மலேசியர் ஒருவர் 20 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மலேசியர் ஒருவர் 20 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

22 மே 2018

மலேசியர் ஒருவர் 20,061 ரிங்கிட் கடனாளி

இன்றைக்கு 18.05.2018-ஆம் தேதி. இப்போது மணி மாலை 6.10க்கு மலேசியாவின் மக்கள் தொகை 31,782,291. 
 
அவர்களில் ;

மலாய்க்காரர்கள் 15,505,931 (50.1%).

சீனர்கள் 6,994,691 (26.2%).

சுதேசிகள் - புகலிடம் பெற்றவர்கள் (வங்காளதேசிகள், இந்தோனேசியர்கள், மற்றவர்கள்) 3,652,096 (11.8%).

இந்தியர்கள் 2,073,647 (6.7%).

குடியுரிமை இல்லாதவர்கள் 2,537,897 (8.2%).

இன்றைக்கு மணி மாலை 6.10 வரை மலேசியாவில் 696 குழந்தைகள் பிறந்து இருக்கிறார்கள். இன்றைக்கு மணி மாலை 6.10 வரை இறந்தவர்களின் எண்ணிக்கை 183.

நம் மலேசிய நாடு இது வரை வாங்கிய கடன் ரிம. 643,958,010,331 (643 பில்லியன்). நம் நாட்டில் வாழும் 31,782,271 பேர் மக்களின் பெயரில் அவர்களை அடைமானமாக வைத்துக் கடன் வாங்கப்பட்டு இருக்கிறது.

வாங்கி இருக்கும் கடனுக்கு வட்டியாக ஒவ்வொரு வருடமும் ரி.ம. 23,390,810,645 (23 பில்லியன்) கட்ட வேண்டும்.

ஒவ்வொரு வினாடிக்கும் வட்டி 742 ரிங்கிட். அதாவது ஒவ்வொரு விநாடிக்கும் 742 ரிங்கிட் கடனாக ஏறிக் கொண்டு போகிறது.

அந்த வகையில் இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு மலேசியரும் வெளிநாட்டினருக்கு 20,061 ரிங்கிட் கடன்காரனாக இருக்கிறார்கள்.

‘எனக்கு கடன் எதுவும் இல்லை. நிம்மதியாக இருக்கிறேன்’ என்று சிலர் சொல்வதைக் கேட்டு இருக்கிறேன். ஆனால் உண்மையில் அவர்கள் வெளிநாட்டினருக்குக் கடன்காரர்கள். இன்றைக்கு மணி மாலை 6.10 வரை
பிறந்த 696 பச்சைச் சிசுக்களும் கடன்காரர்கள் தான்.

ஆக இப்படி கடன் வாங்கியது யார். வாங்கிய கடனுக்கு நாம் தான் வரிப் பணமாக நம்முடைய பணத்தைச் செலுத்தி வருகிறோம். நாம் கட்டுவோம் என்று சொல்லி தான் 1MDB நிறுவனத்தின் பெயரில் 42 பில்லியன் கடன் வாங்கப் பட்டது.

அதில் 2.67 பில்லியன் நஜீப்பின் கணக்கில் சேர்க்கப்பட்டு தண்ணீர் மாதிரி செலவு செய்யப்பட்டு உள்ளது.

https://en.wikipedia.org/…/1Malaysia_Development_Berhad_sca…

அந்தக் காசை நாம் தான் கட்டப் போகிறோம். மகளின் வயிற்றில் இருக்கும் பேத்தியும் பேரனும் கட்டப் போகிறார்கள். அது தெரியுமா உங்களுக்கு?

ஆக இரத்தம் சிந்தி வியர்வை சிந்தி நாம் உழைத்துச் சம்பாதித்த காசை இப்படி அனாவசியமாக, ஆடம்பரமாக, திருட்டுத் தனமாகச் செலவு செய்தது நியாயமா?

ஏழைகளின் வயிற்றை அடித்து 1000 ரிங்கிட் உள்ளாடையை அணியத் தான் வேண்டுமா. அந்த உள்ளாடைக்கு தங்க வெள்ளி இழை நூல்கள் தேவை தானா.

அந்தப் பெண்மணி பயன்படுத்திய அந்த 1000 - 3000 ரிங்கிட் விலை உயர்ந்த உள்ளாடைகளுக்கு மலேசியர் ஒவ்வொரும் பணம் கட்ட வேண்டும் என்பது அவர்களின் தலையெழுத்தா? வாங்கி வந்த வரமா. பிறக்கப் போகும் ஒரு குழந்தையின் வரப்பிரசாதமா.

1MDB வழக்கு நீதிமன்றத்திற்கு வந்ததும் அதே உடைகளையும் அதே ஆபரணங்களையும் சாட்சிப் பொருளாகக் காட்சிப் படுத்துவார்களே... அப்போது என்ன செய்யலாம். சொல்லுங்கள்.