இன்று திங்கட் கிழமை 9 ஜூலை 2012 திகதியில், உலகின் பெரும்பாலான கணினிகள் இணையத்தைப் பயன்படுத்த முடியாத நிலைமை ஏற்படலாம்.
DNS Changer எனும் வைரஸ் இணையத்தை முடக்க போகிறது. அதனால் உங்கள்
கணினியும் பாதிக்கப்படலாம். வைரஸ் என்றால் நச்சு நிரலி. இது ஓர் அதிர்ச்சியான செய்திதான். ஆகவே, உங்கள் கணினியைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். இந்த நச்சு நிரலியில் இருந்து எப்படி தப்பிக்கலாம் என்பதைச் சற்று விரிவாகச் சொல்கிறேன். உடனடியாகச்
செயல்படுங்கள்.
DNS என்றால் Domain Name System. ஓர் இணையத் தளத்தின் முகவரியைக் கணினிக்கு புரியும் வகையில் எண்களாக மாற்றிக் கொடுக்கும் ஒரு முறைமை. எடுத்துக்காட்டாக, www.facebook.com என கணினியில் தட்டச்சு செய்தால், அந்த இணைய
முகவரியை 204.15.20.0 என்ற எண்களாகக் கணினிக்கு மாற்றித் தரும்.
இப்பொழுது உள்ள புதிய பிரச்னை என்னவென்றால் DNS Changer என்ற பெயரில் ஓர் ஆபத்தான நச்சு நிரலியை உருவாக்கி உள்ளனர். இந்த நச்சு நிரலி பரிமாறிக் கணினிகளில் நுழைந்து நாம் கொடுக்கும் இணைய முகவரியைப் போலியான முகவரியாக மாற்றுகிறது. பின்னர், உங்கள் கணினியைச் செயலிழக்கச் செய்கிறது.
மற்றும் போலி தளங்களை வர வழைத்து கணினியின் உள்ளே இருக்கும் முக்கிய ரகசியங்களையும் கடத்தல் செய்கிறது. இப்படிப்பட்ட ஒரு நச்சு நிரலி இருப்பதாகக் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கண்டு அறியப்பட்டது. இது வரை உலகம் முழுவதும் பல மில்லியன் கணினிகள் பாதிப்படைந்து உள்ளன.
அமெரிக்காவின் உளவு அமைப்பான FBI தான் இந்த நச்சு நிரலியைக் கண்டு பிடித்தது. அமெரிக்காவில் இருக்கும் எப்.பி.ஐ. உளவு நிறுவனம் இதுவரை ஏழு பேரைக் கைது செய்துள்ளது. அதில் 6 பேர் எஸ்தானியா நாட்டை சேர்ந்தவர்கள். ஒருவர் ரஷ்யாவைச் சேர்ந்தவர்.
இந்த நச்சு நிரலிக்கு எதிராகத் தற்காலிக DNS பரிமாறிக் கணினிகளை நிறுவினார்கள். அதன் மூலம் ஏற்கனவே DNS Changer நச்சு நிரலியினால் பாதிக்கப்பட்ட கணினிகள், தொடர்ந்து இணைய சேவையைப் பெறுவதற்கு வழி
செய்யப்பட்டது.
ஆனால், இந்தத் தற்காலிக DNS பரிமாறிக் கணினிகளின் செயல்பாடுகள் இன்று திங்கட் கிழமை 9 ஜூலை 2012 நிறுத்த பட விருக்கிறது.
ஆதலால், ஏற்கனவே DNS Changer நச்சு
நிரலியினால்
பாதிக்கப்பட்ட கணினிகள் தொடர்ந்து இணைய சேவைகளைப் பயன்படுத்த முடியாது. ஆகவே அந்த நச்சு நிரலியை இன்னும் நீக்காமல் இருக்கும் கணினிகள் இன்று திங்கட் கிழமை முதல் பாதிக்கப்படும்.
உலகம் முழுவதும் சுமார் பல மில்லியன் கணினிகள் பாதிக்க படலாம் என கருதப்படுகிறது. உங்கள் கணினி பாதிக்கப்பட்டுள்ளதா என அறிய வேண்டுமானால்: www.dns-ok.us
எனும் தளத்திற்குச் சென்று பரிசோதித்துக் கொள்ளுங்கள். உங்கள் கணினி பாதிக்கப்பட்டு இருக்கிறதா என்பதை இந்த தளம் உடனே சொல்லி விடும்.
விண்டோஸ் XP, Vista, 7 கணினிகளுக்கு:
DNS Changer நச்சுநிரலியை உங்கள் கணினியில் இருந்து நீக்குவதற்கு, அவிரா நிறுவனம் ஒரு புதிய மென்பொருளை உருவாக்கி உள்ளது. பதிவிறக்கம் செய்ய வேண்டிய முகவரி:http://www.avira.com/files/support/FAQ_KB_Download_Files/EN/AviraDNSRepairEN.exe
குறைந்த கால அவகாசமே இருப்பதால் இந்தத் தகவலை அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்.