இந்தோனேசியாவில் கணேசா வங்கிகள் குழுமம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்தோனேசியாவில் கணேசா வங்கிகள் குழுமம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

20 ஏப்ரல் 2020

இந்தோனேசியாவில் கணேசா வங்கிகள் குழுமம்

இந்துக்களின் வழிபாட்டுத் தெய்வங்களில் கணபதியார் ஒருவர். வினை தீர்க்கும் விநாயகர். அவரின் பெயரில் 1990-ஆம் ஆண்டுகளில் ஒரு வங்கித் தொடரை இந்தோனேசியர்கள் தொடங்கினார்கள். 28 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. இந்தோனேசியாவின் தலையாய வங்கிகளில் ஒன்றாகப் பிரபலம் அடைந்து உள்ளது.


அதன் பெயர் கணேசா வங்கி (Bank Ganesha). இந்த வங்கிக்கு 14 கிளைகள் உள்ளன. 1992 ஏப்ரல் 30-ஆம் தேதி செயல்படத் தொடங்கியது.

இந்தோனேசியாவில் அந்த வங்கியை Bank Ganesha Tbk என்று அழைக்கிறார்கள். இதன் தலைமையகம் ஜகார்த்தாவில் ஹயாம் வூரூக் கட்டிடத்தில் (Wisma Hayam Wuruk) உள்ளது. இந்தக் குழுமத்தின் தலைவர் இயக்குநரின் பெயர் சுர்ஜாவதி (Surjawaty Tatang).


2010-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தோனேசியாவில் 1.7% விழுக்காட்டினர் இந்து மதத்தைப் பின்பற்றுகின்றனர். பாலி தீவில் 83% விழுக்காட்டினர். சுமத்திரா மேடான், ஆச்சே பகுதியில் இந்துக்கள் அதிகமாக வாழ்கிறார்கள். இந்தோனேசியாவின் ஆறு அதிகாரப்பூர்வ மதங்களில் இந்து மதம் ஒன்றாகும்.

இந்து மதம் முதலாம் நூற்றாண்டில் காலூன்றியது. வர்த்தகர்கள், மாலுமிகள், அறிஞர்கள் மற்றும் சமயப் போதகர்கள் மூலமாக இந்து மதம் அங்கே கொண்டு செல்லப் பட்டது. பல இடங்களில் பழங்காலத்து இந்துக் கோயில்கள் இருப்பது அதற்கு ஒரு சான்று. 


உலகத்திலேயே மிகப் பெரிய சிவன் கோயில் இந்தோனேசியா பிரம்பனான் புறநகர்ப் பகுதியில் உள்ளது. இந்தோனேசியாவின் 20,000 ரூப்பியா பணத்தாட்களில் விநாயகர் வடிவத்தைப் பொறித்து விநாயகப் பெருமானுக்குப் பெருமை செய்து இருக்கிறார்கள்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
20.04.2020


பேஸ்புக் அன்பர்களின் பதிவுகள்


Yogavin Yogavins: Great job sir

Muthukrishnan Ipoh:  இனிய வாழ்த்துகள்..

Melur Manoharan:  "அருமையான" பதிவு ஐயா...!

Muthukrishnan Ipoh:  இனிய வாழ்த்துகள்..

Malathi Nair:  Glad to hear Ganesha bank is still active.

Muthukrishnan Ipoh:  இனிய வாழ்த்துகள்...

Prem Rani:

Rajendra Kumar:


Muthukrishnan Ipoh:  இனிய வாழ்த்துகள்..

Rajendra Kumar >>> Muthukrishnan Ipoh:  nandri ayya. Intha currency thangilidam irukiradhaa ??? Ennidam 3 irukiradhu, ungalukku vendum endraal lock down mudinthavudan airmail'il anupi vaikiren.

Image may contain: 1 person

Muthukrishnan Ipoh >>> Rajendra Kumar:  நன்றிங்க ஐயா... என்னிடம் இருக்கிறது.... அன்புக்கு வணக்கம்....

Murugan Pitchan >>> Rajendra Kumar:  pls sir enaku ondru vendum. vaangi kolgiren. pala varuda tedal intha nottu.

Jegathesan Muniandi:  தங்களின் முன்னோர்களின் கலாச்சாரத்தை மறக்காதவர்கள்.

Muthukrishnan Ipoh:  உண்மை ஐயா...

Vani Yap:  படிக்கும் பொழுது மகிழ்ச்சி மிகுதியாகிறது. கணேசா வங்கி இன்றளவும் செயல்படுகிறது என்பதில் மிக்க மகிழ்ச்சி

Muthukrishnan Ipoh:  இனிய வாழ்த்துகள்..

Thinagar Raman: 
ஆனால் மலேசியாவில் இன்னும் இருந்தால் சிறப்பாக இருக்கும்

Muthukrishnan Ipoh:  நிறைவேறாத ஆசைகளைக் கற்பனை செய்து பார்க்கலாம்... ☺️

Thinagar Raman:  உண்மைதான் ஐயா

Muthukrishnan Ipoh >>> Thinagar Raman:  நமக்கு அது ஒரு வீண் கனவு தம்பி...

Sai Ra:

Poovamal Nantheni Devi:

AR Radha:  அருமை பதிவு... அந்த வங்கி மேலும் விரிவடையும்... வங்கியின் பெயருக்கு வாழ்த்துகள்...

Muthukrishnan Ipoh:  மகிழ்ச்சி ஐயா... வாழ்த்துகள்...