சீனாவில் நாய்க்கறி திருவிழா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சீனாவில் நாய்க்கறி திருவிழா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

04 ஏப்ரல் 2020

சீனாவில் நாய்க்கறி திருவிழா

அந்தக் காலத்தில் உயிர் வாழ்வதற்காக மனிதன் சாப்பிட்டான். இந்தக் காலத்தில் சாப்பிடுவதற்காக மனிதன் உயிர் வாழ்கிறான். அந்தக் காலத்தில் பயிர் செய்வதற்காக ஆடு மாடுகளை வளர்த்தான். இந்தக் காலத்தில் வயிறு வளர்ப்பதற்காக நாய் பூனைகளைச் சாகடிக்கிறான்.



அந்தக் காலத்தில் அவனுடைய சாப்பாட்டுத் தட்டுகளில் சமைத்த ஆடுகள் கோழிகள் மேய்ந்தன. இந்தக் காலத்தில் அரைகுறையாகச் சமைத்த நாய்களும் பூனைகளும் ஒப்பாரி வைத்து ஓலம் வைக்கின்றன. காலத்தின் அலங்கோலங்கள்.

மனிதப் பண்புகளை மரிக்கச் செய்வது சகிக்க முடியாத அசிங்கச் செயல்.
அப்படித் தான் சொல்லத் தோன்றுகிறது.

நாய் இறைச்சி பூனை இறைச்சி என்று சொல்லும் போது குமட்டுகிறது. நினைக்கும் போது குமட்டுகிறது. அதைப் பற்றி எழுதும் போதும் அடிவயிற்றில் ஆயிரம் வால்ட் மின்சாரம் அடிக்கிறது.

ஆனால் அந்த மாதிரி குமட்டல்களை எல்லாம் கும்மாளம் போட்டுச் சாப்பிடும் ஜென்மங்களை நினைக்கும் போது ரொம்பவுமே குமட்டித் தொலைக்கிறது. 




அவர்களை உகாண்டா நாட்டின் ஒன்றுவிட்ட பங்காளிகள் என்று சொல்ல முடியவில்லை.

பாப்புவா நியூகினி நர வேட்டை நாயகர்களின் தூரத்துச் சொந்தங்கள் என்றும் சொல்ல முடியவில்லை. ஒரே வார்த்தையில் சொன்னால் சுத்தக் கசுமாலங்கள். மன்னிக்கவும். ஒரு சில நாடுகளில் வாழும் சில பல மனிதப் பாரம்பரியங்களைத் தான் அப்படிச் சொல்ல வேண்டி உள்ளது.

எப்படித்தான் நாயையும் பூனையையும் அடித்துக் கொன்று சாப்பிடுகிறார்களோ தெரியவில்லை. நினைக்கும் போதே அடி வயிற்றில் 8.4 புள்ளி சுனாமி நிலநடுக்கப் பேரலைகள் குலை நடுங்க வைக்கின்றன.

தெருக்களில் சுற்றித் திரிந்த அனாதை ஜீவகளுக்கு எல்லாம் சாப்பாட்டுத் தட்டுகளில் விடுதலை கிடைத்து விட்டது போலும். இப்படி நான் சொல்லவில்லை. ஆசியா விலங்குகள் (Animals Asia) பாதுகாப்புக் கழகம் சொல்கிறது. 




சீனாவில் மட்டும் ஒவ்வோர் ஆண்டும் 10 மில்லியன் நாய்கள்; 4 மில்லியன் பூனைகள்; இறைச்சிக்காகப் படுகொலை செய்யப் படுகின்றன என்று ஆசியா விலங்குகள் பாதுகாப்புக் கழகம் சொல்கிறது..

(https://www.animalsasia.org/uk/facts-about-the-abuse-of-dogs-and-cats-in-asia.html)

இன்னும் ஒரு கணக்கு வருகிறது. மயக்கம் போட்டு விழாமல் இருந்தால் சரி. உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் 25 மில்லியன் நாய்கள் மனிதர்களால் உண்ணப் படுகின்றன.

சீனா, தென் கொரியா, வியட்நாம், நைஜீரியா, இந்தியா போன்ற நாடுகளில் நாய் இறைச்சியின் பெயர் சர்வ சாதாரணமாக அடிபடுகிறது. உலகம் எங்கிலும் உள்ள பல நாடுகளிலும் நாய் இறைச்சி சாப்பிடப் படுகிறது அல்லது சட்டப்பூர்வமாக உள்ளது. இதில் இந்தியாவின் பெயரும் வந்து போகிறது.




வட இந்தியாவின் சீனா எல்லையோர மாநிலங்களில் நாய்களைப் பிடித்து கொரியா, சீனா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள். நல்ல ஒரு வியாபாரமாகவும் விளங்குகிறது. தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

கீழே ஒரு காணொலியின் இணைய முகவரி வருகிறது. இந்தியா நாகாலாந்தில் நாய்கள் எப்படி இறைச்சிக்காக அடித்துக் கொல்லப் படுகின்றன என்பதைச் சித்தரிக்கும் காணொலி. உலக அமைதிக் கழகம் பதிவு செய்த காணொலி. உலக அளவில் பரவலாகி விட்டது.

https://newsroom.humanesociety.org/video/video.php?bctid=5030678792001

இன்னும் ஒரு குமட்டல் செய்தி. சீனாவின் குவாங்ஷி (Guangxi) மாநிலத்தில், யூலின் (Yulin) மாநகரில் வருடா வருடம் நாய்க்கறி திருவிழா நடைபெறுகிறது.

அந்தத் திருவிழாவின் பெயர் லைச்சி நாய்க்கறி திருவிழா (Lychee and Dog Meat Festival). பத்து நாட்களுக்கு அந்தத் திருவிழா கோலாகலமாக நடைபெறும். ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மாதம் 21-ஆம் தேதி தொடங்கி 30-ஆம் தேதி முடிவு அடைகிறது.




நாய்களை மரப் பேழைகளில் வைத்து அணிவகுப்புச் சாயலில் ஊர்வலம் கொண்டு போவார்கள். ஊர்க்கோலம் முடிந்ததும் அவற்றை அடித்துக் கொன்று அப்படியே வெட்டிச் சமைத்து திருவிழாவுக்கு வந்தவர்களுக்கு விருந்து கொடுக்கிறார்கள்.

எது எதற்கு எல்லாமே திருவிழா எடுப்பார்கள். நாய்க்கறி இறைச்சிக்காக இப்படி ஒரு திருவிழாவை சீனாவில் நடத்துகிறார்கள். அதில் சுமார் 10,000-க்கும் மேற்பட்ட நாய்கள் கொல்லப் படுகின்றன.

(https://en.wikipedia.org/wiki/Lychee_and_Dog_Meat_Festival)

சீனாவின் தெருக்களில் மில்லியன் கணக்கில் நாய்களும் பூனைகளும் அனாதைகளாய் வாழ்கின்றன. அவற்றில் கைவிடப்பட்ட செல்லப் பிராணிகளும் உள்ளன.

அவற்றில் உரிமையாளர்களால் தூக்கி எறியப் பட்ட அனாதை அழகுப் பிராணிகள். மேலும் பல தெருக்களில் பிறந்து வளர்ந்த ஐந்தடி ஜீவராசிகள்.




சீனாவில் செல்லப் பிராணி பிரியர்கள் நிறையவே உள்ளனர். பெரும்பாலும் நாய்களும் பூனைகளும் குடும்ப செல்லப் பிராணிகளாக வளர்க்கப் படுகின்றன.

அதே சமயத்தில் தெரு நாய்கள்; தெருப் பூனைகளின் நடமாட்டத்தை குறைக்கும் முயற்சியில் அமலாக்க அதிகாரிகள் தீவிரமாக ஈடுபடுகின்றனர். கொடூரமான வகையில் அந்தப் பிராணிகள் கொல்லப் படுகின்றன.

விலங்குகள் கொடூரமாகக் கொல்லப் படுவதற்கு உலகளவில் பல நாடுகள் தடை விதித்து உள்ளன. இருந்தாலும் சொரணையைத் தேடும் மனிதர்கள் இருக்கும் வரையில் பல கோடி நாய்களுக்கும் பூனைகளுக்கும் விமோசனம் இல்லை. அப்படிப்பட்ட அசிங்கத் தனங்களும் அடங்கப் போவது இல்லை. பாவம் அந்த உயிர்கள்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
04.04.2020






பேஸ்புக் பதிவுகள்


Krishna Ram அருமையான பதிவு... thanks sir

Muthukrishnan Ipoh மிக்க நன்றி...

Ravi Purushothaman சீன அரசு இவற்றை நிரந்தரமாகத் தடை செய்ய வேண்டும்...

Muthukrishnan Ipoh வனவிலங்குச் சட்டத்தில் சீர்த்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்...

Khavi Khavi உணவு உண்பது, தன் உடல் கொண்ட உயிரை பாதுகாக்க நிகழும் வாழ்வியல் நிகழ்வு. ஒன்றை கொன்றுதான் இன்னொன்று நகர்கிறது. ஆனால் இச்செயல் அளவுக்கு மீறினால் அஃது ஓர் அழிவின் ஆரம்பமாகிறது. நன்றி..

Muthukrishnan Ipoh
சரியாகச் சொன்னீர்கள்...

Khavi Khavi  நன்றி ஆசிரியரே.. :)

SU Vaasagan Subramaniam உலக நாடுகள் அனைத்தும் சீனாவை 10 ஆண்டுகளுக்கு எந்த ஒரு வரத்தகமும் இல்லாமல் ஒதுக்கி வைக்க வேண்டும்.. கண்டதை தின்னு மக்களை அழிக்கிறது..

Muthukrishnan Ipoh அது எல்லாம் நடக்கிற காரியம் இல்லை சார்... அவர்கள் தான் இப்போது உலகத்திலேயே நம்பர் ஓன் பணக்காரர்கள்...

SU Vaasagan Subramaniam >>> Muthukrishnan Ipoh இன்னும் இல்லை ஐயா.. அவர்கள் எண்ணம் வேறு.. நடக்காது என்றில்லை.. நடத்த மலேசியாவிற்கு வக்கில்லை.. கண்டவன் காலில் விழுந்து கிடப்பதே இவர்களின் நோக்கம்.. சீனாவின் தாக்குதல் அமெரிக்கா.. சொவியட் அதன் பின்னால்.. இது பழைய பழிவாங்கும் படை..

Magendran Rajundram >>> SU Vaasagan Subramaniam

https://youtu.be/1a_yBHpkPs0https://youtu.be/1a_yBHpkPs0

Ammini Ayavoo ஏன் நாய்கள் பூனைகள் சாப்பிடுபவர்களைத் திட்டுகிறீர்கள்???
நம் தட்டிலும்தான் ... கோழிகள் ஆடுகள் மீன் வகைகள் யாவும் உள.. எல்லாம் உயிர்கள் தான்... வாழ்க வையகம் ...

Muthukrishnan Ipoh // நாய்கள் பூனைகள் சாப்பிடுபவர்களைத் திட்டுகிறீர்கள் // இனிமேல் பாராட்டுவோம்...

Ammini Ayavoo >>> Muthukrishnan Ipoh எல்லாம் உயிர்கள்தாம்...

M R Tanasegaran Rengasamy அதுதான் ஒட்டு மொத்தமாக அடித்து உலகத்தையே அடைத்து வைத்திருக்கிறது. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.

Muthukrishnan Ipoh கலிகாலம் என்பது கழிகாலம் ஆகலாம்...

M R Tanasegaran Rengasamy >>> Muthukrishnan Ipoh கலிகாலம் உலகத்தைக் காலியாக்கலாம்.

Sathya Raman >>> Muthukrishnan Ipoh மனிதனின் பாவத்தின் சம்பளம் தான் இன்று அவனையே வீழ்த்திக் கொண்டிருக்கிறது சார்.

Rajendra Kumar Malaysiavil irukkum Chinese intha maadhiri naai / poonai saapuduvaangalaa ayya ???  (மலேசியாவில் உள்ள சீனர்கள் இந்த மாதிரி நாய் பூனை சாப்பிடுவார்களா ஐயா)

Muthukrishnan Ipoh  தெரியவில்லை...அவர்களைத் தான் கேட்க வேண்டும்...

Rajendra Kumar >>> Muthukrishnan Ipoh ha ha ha

Vikneshwaran Adakkalam ஒரு இனத்தின் உணவு முறை / கலாச்சாரம் உங்களை குமட்டச் செய்கிறது என்றால், நீங்கள் ஆதிக்க மனப்பான்மையில் இருக்கிறீர்கள் என அர்த்தம்.

உணவு மனிதனின் உரிமை. அவன் என்ன சாப்பிட வேண்டும் என்பதை அவனே தேர்வு செய்கிறான். சிலருக்கு முட்டை குமட்டலாம். மாடு குமட்டலாம். சிலருக்கு அசைவம் கூட குமட்டலாம்.

புதுமனை புகுதலின் போது பஞ்சகவ்யம் அருந்தும் பழக்கம் கூட நம்மில் பலரிடம் உண்டு. ஜப்பானில் இருந்த போது ஒரு ஆவணப்படத்தை பார்த்தேன்.

மாட்டுச் சாணத்தையும் கோமியத்தையும் புனிதமாக போற்றும் பழக்கத்தையும் அதன் பின் விளைவிகளையும் எந்த அளவுக்கு மனிதனை பாதிக்கும் என்பதை விளக்க ஒரு நாட்டின் / இனக் குழுவின் நம்பிக்கையே மோசமாக சித்தரித்தார்கள்.

ஒரு கற்பிதம் தனக்குள் புனிதமாகிவிட்ட பட்சத்தில் மற்றவரின் அனைத்து நம்பிக்கைகளும் கேவலமாகத்தான் தோன்றும். நான் இப்போது ஒரு புனித நிலையில் இருக்கிறேன் ஆதலால் மற்றவை மட்டமாகிவிடுகிறது.

நமக்கு பிடிக்காததை பிடிக்காதென சொல்லிட்டு போகலாம். இழிவுபடுத்த தேவை இல்லை. எல்லா சீனர்களும், கொரியர்களும் நாய் பூனை சாப்பிடுவதில்லை. அது ஒரு இனக் குழுவின் நம்பிக்கை, கலாச்சாரம்.

Sathya Raman >>> Vikneshwaran Adakkalam தங்களின் தற்காப்பு விளக்கம் சரிதான். ஆயினும் மனிதன் அதிகமாக, செல்லப் பிராணியாக தங்களின் வீடுகளில் வளர்ப்பது நாய், பூனைகளைதான் அவற்றையே அளவுக்கு அதிகமாக பலி கொடுத்து இந்த மனிதப் பயல் பசியை போக்கணுமா என்ன?

"கொன்றால் பாவம் தின்றால் போச்சு" என்கிற தத்துவம் பேசுவதற்கு ஜோர் போடலாம். ஆனால் அதுவும் எல்லை மீறும் போது மனிதனின் எல்லா தவறான செயல்களுக்கும் காலனிடம் பதில் சொல்ல வேண்டிருக்கிறதே?

வாயில்லாத ஜீவன்கள் என்பதற்காக கொலை செய்து அவற்றை உணவாக்கும் விதத்தை உன்னதம் என்று ஏற்கும் இது எத்தகைய மனநிலை? அவரவருக்கு வெவ்வேறு உணவு பழக்க வழக்கம் என்பது வழக்கமான ஒன்றே ஆகட்டும்.

மிருக வதை சட்டம்படி அது குற்றம் தானே? வாய் இல்லாத ஜீவன் என்பதற்காக இந்த மனிதன் மற்ற உயிரினத்திற்கு எத்தகைய கொடுமைகளையும் செய்வதை ஆதரிக்கிறீர்களாக்கும்?

Vikneshwaran Adakkalam >>> Sathya Raman நான் மிக தெளிவாகவே எழுதி இருக்கிறேன். பிடிக்காத ஒன்றை பிடிக்காதென சொல்வதில் தவறில்லை. ஒவ்வாமை வேறு இழிவு படுத்துவது வேறு. இதற்கு மேல் தெளிவுபடுத்த தேவை இல்லை என்று கருதுகிறேன். நன்றி.

Muthukrishnan Ipoh // ஒரு இனத்தின் உணவு முறை  கலாச்சாரம் உங்களை குமட்டச் செய்கிறது என்றால், நீங்கள் ஆதிக்க மனப்பான்மையில் இருக்கிறீர்கள் என அர்த்தம்.//

ஒவ்வொருவருக்கும் அவரவர் கருத்தைச் சொல்ல உரிமை இருக்கிறது... அந்தக் கருத்திற்கு எவரும் எதிர்க்கருத்துகள் சொல்லலாம்... எதிரிவிளைவுகளை ஏற்படுத்தும் கருத்துகளைச் சொல்லி மூக்கு உடைபடாமல் பார்த்துக் கொள்வதே சிறப்பு..... எல்லாம் தெரிந்த நல்லையர்கள் மாதிரி ஏடாகூடமாகக் கருத்துகள் சொல்லி வம்பில் மாட்டிக் கொள்ளாமல் இருப்பதும் சிறப்பு...

Muthukrishnan Ipoh >>> Sathya Raman நாயையும் பூனையையும் தின்பது அவர்களின் பழக்கம் என்றால் அப்புறம் ஏன் வளர்க்க வேண்டும்... அப்புறம் ஏன் நடுத்தெருவில் கொண்டு போய் விட்டு விட்டுப் போக வேண்டும்...

Vikneshwaran Adakkalam எல்லாம் தெரிந்த நல்லையர்கள் மற்றவர்கள் மூக்கை உடைக்கும் அளவுக்கு சினம் கொள்ளவும் தேவை இல்லை தான்.

Magendran Rajundram ஆதிக்க மனப்பான்மை மற்றும் மனித நேயம் இரண்டுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கிறது. இந்த கட்டுரை எதை அடிப்படையாக கொண்டு எழுதி இருக்கிறார் என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும்.

Sathya Raman >>> Muthukrishnan Ipoh பல வீடுகளில் நாய், பூனையை வளர்ப்பவர்கள் தங்களின் குழந்தைகளைவிட வளர்ப்பு பிராணிகள் மீது ஆதிதப் பாசத்துடன் இருப்பதை இன்றைக்கும் நிறைய வீடுகளில் பார்க்கிறோம்.

என்அண்டை வீட்டுக்காரர் அவர் கடித்து சாப்பிட்ட ஆப்பிளை நாய்க்கு ஊட்டுவதும், கொஞ்சி விளையாடுவதும், அவர் வேலை முடிந்து வீட்டினுள் நுழைவதற்குள் அதுகளும் செல்லமாய் சிணுங்கி வைப்பதும் பார்க்கவே பரவசமாக இருக்கும்.

கூடவே சாலையில் அடிப்பட்டு வயிறு கிழிந்து உயிருக்கு போராடும் நாய்களை வீட்டுக்கு கொண்டு வந்து வைத்தியம் பார்த்து இவர் வளர்பதும், மற்ற நண்பர்களுக்கு கொடுப்பதையும் பார்த்து வருகிறேன்.

அதற்கு மாறாக இன்னொரு அண்டை வீட்டுக்காரர் நாய் குறைத்தாலே கெட்ட வார்த்தையில் திட்டுவதும், நாயின் காதை பிடித்து கார் டயரில் வைத்து காரை ஏற்றி அது கதற, கதற கொடூரம் புரிவதையும் பார்த்து இருக்கிறேன் சார்.
மேலும் ஊர் பெருமைக்கு நாய், பூனைகளை வளர்க்க வேண்டியது பிறகு வக்கு இல்லாத போது அதுகளை தெருவில் விட்டு விடுவதும் இது மனிதாபிமானம் அற்றவர்களின் கெட்ட குணம்.

தன்னால் இயலாத காரியத்தை முயற்சிக்குகூட இத்தகையவர்கள் செய்யக்கூடாது. விரும்புபோது வளர்ப்பதும், வெறுக்கும்போ து விரட்டி அடிப்பதும் நல்ல மனித செயல் அல்ல.

யோகேந்திரன்: பயிர்களை கூட தான் செல்லமாக வளர்க்கிறார்கள்.. அதற்காக அதை உண்ண வேண்டாம்னு சொல்லுவீங்களா ?🤔

மாரியப்பன் முத்துசாமி: நமது நாட்டில் சைவ உணவுக்கு மாறும் வகையில் சைவ இறைச்சி உணவகங்கள் குறைந்த விலையில் விற்று வருவது நாம் அறிந்ததே. இது சீனர்கள் தான் நடத்தி வருகின்றனர்

Muthukrishnan Ipoh உண்மைதான் ஐயா...

Indra Ramasamy இந்த மாமிச உண்ணிகள் எவ்வளவு பட்டாலும் திருந்தப் போவதில்லை... மனசாட்சி அற்றவர்கள்.

Balamurugan Balu வணக்கம்! நல்ல பதிவு செய்தமைக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்!

Muthukrishnan Ipoh மகிழ்ச்சி ஐயா....

Melur Manoharan "நல்ல பதிவு" நன்றி ஐயா"...!

Jsr Chandra Cinavil Nirantarama: tadai seiya vendum. Sir (சீனாவில் நிரந்தரமாய் தடை செய்ய வேண்டும்)

Muthukrishnan Ipoh எதிர்பார்ப்போம்...

Santhi Krishnasamy: Intha kiriminga enge thiruntha pothu😭😭 (இந்த கிருமிங்க எங்கே திருந்த போகுதுங்க)

Muthukrishnan Ipoh கண்டவதைக் கற்றவன் பண்டிதவன் ஆவான்... கண்டதைத் தின்றவன்.... ஆவான்... நீங்களே நிறைவு செய்து கொள்ளுங்கள்...

Pon Vadivel என்ன கொடுமை ஐயா பெரியவர் முத்துக்கிருஷ்ணன் அவர்களே, ஆறாம் அறிவுகள், ஐந்தாம் அறிவுகளை வதம் செய்து விழுங்குகின்றனரே...

Muthukrishnan Ipoh
நாய்களையும் பூனைகளையும் தின்று பழகி விட்டார்கள்... அது அவர்களின் வாழ்வியலில் ஒரு கலாசாரமாக மாறி விட்டது...

Muthukrishnan Ipoh ஆடு, மாடு, கோழி, நாய், பூனை வளர்ப்புப் பிராணிகள் தான். இவற்றுள் நாயும் பூனையும் உலகளாவிய நிலையில் செல்லப் பிராணிகள். பிள்ளைகளைப் போல வளர்த்து விட்டு, அந்தச் செல்லப் பிராணிகளையே அடித்துத் தின்பது என்பது மனிதாபிமானம் அற்ற, ஈவு இரக்கமற்றச் செயலாகவே தோன்றுகிறது.

அப்படி வளர்த்த செல்லப் பிராணிகளுக்கு நோய் நொடி வந்ததும் அவற்றைக் கொண்டு போய் நடுத் தெருவில் விட்டு விட்டு வந்து விடுகிறார்கள். அதைப் பார்க்கும் சில நாய் பூனை விரும்பிகள், அவற்றைப் பிடித்துக் கொண்டு போய்க் கொன்று, அவற்றின் இறைச்சியை கூறு போட்டு விற்று காசு பார்க்கிறார்கள்.

இதை எல்லாம் பார்க்கும் போது சிலருக்கு குமட்டல் வரலாம். நாயைத் தின்பதும் பூனையைத் தின்பதும் ஓர் இனத்தின் பழக்க வழக்கம் என்றால் அந்த நாய்களையும் பூனைகளையும் சுத்தியலால் அடித்துக் கொல்வது பெரும் கொடூரம்...

Muniandy Segar இந்த நாகரிக உலகில் இன்னும் பிற உயிரினங்களுக்கு எதிரான வன்முறையுடன் ஒரு அறியாமையைக் காண்கிறோம்

Sheila Mohan படிக்கும் போதே குமட்டிக்கொண்டு வருகிறது...
மனித வடிவில் மிருகங்கள்...

Muthukrishnan Ipoh படிக்கும் போது மட்டும் அல்ல... அதை நினைக்கும் போதே குமட்டல் வருகிறது...

Sarawna Sarawna திருந்தாத மட ஜென்மங்கள்.

Pon Vadivel ஐயா, மேதகு முத்துக்கிருஷ்ணன் அவர்களே, நாய் நன்றியுள்ள பிராணி, நாய்கள் மேல் பொறாமை கொண்ட அதிகமான மக்கள் இருக்கின்றனர் என்பது உறுதிப்படுத்தப் படுகின்றது. எங்களுக்கு இல்லாத நன்றி, கடமை பொறுப்பு, ஐந்தறிவுள்ள உனக்கு மட்டும் எதற்கு?

எங்களை நீ அவமானப் படுத்துகிறாய் எனும் தீராத கோபம், சில நாட்டு மக்கள் நாயைக் கொன்று தின்று விடுகின்றார்கள். இப்படிப்பட்ட நாடுகளில் இருக்கும் நாய்களை அப்புறப் படுத்த ஐக்கிய நாடுகள் சபை ஒரு தனிப் பிரிவை ஏற்படுத்த வேண்டும். உலகெங்கும் உள்ள பிராணிகள் வதை எதிர்ப்பு இயக்கங்கள் நல்ல முடிவு எடுக்க வேண்டும்.

Muthukrishnan Ipoh நாய் நன்றி உள்ள பிராணி... உண்மைதான்... ஆனால் அந்த நாயையே ஓர் உணவுப் பொருளாக நினைக்கும் போது நன்றி அடிபட்டு போகின்றது ஐயா...

நன்றியை மறக்கும் உலகில் காலத்தில், வாயில்லா ஜீவன்கள் காட்டும் நன்றியை நினைத்துப் பார்க்க மனிதனுக்கு நேரம் இல்லை என்றே தோன்றுகிறது...

Malini Rangasamy அருமையான பதிவு. நன்றி

Muthukrishnan Ipoh மகிழ்ச்சி...

Vejaya Kumaran: yenne oru kalaa haaram.......seena naa kokkaa (என்ன ஒரு கலிகாலம்...)

Selvi Sugumaran: Enna Sir ettu... Sad (என்ன சார் இது)

Muthukrishnan Ipoh என்ன செய்வது... நீங்களே சொல்லுங்கள்...

Sush Meetha: Better die

Ravi Purushothaman எதற்கும் ஒரு வரம்பு இருக்கிறது... மனித நேயம் என்பதற்கு அர்த்தம் மறந்து போனதா... அது இருக்கும் வரைதான் மனிதன்... இன்னும் மனித இறைச்சியை விரும்பினால் அதுவும் அவர்கள் விருப்பம் என்பீரோ?

Muthukrishnan Ipoh நன்றாகச் சொன்னீர்கள்... மனிதநேயம் இருக்கும் வரையில் தான் மனிதம் வாழும்...

Gurunathan Dharmalingam இந்த ஜீவன்களின் சாபங்கள் எல்லாம் அந்த சீன அரக்கர்களுக்கே உரித்தாகும். இவர்களின் மரணம் இந்தப் பிராணிகளைவிட கொடூரமானதாக இருக்கும். காத்திருப்போம் காலம் வரும் வரை!

Muthukrishnan Ipoh அது ஓர் இனத்தின் நெடு நாளைய பழக்க வழக்கம்... நல்லது அல்ல என்று அவர்கள் உணர வேண்டும்... சீனர்களில் பெரும்பாலோர் அந்தப் பிராணியைச் சாப்பிடுவது இல்லை... ஒரு சிலர் தான் சாப்பிடுகிறார்கள்... அதனால் ஒட்டு மொத்தமாய் குறை சொல்வதை ஏற்க இயலாது... ஓர் இனத்தை அரக்கர்கள் என்று ஒட்டு மொத்தமாய் வசை பாடுவதும் தவறு...