2019-ஆம் ஆண்டு தொடக்கம் நாட்டில் உள்ள தொடக்கப் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் இலவசக் காலை உணவு வழங்கப்படும் என கல்வி அமைச்சர் மஸ்லி மாலிக் அறிவித்து இருக்கிறார்.
200 பள்ளி நாட்கள். 27 இலட்சம் மாணவர்கள். ஒவ்வொருவருக்கும் காலை உணவு சராசரி 3 ரிங்கிட். ஆண்டுக்கு 160 கோடி ரிங்கிட்.
இந்தக் காலை உணவு திட்டத்தில் மழலையர் பள்ளி மாணவர்களும்; உயர்நிலைப் பள்ளி மாணவர்களும் சேர்த்துக் கொள்ளப் படவில்லை.
இவர்கள் அனைவருக்கும் காலை உணவு வழங்க நாட்டின் நிதிநிலை தாக்குப் பிடிக்குமா... ம.சீ.ச.வின் தலைவர் டத்தோ வீ கா சியோங் கேள்வி எழுப்பி உள்ளார்.
தற்போது தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சத்துணவுத் திட்டம் (ஆர்.எம்.டி.) அமலில் உள்ளது. 2018-ஆம் ஆண்டில் 489,117 மாணவர்களுக்கு ஆர்.எம்.டி. சத்துணவு வழங்க 28.9 கோடி ரிங்கிட் செலவானது.
இதில் உணவுப் பொருட்களுக்கு 25 கோடி ரிங்கிட். பால் வகைப் பொருட்களுக்கு 3.9 கோடி ரிங்கிட்.

வருமானம் குறைந்த; நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு இந்த ஆர்.எம்.டி. சத்துணவுத் திட்டம். இது நியாயமான திட்டம்.
ஆனால் இப்போது வசதி படைத்த பணக்காரக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் புதிய இலவசக் காலை உணவுத் திட்டமா? சரிபட்டு வருமா? சரியாக அமையுமா?
இது அரசாங்கத்தின் கடன் சுமையை மேலும் அதிகரிக்கும். ஏற்கனவே நாடு கடன் வாங்கி மூச்சுத் திணறிப் போய் இருக்கிறது. நாட்டின் கடன் ஒரு டிரில்லியனுக்கும் அதிகமாக இருப்பதாக டத்தோ வீ கா சியோங் சுட்டிக் காட்டுகிறார். ஒரு டிரில்லியன் என்றால் ஆயிரம் பில்லியன்கள்.
பேஸ்புக் ஊடகத்தில் அன்பர்களின் கருத்துகள்

M R Tanasegaran Rengasamy தற்பொழுது
அமலில் உள்ள ஆர்.எம்.டி. திட்டமே போதுமானது. இதனைச் சரியாகச் செய்தாலே
போதும். அனைத்துப் பிள்ளைகளுக்கும் காலை உணவளிப்பது என்பது அசாத்தியமான
ஒன்று. அவ்வளவு பிள்ளைகளுக்கும் உணவளிக்க மிகை நேரம் பிடிக்கும். இது
கற்றல் கற்பித்தலுக்கு இடையூறாக இருக்கும்.
Muthukrishnan Ipoh சற்று
சிரமமான காரியம். ஆனால் நல்ல முயற்சி. இந்தத் திட்டத்தில் மழலையர் பள்ளி
மாணவர்களும்; உயர்நிலைப் பள்ளி மாணவர்களும் சேர்த்துக் கொள்ளப் பட வேண்டும்
என்பது என் கருத்து.
Thennarasu Sinniah பாகுபாடில்லா
இந்த திட்டம் சரி தான்..ஆனால் உணவு வீணாக கூடாது..மாணவர்களின் எண்ணிக்கை
மட்டும் கருத்தில் கொண்டு கொள்ளையும் நடக்க வாய்ப்புள்ளது..
Viji Nijtha பள்ளி நிர்வாகம் சரியான முறையில் செயல் பட வேண்டும்.
மாணவர்களின் நலன் கருதி உணவை தயாரித்தல் அவசியம்.

Manickam Nadeson எதையும்
நன்றாக ஆலோசிக்காமல், முறையாக சிந்திக்காமல் அனுபவமற்றவர்கள் எடுக்கும்
எந்த முடிவும் சிறப்பாக முறையாக அமையாது என்பது என் கருத்து.
Mbs Maniyam மாற்றான் தோட்டத்து மல்லிகையும் நறுமணக்கும்! நல்ல திட்டம் ஏற்றுக் கொள்ள வேண்டிய தொன்று. அது ஆரோக்கியமான உணவாக இருக்க வகை செய்தல் வேண்டும்.
Sambasivam Chinniah Good move, but must have enough funding, the contractors must supply hygienic food!!! PH can do ah ?
Sathya Raman நாட்டில்
நிதி பற்றாக்குறை என்கிறார்கள். 2018-இல் நடைப்பெற்ற பொது தேர்தலில்
கொடுத்த வாக்குறுதிகளைச் சொன்னபடி நிறைவேற்றி இருக்கிறார்களா? முன்னாள்
அரசாங்கம் ஏற்படுத்திய கோடிக் கணக்கில் கடன் சுமைக்கிறது என்று மக்கள் முன்
வைத்து நிதி வசூலித்தார்கள்.
நிதி அமைச்சராக பதவியேற்ற லிம் குவாங் எங்கிடம் வரவு செலவு திட்டத்தை நல்ல முறையில் தயார் செய்யவில்லை என்றால் தலையில் சுடுவேன் என்று சிரித்துக் கொண்டே சொன்னார் மகாதீர். அதிலுள்ள அர்த்தத்தை புரிந்து கொள்ளாமல் "ஜோக்" என்று எல்லோரும் இறுமாந்து இருந்துவிட்டார்கள்.
பிறகு கல்வி அமைச்சர் பதவி ஏற்ற மஸ்லின் மஸ்லி பதவி ஏற்ற உடனே பள்ளிக்கூட பிள்ளைகளின் காலணிகளின் மேல் கவனம் செலுத்தி வெள்ளையை கறுப்பாக்கினார். இதனால் ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த வெள்ளைக் காலணிகளின் வியாபாரிகளின் வயிற்றில் அடிக்கப்பட்டது.
இப்படி தகுதியே இல்லாத அமைச்சர்கள். ஆங்கில மொழியில் ஆளுமை இல்லாதவர்கள். முந்தைய அரசாங்கத்தைக் காட்டிலும் இன்றைய அரசாங்த்தின் ஆட்சியில் மூன்று மடங்கு உயர்ந்து உள்ள விலைவாசிகள். நிலையில்லாத ஏறி, இறங்கும் எண்ணெய் விலை. தனியார் துறையின் ஊழியர்களின் இருபது விழுக்காடு சம்பளம் குறைப்பு. இப்படி நிறைய காரணங்களை அடுக்கிக் கொண்டிருக்கலாம்.
இதற்கெல்லாம் தீர்வு காணாமல் இந்த ஜாகீர் நாயக்கை உலக வல்ல கதாநாயகனாக ஆக்குவதிலும்,சம்பந்தமே இல்லாமல் ஜாவி எழுத்தை திணிப்பதிலும் இதையெல்லாம் எதிர்க்கும் இந்தியர்களை ஆள், ஆளுக்கு இஷ்டத்திற்கு நிந்திப்பதும் தான் இன்று இந்த அதிகார வர்க்கத்தினரின் அரசியல் நாடகம்

சத்துணவு கொடுக்கிற அளவிற்கு மலேசியர்கள் ஒன்றும்
கஞ்சிக்கே வழி இல்லாதவர்கள் இல்லை. பள்ளிப் பிள்ளைகளுக்கு காலை உணவு
மிக, மிக முக்கியம் என்று மந்திரி வாய் கிழிய வாக்குமூலம் தந்தாலும்
நாட்டின் நிதி நிலையை கருத்தில் கொண்டு செயல் படட்டும் இந்த அரசாங்கம்.