மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம். அதன் பிடியில் இருந்து என்னால் கழற்றிக் கொள்ள முடியவில்லை. ஏற்கனவே இரண்டு முறை. பிடித்துக் கொண்டு போனார்கள்.
அப்போதே (1998) கல்லூரி விரிவுரையாளர் பணி பறி போனது. அப்புறம், எவ்வளவுதான் நல்லவனாக வாழ்ந்து பார்த்தாலும் மறுபடியும் அந்த மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் இருக்கிறதே, அதன் அரக்கப் பிடி என்னை மறுபடியும் மறுபடியும் கட்டிப் பிடிக்கின்றது. சுகமாகத் தெரியவில்லை. சொர்க்கமாகத் தெரிகின்றது.
மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய சகல கலா வல்ல மகா மகா காக்கா, மலேசியாவில் செய்த இந்திய இன அழிப்பைப் பற்றி அல்-ஜசீராவிற்குப் பேட்டிக் கொடுத்தது உண்மை. பத்து நிமிட பேட்டி. இத்தனைக்கும் அந்தக் காக்கா ஓர் இந்தியன் என்று சொல்லித்தான் சிங்கப்பூரில் டாக்டர் படிப்பிற்குப் படிக்கப் போனது. படித்தும் வந்தது.
காக்காவின் ரகசியம் கையில் இருக்கிறது. சொன்னது தப்பா. அவனைப் பற்றிய உணமையான இந்திய பாரம்பரிய உண்மைகளைச் சொன்னதற்காகப் பிடித்துக் கொண்டு போனார்கள். என்னய்யா நியாயம்.
விடுங்கள். அது ஒன்றும் பெரிதாகத் தெரியவில்லை. ஆனால், அவர்கள் கமுந்திங் சிறையில் செய்த மன, உடல் உலைச்சல்கள்தான் வேதனை. அழ மாட்டேன். இல்லாத போதுதான் இருந்த பொருள்களைப் பற்றி நினைக்கின்றோம். சிறைக்குள்ளே இருக்கும் போது சின்ன சின்ன வாசனைகள். வெளியே இருக்கும் போது பெரிய பெரியநினைவுகள். சிந்திக்கின்றேன்.
புதிதாக எதையும் எழுதவில்லை. கடைசி காலம் வரை விக்கிப்பீடியாவிற்கு எழுதுவோம் எனும் முடிவு. விக்கிப்பீடியாவிற்கு எழுதுங்கள். நாளைய பரம்பரை நம்மை நினைத்துப் பார்க்கட்டும். மறுபடியும் சந்திக்கின்றேன். நல்லதே நடக்கட்டும்.