250 ஆண்டுகளுக்கு முன்னர் 1770-ஆம் ஆண்டில் சீஷெல்ஸ் தீவுக்கு (Seychelles Islands) முதன்முறையாகத் தமிழர்கள் போய் இருக்கிறார்கள். பாண்டிச்சேரியில் இருந்து முதல் தமிழர்க் குடியேற்றம். அந்தக் குழுவில் 28 பேர். அவர்களில் 15 வெள்ளையர்கள்; 7 ஆப்பிரிக்க அடிமைகள்; 5 தமிழர்கள்; ஒரு கறுப்பினத்துப் பெண்.
இந்த ஐந்து தமிழர்கள் தான் சீஷெல்ஸ் தீவுக்குப் போன முதல் தமிழர்கள். அவர்களின் பெயர்களும் சீஷெல்ஸ் பழஞ்சுவடிக் காப்பகத்தில் இருந்து மீட்கப்பட்டு உள்ளன (National Archives of Seychelles). மறுபடியும் தேதியைச் சொல்கிறேன். 1770-ஆம் ஆண்டு ஆகஸ்டு 17-ஆம் தேதி (17.08.1770).
முதன்முதலில் சீஷெல்ஸ் தீவுக்குச் சென்ற தமிழர்களின் பெயர்கள்:
1. ஆச்சாரி (Chary)
2. முத்தையா (Moutou)
3. குமார் மீனாட்சி (Menate)
4. கோவிந்தன் (Corinthe)
5. டோமினிக் (Domaigne)
இவர்களின் பெயர்கள் பின்னர் கிரியோல் - பிரெஞ்சு மொழிக்கு ஏற்றவாறு மாற்றம் செய்யப் பட்டன.
1. ஆச்சாரி எனும் பெயர் Chary என்று மாறியது.
2. முத்தையா எனும் பெயர் Moutou என்று மாறியது.
3. குமார் மீனாட்சி எனும் பெயர் Menate என்று மாறியது.
4. கோவிந்தன் எனும் பெயர் Corinthe என்று மாறியது.
5. டோமினிக் எனும் பெயர் Domaigne என்று மாறியது.
இவர்களுக்காக சீஷெல்ஸ் தீவில் நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டு உள்ளது (Indian Settlers Wall of History was erected in August 2015). சீஷெல்ஸ் பல்கலைக்கழகத்தில் (University of Seychelles) இந்திய ஆய்வுத் துறை உருவாக்கப் பட்டு அவர்களின் பெயர்களில் மண்டபங்கள்; நூலக அறைகள் உள்ளன. சாலைகளுக்குக்கும் பெயர்கள் வைக்கப்பட்டு உள்ளன.
இந்தியர்களின் வாரிசுகளில் ஒருவர் பெட்ரிக் பிள்ளை (Speaker of the National Assembly Patrick Pillay). இப்போது அந்த நாட்டின் நாடாளுமன்றத்தின் தலைவராக உள்ளார். இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர்கள் அமைச்சர்களாகவும் உள்ளனர்.
சீஷெல்ஸ் தீவு என்பது இந்தியப் பெருங்கடலில் 115 தீவுகள் அடங்கிய ஒரு தீவுக் கூட்டம். ஆப்பிரிக்காவில் இருந்து 1500 கி.மீ. கிழக்குப் பக்கமாய் இருக்கிறது. அதன் தலைநகரம் விக்டோரியா.
வட கிழக்கே மடகாஸ்கர் தீவு (Madagascar). தெற்கே கொமொரோஸ் (Comoros), ரீயூனியன் (Réunion), மொரிஷீயஸ் (Mauritius) ஆகிய நாடுகள். சீஷெல்ஸ் தீவின் மொத்த நிலப்பரப்பு 459 சதுர கி.மீ. நம்முடைய மலாக்கா மாநிலத்தின் மூன்றில் ஒரு பங்கு.
தமிழர்கள் சிலர் நேரடியாகவே பாண்டிச்சேரித் துறைமுகத்தின் வழியாக சீஷெல்ஸ் தீவுக்குப் போய் இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலோர் தஞ்சாவூர், சிதம்பரம், மாயவரம், காரைக்கால், கடலூர் போன்ற ஊர்களில் இருந்து போனவர்கள்.
1810-ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களின் ஆட்சி வந்தது. அதன் பின்னர் தமிழர்கள் சீஷெல்ஸ் தீவில் பெரும் அளவில் குடியேறினார்கள்.
1901-ஆம் ஆண்டில் சீஷெல்ஸ் தீவின் மக்கள் தொகை 19,237. அவர்களில் தமிழர்களின் எண்ணிக்கை 3500. ஆனால் படிப்படியாகக் குறைந்து விட்டது.
2013-ஆம் ஆண்டின் மக்கள் தொகை 89,949. ஆண்கள் 44,735; பெண்கள் 45,214. இந்த நாட்டில் ஆண்களை விட பெண்கள் சற்றே அதிகம். 600 பெண்கள் கூடுதலாக இருக்கிறார்கள். ஆப்பிரிக்கக் கண்டத்தில் மிக மிகக் குறைந்த மக்கள் தொகையைக் கொண்ட நாடு. ஓர் இலட்சத்தையும் தாண்டாத மக்கள் தொகை.
எத்தனைப் பிள்ளைகள் வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளுங்கள். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று சீஷெல்ஸ் அரசாங்கமே சொல்லி இருக்கிறது. மலைக்க வேண்டாம். உண்மை.
என்னைக் கேட்டால் இங்கே உள்ள வங்காள தோசைகளை விரட்டி விரட்டிப் பிடித்து தடுப்புக் காவலில் போடுவதைவிட அப்படியே சீஷெல்ஸ் தீவிற்கு ஏற்றுமதி செய்தால் நன்றாக இருக்கும்.
சீஷெல்ஸ் அரசாங்கத்தின் கருவூலத்திற்குக் கொஞ்சம் காசு மிச்சப்பட்ட மாதிரியாகவும் இருக்கும். சீஷெல்ஸ் தீவின் மக்கள் தொகை தாறுமாறாய் எகிறிப் போனதாகவும் இருக்கும். நம்ப இனத்துப் பிள்ளைகள் பாதிக்கப் படாமலும் இருக்கும். இது புந்தோங் மார்க்கெட் ஐடியா ஐயாசாமியின் கருத்து. நன்றி.
(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
23.05.2020