியும். எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது, எப்போது தயாரிக்கப்பட்டது போன்ற விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.
ஆக, குறைந்த விலைக்கு அதிக வசதிகளுடன் விற்பனைக்கு வருகின்ற சீனா நாட்டுக் கைப்பேசிகளில் IMEI எண் போலியானதாக இருக்கலாம் என்கிற சந்தேகம் உங்களுக்கு வருவது நியாமானதுதான்.
IMEI எண் என்பது 15 இலக்கங்களைக் கொண்ட அடையாள எண்களாகும். நம்முடைய கைப்பேசியில் சரியான IMEI எண் உள்ளதா என்று எப்படி கண்டுகொள்வது.
உங்கள் கைப்பேசியில் *#06# என தட்டச்சு செய்தால் உங்கள் கைப்பேசிக்கான 15 இலக்க
IMEI எண்
திரையில் வரும். இதைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
பிறகு http://www.numberingplans.com/?page=analysis&sub=imeinr எனும் இணையத் தளத்திலோ, அல்லது http://www.imei.info/ எனும் தளத்திற்கோ சென்று உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்.
தவிர, உங்கள் கைப்பேசியைப் பற்றிய மேலதிக விவரங்களையும் அங்கே இருந்து தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். மேலே சொன்ன இணையத் தளங்களுக்குப் போக சிரமப் படுகிறவர்கள், என்னுடைய http://ksmuthukrishnan.blogspot.com வலைத்தளத்திற்குப் போனால், நேரடியான தொடர்புகள் கிடைக்கும். அங்கே இணையத் தொடர்புகளைக் கொடுத்து இருக்கிறேன். உங்களுக்குச் சிரமம் இருக்காது.
(வாசகர்கள் தங்கள் கேள்விகளை 012-9767462 எனும் என்னுடைய கைப்பேசி எண்களுக்கு குறும்செய்தியாக அனுப்பலாம். அல்லது என்னுடைய
வலைத்தளத்திற்குப் போய், அங்கே இருந்தும் அனுப்பலாம்.)