மலேசியாவில் கடந்த 60 ஆண்டுகளில் 30 பேர் மட்டுமே அந்த விருதைப் பெற்று இருக்கிறார்கள். அந்த விருதைப் பெற்ற முதல் மலேசியர். அவர் ஒரு தமிழர். வேலு ராஜ வேலு (Velu Rajavelu).
மலேசியாவில் வழங்கப்படும் விருதுகளில் ஆக உயரிய விருது ஸ்ரீ பலவான் காகா பெர்காசா விருது (Seri Pahlawan Gagah Perkasa (S.P.) இந்த விருது Tun, Tan Sri,Datuk விருதுகளைக் காட்டிலும் உயர்ந்த விருது. அது மட்டும் அல்ல.
மலேசியப் பேரரசருக்கு வழங்கப்படும் உயரிய விருது Darjah Kerabat Di-Raja Malaysia D.K.M. மலேசியப் பேரரசியாருக்கு வழங்கப்படும் உயரிய விருது Darjah Utama Seri Mahkota Negara D.M.N. இந்த விருதுகளுக்கும் உயர்ந்த விருது இந்த ஸ்ரீ பலவான் காகா பெர்காசா விருது.
மலேசியா நாட்டிற்கு தன் உயிரை அர்ப்பணிப்பு செய்த வேலு ராஜ வேலு எனும் போலீஸ்காரருக்கு 1963-ஆம் ஆண்டு அந்த விருது வழங்கப்பட்டது.
1960-ஆம் ஆண்டுகளில் சிலாங்கூர் கிள்ளானில் ஒரு குண்டர் கும்பல் அராஜகம் செய்து வந்தது. அந்தக் கும்பலை அடக்குவதற்கு வேலு பணிக்கப் பட்டார். கிள்ளான் மிட்லண்ட்ஸ் தோட்டத்தில் அந்தக் கும்பல் சுகவாசம் செய்த போது தன் பணிப் படைகளுடன் வேலு அங்கே சென்றார். துப்பாக்கிச் சண்டை.
தன் சகாக்களின் உயிர்களைப் பாதுகாக்கும் பொருட்டு வேலு தன் உயிரைப் பணயம் வைத்தார். மிட்லண்ட்ஸ் தோட்டத்தில் ஆ சாய் என்பவரின் கடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் அவர் உடலில் 12 துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்தன.
எதிரிகளை அழிப்பதே அவரின் முதன்மையான குறிக்கோள். அதே சமயத்தில் தன் சகாக்களைக் காப்பாற்றுவதும் மற்றோர் இலக்கு. அந்த அடிப்படையில் வேலுவிற்கு ஸ்ரீ பலவான் காகா பெர்காசா வீர விருது 1963-ஆம் ஆண்டு வழங்கப் பட்டது.
(Seri Pahlawan Gagah Perkasa ('Gallant Warrior" or Warrior of Extreme Valour) is the highest federal award which can be presented in Malaysia.)
இந்த விருது 1960 ஜுலை 29-ஆம் தேதி உருவாக்கப் பட்டு; 1969-ஆம் ஆண்டில் மலேசிய அரசாணையில் சட்டமாகப் பதிவு செய்யப்பட்டது. அந்த வீரர் விருதைப் பெற்ற முதல் மலேசியர் ஒரு தமிழர் என்பதில் மலேசியத் தமிழர்கள் அனைவருக்கும் பெருமையே!
(இவரைப் பற்றிய ஒரு முழுமையான கட்டுரை விரைவில்...)
சான்றுகள்:
1. https://en.wikipedia.org/wiki/Grand_Knight_of_Valour…
2. http://tohairforce1981.blogspot.com/…/episode-031-anugerah-…
பேஸ்புக் அன்பர்களின் பின்னூட்டங்கள்
Doraisamy Lakshamanan உலகச்
சிறப்புகளைப் பெற்ற தமிழர்களைப் பற்றி ஒரு புத்தகமாக உலகத் தமிழினத்தவர்களுக்குத்
தமிழின வரலாறாகக் கற்பிக்க முற்படுவோம். உலகத் தமிழின அறிஞர் பெருமக்களே! மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம், இனநலம் எல்லாப் புகழும் தரும் என்பதே குறட்பா!
Muthukrishnan Ipoh தங்களின் தமிழ் உணர்வுகளுக்கு மிக்க மரியாதை செய்கிறோம் ஐயா... நீங்கள் நீண்ட காலம் நீடு வாழ இறைஞ்சுகின்றோம்...
Periasamy Ramasamy கடமை
கண்ணியம் கட்டுப்பாடு கற்றுத் தந்த தலைமுறையைச் சார்ந்த அரசு ஊழியர்கள்.
நியாயமாகப் பார்த்தால், இந்த சிறப்பு விருதின் வரலாறும், இவ்விருதினைப்
பெற்ற அத்தனைப் பேரையும் பெருமைப் படுத்தும் வகையில் பள்ளிப் வரலாற்று
நூல்களில் ஒரு பாடமாக இடம் பெற்றிருக்க வேண்டும்.
Muthukrishnan Ipoh 1965-ஆம்
ஆண்டில் இவரைப் பற்றி தமிழ்ப் பள்ளிகளின் பாடப் புத்தகத்தில் பதிவு
செய்யப்பட்டு இருந்தது. ஆனால் ஏதோ காரணத்தினால் அந்தப் பதிவைக் கல்வி
அமைச்சின் அதிகாரிகள் நீக்கி விட்டார்கள்.
1967-ஆம் ஆண்டு The Dewan English Reader நான்காம் ஆண்டுப் பாடப் புத்தகத்தில் அவரைப் பற்றி ஒரே ஒரு பத்தி எழுதப்பட்டு இருந்தது. அவ்வளவு தான். இவை தான் வீரர வேலு அவர்களுக்குச் செய்யப்பட்ட வீர மரியாதைகள்.
1967-ஆம் ஆண்டு The Dewan English Reader நான்காம் ஆண்டுப் பாடப் புத்தகத்தில் அவரைப் பற்றி ஒரே ஒரு பத்தி எழுதப்பட்டு இருந்தது. அவ்வளவு தான். இவை தான் வீரர வேலு அவர்களுக்குச் செய்யப்பட்ட வீர மரியாதைகள்.
Letchumanan Nadason நாங்கள்
குடியிருந்தத் தோட்டத்திற்குப் பக்கத்துத் தோட்டமான மிட்லண்ட்ஸ்
தோட்டத்தில் இன்றைய (i city) நடந்த சம்பவம் இது. அக்காலக் கட்டத்தில்
மிகவும் பரபரப்பாக பேசப் பட்டது. அம்மாவீரன் நினைவாக எங்கள் தோட்டத்தில் ஒரு இன்னிசைக் குழு நிறுவப் பட்டது.
Mageswary Muthiah தமிழ் இனம் சாதனைகள் இன்னும் என்னவெல்லாம் செய்து இருக்கிறார்கள் என்று ஆர்வத்துடன் எதிர்பார்க்க வைக்கிறது உங்கள் எழுத்து பணி...
Khavi Khavi மயிர் கூச்செரிகிறது ஐயா, ஒருகணம் என்மரபும் கொந்தளிக்கிறது. எமக்கு அளிக்கப்பட்ட அரிய உயரிய வீரிய விருது இது..
Muthukrishnan Ipoh நம் மலேசியத் தமிழர்களைப் பற்றி நிறைய தகவல்கள் உள்ளன... சன்னம் சன்னமாய் வெளியே கொண்டு வருவோம்...
Thennarasu Sinniah இதுவரை அறியாத தகவல்..அன்னாரைப் பற்றிய கூடுதல் தகவலைப் பெரிதும் எதிர்பார்க்கிறேன் ஐயா.