மலேசிய இந்தியர்களே ஒன்று படுவோம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மலேசிய இந்தியர்களே ஒன்று படுவோம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

08 அக்டோபர் 2019

மலேசிய இந்தியர்களே ஒன்று படுவோம்

மலேசிய இந்தியர்கள் எனும் ஒரு கால வட்டத்திற்குள் மலேசிய இந்தியர்கள் அனைவரும் நெருக்கப் படுகிறார்கள். நெருக்கப்பட்டு விட்டார்கள்.


தமிழன், தெலுங்கன், மலையாளி, மராட்டி, யாழ்ப்பாணர் எனும் தனித்தனி வட்டத்திற்குள் சுவாசிக்கும் வரையில் நாம் வேறு படுகிறோம். மகாதீர் போன்ற தீரர்கள் பலருக்கும் எடுப்பார் கைப்பிள்ளையாகி விடுகிறோம்.

மலேசிய இந்தியர்களே ஒன்று படுவோம்.

சாதி, இனப் பாகுபாடுகளைத் தவிர்ப்போம். ஒரு புதிய கட்டமைப்புக்குள் உயிர்ப்போம். வாழ்ந்து காட்டுவோம். நம் பிரிவினைகளை ஒதுக்கி வைப்போம்.

காலம் நம்மை இறுக்குகிறது. காலம் நம்மைக் கட்டாயப் படுத்துகிறது. காலம் நம்மை நெருக்குகிறது. வேறு வழி இல்லை.

சாதி சமயங்களைச் சற்றே ஒதுக்கி வைப்போம். நம் வாரிசுகளின் எதிர் காலத்தை நினைத்து இன்றே ஒன்று படுவோம்.

மலேசிய இந்தியர்களாகிய நாம் ஒரு கட்டாயத்திற்குள் நெருக்கப்பட்டு வருகிறோம். ஆகவே ஒன்று படுவோம்... ஒன்று படுவோம்.

மலேசிய இந்தியர்கள் எனும் ஐக்கியத்திற்குள் ஒன்றிணைவோம். நம் எதிர்காலச் சந்ததியினருக்கு வழிகாட்டிகளாய் அமைவோம்.

இன்றே செய்வோம். அதை நன்றே செய்வோம்.


பேஸ்புக் அன்பர்களின் பின்னூட்டங்கள்
Sathya Raman வணக்கம் சார். இன்றைய காலத்திற்கு ஏற்ப, நாட்டு நடப்பை நன்கு அறிந்து நம் மலேசிய இந்தியர்களுக்கு நீங்கள் அறிவுறுத்திய நற் சேதிகளுக்கு ஒரு நன்றிங்க சார்.

மலேசிய இந்தியர்கள் இதுநாள் வரை தங்களுக்குள் கொண்டிருந்த மன மாச்சிரியங்களை விட்டொழித்து இனியாவது இந்நாட்டில் இந்தியர்களுக்கு எதிராக ஏவப்படும் அவலங்களை அறிந்து, விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டுகிறேன்.

இனியும் இளிச்சவாயர்களாக இறுமாந்து, ஏமாந்து இருப்போமானால் இன்னொரு ஈழ பேரிடரைப் போல் இந்த நாட்டு இந்தியர்களும் எதிர்நோக்கும் நிலையை ஏற்படுத்திவிடும் அபாயம் இருக்கிறது.

இன்று ஆயுத பூஜை கடந்த பத்து நாட்களாகக் கொலுவில் அமர்ந்திருந்த அம்மன், துர்காவாக, மகாலட்சுமியாக, சரஸ்வதியாகக் கோலம் பூண்டு இன்று நவராத்திரியின் நாயகியாக முழுமை பெற்று அரக்கர்களை வதம் செய்ய கொலுவிலிருந்து வெளியே வரும் நாள்.

கோலாட்சியுடன் ஆசிதரும் காமாட்சியின் துணையுடன் நமக்கு வருங்காலங்கள் நலமே அமையும் என்று நம்புவோம், அம்மன் அருள் பெறுவோம்

Perumal Thangavelu நமது ஏமாளித் தனத்தை அரசியல் வாதிகள் பலவாறு திட்டமிட்டு ஒரு வட்டத்திற்குள் கொண்டு வந்து குண்டு சட்டியில் குதிரை ஓட்டுங்கடா என்கின்றனர்.
அன்று முதல் இன்று வரை இந்திய அரசியல் வாதிகள் தமக்காக ஒரு கூட்டத்தை வைத்துக் கொண்டு அரசு மானியங்களால் உயிர் வாழ்ந்து கொண்டு பித்தலாட்டங்களை நாளும் வளர்த்துகொண்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பவர்களே...
Manickam Nadeson நடக்கிறதை எழுதுங்கள். இரண்டு தெலுங்கர்கள், பத்து தமிழர்களுக்கு மத்தியில் தங்களது தாய்மொழியான தெலுங்கில் தான் பேசுவார்கள். அவர்களுக்குத் தமிழில் பேச தெரிந்தாலும் அங்குள்ள தமிழர்களை மதிக்க மாட்டார்கள். எனவே நடக்கிறதை எழுதுங்கள்.
Malathi Nair Kaalai vanakam saar.Neengal solvathu unaiyo unmai.eppoluthu naam ondraga enaiyaavitaal avargal nammai veelti viduvaagal.Otrumaiye balam.sonaal pattatu.
(நீங்கள் சொல்வது உண்மையான உண்மை. இப்போது நாம் ஒன்றாக இணையாவிட்டால் அவர்கள் நம்மை விரட்டி விடுவார்கள். ஒற்றுமையே பலம். சொன்னால் பற்றாது.)
Santhanam Baskaran மிகவும் அவசியமான கருத்து. அனைவரும் உணர்ந்து ஒன்று பட்டு வாழ வாழ்த்துகள்.

Varusai Omar
ஒரு மடக்கூவை கூவுறான் இன்னும் 5/6 ஆண்டுகளிலே பிற மொழிப் பள்ளிகளை ஒழிச்சிடனுமாம்'லெ?

இதென்ன சீப்பா, ஒளிச்சு வைக்க!

இந்த ஓநாய்களே ஒழிந்து போவார்கள்.
நமக்குத்தான் ஒற்றுமை என்றாலே ஏதோ மை ஒத்துற தாளுன்னு நினைக்கிறாங்க? ஒன்றிணைக்க கண்ணுக்கு எட்டிய தூரத்திற்கு யாருமே தென்படலியே?

இந்தியர்களுக்காகத் தான் ம.இ.கா.?  மெய்யாலுமா!

அதுதான் மாமன் மச்சான் மச்சினி, அப்பாலே சாதிக்காரனுக்கு... இப்படி, வந்ததை எல்லாம் வாரிச்  சுருட்டி வாயிலே போட்டாச்சே?

இப்போ காஞ்சு போன எலும்புத் துண்டு கூட இல்லாமல், குத்துயிரும் கொலை உயிருமா, ICU-இல் கெடக்காமே!?

Dorairaj Karupiah சிந்திப்பாயா தமிழா எங்கே இருந்தோம்... எங்கே நிற்க்கிறோம்... எங்கே தள்ளப்பட போகிறோம்...

ஏ தமிழா இன்னொரு தமிழனை...

உன் நண்பணாய் சகோதரனாய்...

ஏற்றுக் கொள்... அதுதான் காலத்தின் கட்டாயம்...


M R Tanasegaran Rengasamy தாய்மொழிப் பள்ளிகள் மீது கை வைக்க அண்மையில் கூடிய மானம் காக்கும் கூட்டம் முடிவு எடுத்துள்ளது. அக்கூட்டதில் பிரதமர் கலந்து கொண்டிருப்பது துரதிர்ஷ்டமாகும்.

மண்ணின் மைந்தர்கள் எனும் கேடயம் மூலம் நம்மை ஒடுக்கப் பார்க்கிறார்கள். இவ்வேளையில் நம்முடைய ஒற்றுமை மிக மிக அவசியம்.
(தொடரும்)