சேத்துக் கப்பல். பலரும் கேள்விப் படாதச் சொல். கால்வாய் ஆறுகளின் அடிப் பாகத்தில் தங்கும் சேறு சகதிகளைத் தூர்வாரும் எந்திரத்திற்குப் பெயர்தான் சேற்றுக் கப்பல் (Bucket Dredger). அசல் பெயர் சேறுவாரி அல்லது தூர் வாரிக் கப்பல். அப்போதைய கூலா தோட்டத்து வழக்கு மொழியில் சேத்துக் கப்பல்.
சேத்துக் கப்பல் எனும் சொல்லை உருவாக்கியவர்கள் கூலா தோட்டத்துத் தமிழர்கள். உலகத் தமிழர்களுக்கு அவர்களின் அன்பளிப்புச் சொல்.
கூலா தோட்டம் என்பது மலாயா வரலாற்றில் மிகப் பழமையான தோட்டம். மலேசிய வரலாற்றில் மிகப் பிரபலமான தோட்டம். மலையக வரலாற்றில் தமிழர்களின் பாரம்பரியத் தோட்டம்.
என்னைக் கேட்டால் கூலா தோட்டம் என்பது மலேசியத் தமிழர்களின் வரலாற்றில் சாதனை படைத்த ஓர் அந்தாதி. அதுவே நித்தியக் கண்டத்தின் நித்தியக் கலியாணி.
இன்னும் சொல்லலாம். கம்பிச் சடக்குகள் இல்லாமல் தண்டு தண்டவாளங்கள் இல்லாமல் கூலா தோட்டத்தில் கால்வாய்ப் படகுகளைப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
அந்த வாய்க்கால்களில் சேற்றை வாரும் எந்திரம் பயன்படுத்தப் பட்டது. அந்த எந்திரத்திற்குத் தான் சேத்துக் கப்பல் என்று கூலா தோட்டத்து மக்கள் பெயர் வைத்து இருக்கிறார்கள்.
1880-ஆம் ஆண்டுகளில் அந்த ஒரு தோட்டத்தில் மட்டும் 1500 தமிழர்கள் வேலை செய்து இருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இப்படி ஒரு சாதனையைச் செய்தது இந்தக் கூலா தோட்டமாகத் தான் இருக்க வேண்டும்.
இந்தத் தோட்டம் உருவாகும் காலக் கட்டத்தில் தான் மலாயாவின் மிகப் பெரிய தோட்டங்களான டப்ளின் தோட்டம்; லாபீஸ் சா ஆ தோட்டம்; கிள்ளான் மிட்லெண்ட்ஸ் தோட்டம் போன்றவை உருவாகின. இந்தப் பட்டியல் நீளும். தெரிந்தவர்கள் தெரியப் படுத்துங்கள்.
கூலா தோட்டத்தின் சொந்தக்காரர்கள் பேராக் சீனி சாகுபடி நிறுவனம் (Perak Sugar Cultivation Company, Ltd) ஆகும். இந்தத் தோட்டம் வட பேராக், கிரியான் மாவட்டத்தில் கூலா ஆற்றங் கரைகளில் இருந்தது. தோட்டத்தின் அப்போதைய பரப்பளவு 6,813 ஏக்கர்கள்.
1882-ஆம் ஆண்டு சீனா, ஷாங்காய் நகரத்தைச் சேர்ந்த டிரம்மாண்ட் (W. Drummond) எனும் வணிகர், அங்கே அந்த கிரியான் பகுதியில் நிலத்தை வாடகைக்கு எடுத்து கரும்புச் சாகுபடி செய்து இருக்கிறார்.
ஓர் ஏக்கர் ஒரு டாலர்; ஒட்டு மொத்தச் சீனி உற்பத்தியில் ஒரு விழுக்காடு எனும் பங்குரிமை ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். அதன் பின்னர் கூலா தோட்டம் திறக்கப் பட்டது.
பின்னர் 1883-ஆம் ஆண்டு 350,000 தயின் (350,000 taels) தங்கக் கட்டிகள் கொடுத்து அந்தத் தோட்டம் வாங்கப்பட்டது. அந்தக் காலத்தில் தங்கத்தை அளப்பதற்கு தயின் முறையைப் பயன்படுத்தினார்கள்.
அப்போது தென்கிழக்காசியாவில் தயின், கட்டி, பீக்கள்,கோயான் நிறுவை முறை வழக்கத்தில் இருந்தது. 16 தயின் ஒரு கட்டி. 100 கட்டி ஒரு பீக்கள்; 40 பீக்கள் ஒரு கோயான். அப்போதைய ஒரு ஷாங்காய் தயினுக்கு 33.9 கிராம் தங்கம் மதிப்பாகும் (Shanghai tael = 33.9 g).
கூலா தோட்டத்தின் தலைமையகம் சீனா, ஷாங்காய் நகரில் கியாங்சே சாலையில் (Kiangse Road, Shanghai) இருந்தது. மலாயாவில் அதன் நிர்வாக அலுவலகம் பினாங்கில் இருந்தது. நிறுவனத்தின் பெயர் மெசர்ஸ் கென்னடி கம்பெனி (Messrs. Kennedy, Pinang).
கூலா தோட்டத்தில் 2,500 ஏக்கர் கரும்பு நடவு; 586 ஏக்கர் ரப்பர் நடவு; 36 ஏக்கர் காட்டு ரப்பர் (Rambong rubber) நடவு.
1906-ஆம் ஆண்டில் 73,018 பீக்கள் சீனி உற்பத்தி; ஓர் ஏக்கருக்கு முப்பது பீக்கள். அப்போது ஒரு பீக்கள் சீனி 5.71 டாலருக்கு விற்கப்பட்டது. அப்போதைக்கு ஒரு தொழிலாளரின் சம்பளம் ஒரு நாளைக்கு 30 செண்டுகள்.
அறுவடை செய்யப்படும் கரும்புகளில் 9 விழுக்காட்டு சாறுதான் சீனியாகக் கட்டியாக்கப் பட்டது. 91 விழுக்காடு சக்கைகள். தாவரங்களுக்கு உரமானது.
கரும்பு சாகுபடி செய்யப்படும் போது கூலா தோட்டத்தில் 65,107 ரப்பர் மரங்கள் இருந்தன. 1903-ஆம் ஆண்டில் இருந்து 1905-ஆம் ஆண்டுக்குள் மேலும் 4,913 கன்றுகள் நடப்பட்டன.
ஒரு ரப்பர் மரம் நன்றாக வளர்ச்சி அடைந்து பால் தருவதற்கு 5 - 6 ஆண்டுகள் பிடிக்கும். ஆக அந்த வகையில் 1899-ஆம் ஆண்டில் கூலா தோட்டத்தில் ரப்பர் மரங்கள் நடப்பட்டு உள்ளன.
அதற்கு முன்னரே கரும்புச் சாகுபடி நடந்து இருக்கிறது. ஆக 1882-ஆம் ஆண்டிலேயே தமிழர்கள் அந்தத் தோட்டத்தில் குடியேறி விட்டார்கள் என்பதை நினைவில் கொள்வோம்.
அண்மையில் மூத்த அரசியல்வாதி ராயிஸ் யாத்தீம் தப்பான வியாக்கியானம் செய்து உள்ளார். இந்தியர்கள் இந்த நாட்டிற்கு 1930-ஆம் ஆண்டு வந்தார்கள் எனும் சரித்திரச் சிதைவு. அவர் இந்தப் பதிவைப் படிக்க வேண்டும். உண்மையான வரலாற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். வாய்க்கு வந்தபடி கருத்துச் சொல்வது ரொம்பவும் தப்பு.
1906-ஆம் ஆண்டு கூலா தோட்டத்தில் இருந்து 500 மரக் கொள்கலன்களில் (puncheons) திரவ ரப்பர் பாலை ரங்கூன்; கல்கத்தா நகரங்களுக்கு அனுப்பி இருக்கிறார்கள்.
1884-ஆம் ஆண்டில் கூலா தோட்டத்தில் பிருமாண்டமான கரும்பு ஆலை கட்டப்பட்டது. அதற்குள் மூன்று இராட்சச உருளைகளைக் கொண்ட துணை ஆலைகள் இருந்தன. 24 மணி நேரமும் ஆலை இயங்கியது.
ஒரு நாளைக்கு 240 டன் கரும்புகள் பிழிந்து எடுக்கப் பட்டன. மூன்றுக் கட்ட கொதிக்கும் ஆலைகளும் இருந்தன. 4000 சதுர அடிக்கு கரும்புகளைப் பரப்பி சூடு காட்டி சாறு பிழ்ந்து இருக்கிறார்கள்.
கரும்புக் காட்டில் கரும்புகள் வெட்டப்பட்டு செவ்வகப் படகுகள் மூலமாகத் தொழிற்சாலைக்குக் கொண்டு வரப்பட்டன. தோட்டத்தில் குறுக்கும் நெடுக்குமாக நிறையவே கால்வாய்கள் இருந்தன.
சாலைகள் கம்பிச் சடக்குகளுக்குப் பதிலாக காலவாய்களைப் போக்குவரத்து ஊடகமாகப் பய்ன்படுத்தி இருக்கிறார்கள்.
50 மைல்களுக்குக் குறுக்கும் நெடுக்குமாக கால்வாய்களை வெட்டி இருக்கிறார்கள். குராவ் ஆற்றில் இருந்து நீரை வரவழைத்து, போக்குவரத்திற்குப் பயன்படுத்தி இருக்கிறார்கள். கரும்புகளை ஏற்றிச் செல்ல 120 படகுகள் இருந்து இருக்கின்றன. ஒவ்வொரு படகிலும் 3 டன் கரும்பு ஏற்றிச் செல்ல முடியும்.
சான்றுகள்:
நூல்: Twentieth Century Impressions of British Malaya
நூலாசிரியர்: Arnold Wright, H. A. Cartwright
தலைப்பு: GULA ESTATE
பக்கம்: 396
படம்: கார்ட்ரைட் (H. A. Cartwright).
ஆண்டு: 1906
பதிப்பாளர்: Lloyd's Greater Britain Publishing Company, Limited
வெளியீடு: 1908.
பக்கங்கள்: 959
நூல் காப்பகம்: University of Minnesota, அமெரிக்கா
கடல் தாண்டி, கரை தாண்டி, மலை தாண்டி, மலையகம் நாடிய தமிழர்கள் கரும்புத் தோட்டங்களில் சிந்திய வியர்வையும்; ரப்பர் மரத்து வேர்களில் சிந்திய செந்நீரும் மறக்க முடியாத வேதனைச் சுவடுகள்.
தயாரிப்பு:
மலாக்கா முத்துக்கிருஷ்ணன்
14.05.2020
(இந்தியர்கள் இந்த நாட்டிற்கு 1920-ஆண்டில் கொண்டு வரப்பட்டார்கள் என்று மூத்த அரசியல்வாதி ராயிஸ் யாத்தீம் சொல்லி இருக்கிறார். அவருக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்.)
பேஸ்புக் பதிவுகள்
Letchumanan Nadason : சிறப்பான பதிவு. நன்றி ஐயா.
Muthukrishnan Ipoh : மகிழ்ச்சி ஐயா...
Ramesh Tholasy : அருமையான பதிவு ஐயா, மிக்க நன்றி
Muthukrishnan Ipoh : மகிழ்ச்சிங்க...
Siva Selvadurai : My grandpa and grandmother from there..
Muthukrishnan Ipoh: அவர்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டால் சிறப்பாக அமையும்...
Siva Selvadurai : Image may contain: 1 person, text
Siva Selvadurai >>> Muthukrishnan Ipoh : அவர் இருந்த காலக்கட்டத்தில், அவருடைய வாழ்க்கை அனுபவத்தை என்னிடம் பகிர்ந்து கொண்டார்..
Muthukrishnan Ipoh >>> Siva Selvadurai : மிக்க நன்றி... படித்துவிட்டு கருத்து சொல்கிறேன்...
Siva Selvadurai Image may contain: 1 person, text
Siva Selvadurai Image may contain: text
Muthukrishnan Ipoh >>> Siva Selvadurai : மகிழ்ச்சி... மகிழ்ச்சி...
Jainthee Karuppayah : வணக்கம்... என் ஊர் பிறை. கம்போங் சுலோட். Kampong selot. அங்கே பெரிய சீனி ஆலையும் இருக்கிறது. MSM... Malaysian Sugar Manufacturing. சீனி ஆலை.
என் கம்பத்தின் பேரும் சேற்று கம்பம். உண்மையாய் சகதி தான். 10 பேர் அடங்கிய எங்கள் குடும்பத்தைக் காப்பாற்ற அப்பா சீனி மூட்டை தூக்கி வேலை செய்வதைப் பார்த்து அழுதிருக்கிறேன்.
சக மாணவர்களிடம் அப்பாவின் வேலையைப் பற்றி சொல்ல அவமானமாக நினைத்து தலை குனிந்துள்ளேன். படகில் பயணித்தும் இருக்கிறேன்.
நினைவுகள்... சுவடுகள்
Muthukrishnan Ipoh : மலேசியத் தமிழராய்ப் பிறந்த ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும்... தலைமுறையின் தாக்கங்கள் ஏதோ ஒரு வடிவத்தில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கும்... மனக் கிடக்கையைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்...
Macho Bala : நன்றி ஐயா உங்கள் தகவலுக்கு
Muthukrishnan Ipoh : மகிழ்ச்சி...
Sheila Mohan : மிகவும் அருமை.. நன்றிங்க சார்..
Muthukrishnan Ipoh : மிக்க நன்றிங்க...
Kumar Murugiah Kumar's : ஐயா, கட்டுரை நன்றாக உள்ளது, மிக்க மகிழ்ச்சி ஐயா ! தற்போது அந்த குலா தோட்டம் என்னவானது !
Muthukrishnan Ipoh : அரசியல்வாதிகள் தலையிட்டு ஒரு வழி பண்ணி விட்டார்கள்...
Parimala Muniyandy : அருமையான பதிவு அண்ணா. மிக்க நன்றி.
Muthukrishnan Ipoh : மிக்க மகிழ்ச்சிங்க...
Maha Lingam : வணக்கம்.. நன்றி ஐயா
Funa Perumal : அருமையான கட்டுரை அதிசயமாகவும் இருக்கிறது எல்லாம் நம் மக்கள் வாழ்ந்து இருக்கிறார்கள் என்று
Muthukrishnan Ipoh : மகிழ்ச்சி ஐயா...
Ganesan Nagappan : வணக்கம் ஐயா. சிறப்பான பதிவு. Metric பயன்பாட்டுக்கு முன்பு இருந்த, 1970களில் மலேசிய கல்வி / கணக்கியல் முறை தயின், கட்டி, பீக்கள், கோயான் போன்ற சொற்கள் வரலாற்று பதிவுகள். பசுமையான காலத்தை நினைவு கூற செய்கிறது.
Muthukrishnan Ipoh : கருத்துகளுக்கு மிக்க நன்றிங்க... தொடர்ந்து பயணிப்போம்...
Maha Lingam : ஐயா, 1980-ஆம் ஆண்டு எனது SPM சோதனை காலத்தை முடித்து மூன்று மாத காலம் (அப்போது 12-ஆம் மாதம் முதல் அடுத்த ஆண்டு 3-ஆம் மாதம் வரை விடுமுறை) பள்ளி விடுமுறை வரை பகுதி நேர வேலை செய்வது அப்போதெல்லாம் சகஜம்.
ஆக, நான் அப்போது ஈப்போவில் இருந்த அண்ணன் வீட்டில் தங்கி இருந்த காலத்தில் ஏதாவது பகுதி வேலை செய்து அனுபவத்தை வளர்த்துக் கொள்ள எண்ணம் இருந்ததால், அண்ணனே ஈப்போ பட்டணத்தில் இருந்த ஒரு மின் தொடர்பு கடையில் பேசி வேலைக்கு அமர்த்தினார்.
அந்தச் சீனருக்கு கூலா பேரா தோட்டத்தில் அப்போது (1980) அந்தத் தோட்டம் செம்பனை தோட்டமாக மாறிக் கொண்டு இருந்தது. புதியதோர் செம்பணை ஆலை கட்டு வேலை மிக மும்மரமாக கடந்து கொண்டு இருந்தது. அந்த சீனர் முதலாளி அந்த ஆலையில் வயரிங் பூட்டும் குத்தகை கிடைத்ததால்... அவர் போகும் போது என்னையும் அழைத்து சென்றார்.
அங்கு 1 வாரம் தங்கி வேலைப் பார்த்தோம். அது தான் எனது முதலும் கடைசி பயணமும் அனுபவமும்.. அந்த காலத்தில் கூலா பேரா படகு துறையிலிந்து அக்கறைக்கு செல்ல படகு சேவைத் தான்.
அந்த படகில் தான் சிறிய லாரி வாகனம் இரு சக்கர மோட்டார் சைக்கள் வண்டிகள் சைக்கள்கள் மக்கள் என்று தினமும் இரு புறமும் போயும் வந்துக் கொண்டும் இருப்பார்கள். எனக்கு அது ஒரு புதிய மகிழ்ச்சியான அனுபவம்.
மற்றெரும் ஒரு அதிர்ச்சியான வேதனையான ஒரு செய்தி. அன்று அந்த தோட்டத்தில் "ஜாதி" பாகு பாடு அதிகமாக பார்த்தேன் உணர்ந்தேன். அந்த காலத்தில் மார்கழி மாதத்தில் "பஜனை" எடுப்பது / செய்வது தோட்டப் புறத்தில் கட்டாயம் நடக்கும்.
அப்போது சமய சிந்தனை வளர இளையோர்களை நல்வழிப் படுத்த இதுவும் ஒரு நல்ல வழி.
ஆக, இந்த விதமான சமய வைபவத்தை அந்த தோட்டத்தில்... இரண்டு கோவில்கள் இரண்டு பஜனைக் குழுகள் என்று இரு வேறு பகுதிகளாக செய்வார்கள் அவர் அவர் பகுதியல் செய்வார்கள். மிகவும் வருந்த தக்க விடயம்.
அன்று அந்த தோட்டத்தில் ஜாதிகளால் பிரிந்து வாழ்ந்தார்கள். எல்லா விடயத்திலும் பிரிந்தே இருந்தார்கள். அதை கண் கூடாக பார்க்க உணர்ந்தேன்.
அங்கு வாழ்ந்த ஒரு பெரியவரிடம் கோட்டு அறிந்தேன்.
ஆக, அந்த தோட்டம் எனக்கு ஒரு நல்ல அனுபவத்தை போதித்தது. நன்றி வாழ்க. அன்பே சிவம்... நாம் தமிழர்... நாமே தமிழர்...
Maha Lingam : நன்றிமா
Kumar Murugiah Kumar's >>> Maha Lingam : எது எப்படியோ வெள்ளையருக்கு இந்த சாதி சாதகமாக ஆக்கிக் கொண்டனர்.
Muthukrishnan Ipoh : கப்பலேறி இந்தக் கரைக்கு வந்தவர்கள் தங்களுடன் சாதி சடங்குகளையும் இடுப்பில் இறுக்கிக் கட்டிக் கொண்டு வந்து விட்டார்கள்...
நம் இனத்தவரை அப்படிப் பிரித்து வைப்பதிலும் ஆங்கிலேயர்கள் முனைப்புக் காட்டி இருக்கிறார்கள்... பிரித்து வைத்தால் தான் அவர்களும் பேர் போட முடியும்...
இந்த நாட்டில் நம்மை மற்றவர்கள் தரம் தாழ்த்திப் பார்ப்பதற்கு நம்மிடம் காணப்படும் சாதிப் பிரிவினைகள் தான் மூல காரணம்... இந்த உலகம் இருக்கும் வரையில் அந்தச் சாதியின் எச்சங்களை அழியவிடவும் மாட்டார்கள்... நம் இனம் வாங்கி வந்த வரம்...
Maha Lingam >>> Muthukrishnan Ipoh
Maha Lingam >>> Kumar Murugiah Kumar's : உண்மை..ஐயா.. நம்மவர்களை பிரித்து ஆள அவனுக்கு வசதியாக போச்சி...
Maha Lingam >>> Kumar Murugiah Kumar's
Maha Lingam : நன்றி..உறவுகளே..
Subramaniam Muniandy : Ippoh Anthea velayai Malaikaaran seiyuran. (இப்போ அந்த வேலையை மலாய்க்காரன் செய்யுறான்)
Gengga Naidu
Vejaya Kumaran
Sarawna Sarawna : அருமையான பதிவு. நன்றி சார். என் தந்தையார் இங்கு பிறந்தவர்தான். இந்த தோட்டத்தில் பணிபுரிந்த முன்னாள் கங்காணி திரு. கோவிந்தசாமி (குரல் பிரச்சினை உள்ளவர்கள்) அவர்களின் வாரிசுகள் யாரேனும் இந்த பதிவை பார்த்தால், தயவு செய்து என்னை தொடர்பு கொள்ளவும். 0134171229 நன்றி.
Muthukrishnan Ipoh : அப்படியே ஆகட்டும்...
Periasamy Ramasamy : எனக்குத் தெரிந்து மலேசியாவில் தயின், கட்டி, பீக்கள், கோயான் imperial நிலுவை முறைகள் 1972 தொடங்கி சிறுகச் சிறுக மெட்ரிக் முறைக்கு முழுமையாக மாற்றம் கண்டது 1978ல் தான்.... ஒரு கட்டி என்பது சுமார் 600 கிராம் ஒரு பீக்கள் என்பது 60 kg.
Muthukrishnan Ipoh : தகவலுக்கு மிக்க நன்றிங்க ஐயா///
KR Parthiban Ijok : அருமையான பதிவு ஐயா ,மிக்க நன்றி
Muthukrishnan Ipoh : மிக்க மகிழ்ச்சி
Bala Deva
Murugan Thevar : மலேசிய மண்ணில் தியாகித்த தமிழினத்திற்கு எந்த அடையாளங்களும் நிலைநிறுத்தப் படவில்லை.
மேம்பாடு கண்டுள்ள தோட்டங்களின் புதிய பரிணாமத்தால் தோட்டத்தில் தியாகித்த சுவடுகள் அழிந்துவிட்டன. புதிய விரைவு ரயிலின் திட்டத்தில் தண்டவாளங்கள் தகர்த்தப்பட்டு தமிழர்களின் தியாகங்கள் காணமல் போயின. செம்மண் சாலைகளும், தார் சாலைகளும் விரிவாக்கம் கண்டன. பல நெடுஞ்சாலைகள் உருவாகின. தமிழர்களின் தியாகம் மறைந்து போனது.
நாளைய சந்ததிகளுக்கு நாம் எதை விட்டுச் செல்லப் போகிறோம். மலாயாவிலிருந்து - மலேசியா வரை நம் முன்னோர்களின் சரித்திரமான அர்ப்பணிப்பும், தியாகமும் நிலைக்கவும் காக்கவும் நாம் என்ன செய்யப் போகிறோம்.
Muthukrishnan Ipoh : அதைத்தான் பலரும் கேட்கிறார்கள்.. ஆக முடிந்த வரை அவர்களின் வரலாறுகளை ஆவணப் படுத்துவோம்...
Vejaya Kumaran : malaysiye warelarai "pinni pedaledukreengga pole".. souper sir (மலேசிய வரலாற்றைப் பின்னிப் பெடல் எடுக்கிறீங்க போல;;; சூபர் சார்)
Muthukrishnan Ipoh : மகிழ்ச்சி... மகிழ்ச்சி ஐயா...
Funa Perumal
Paramasivam Maruthai
Vejaya Kumaran : Tenor
Subramaniam Muniandy : To Mr. Muthukrishnan, I'm really excited and surprised after read your article. My generation stared from my grandfather, my father and his family all from Gula estate. I'm so happy and prosperous thanks to you. God bless you Ayya.
Peraba Thanimali : Hi, I am estate manager of Gula Estate, I was born and raised in Gula Estate. Thank you for sharing this information with us. If anyone have addtitonal information kindly share with us, Tq so much.
Muruga Dasan Dass
R Muthusamy Rajalingam : வடை முதல் குடம் வரை, தங்களுடையது என உரிமைக் கொண்டாடும் ஒரு கூட்டத்திடம் என்ன எதிர்பார்க்க முடியும் ஐயா? தமிழர்கள் தளத்தினை இழந்திருக்களாம். ஆனால் தங்களின் இந்த வரலாறு மின்னாக்கப் பணிகள் தமிழர்கள் இன்னும் களத்தினை இழக்கவில்லை என்பதே உண்மை.
Muthukrishnan Ipoh : நாம் நம் பழைய வரலாற்றை அப்படியே விட்டு விட்டால் நம் அடையாளத்தை இல்லாமல் செய்து விடுவார்கள்... சரியான ஆதாரங்களுடன் முன் வைத்தால் ஒரு கட்டத்தில் அவர்களும் அமைதி அடைவார்கள்... ஒரு பக்கம் கதவை அடைக்கும் போது இன்னொரு பக்கம் திறந்து வெளியாவதற்கு முயற்சிகள் செய்ய வேண்டும்....
Raghawan Krishnan : Dear Mr Muthu Krishnan, you must compile all these information n pls print as an Historical Document for the Present and Future Generations. Every Indian shd Posses in their Homes. We shall provide you the Fullest Support.
Kogilan Muthiah : சொல்ல மறந்த வரலாறு என் தந்தை இந்த தோட்டத்தை பற்றி கூறியிருக்கிறார். பயணம் தொடரட்டும்
Muthukrishnan Ipoh : தகவல்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்...
Kody Sivasubramaniam : மலேசியாவை உலகுக்கு காட்டிய மறத் தமிழர்கள்
Muthukrishnan Ipoh : உண்மையாக... அவர்கள் இல்லை என்றாலும் அவர்களின் சரித்திரத்தைப் பேச வைப்போம்...
Muniandy Subramaniam : Coola is now Gula, is there any way to track our ancestors in the estate history
Muthukrishnan Ipoh : முயற்சி செய்து பார்க்கலாம் ஐயா...
Ramana Thurga : Iyaa, Bagawan with u, Arunachalam
Muthukrishnan Ipoh : 🙏 வாழ்த்துகள்...
Vasanta Muthiah : வேதனை சுவடுகள்.... உண்மை.இன்று நமது நிலை என்ன???
Muthukrishnan Ipoh : நாம் வாங்கி வந்த வரம்...
Ravi Rxz Ravi : என் தந்தை பிறந்த தோட்டம்.
Muthukrishnan Ipoh : மகிழ்ச்சி ஐயா...
Ramana Thurga : Ur grate amma, jayanthi karupiah
Saran Saran : I'm still working at gula....
Muthukrishnan Ipoh : அப்படீங்களா ஐயா... அங்குள்ள இப்போதைய நிலவரங்களைச் சற்று தெரியப் படுத்துங்கள்... எல்லாருக்கும் தெரிந்த மாதிரி இருக்கும்... நன்றிங்க....
Saran Saran : Current status..... Gula improve rdy........ And going to modern estate sir
Muthukrishnan Ipoh : I heard about that... best wishes...
Sasikala Kala : நான் அறியாத ஒன்று... மிக்க நன்றி ஐயா உங்கள் அருமையான தகவலுக்கு.. 🙏
Muthukrishnan Ipoh : மகிழ்ச்சி... நன்றிங்க
Kamala Palany
Muthukrishnan Ipoh : மகிழ்ச்சி
Indara Pusparaja : On on 👍
Abi Abin
Krishnan Krish
Parthiban Apparu
Padma Krishna Asari
Saran Saran
Padma Krishna Asari : நாங்கள் வாழ்ந்தா இடம் எங்கள் அம்மா பிறந்தா இடம் கூலா
Muthukrishnan Ipoh : மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது... வாழ்த்துகள்...
Erasen Raja : Ayya avargalukku ennathu muthalkan vanakkam 🙏🙏🙏🙏🙏. Enggal Gula estate varalaru padithu anantham adaithen ayya. Unggalukku nandri 🙏🙏🙏🙏🙏🙏
Muthukrishnan Ipoh : மிக்க மகிழ்ச்சி ஐயா...