நீல உத்தமன் - 2 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நீல உத்தமன் - 2 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

05 அக்டோபர் 2019

நீல உத்தமன் - 2

சிங்கப்பூரை உருவாக்கியவர் நீல உத்தமன். சிங்கப்பூருக்குச் சிங்கப்பூர் என்று பெயர் வைத்தவரும் நீல உத்தமன். சிங்கப்பூர் மக்கள் பெருமையுடன் கொண்டாடும் ஓர் அரசர் நீல உத்தமன்.

மலேசிய இந்தியப் பெருமக்களும் போற்றிப் புகழ வேண்டிய மனிதரும் இதே இந்த நீல உத்தமன் தான்.

ஏன் என்றால் இவருடைய கொள்ளுப் பேரன் தான் பரமேஸ்வரா. மலாக்காவைக் கண்டுபிடித்த மாபெரும் மனிதர்.

நீல உத்தமன் ஏன் இந்தோனேசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு வந்தார். இந்தோனேசியாவில் என்னதான் நடந்தது என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

அதற்கு முன்னர் இந்தோனேசியாவை ஆட்சி செய்த இந்தியர்களின் அரசுகளைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் நீல உத்தமனின் வரலாறு முழுமையாகத் தெரிய வரும். சரிங்களா.

முதலில் இந்தோனேசியாவை ஆட்சி செய்த இந்தியர் அரசுகள் என்னென்ன என்று பார்ப்போம்.

1. ஜலநகரப் பேரரசு - மேற்கு ஜாவா (Salakanagara Kingdom) கி.பி. 130 – 362

2. கூத்தாய் பேரரசு - களிமந்தான் போர்னியோ (Kutai Kingdom) கி.பி. 350 – 1605

3. தர்மநகரப் பேரரசு - ஜகார்த்தா (Tarumanagara Kingdom) கி.பி. 358 - 669

4. கலிங்கப் பேரரசு - மத்திய ஜாவா (Kalingga Kingdom) கி.பி. 500 – 600

5. மெலாயு பேரரசு - ஜாம்பி சுமத்திரா (Melayu Kingdom) கி.பி. 600

6. ஸ்ரீ விஜய பேரரசு - சுமத்திரா (Srivijaya Kingdom) கி.பி. 650 - 1377

7. சைலேந்திரப் பேரரசு - மத்திய ஜாவா (Shailendra Kingdom) கி.பி. 650 - 1025

8. காலோ பேரரசு - மேற்கு ஜாவா (Galuh Kingdom) கி.பி. 669–1482

9. சுந்தா பேரரசு - மத்திய ஜாவா (Sunda Kingdom) கி.பி. 669–1579

10. மத்தாரம் பேரரசு - கிழக்கு ஜாவா (Medang Kingdom) கி.பி. 752–1006

11. பாலி பேரரசு - பாலி (Bali Kingdom) கி.பி. 914–1908

12. கௌரிபான் பேரரசு - கிழக்கு ஜாவா (Kahuripan Kingdom) கி.பி. 1006–1045

13. கெடிரி பேரரசு - கிழக்கு ஜாவா (Kediri Kingdom) கி.பி. 1045–1221

14. தர்மாசிரியா பேரரசு - மேற்கு சுமத்திரா (Dharmasraya) கி.பி. 1183–1347

15. சிங்காசாரி பேரரசு - கிழக்கு ஜாவா (Singhasari Kingdom) கி.பி. 1222–

16. மஜபாகித் பேரரசு - ஜாவா - (Majapahit Kingdom) கி.பி. 1293–1500

(சான்று: John N. Miksic; Professor, National University of Singapore. Head of the Archaeology unit, Nalanda-Sriwijaya Center at the Institute of Southeast Asian Studies.)

இந்த அரசுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது ஸ்ரீ விஜய பேரரசாகும். சில நூறு ஆண்டுகளுக்கும் மேலாக தென்கிழக்காசியாவை ஆட்சி செய்த மாபெரும் அரசு. இந்தோனேசியத் தீவுக் கூட்டத்தின் வரலாற்றில் ஸ்ரீ விஜய பேரரசு மங்காதப் புகழுடன் மாண்புமிக்க ஒரு பேரரசு.

பெரும்பாலான தென்கிழக்காசிய சிற்றரசுகள் ஸ்ரீ விஜய பேரரசிடம் திறை செலுத்தி வந்தன. சுமத்திரா, ஜாவா தீவுகளில் இந்த ஸ்ரீ விஜய பேரரசு (Srivijaya) மையம் கொண்டு செயல்பட்டு வந்தது.

கி.பி. 1025-ஆம் ஆண்டில் இந்த ஸ்ரீ விஜய பேரரசு தமிழகத்தின் இராஜேந்திர சோழனால் தாக்கப்பட்டு நலிந்து போனது. ஸ்ரீ விஜய பேரரசின் புகழ் கி.பி. 1290-ஆம் ஆண்டுகளில் மங்கத் தொடங்கியது.

பின்னர் 13-ஆம் நூற்றாண்டின் இறுதிக் கட்டத்தில் அந்தப் பேரரசின் செல்வாக்கு மேலும் படிப்படியாகக் குறையத் தொடங்கியது.

அதே சமயத்தில் மலாய்த் தீவுக் கூட்டங்களில் (Malay Archipelago) இருந்த மற்ற சிற்றரசுகளின் செல்வாக்கும் சிறப்பும் ஆளுமைத் திறனும் சன்னம் சன்னமாய் அதிகரித்த வண்ணம் இருந்தன.

அதன் பின்னர் 1222-ஆம் ஆண்டில், ஜாவா தீவில் சிங்கசாரி (Singhasari) எனும் ஒரு புதிய அரசு உருவானது. வலிமை வாய்ந்த ஒரு பெரிய அரசாகவும் உருமாற்றம் கண்டது.

சிங்கசாரி அரசு என்பது கெடிரி (Kingdom of Kediri ) பேரரசின் வழித் தோன்றல் ஆகும். இந்தக் காலக் கட்டத்தில் தான் பலேம்பாங் (Palembang) எனும் இடத்தில் ஸ்ரீ விஜய பேரரசின் அரண்மனை இருந்தது.

ஸ்ரீ விஜய பேரரசின் அரண்மனையைப் புதிதாகத் தோன்றிய சிங்கசாரி அரசு பல முறை தாக்கிச் சேதங்களை ஏறபடுத்தியது. அதனால் ஸ்ரீ விஜய பேரரசு தன்னுடைய தலைநகரத்தையும் அரண்மனையையும் பலேம்பாங்கில் இருந்து ஜாம்பி (Jambi) எனும் இடத்திற்கு மாற்றியது. ஜாம்பியின் பழைய பெயர் மலாயு.

ஜாம்பியில் புதிய தலைநகரம் உருவாக்கப் பட்டாலும் பலேம்பாங் முக்கியமான அரச நகரமாகவே விளங்கி வந்தது.

இந்தக் கட்டத்தில் மஜபாகித் (Majapahit) எனும் மற்றோர் அரசு சுமத்திராவில் வலிமை பெற்று வந்தது. இந்த மஜபாகித் பேரரசும் பலேம்பாங் சிற்றரசின் மீது அடிக்கடி தாக்குதல்களை நடத்தி வந்தது.

மஜபாகித் பேரரசின் தாக்குதல்களைச் சமாளிக்க முடியாத நிலையில் பலேம்பாங் இளவரசர் ஒருவர் இருந்தார். அவர் தான் நீல உத்தமன். புரியுதுங்களா. நீல உத்தமன் எங்கே இருந்து வருகிறார் என்பதைக் கவனியுங்கள்.

சண்டைகளையும் சச்சரவுகளையும் கலகங்களையும் தாங்கிக் கொள்ள முடியாத அவர் பலேம்பாங்கில் இருந்து வெளியேறினார். 1289-ஆம் ஆண்டு நடந்த நிகழ்ச்சி. வருடத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள்.

நீல உத்தமன் வெளியேறிய பின்னர் அவருடைய பிரதிநிதிகள் கொஞ்ச காலம் ஆட்சி செய்தார்கள். 1300-ஆம் ஆண்டு இறுதி வாக்கில் பலேம்பாங் அரச நகரம் ஒட்டு மொத்தமாக மஜாபாகித் பேரரசின் கரங்களில் வீழ்ந்தது.

அத்துடன் பலேம்பாங் அரசும் வீழ்ந்தது.  மாபெரும் ஸ்ரீ விஜய பேரரசின் 1000 ஆண்டுகால ஆளுமையும் முடிவிற்கு வந்தது. ஒரு சகாப்தம் வீழ்ந்தது.

பலேம்பாங் அரசும் மஜபாகித் பேரரசும் சுமத்திராவை மையமாகக் கொண்டு இயங்கிய அரசுகள் ஆகும்.

மஜபாகித் அரசின் கெடுபிடிகளைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தான் நீல உத்தமன் சுமத்திரவில் இருந்து வெளியேறினார்.

நீல உத்தமனின் அசல் பெயர் ஸ்ரீ மகாராஜா பரமேஸ்வரா திரிபுவனா (Sri Maharaja Parameswara Tribuwana). கி.பி.1324-ஆம் ஆண்டில் இருந்து 1372-ஆம் ஆண்டு வரை ஸ்ரீ விஜய அரசின் சார்பில் பலேம்பாங்கை ஆட்சி செய்து வந்தார். ஏற்கனவே சொல்லி இருக்கிறேன்.

ஸ்ரீ விஜய அரசு, பலேம்பாங் அரசைக் கைப்பற்றுவதற்கு முன்னர், பலேம்பாங் அரசி தன்னாட்சி பெற்ற ஒரு தனி அரசாக ஆட்சி செய்து வந்தது.

ஸ்ரீ விஜய அரசு கைப்பற்றியதும் அதன் கட்டுப்பாட்டில் பலேம்பாங் இருந்தது. தன்னாட்சிக்கு இடம் இல்லாமல் போனது.

மஜபாகித் அரசினால் தோற்கடிக்கப் பின்னர் நீல உத்தமனின் குடும்பத்தினர் பிந்தான் தீவில் அடைக்கலம் அடைந்தனர். இந்தப் பிந்தான் தீவு (Bintan) சுமத்திராவிற்கு வடக்கே சிங்கப்பூருக்கு அருகாமையில் இருக்கிறது.

இந்தப் பிந்தான் தீவில் ஏற்கனவே ஓர் அரச குடும்பம் இருந்தது. அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி ஸ்ரீ பினி (Sri Bini) என்பவரை நீல உத்தமன் திருமணம் செய்து கொண்டார்.

பிந்தான் தீவிலேயே கொஞ்ச காலம் தங்கி இருந்தார். இந்தப் பிந்தாங் தீவில் தற்காலிகமாக ஓர் அரசாட்சி உருவாக்கப் பட்டது. அதற்கு நீல உத்தமன் தலைவர் ஆனார்.

(4.Tsang, Susan; Perera, Audrey)

இந்தக் கட்டத்தில் சிங்கப்பூரில் என்ன நடந்தது என்பதையும் பார்ப்போம். 1280-ஆம் ஆண்டுகளில் சிங்கப்பூரைத் தெமாகி (Temagi) எனும் ஒரு சிற்றரசர் ஆட்சி செய்து வந்தார். சிங்கப்பூரின் பழைய பெயர் துமாசிக் (Temasek).

தெமாகி சிற்றரசரைச் சயாம் நாட்டு அரசு ஒரு சிற்றரசராக நியமனம் செய்து வைத்து பாதுகாத்து வந்தது. தெமாகிக்கு சயாம் அரசின் பாதுகாப்பு இருந்து வந்தது.

1299-ஆம் ஆண்டு நீல உத்தமன் திடீரென்று துமாசிக்கின் மீது தாக்குதல் நடத்தினார். அந்தத் தாக்குதலுக்கு அப்போது சிங்கப்பூரில் இருந்த கடல் கொள்ளையர்கள் நீல உத்தமனுக்கு உதவியாக இருந்தார்கள்.

அந்தத் தாக்குதலில் தெமாகி சிற்றரசர் கொல்லப் பட்டார். நீல உத்தமன் சயாம் அரசை எதிர்த்துக் கொண்டார். இருந்தாலும் நீல உத்தமன் பெரிது படுத்தவில்லை.

சிங்கப்பூருக்கு அரசர் ஆனார். தெமாசிக் எனும் பழைய பெயரைச் சிங்கப்பூர் எனும் புதிய பெயருக்கு மாற்றினார்..

இப்போது இருக்கும் சிங்கப்பூர் ஆற்றின் முகத்துவாரத்தில் தான் முந்தைய சிங்கப்பூர் நகரம் உருவாக்கப் பட்டது. ஆற்று நெடுகிலும் சின்னச் சின்னக் குன்றுகள் இருந்தன.

அவற்றில் ஒன்று கெனிங் குன்று. அந்தக் குன்றை நீல உத்தமன் மேரு மலை (Mount Meru) என்று அழைத்தார். அங்கு இருந்து குடிப்பதற்கும் குளிப்பதற்கும் நன்னீர் கிடைத்தன.

இப்போது அந்த இடம் கெனிங் கோட்டைக் குன்று (Fort Canning Hill) என அழைக்கப் படுகிறது.

(5. Dr. John Leyden 1821. Malay Annals)

அப்போது சிங்கப்பூர் ஒரு சின்ன ஊர். ஒரு சின்ன மீன்பிடிக் கிராமம். கடல் கொள்ளையர்களின் புகலிடமாக விளங்கியது. இந்தியா, அரபு, சீனா நாட்டுக் கப்பல்கள் வந்து போய்க் கொண்டு இருந்தன.

சிங்கப்பூரின் ஆட்சியாளர் ஆனதும் நீல உத்தமன் தன்னுடைய பெயரை ஸ்ரீ மகாராஜா சாங் உத்தாமா பரமேஸ்வரா பத்தாரா ஸ்ரீ திரி புவனா (Sri Maharaja Sang Utama Parameswara Batara Sri Tri Buana) என்று மாற்றிக் கொண்டார்.

அப்போது நீல உத்தமனின் வளர்ப்புத் தாயார் ஸ்ரீ பரமேஸ்வரி ராணியார் (Queen Paramisuri) பிந்தான் தீவில் இருந்தார். இவருடைய மகள் இளவரசி பினி என்பவரை நீல உத்தமன் திருமணம் செய்து கொண்டார். சொல்லி இருக்கிறேன்.

நீல உத்தமனுக்குத் தேவையான வேலையாட்கள்; அடிமைகளை அங்கு இருந்து அனுப்பி வைத்தார். அத்துடன் படகுகள்; குதிரைகள்; யானைகள் போன்றவற்றையும் அனுப்பி வைத்தார்.

அடுத்து வந்த 48 ஆண்டுகளுக்குச் சிங்கப்பூர் நீல உத்தமனின் கட்டுப்பாட்டிலும் அவருடைய வாரிசுகளின் கட்டுப்பாட்டிலும் இருந்தது. வளர்ச்சியும் பெற்றது.

சிங்கப்பூர் (Singapore) எனும் பெயர் சிங்கப்பூரா (Singapura) எனும் மலாய் சொல்லில் இருந்து மருவியதாகக் கூறப் படுகிறது. மலாய் மொழியில் சிங்கா (Singa) என்றால் சிங்கம். பூரா (Pura) என்றால் ஊர்.

இரு சொற்களும் சேர்ந்து சிங்கப்பூரா என்று சொல்லப் படுகிறது. இருப்பினும் இந்தச் சொற்கள் தமிழ்ச் சொற்கள் ஆகும். சிங்கம் எனும் சொல்லும் பூரம் எனும் சொல்லும் இணைந்து வருவதைக் கவனிக்கவும்.

நீல உத்தமன் சிங்கப்பூருக்கு வருவதற்கு முன்னர் சிங்கப்பூரின் தொடக்க வரலாறு சரியாகத் தெரியவில்லை. இருப்பினும் 3-ஆம் நூற்றாண்டில் சீனாவில் எழுதப்பட்ட வரலாற்றுக் குறிப்புகளின்படி சிங்கப்பூரின் பெயர் கடைசித் தீவு (Ujung Island at the end of a peninsula) என்று சொல்லப்பட்டு உள்ளது.

(6.The Indianized States of South-East Asia)

சிங்கப்பூருக்கு எப்படி சிங்கப்பூர் என்று பெயர் வைக்கப்பட்டது என்பதற்கு மலாய் காலக் குறிப்புகளில் (Malay Annals) ஒரு விளக்கம் தரப்படுகிறது.

நீல உத்தமன் சிங்கப்பூரைத் தோற்றுவிப்பதற்கு முன்னர் பிந்தான் தீவில் கொஞ்ச காலம் இருந்தார். ஒரு நாள் தன்னுடைய ஆட்களுடன் வேட்டைக்குப் போய் இருக்கிறார்.

அப்போது ஒரு கலைமானைப் பார்த்து இருக்கிறார். அதை விரட்டிச் செல்லும் போது ஒரு சிறிய குன்றின் மீது ஏற வேண்டிய நிலை.

குன்றின் உச்சிக்குப் போனதும் கலைமான் அவர்களின் பார்வையில் இருந்து மறைந்து விட்டது. அங்கே ஒரு பெரிய பாறை.

அதன் மீது ஏறிப் பார்க்கும் போது கடல் வானில் இன்னொரு தீவு தென்பட்டு இருக்கிறது. வெண்பட்டு நிறத்தில் நீண்ட அழகிய கடற்கரையைக் கொண்ட தீவு.

தன்னுடன் இருந்த மூத்த அமைச்சரைக் கேட்ட போது அந்தத் தீவின் பெயர் தெமாசிக் என சொல்லி இருக்கிறார். உடனே அந்தத் தீவைப் போய்ப் பார்க்கச் சென்று இருக்கிறார்கள்.

அப்போது கடலில் ஒரு பெரிய புயல் காற்று. அவர்களின் சிறிய கப்பல் கடலில் மூழ்கும் கட்டம். கப்பலின் சுமையைக் குறைக்க கப்பலில் இருந்த கனமான பொருட்களை எல்லாம் கடலில் வீசி இருக்கிறார்கள்.

இருந்தாலும் கப்பலுக்குள் கடல் நீர் புகுந்த வண்ணம் இருந்தது. கப்பலின் தளபதி ஓர் ஆலோசனை கூறினார். அதன்படி நீல உத்தமன் தன்னுடைய  கிரீடத்தைக் கடலில் தூக்கி வீசினார். உடனே கடலின் பேரலைகள் அமைதி கொண்டன. புயல் காற்றும் ஓய்ந்து போனது.

(7.Beyond the Monsoon, Douglas Bullis)

கடும் புயலுக்குப் பின்னர் நீல உத்தமன் முதலில் பார்த்த அந்தத் தீவில் ஒதுங்கினார். அப்போது அவர் சிங்கம் போல ஒரு விலங்கைப் பார்த்தார்.

அந்த விலங்கைச் சிங்கம் என்று நினைத்துக் கொண்டார். அந்தத் தீவிற்குச் சிங்கத்தின் ஊர் என்று பெயர் வைத்து அழைத்ததாகச் சொல்லப் படுகிறது. இது 1299-ஆம் ஆண்டில் நடந்த நிகழ்ச்சி.

அப்போது துமாசிக் எனும் அந்தத் தீவைத் தெமாகி ஆட்சி செய்து வந்தார். தெமாகியின் மீது நீல உத்தமன் தாக்குதல் நடத்துவதற்கு முன்னால் இந்த நிகழ்ச்சி நடந்து இருக்கலாம்.

(8. Dr John Leyden and Sir Thomas Stamford Rffles 1821)

நீல உத்தமன் பார்த்தது சிங்கமாக இருக்க முடியாது. ஏன் என்றால் உலகின் இரண்டே இரண்டு இடங்களில் மட்டுமே சிங்கம் இருக்கிறது. ஒன்று ஆப்பிரிக்க நாடுகள். மற்றொன்று இந்தியா. ஆக சிங்கப்பூரில் சிங்கம் இருந்ததற்கான சான்றுகள் இல்லை.

இந்தியாவில் வாழும் சிங்கத்தை ஆசியச் சிங்கம் (Asiatic lions) என்று அழைக்கிறார்கள். இந்த ஆசியச் சிங்கம் சிங்கப்பூரில் வாழ்ந்ததாகச் சான்றுகள் இல்லை. நீல உத்தமன் பார்த்தது ஒரு புலியாக இருக்கலாம். அதாவது மலாயா புலியாக (Malayan tiger) இருக்கலாம் என்று கருதப் படுகிறது. 

(12. C.M. Turnbull)


C.M. Turnbull (30 October 2009). A History of Modern Singapore, 1819-2005. NUS Press. pp. 21–22. ISBN 978-9971694302.


1324 - 1372 Sri Maharaja Sang Utama Parameswara, Batara Sri Tribuwana**, younger son of Sri Maharaja Sang Sapurba [Nila Pahlawan Sang Sri Prabhu Dharma Sena Tribuwana], Paduka Sri Trimurti Tribuwana, by his wife, Tuan Sandari.

Succeeded his father. Removed himself from Bintan to Temasek (water town) ca 1324, where he defeated and killed the local ruler, a vassal of Ayuthya (Siam) and established the new city of Singapura (lion city).

He maintained control over Temasek for 48 years. Confirmed as ruler over Temasek by an envoy of the Chinese Emperor ca 1366. m. Radin Ratna Chandra Puri, daughter of Ratu Sakadar Shah [Wan Sri Bini/Benian], Raja Perempuan of Bintan.