மதிப்புமிகு கலைஞர் கருணாநிதியின் சொந்த பந்தங்களைத் தெரிந்து கொள்ளுங்கள். அதற்கு முன் அவரைப் பற்றி ஓர் அரிய தகவல்.
திருக்குவளை முத்துவேலர் கருணாநிதி (தி.மு.க என்பதன் உண்மையான விரிவாக்கம்). அவர் ஆந்திரா திருக்குவளையில் இருந்து சென்னைக்கு வந்த போது, கையில் ஒரு தகரப் பெட்டி. அதில் ஒன்று இரண்டு வேட்டி சட்டைகள். அவ்வளவு தான். அதுதான் அவருடைய அப்போதைய ஆஸ்தி.
இன்று அவருடைய குடும்பத்தின் பொருளாதார நிலை என்ன. கோடீஸ்வரர்களின் பட்டியலில் முதல் இடம். அவருடைய மொத்தக் குடும்பச் சொத்து பன்னிரண்டாயிரம் கோடி. இது 2012 கணக்கு.
அவர் எப்படி கோடீஸ்வரர் ஆனார். தோட்டம் துரவு போட்டரா. இல்லை இரவு பகல் பார்க்காமல் பயிருக்கு தண்ணீர் விட்டாரா. இல்லை அவர் எழுதிய சினிமா வசனங்களுக்குத் தான் கோடிக் கணக்கில் பணம் வந்து குவிந்ததா.
நிச்சயமாக எதுவுமே இல்லை. அரசாங்க கஜானாவில் மக்களின் வரிப் பணம் கேட்பார் இல்லாமல் சிலந்தி வலை பின்னி இருந்தது. அதை அப்படியே விட்டு வைத்தால் கரப்பான் பூச்சிகள் நாசம் செய்து விடும் என்று எண்ணி வேதனை அடைந்தார்.
அதனால் கஜானா பணத்தை எடுத்தார். தனது தொழில் துறையை விரிவாக்கம் செய்தார். தனது சொந்த பந்தங்களை கொலுவேற்றினார். இப்போது ரசித்து ரசித்துப் பார்க்கிறார். ஆக, அவர் தப்பு எதையும் செய்யவில்லையே. மகிழ்ச்சி அடையுங்கள்.
தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பாற்றும் ஒருவர் தான், உண்மையான நல்ல குடும்பத் தலைவர். அதை கலைஞர் எப்பவோ நன்றாகவே தெரிந்து வைத்து இருக்கிறார்.
நரிக்கு நாட்டாண்மை கொடுத்தால் கிடைக்கு இரண்டு ஆடு கேட்கும் என்று எல்லாம் தப்பாகப் பேசக் கூடாது. பாவம் அவர். அப்புறம் திடீரென்று உண்ணாவிரதம் போய் விடுவார். மக்களுக்குத் தான் சிரமம். சரிங்களா.